Wednesday, July 24, 2019

இன்று மற்றொரு உயிரின் வித்தியாசமான பயணம்: கவிஞர் தணிகை

இன்று மற்றொரு உயிரின் வித்தியாசமான பயணம்: கவிஞர் தணிகை


Image result for death comes in different and any form and any time

இது ஒரு உண்மைச் சம்பவம். எங்கள் குடும்பம் அறிந்த ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த நிகழ்வு. பெயர் குறிப்பிடாமல் சொல்கிறேன்.

வழக்கம்போல் நடைப்பயிற்சிக்கு சென்றேன் ஒரு சில இடங்களில் சிறிய போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. ஒட்டுப்பள்ளத்தில் ப்ளக்ஸ் இருந்தது. அந்த முகம் நானறிந்த முகமாகவும் இருந்தது.

விசாரித்தேன் மேட்டூரில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள கொளத்தூரில் மின்சார உபகரண கடை வைத்து நடத்தி வந்தவர். இன்று மின்சார ஒயர் வெட்டித் தரும்போது தனது கையின் பெருவிரலையும் வெட்டிக் கொண்டதாகவும் அதனால் நரம்பு வெட்டப்பட்டு இரத்தம் நிற்காமல் சென்றதற்கு அங்கேயே ஒரு மருத்துவரிடம் முதல் உதவி பெற்று அதன் பின் மேட்டூர் அரசு மருத்துவமனையை நாடியதாகவும் அங்கேயும் முடியாமல் சேலம் அரசு மருத்துவமனைக்குத்தான் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலையில் அங்கேயே அதாவது மேட்டூரிலேயே உயிர் பிர்ந்ததாகவும் செய்திகள்.

அவருக்கு 50க்குள் வயது இருக்கலாம். 15 வயதுக்குள் தான் குழந்தைகள் இருக்க முடியும்...

அவரை இழந்த அந்த குடும்பம் பெரும் துயரை அனுபவித்து வர ஒரு சிறு எச்சரிக்கையின்மையான செயல்பாடு காரணமாக அமைந்து விட்டது.

அவரது தந்தையை ஏற்கெனவே இழந்த அவரும் இப்போது காலமாகி இயற்கை அடைந்ததால் தாய் தனியாகி இப்போது மருமகள் மற்றும் பேரன் பேத்திகள் துணையுடன் மட்டுமே வாழ வழி ஆகிவிட்டது.

நேற்று சேலத்தில் இரண்டு வள்ளம்  அல்லது இரண்டு உழவு அளவு மழை. சேலத்தின் தாழ்வான பகுதிகளில் எல்லாம் சேற்று நீர் புகுந்து சேலம் ஐந்து வழிச் சாலை ரத்னா காம்ப்ளக்ஸ் இப்போது இடிக்கப்படும் நிலையில் இருப்பது....அதில் உள் எல்லாம் நீர் புகுந்து மோட்டார் வைத்து நீரை பம்ப் செய்து வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment