Thursday, March 9, 2017

விநாயகா மிஷன் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் பல் மருத்துவ முகாம்கள் : கவிஞர் தணிகை

விநாயகா மிஷன் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் பல் மருத்துவ முகாம்கள் : கவிஞர் தணிகை

1. மயூரப்பிரியா மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி ‍‍வீரபாண்டி

2. மயூரப்பிரியா மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி மணியனூர்

3. அக்கரைப்பாளையம் அரசினர் ஊராட்சி ஒன்றியப் பள்ளி எனப்படும்
    ராமைய்யா நிதி உதவிப் பள்ளி




ஆகிய 3 ஆரம்பப் பள்ளிகளிலும் விநாயகா மிஷன் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் பல் பரிசோதனை முகாம்கள் சீரிய முறையில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜா.பேபிஜான் அவர்கள் அனுமதியின் பேரில் நடைபெற்ற இந்த முகாம்கள் நடைபெற சமுதாய மேம்பாட்டுத் துறைத்தலைவர் டாக்டர் என்.சரவணன் வழிநடத்தினார்.

சுமார் 300 பள்ளிக் குழந்தைகளும், பொதுமக்களும், ஆசிரியர்களும் பயன்பெற்றனர் .இவர்களுக்கு டாக்டர் துர்கா மற்றும் 15 மருத்துவர்கள் கொண்ட குழு தமது அரிய சேவையை ஆற்றியது. இந்திய பல் மருத்துவக் கழகம், மற்றும் கோல்கேட் கம்பெனி சார்பாக அரசு துவக்கப்பள்ளிக்கு பேஸ்ட் பிரஸ்களும் வழங்கப்பட்டன.



மேலும் பற்பராமரித்தல், சுத்தம் செய்தல் பற்றிய அறிவுரைகள் வழங்கப்பட்டன. முகாமுக்கு உறுதுணையாக அந்த அந்தப் பள்ளி ஆசிரியர்களும் மயூரப்பிரியா பள்ளியின் தாளாளர் பி.வி .தாமோதரன் அவர்களும் இருந்தனர். அக்கரைப்பாளையம் பள்ளியின் தலைமை ஆசிரியை மல்லிகா மற்றும் துணை ஆசிரியரும் கலந்து கொண்டனர். உதவிக் கல்வி அலுவலர் அன்பழகன் தமது ஆதரவை தொலைப்பேசி மூலம் தெரிவித்தார்.

Displaying 20170303_103229.jpg

எமது கல்லூரியின் முதல்வர், துறைத்தலவர் ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டும் எனது அனுபவக் கோவையை இணைத்தும் இந்தப் பள்ளிக் குழந்தைகளும் ஆசிரியர்களும் பயன் பெறும் முறையில் எனது நல்லுரை நிகழ்த்தப்பட்டது.



அக்கரைப் பாளையம் துவக்கப்பள்ளி முகாம் நடைபெற நமது ஓரல் மெடிசன் துறையில் ஊடுக்கதிர் பிரிவில் பணிபுரியும் சக்திவேல் பெரிதும் ஆர்வம் காட்டினார் அது அவரது கிராமம் என்பதால்.


Displaying 20170303_104751.jpg
 முதல் முறை வந்து நமது முகாம்களில் கலந்து கொள்ளும் பயிற்சி மருத்துவர்கள்  முகாம்களை பெரிதும் தமது விருப்பத்தை தெரிவித்தனர். மலேசியாவில் இருந்து இங்கு வந்து பயின்று இன்னும் சிறு கால அளவில் மருத்துவர்களாக திரும்ப இருக்கும், டாக்டர் லின்,டாக்டர் மஞ்சித் டாக்டர் கிருத்திகா, டாக்டர் கீர்த்தனா..போன்றோரும் டாக்டர் மஞ்சு போன்றோரும் முகாமை நல் அனுபவமாக்கிக் கொண்டனர்.



பல் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மார்ச் 6 அன்று கல்லூரி வளாகத்தில் துறைத்தலைவர்கள் முன்னிலையில் மரக்கன்றுகளை நடும் நிகழ்வு நடைபெற்றது.

Displaying 20170303_104846.jpg


கன்சர்வேட்டிவ் அல்லது என்டோ எனப்படும் பற் பாதுகாப்புத் துறையின் சார்பாக நடைபெற்ற நிகழ்வுகளில் பாரப்பட்டியில் உள்ள ஜீவா பப்ளிக் ஸ்கூல் சி.பி.எஸ்.சி மாணவர்கள் பெரிதும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Displaying 20170303_104909.jpg


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Displaying 20170303_105021.jpg

Displaying 20170303_105744.jpg

Displaying 20170303_105751.jpg

Displaying 20170303_104751.jpg

Displaying 20170303_103237.jpg


Displaying 20170303_101523_Burst01.jpg




2 comments: