Saturday, July 20, 2019

முரணும் அரணுமாய் சில வார்த்தைகள்: கவிஞர் தணிகை

முரணும் அரணுமாய் சில வார்த்தைகள்: கவிஞர் தணிகை

Related image

அப்துல் கலாம் மொழிகளில்  ஒன்று: வாய்ப்புக்காக காத்திருக்காதே , வாய்ப்புகளை நீயே உனக்காக உருவாக்கிக் கொள் என்பதாகவும் மற்றொன்றில் வெள்ளம் வரும்போது மீன்கள் எறும்பை உண்ணும், வெள்ளம் வடியும்போது எறும்புகள் மீனைத் தின்னும் எனவே உங்களுக்கும் காலம் வாய்ப்பு வரும் அதுவரை காத்திருங்கள் என்பதாகவும் படிக்க நேர்ந்தது/

இரண்டுமே மிக நல்ல வாசகங்கள்தான். இரண்டுமே அவசியமானவைதான். ஆனால் சொல்லப்பட்ட காலத்தில் அவை அவசியமாகவே இருக்கும். ஆனால் அவற்றை ஒரு சேர பார்க்கும்போது முரணாகவே தோன்றுகிறது. வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டுமா இல்லை வாய்ப்புகளை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டுமா என்பது.

மிக வளர்ந்த நிலைக்கு மாந்தர் போகும்போது இப்படி அவர்கள் சொல்வது யாவும் பெருமை பெறும்.
Image result for sankaralinganar
இப்படித்தான் குறளில்  ஒன்று: யாக்கைக்கு மருந்தென வேண்டாவாம் அருந்தியது அற்றது போற்றி உணின் என்ற ஒரு குறள் இருக்கிறது. ஆனால் இது இன்றைய காலத்துக்குப் பொருந்துமா என ஒரு சிறு நூலில் கேட்டிருப்பேன். காரணம்: இன்றைய உணவு என்பதே இரசாயன உரத்தால் வளர்க்கப்பட்டு நோய்க்கூறுகளைக் கொண்டிருப்பது என்பதும்  பசித்தபின் உண்டால் மட்டும் மாந்தர்க்கு  எந்த வியாதியும் வராது என்பது இக்காலத்துக்கு எப்படி பொருந்தும் எனக் கேட்டிருப்பேன். ஏன் எனில் குறள் காலத்தையும் விஞ்சியது என்றாலும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது அல்ல என்பதே எனது தாழ்மையான கருத்தும்.
Image result for kalam
கலாம் தமது வாழ்வில் நிறைய நேரங்களில் சமரசப்போக்கையே கொண்டிருந்திருக்கிறார் எனவே எல்லோரிடமும் அனுசரித்தேப் போய் இருக்கிறார். கால்சட்டையை மேற்சட்டையை கழட்டி சோதனையிட்ட அமெரிக்க அரசு அலுவலர்களிடமும் மற்ற மதகுருமார்களிடமும், மற்ற கோவில்கள் , மடங்கள் செல்லும்போதும் ஒரு நண்பர் சொல்வார் அவர் சாப்பிடும் உணவு விலை அவ்வளவு என்று காமராசர் மாதிரி ரேசன் கடையில் வாங்கிய அரிசியை உண்டாலும் அவரும் தமிழ்நாடு என்று பேர்வைக்க போராடிய சங்கரலிங்கனார் சாவுக்கு காரணமாக இருந்தார் என்று பேசுவார்கள்....எவரைத்தான் பேசாமல் விடப்போகிறார்கள்...ஒரு மனிதர் பொது வாழ்வுக்கு என்று வந்து விட்டால் அவர் விருப்பப் படி உணவைக்கூட உண்ணக் கூடாது என்று சொல்வார் அவர் விரும்பும் தலைவர்களே வயதான பின்னும் துணை வேண்டுமென மிகவும் இளைய வயதில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டாரே பொது வாழ்வில் சேர்த்த சொத்து எல்லாம் அந்த பெண் சார்ந்தவரையே சென்று சேர்ந்து விட்டதே அது பரவாயில்லயா என்றால் அது சரிதான் அவர் அவர் விருப்பப் படி செய்து கொள்ள அகவாழ்வு பற்றி எல்லாம் இயக்க முறைமைகளில் இல்லை பேச வேண்டாம் என்பார்கள்.
Image result for kamarajar
கலாம், காமராசர் போன்ற மனிதர்கள் எளிமையக் கடைப்பிடித்த மனிதர்கள் கடைசிவரை ஒரு கொள்கையை விடாது பிடித்து இருந்தார்கள். கலாம் கால் மேல் கூட கால் போட்டு அமரும் ,மனிதர் இல்லை. எனக்கெல்லாமொரு வருத்தம் அவர் இந்த நாட்டின் ஒர் ஹிட்லர் போன்ற அதிபராகி  இந்த நாட்டின் நதி நீர் இணைப்பையாவது நிறைவேற்றி சென்று சேர்ந்திருக்கலாம் என்பதுதான்.
Image result for sankaralinganar
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை. 

No comments:

Post a Comment