Sunday, July 14, 2019

50 ஆண்டுகளாகவே இந்திய கிரிக்கெட் இப்படித்தான்: கவிஞர் தணிகை

50 ஆண்டுகளாகவே இந்திய கிரிக்கெட் இப்படித்தான்: கவிஞர் தணிகை
Image result for kapil dev 175

Image result for kapil dev 175


கிரிக்கெட் விளையாட்டு அல்ல வியாபாரம். என்பார் கிரிக்கெட் முட்டாள்களின் ஆட்டம் என்பார் கிரிக்கெட் என்பது சூதாட்டமாகிவிட்டது என்பார் இது ஒரு உலக அளவிலான விளையாட்டே அல்ல ஆனால் இதற்கு ஒரு உலகக் கோப்பை என்பார், மேலும் சொல்லப்போனால் இதை மழை வந்தால் ஆட முடியாது என்னும்போது சட்ட திட்டங்கள் என்ற பேர் சொல்லி ஏமாற்றி உலகக் கிரிக்கெட் வாரியம் தமது சிறு குழு மனப்பான்மையில் தாம் விரும்பியதை நிறைவேற்றிக் கொள்ளும் அதற்கு காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட அடிமை நாடுகளை பயன்படுத்திக் கொள்ளும்.

ஆட்சி முறை அவர்களைப் பார்த்தும், ஆட்டமும் அவர்களைப் பார்த்தும் ஆடி வரும் இந்த அடிமை நாடுகளின் ஆட்டக்காரர்களும் ஒரு வகையில் வியாபார விளம்பரம் மற்றும் சுய இலாப முதலாளித்துவத்துக்காக இந்த ஆட்டத்தை ஆடியே ஏமாற்றி வரும். ஐபிஎல் இன்டியன் பிரிமியர் கிரிக்கெட் லீக் என்பதை தோற்றுவித்த லலித் மோடி குற்றவாளியை இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் அவரால் ஆரம்பித்த ஆட்டம் வெகு ஜோராக இந்தியாவில் என்றும் ஆடப்பட்டு வருகிறது.

கபில்தேவ், மகேந்திர சிங் தோனி இரண்டு விளையாட்டு வீரர்கள் மட்டுமே இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஆட்டக்காரர்கள். கவாஸ்கர்,ச்ச்சின் டென்டுல்கர்  போன்றோர் கூட சுய இலாபத்துக்காகவே ஆடி பெருமை சேர்த்து சம்பாதித்துக் கொண்டு சென்றவர் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தவர்கள்

இவர்கள் இந்த விளையாட்டில் இருந்து விடைபெற்றாலும் வர்ணனையாளராக வருவாய், பயிற்சியாளராக வருவாய், இவர்களே தனியாக பயிற்சி கொடுக்கிறோம் என்று விளையாட்டு மையங்களை ஏற்படுத்திக் கொள்வது, விளம்பரப் படங்களில் சம்பாதித்த பணத்தை ஏதாவதொரு தொழிலில் இட்டு பெரு உற்பத்தி செய்து கொள்வது, இப்படி ஏதாவது ஒரு வாழ்க்கை மார்க்கம் கிடைத்து விடுகிறது என்பதற்காகவே இந்தத் துறையில் நுழைந்து வருகிறார்கள். இந்த நாட்டில் மற்ற விளையாட்டு வீரர்கள் என்ன சாதனை செய்தபோதும் அவர்களுக்கு போக்குவரத்துக்கும் உணவுக்கும் உடைக்கும் இருப்பிடத்துக்கும் மருத்துவத்துக்குமே பணப்பற்றாக்குறை இருக்கும்போது இந்தக் காட்டில் எப்போதும் அடைமழைதான்.

இதைக் காரணமாகக் கொண்டு இந்திய தேசிய விளையாட்டாகவே ஹாக்கி விளையாட்டுக்கு மாறாக இதை விளையாடி வருகிற இளைஞர் படை அதிகம். பள்ளிகள் கல்லூரிகள், ஊர்கள் அதிகம். இதை விளையாடி முடித்துவிட்டு இந்தக் காரணத்தை வைத்துக் கொண்டு சேர்ந்து புகைப்பதும், மது அருந்துவதும், ஒரு மோசமான கலாச்சாரம் ஏற்பட இந்த விளையாட்டு பயன்படுகிறது. இது குளிர் பிரதேச நாடுகளில் முக்கியமாக இங்கிலாந்தில் பிரபு வர்க்கத்தார் நேரம் போக்க உடற்பயிற்சிக்காக விளையாடிய இந்த விளையாட்டு பணக்காரத்தனம் மட்டுமே அனைவர்க்கும் பிடிக்கிறது என்ற நியதியில் இருந்து மாறாமல் அனைவருமே இந்த நாட்டில் விளையாடி வருகின்றனர்.

இந்த உலகக் கோப்பையை இங்கிலாந்து போன்ற நாடு முதலில் நடத்தியது தவறு. அடுத்து அதன் சட்ட திட்டங்கள், மழை, வெற்றியில்லாமலே வெற்றிப் புள்ளிகளை பிரித்து தருவது, முதலில் ஆடியவர்க்கு ஒரு சட்ட திட்டம், மழை வந்த பின் பின்னால் ஆடுவோர்க்கு வேறு ஒரு சட்ட திட்டம், லெக் பிfoவோர், ஸ்டம்பிங், கேட்சிங்க், பௌலிங் power play என நிறைய மாறுதலுக்குட்பட்ட விலைபோன விளையாட்டு விதி முறைகள்...

ஆடி முடித்து வெற்றி பெற்றவர் அங்கேயே பீர் பாட்டிலை திறக்கும் பழக்க வழக்கங்கள்...இந்தியா 41 சதவீதம் இருக்கைகளை இந்த உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தைப் பார்க்க இந்தியா இறுதி ஆட்டத்தில் ஆடும் வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் இந்திய ஆதரவாளர்கள் முன் அனுமதியுடன் கட்டணச் சீட்டு பெற்றிருந்ததாக புள்ளி விவரம் சொல்ல நியூசிலாந்து காப்டன் அதை இலாபம் பெற்றுக் கொண்டு பிறர்க்கு விட்டுத்தாருங்கள் வராமல் விட்டு காலியாக விட்டு விரயம் செய்து விடாதீர் என்றும் கோரிக்கை செய்திருக்கும் செய்திகள்.

இதை ஒரு 10 ஓவர் மேட்சாக மாற்றி வெற்றி தோல்வியாக நிர்ணயிக்க முடியும். மேலும் மழை வந்தால் வேறு நாளில் போட்டியை நடத்தியே ஆக வேண்டும், மேலும் மழை வரும் இடத்திலிருந்து வேறு இடத்திற்கும் கொண்டு சென்று ஆடவும் முடியும், மேலும் மழை வராமல் ஒரு இன்டோர் கேம் போல வானாளவிய கூடாரத்தை அல்லது மேற்கூரையை அமைத்தும் ஆடமுடியும்... இது போல மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும்.

உலக கிரிக்கெட் வாரியத்துக்கு இந்திய இரசிகர்கள் மற்றும் பாகிஸ்தான் இரசிகர்களாலுமே பெரும்பணம் புரள்கிறது என்றும்,  அந்த ஒரு மேட்ச் இல்லையெனில் மொத்த வசூல் 1150 கோடியில் சுமார் 200 கோடி அதாவது மொத்த வருவாயில் 20 சதத்துக்கும் மேல் இழப்பு ஏற்படும் என்றெல்லாம் வியாபாரப் புள்ளிகள் விவரம் தருகின்றன.

இதை எல்லாம் மீறி மேட்ச் பிக்சிங் என்பதும். நன்றாகவே விளையாடி வருவதும் நாம் எல்லாம் அதை உற்சாகமாக பார்த்து வரும்  காலக் கட்டத்தில் இப்படி படு தோல்வி அடைவார்கள் என்பதும் இன்று நேற்று நடப்பதல்ல...கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே நான் கண்டு வரும் சொந்த அனுபவம். நிறைய பேர் இதற்காக உயிரையே கூட விட்டிருக்கிறார்கள்.

சுமார் இருபது ஆண்டுகளுக்கும் முன் எனது உறவினர் பையன் ஒருவன் ப்ளஸ் டூ பரீட்ட்சையின் போது நடந்த கிரிக்கெட் விளையாட்டுகளில் கவனம் செலுத்தி விட்டு பள்ளி மேனிலைத் தேர்வில் தவறியதை வெளியில் சொல்லக் கூச்சப்பட்ட்டுக் கொண்டே எவரிடமும் சொல்லாமல் தற்கொலை செய்து கொண்டதை எல்லாம் நாங்கள் கண்டதுண்டு. அப்போது எல்லாம் இப்படி விரைவாக எழுதி தேறி அந்த ஆண்டே மேற்படிப்புக்கு செல்லும் வாய்ப்புகள் எல்லாம் குறைவே. மேலும் இப்போது நீட் எழுதவே ஆண்டுகளை விரயம் செய்கிறது பெரிய இடத்துப் பிள்ளைகள் என்பதெல்லாம் நடுத்தர வர்க்கத்துக்கு கிடைக்க முடியா வாய்ப்புகள்.

சுமார் ஏழெட்டு வருடம் முதல் நான் கிரிக்கெட் தெரிந்தவன். கொஞ்சம் விளையாடியும் இருக்கிறேன். வலது கையின் நடுவிரலில் பேட்டுக்கும் பாலுக்கும் இடையே சிக்கிய நசுங்கிய காயம் கூட நேற்று நடந்தது போல இருக்கிறது.
Image result for dhoni retirement
மதுர நாயகம் என்ற வெளியூரிலிருந்து ஒரு மாணவன் எங்கள் வகுப்பில் வந்து சேர்ந்தார் அவரது தந்தை ஒரு நிர்வாக அலுவலராக மாறுதல் பெற்று எங்கள் ஊருக்கு வந்தபோது இவர் வந்து எங்கள் பள்ளியில் சேர்ந்தார். அவர் கிரிக்கெட் ஆடுபவர், மேலும் வர்ணனை வானொலியில் கேட்பார் அங்கிருந்து ஓதம்....அவர் அவரிடம் இருந்த கிரிக்கெட்டை என்னிடம் கசியவிட்டார் என்னிடம் இருந்து கதைப்புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கற்றுக் கொண்டார்.

அங்கிருந்து ஆரம்பித்த நாட்களில் இருந்து சுமார் ஐம்பது  ஆண்டுகளாகவே நான் கிரிக்கெட்டை அருகிருந்தும் விலகி இருந்தும் பார்த்து வருகிறேன் நான் ஒரு கபடி விளையாட்டுக்காரன் என்ற போதும்... இவர்கள் இந்த  இந்தியர்கள் நன்றாக விளையாடுவது போலவே ஆடுவார்கள் முக்கியமான நேரங்களில் எல்லாம் கோட்டை விட்டுவிடுவார்கள்.... பாண்டிங் போன்ற வெள்ளைய விளையாட்டின் காப்டன் எங்களது நாட்டின் மத்திய மந்திரியாக இருந்த சரத் பவார் போன்ற தலைவரை எல்லாம் சும்மா சாதாரணமாக கையைப் பிடித்து நகர்த்தி விட்டு முன் வரிசைக்கு வந்து விடுவார். ஆனால் அதையே எங்களது இந்தியக் குடிமகன் எவராவது செய்திருந்தால் அதை எங்கள் அரசும்  பாதுகாவலரும் சும்ம்மா விட்டிருக்க மாட்டார்கள்... அதே போல அணுகுண்டுக்கு சோதனைக்கு காரணமாக இருந்த அப்துல் கலாம் என்ற  மாமனிதரை ஒரு நாட்டின் மக்கள் குடியரசுத் தலைவராக இருந்தவரை இரு முறை ஆடையை காலணியை எல்லாம் கழட்டி சோதனை செய்வார்கள் அவரும் சிரித்துக் கொண்டே அவர்களது கடமையைத்தானே அவர்கள் செய்கிறார்கள் என்பார்.

ஆனால் அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடியரசுத் தலைவர் இந்தியா வருகிறார் எனில் அவர்களது பாதுகாப்புப்படையும் வளையம் வளையமான ஏற்பாடுகளும் படையும் வந்து சேரும்...

யார் நன்றாக விளையாடுகிறார்களோ அவர்கள் வெல்லட்டும், மேலும் விதிகள் யாவர்க்கும் ஒன்றாக இருக்கட்டும் அதெல்லாம் வேறு. இந்த விளையாட்டு ஒர் ஒழுங்கமைய வேண்டுமெனில் உலகக் கிரிக்கெட் வாரியத்துக்கு எந்த நாடுகள் எல்லாம் விளையாடுகின்றனவோ அந்த நாடுகளில் இருந்து பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். அதெல்லாம் இல்லை என்னும்போது ஒரே சொல்: இது இன்னும் வெள்ளையர் விளையாட்டுதான் அடிமைகள் எப்போதாவதுதான் வெல்ல முடியும். எப்போதுமே வெல்ல முடியாது என்னதான் திறமை இருந்தபோதும். ஏன் எனில் அடிமை நாட்டின் சட்ட திட்டங்களும் விதிகளும் எப்போதும் பணக்காரக் கூட்டத்தாலும், அரசியல் வட்டத்தாலும், அரசு நிர்வாக அலுவலர்களாலும் மட்டுமே எழுதப்படுகின்றன. கடைப்பிடிக்கப்படுகின்றன.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

என்ன ஒரு வருத்தம் என்றால் முதலில் இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று தந்த  கபில் தேவுக்கும் பின் சச்சின் டென்டுல்கரை பெருமைப்படுத்த ஒரு தோனி இருந்ந்தார், வென்று உலகக் கோப்பையை கையில்  ஓய்வுப் பரிசாக கையில் தந்தார், தோனிக்கு அது போல ஒரு வாய்ப்பு இல்லை வீரரும் இல்லை என்பதுவே...



No comments:

Post a Comment