Monday, August 12, 2019

அல்லா கொடுக்க நினைப்பதை எவராலும் தடுக்க முடியாது: கவிஞர் தணிகை

அல்லா கொடுக்க நினைப்பதை எவராலும் தடுக்க முடியாது: கவிஞர் தணிகை

Image result for water flow to mettur dam


ரஜினிகாந்த் என்னும் 68 வயது சிவாஜிராவ் கெய்க்வாட் மோடிஜி, அமித்ஜி, வெங்கைய்யா நாயுடுஜி ( age 70) என கலந்து கொண்ட சென்னைப் புத்தக வெளியீட்டுவிழாவில் தம்மை பா.ஜ.க நோக்கி நகர்ந்து நகர்ந்து நகர்த்தி நகர்த்தி சென்று கொண்டிருப்பதை பேச்சாக வெளிப்படுத்தி இருக்கிறார். அது அப்படியே மேலும் நகர்ந்து நகர்ந்து வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா முதல்வர் வேட்பாளராக ரஜினி ஆகலாம் அல்லது ரஜினியின் கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து முதல்வராக ரஜினி எனப் பின்னிருந்து கிருஷ்ணார்ப்பணமாக தேர்தல் நடத்த சிறந்த ஒத்திசைவான ஒத்தாசைகள் செய்யலாம் வியூகம் அமைக்கத்தான் கிருஷ்ணர் என்னும் அமித்ஷா இருக்கிறாரே போதாதா...

உள்ளிருக்கும் எண்ணம்தானே பேச்சாகவும் முளைக்கும். விதை ஒன்னு போட்டா சுரை வேறா முளைக்கும்.

காஷ்மீர் பிரச்சனையை கிருஷ்ணர், அர்ஜுனன் நல்லபடியாக வெற்றிகரமாக லீலை செய்து முடித்தமைக்காக அமித்ஷாவை மோடியை வெகுவாகப் புகழ்ந்து தள்ளி தன்னிருப்பிடத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்.

இது பாம்புக்கு தவளை செய்யும் செயலா அல்லது இனம் இனத்தோடு சேரலா என்பதை காலம் சொல்லும். ஆனால்

அதை மீடியாக்கள் எல்லாம் முன் பக்க தலைப்பு செய்தியாக்கி இருக்கின்றன.

சாருஹாசன் சொல்லியது போல இந்த ராசியான ஆளுக்கு எதுவும் நடக்கலாம்.
Image result for water flow to mettur dam
மற்றபடி முத்தலாக் சொன்ன முகமதிய கணவர் ஒருவர் முத்தலாக் சட்டமானபிறகு முதல் சட்டபூர்வமான நடவடிக்கைக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்.

முகமதிய பெண்கள் முத்தலாக் சட்ட வடிவத்திற்கு நன்றி செலுத்தி மோடிஜிக்கு ராக்கி கட்ட தயாராகி இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

68வயதான மோடி, 54 வயதான அமித்ஷா....ஒருவர் கிருஷ்ணன் இன்னொருவர் அர்ஜுனன் என்கிறார் அதில் அமித்ஷாவை கிருஷ்ணர் என்றால் மோடியை அர்ஜுனர் என்பார்கள்...ஏன் எனில் முன்னிருந்து தாக்குவார் அர்ஜுனனே அவனே மஹாபாரதத்தில் வீரன் சிறந்த வில்லாளி.

கிருஷ்ணனும் அர்ஜுனனும் சமவயது நண்பர்கள் என்கிறது மஹாபாரதம். சரி விடுங்கள் அவர்கள் அர்ஜுனன் கிருஷ்ணராகவே இருக்கட்டும்...இவர் தர்மர் ஆகப் போகிறாரா என்ன?

கவிரியில் தண்ணீர் திறக்க மாட்டேன் மாட்டவே மாட்டேன் என்னும் எடியூரப்பா ஆட்சியில் கர்நாடகம் 220000 கன அடி நீரை நொடிக்கு திறந்து விட்டுக் கொண்டிருக்கிறது
தமிழகத்தில் ஒரே நாளில் 15 அடி தண்ணீர் மேட்டூர் அணையில் உயர்ந்து நாளை முதல் பாசனத்துக்கும் நீர் திறந்து விடப்போவதாகவும்  இன்று மாலைக்குள் அது 240000 கன அடியாக நொடிக்கு இருக்கும் என தகவல்கள் உள்ளன.
Related image
பக்ரீத் தின வாழ்த்துகள்: அல்லா கொடுக்க நினைப்பதை எவராலும் தடுக்க முடியாது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
Image result for water flow to mettur dam
வேலூர் பாரளுமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் தமது கூட்டணி கட்சியான பாஜக முகமே வெளிகாண்பிக்காமல் அ.இ.அ.தி.மு.க எட்டாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.கவிடம் தோற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment