Monday, July 15, 2019

கிரிக்கெட் விளையாட்டில் இயற்கைதான் வெற்றியை நிர்ணயிக்கிறது: கவிஞர் தணிகை

கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை விட இயற்கையின் விளையாட்டே பெரிதாக இருக்கிறது: கவிஞர் தணிகை


Image result for wind rain cricket play effects

மழை என்கிறார்கள், மேக மூட்டம் பந்து வீச்சை பாதிக்கிறது என்கிறார்கள், ஈரப்பதம் பெரிதும் போட்டியின் விளைவை பாதிக்கிறது என்கிறார்கள். அப்படித்தான் அன்று இந்தியாவுக்கும் நியூஸ்லான்டிற்கும் ஆடாமலேயே இரண்டு வெற்றிப் புள்ளிகளை ஒவ்வொன்றாக மழை வந்து ஆட்டத்தை தடுத்து விட்டது என்று பிரித்துக் கொடுத்து இருந்தார்கள்.

ஆக உலகக் கோப்பையின் இறுதி நாளில் ஆட்டம் நடைபெற்ற நாளில் ரன்களைத் தடுக்க விக்கெட்டை எடுக்க விக்கெட்டை நோக்கி வீசப்பட்ட பந்து ரன் எடுத்த வீரரின் பேட்டில் பட்டு எவரிடமும் பிடிபடாமல் பவுண்டரி கோட்டை தொட்டுவிட அதற்கு 6 ஓட்டங்கள் கொடுக்கப்பட்டு விட்டன. அது சரியா தவறா என்ற சர்ச்சை ஏற்பட்டிருப்பது வேறு


ஆக நியதிகள், விதிகள், சட்டங்கள், திட்டங்கள் யாவுமே மனிதர்களுக்காக ஏற்படுத்திக் கொள்ளப்படுவதுதான். அதில் விளையாட்டு விதிகளும் அடங்கும்

இந்த இறுதி ஆட்டத்தில் வென்றவர்கள் மறுபடியும் லீக் ஆட்டத்தின் முதலில் வென்று புள்ளிகள் பட்டியலில் முதலில் இருப்பவரோடு மோதி வென்றாக வேண்டும் என்ற விதி இருந்தால் இந்தியாவோடு இந்த வென்ற அணி மோத வேண்டும். தோற்ற அணி ஆஸ்திரேலியாவோடு மோதலாம்.

ஏன் சொல்லப்போனால் இறுதி ஆட்டம் இரு முறை சமன் செய்யப்பட்டு விட்ட நிலையில் இரு அணிகளுக்கும் முதல் பரிசை பிரித்துக் கொடுத்திருக்க வேண்டும் இரண்டாம் இடத்துக்கு ஆஸ்திரேலியா இந்தியா ஆடும் ஆட்டத்தின்படி முடிவு செய்து பரிசைக் கொடுத்திருக்கலாம்.

எல்லாமே ஐ.சி.சி கொண்டு வரும் விதிதானே...

மழை அடிக்கடி வரும் கிரவுண்டில் முதலில் போட்டிகளை நடத்தியதே முதல் தவறு. மேலும் ஆடாமலே புள்ளிகளைப் பிரித்துக் கொடுப்பதும், டக் ஒர்த் லூயிஸ் என்பதும் பவுண்டரிகளில் அதிகம் எனவே அவர்களுக்கு வெற்றி என்பதும் வொர்த்லஸ் விதிகள்.

போட்டி என்றால் போட்டிதான் முடிவு என்றால் முடிவுதான். அதை விடுத்து விருப்பம் போல ஏற்கெனவே ஆடியதற்கு எல்லாம் விதியை விதித்துக் கொண்டு விருப்பம் போல செயல்படுவதற்கு விதிகள் எதற்கு மேலும் இந்த விளையாட்டுதான் எதற்கு. எல்லாம் வியாபாரம். இலாபம், நட்டம் என்ற கண‌க்குதான்
Image result for wind rain cricket play effects
எப்படி சூப்பர் ஓவர் என்று வெறும் 6 பந்துகளை வைத்து வெற்றி தோல்வியை  நிர்ணயிக்கும் முடிவுக்கு வரமுடிகிறதோ அப்படி 10 ஓவரில் போட்டியை முடித்துக் கொள்ளும் முறையாக கிரிக்கெட் விளையாட்டு காலப்போக்கில் மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டே தீரும். ஏற்பட்டேயாக வேண்டும். ஏற்படுத்தவும் வேண்டும். லலித் மோடி வேண்டாம் அவர் ஆரம்பித்த ஐ.பி.எல் வேண்டும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் வேண்டாம் அதுவே மறுபடியும் வேண்டும் என்பது போல எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானலும் மாறலாம். அது மாறும். அதில் இயற்கை செய்யும் ஊடுருவல்களைத் தான் நாம் இரசிக்காமல் இருக்க முடியவில்லை. அது விளையாட்டின் வெற்றி தோல்வியை பெரிதும் தீர்மானிக்க உதவிடுகிறது.
Image result for wind rain cricket play effects
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment