Saturday, July 20, 2019

பாம்பு கடித்ததா பயத்தில் இதயம் நின்றதா? கவிஞர் தணிகை

பாம்பு கடித்ததா பயத்தில் இதயம் நின்றதா? கவிஞர் தணிகை

Related image

கடந்த சில நாட்களுக்கும் முன் எங்கள் ஊரில் எனது நண்பர் ஒருவர் குடும்பத்தில் நேர்ந்த உண்மைச் சம்பவம் இது. ஆனால் அவர் பெயரை நான் குறிப்பிட வில்லை. குறிப்பிட்டாலும் அவர் அதை தவறாக எடுத்துக் கொண்டு கோபப் படமாட்டார் என்பதையும் நானறிவேன்.

சாந்தி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) இறந்தவர்களுக்கும் பெயர் உள்ளதா என்ன...இருப்பார் நமக்கு ஒரு அடையாளத்துக்கு நமக்கு அடையாளப்படுத்திக் கொள்ளத்தானே பேர் சுருக்கமாக எல்லாம்.

மிகவும் பக்தி உடையவர். தவறாமல் கோவில்களில் பூஜை புனஸ்காரஙகள் உண்டு. மேலும் இவர்  ஒரு பள்ளி ஆசிரியை. ஓய்வு பெறும் நாட்கள் இன்னும் இருக்கிற நிலையில்.... பௌர்ணமி பூஜை என்று ஒருவர் நடத்தும் விநாயகர் கோவில் விழாவுக்கு நன்கொடை தருவதற்காக இருள் பொழுதின் ஆரம்பத்தில் சென்றிருக்கிறார். இப்போதெல்லாம் எங்கள் ஊரில் ஒரே கொள்கைதான். தெருவிளக்குகள் ஆளும் கட்சி சார்புடையவர்கள் வீட்டருகேதான் எரியும் மற்ற தெரு விளக்குகள் எரியாமல் இருளே ஊரெங்கும் நிறைந்திருக்கும்.  அதற்கு ஊராட்சியும் தநாமிவா வும் பொறுப்பு அதன் பின்னணியில் நிறைய அரசியல் அது சொல்ல நேரமிது அல்ல.

அம்மணி சென்றிருக்கிறார் அங்கு  இருள். படியருகே படுத்திருந்த ஒரு சிறு பாம்புக் குட்டி. அம்மணி பயம் கொண்டிருக்கிறார்.  அவரின் வாக்கு சற்று கடித்த மாதிரி இருந்தது என்பதே. அங்கே பணம் கொடுக்க சென்ற இடத்தில் பெண்மணிகள் உதவ நினைத்தும் அதன் பின் அவர் வீட்டருகே வந்து பெண்கள் சுற்றி வளைத்தும் பேசியபடி நேரம் சென்று விட ஓட்டுனரை அழைத்துக் கொண்டு சுமார் 8 கி.மீ. தள்ளி உள்ள அரசு மருத்துவமனைக்கு அவர்கள் செல்வதற்குள் காட்டு மலைப்பாதை ரோட்டிலேயே அம்மணி உயிர் பிரிந்தது.

இரு வேறு கூறுகள் ...அவரை பாம்பு கட்டு விரியன் குட்டி கடித்து விட்டது என்றும் உரிய நேரத்தில் அதற்கு சிகிச்சை எடுக்காமல் செய்த காலதாமதமே உயிர் பிரிவுக்கு காரணமே என எனது நண்பர் முதற்கொண்டு கருதி வருத்தம் கவலை சொல்லொணாத் துயரம் கொள்ள

அவரது கார் டிரைவரோ ஒரு கிராமத்து நபர்: இல்லை இல்லவே இல்லை எந்த பாம்பும் அவரைத் தீண்டவே இல்லை அவருடைய பயமும் மாரடைப்புமே மரணம் சம்பவிக்க காரணமானது என்றும் சொல்ல...

மொத்தத்தில் : அந்த அம்மணியே சென்று பீரோ எல்லாம் திறந்து சிகிச்சைக்கு என உள்ளூரில் முடியவில்லை எனில் சேலம் செல்ல வேண்டிய பணம் எல்லாம் எடுத்துக் கொடுத்தும், கணவரின் காலில் விழுந்து ஆசி வாங்கியும், குடி நீர் இரண்டு பாட்டில் எடுத்துக் கொண்டும் அவரது பெண்ணிடம் வரச் சொல்லிப் பேசியபடியும் காலம் தாழ்த்தி விட்டதாகவும் செய்திகள்.

இல்லை இல்லை சிறிய முள் மாதிரி இருந்ததாகவும்  கைகளில் கூட கரு நீல அடையாளம் இருந்ததாகவும் வெட்டியான் இடுகாட்டில் பார்த்ததாகவும் நண்பர் சொல்ல இல்லை இல்லை ப்ரீசரில் வைத்திருந்து அதன் பின் எடுத்து வைத்து குளிப்பாட்டியதால் அந்த நிறமாறுதல் நரம்பு போன்றவற்றில் ஏற்பட்டன அவர் நல்ல கலர் என்பதால் என ஓட்டுனர் சொல்வதும் இதில் எது சரி என அந்த அம்மாவே வந்து சொன்னால் தான் நாமறிய முடியும்.


ஒரு ஆசிரியையே இப்படி நடந்து கொள்ளும்போது எப்படி இவர் இத்தனை ஆண்டுகள் பொறுப்பான முக்கிய  பணியாற்றி வந்திருப்பார் என்பதும்,இவரிடம் படித்த மாணவர்களுக்கு எப்படி தைரியம் சொல்லி இருப்பார் என்பதும்தான் தெரியவில்லை. மேலும் பாம்பு கடி என்பதை விட அதன் பயமே அவரது உயிரைக் குடித்திருக்கிறது. பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பதும் பாம்புகள் மனிதர்களைக் கடிக்க கொத்த தீண்டவே காத்திருப்பதில்லை என்பதும் உண்மைகளே...

இதன் முக்கிய காரணம்: இருள், ஊராட்சி, தநாமிவ...என்றெல்லாம் சொல்வதா இல்லை அவரது பயமா...

அது மிகச் சிறிய பாம்பு என்றும் அதில் அத்தனை விஷம் எல்லாம் இருக்கவே வாய்ப்பில்லை என்பதெல்லாம் எனக்கு கிடைத்த  செய்திகள்

ஏ.சி யில் பாம்பு இருந்தது என்பதும், பேருந்தில் பாம்பு இருந்தது என்பதும் எங்கள் வீடுகளில் அந்தக் காலத்து வாழ்க்கையில் பாம்புகள் எல்லாம் சகஜமானது என்பதும் எனது களப்பயிற்சிப் பணிகள் போது மலைகளில் பணி புரிந்த காலக்கட்டத்தில் பாம்புகளுடன் மிக அருகாமையில் எல்லாம் எனது உடலும் வாழ்வின் பயணமும் இருந்தது என்பதெல்லாம் மறக்க முடியா செய்திகளாக இன்றும் எனது நினைவோட்டத்தில்.


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment