Friday, July 12, 2019

வந்த நாள் முதல் இந்த நாள் வரை: கவிஞர் தணிகை

வந்த நாள் முதல் இந்த நாள் வரை: கவிஞர் தணிகை

start and end joining and parting away க்கான பட முடிவு

இன்று இப்போது அமர்ந்து இந்தப் பதிவை தட்டச்சு செய்து கொண்டிருக்கிற நிலைமைக்கும் 2016 ஏப்ரல் ஒன்னாம் தேதிக்கும் முன்னால் இருந்த காலத்தை இன்று பின்னோக்கி பார்க்கும்போது பெரு வியப்படைவதைத் தவிர வேறு வழி இல்லை.

இந்தக் கல்லூரியில் பல்சிகிச்சை குறைவான செலவில் கிடைக்கும் என்ற எனதொரு நண்பரின் வார்த்தையும்,எனது உள்ளூரில் இருந்த ஒரு பல் மருத்துவர் அனேகமாக எனது நினைவு சரியாக இருக்கும் எனில் ரூபாய் 200 பெற்றுக் கொண்டு உதிர்ந்துவிட்ட பல் உறை ஒன்றை பசை வைத்து ஒட்டியது இரண்டு முறையுமே உடனே ஒட்டாமல் உதிர்ந்த காரணமும். அப்போது எனது பொருளாதார நிலை இருந்த கட்டாயமும் இந்தக் கல்லூரிக்கு எனை வரத் தூண்டியது.

வந்தவனுக்கு இந்த சூழலும் சுற்றுப் புறமும் இந்தக் கல்லூரியில் மருத்துவ சிகிச்சை செய்த மாணவர்களின் நெருக்கமான மரியாதையான பேச்சு வார்த்தைகளும் வெகுவாக கவர்ந்தன.

இந்த பல் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு முறை செய்தித்தாளைப் பார்த்துவிட்டு அதன் விளம்பரத்தை நம்பி சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரிக்கு சென்ற நினைவு எல்லாம் கூட மறந்துவிட்டது... அங்கே சென்றும் கூட திருப்திகரமாக எனக்கு சிகிச்சை ஏதும் கிடைக்கவில்லை மேலும் மறுபடியும் வரச் சொல்லி விட்டார்கள் என்னால் மறுமுறையும் 352 கி.மீ தள்ளி செல்ல முடியாது என்று விட்டு விட்டேன்.

ஆனால் அப்போது திரைப்பட ஒளிப்பதிவு இயக்குனர் தில்ராஜா என்னும் செந்தில் வீட்டில் தங்கியது மட்டும் நினைவிருக்கிறது. அப்போது அவரின் தாய் உயிருடன் இருந்ததும் நினைவில் இருக்கிறது.

start and end joining and parting away க்கான பட முடிவு


இது போன்ற காரணங்கள் துரத்த  சுமார் 4 ஆண்டுகளுக்கும் முன் விசாரித்து தெரிந்து கொண்டு இங்கு வந்து சேர்ந்தேன். மருத்துவ சிகிச்சை அப்போதும் மெதுவாகத்தான் கிடைத்தது என்ற போதிலும் மிகவும் குறைவான செலவில் கிடைத்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

அதைப்பற்றி ஒரு பதிவை மறுபடியும் பூக்கும் வேர்ட்பிரஸ் வலைப்பூவில் பதிவேற்றியதை நகல் ஒன்றை எடுத்துக் கொண்டு சென்று காட்டினேன். அனைவரும் மகிழ்ந்தார்கள். அப்போது மேற்பார்வையாளராக இருந்த பத்ரிநாராயணன் சார் இப்போது பணி ஓய்வில் இருக்கிறார்.ஒரு மகன் வெளிநாட்டில் இருக்க மற்றொருவர் சென்னையில் வீடுகட்டுவதை மேற்பார்வை பார்த்தபடி இருக்க...அவர் என்ன சொன்னார் எனில் இவ்வளவு நீளமாக இந்தப் பதிவு இருக்க வேண்டுமா என்றார்...ஆனால் அப்போதும் இப்போதும் நிர்வாக அலுவலர் ஒன்று என இருக்கும் பாபு முரளி சார் முதல்வர் உங்கள் ஊர்க்காரர் தான் தெரியுமா என்று கேட்க அவரைச் சந்தித்தேன் அவர் அந்தப் பதிவைப் பார்த்து மகிழ்ந்தார்.

அதன் பின் தான் தெரிந்தது அவரது மகனும் எனது மகனும் 9 ஆம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் படித்திருக்கிறார்கள் என்பதும், மேலும் இருவருக்கும் பொதுவான நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதும்.

நான் எனது நிலையை விளக்கி, வேலை கிடைக்குமா எனக் கேட்டேன். அவர் என்னை முற்றிலும் புரிந்து கொண்டு கல்லூரிக்கு வாருங்கள் என என்னைப் பணியமர்த்தும் பொருட்டு ஒரு விசனையே vision ஏற்படுத்திக் கொண்டிருந்தார் என்பதை பின்னர் தெரிந்து கொண்டேன்.

எனது மகன் ப்ளஸ் டூ படித்த கடைசி நாள் தேர்வு எழுதிவிட்ட  அதே நாளில் நான் இங்கு பணியமரச் சேர்த்துக் கொண்டார்கள். மகனும் நீங்கள் கல்லூரிக்கு சென்றால் நான் படிப்பதும் சுலபமாக சிரமமில்லாமல் இருக்கும் என வாய்விட்டே சொன்னான். எனவே இனியும் இதற்கும் மேலும் தாமதிக்கக் கூடாது என நானும் முடிவெடுத்து விட்டேன்.

அப்போது அரவிந்த் சேலம் கண் மருத்துவ மனையில் எனது நண்பர்கள் குடும்பத்தின் முத்துசாமி அறக்கட்டளை வழியாக கண்புரை நீக்கும் அறுவை சிகிச்சை செய்து கொண்டும், லென்ஸ் வைத்துக் கொண்டும் வலது கண் பராமரிப்பை செய்தபடி இருந்ததால் கல்லூரியில் இருந்து பணியில் சேரச் சொல்லி அழைத்தும் ஒரு மாதம் கழித்த பின் தான் வந்து சேர்ந்து கொண்டேன்.

இப்போதும் இடது கண்ணுக்கு புரை நீக்கும் அறுவை சிகிச்சை செய்து தான் இருக்கிறேன். சொட்டு மருந்து இடும் பணி நிறைவடைய இருக்கிறது..என்றாலும் அந்த கண் புரை நீக்கும் சிகிச்சை செய்ததற்கும், இந்தக் கண் புரை நீக்கும் சிகிச்சை செய்ததற்கும், இந்த லென்ஸ்க்கும் அந்த லென்ஸ்க்கும் எத்தனை வித்தியாசம்...

  கடந்து வந்த அந்த பாதையைப் பற்றிச் சொன்னால் உங்கள் காலம் அதை அனுமதிக்குமா என்று தெரியவில்லை.

ஒரே வரி: நான் இந்தக் கல்லூரிக்கு நோயாளியாக வந்த அதே கல்லூரியில் நோயாளிகளின் குறை தீர்க்கும் பிரிவின் பொறுப்புடனும், பொது உறவு அலுவலராகவும், முகாம் போன்றவற்றை நடத்தும் பொறுப்புடனும், மேலும் இந்தக் கல்லூரியின் முன்னேற்றப் பணிகளில் பங்கு பெறுபவனாகவும் மாறி இருக்கும் இந்த நிலை....

ஒரே வரி: இந்தக் கல்லூரியில் சேர்ந்த பின் தான் ஒவ்வொரு நிமிடத்திலும் 60 விநாடிகள் இருக்கின்றன அதையும் துல்லியமாக பயன்படுத்தலாம் என்பதை காலத்தின் மேன்மையை புரிந்து கொண்டேன். உண்மையின் சக்தி என்ன என்பதையும் புரிந்து கொண்டேன்.

மகனது மேற்படிப்புக்காக சேர்ந்த எனக்கு இதனால் கிடைத்த வாய்ப்புகள் எண்ணிறந்தன... ஏன் சமுதாயத்துக்கும், கல்லூரிக்கும் கூட என்பதை என்னால் சொல்லாமல் இருக்கவே முடியாது.

அத்தனைக்கும் அடிப்படையாக எனைத் துல்லியமாக முற்றிலும் புரிந்து கொண்ட தோழமை காட்டி நட்பு பாராட்டி எனக்கு என ஒரு தனி இடத்தை ஏற்படுத்திக் கொடுத்த எனது கல்லூரியின் முதல்வர் ஜெ.பேபிஜான் அவர்களையும் இந்தக் கல்லூரி நிர்வாகத்தையும் நன்றியுடன் நெஞ்சார்ந்த நெகிழ்வுடன் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். குறிக்கோளை இலக்கை எட்டிவிட வாழ்வில் எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு இது. இது வரமான கதையும் ... இயற்கை கை காட்டிய நிகழ்வும் இதில் ஏராளம்.

start and end joining and parting away க்கான பட முடிவு


கபாலீஸ்வரர் கோவில் பணிச் சேவை முடிந்ததும் இந்த இடத்தைக் கை காட்டிய இயற்கையின் இறைக்கும் எனது மௌனமான சமர்ப்பித்தல்கள்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



No comments:

Post a Comment