Sunday, March 26, 2017

விஜய் மில்டனின் கடுகு: கவிஞர் தணிகை

விஜய் மில்டனின் கடுகு: கவிஞர் தணிகை


Image result for kaduku movie

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது, கடுகு அதிகம் பயன்படுத்தினால் உடல் சூடேறி விடும். எல்லா வகையிலும் பாராட்டிப் பார்க்க வேண்டிய படம் இந்தக் கடுகு. அருமையான திரைக்கதை, இயக்கம், நடிப்பு,  சமூக விழிப்புணர்வை ஊட்டும் படம்,வியாபார உத்திகளுடன் சொல்லப்பட்டிருப்பினும் இது போன்ற படங்கள்தான் இந்த நாட்டின் இன்றையத் தேவைகள். என் மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? என்று ஒரு பாடல் எனது மனதில் இந்தப் படத்தைப் பார்த்த உடன் கேட்டுக் கொண்டே இருக்கிறது, இத்தனை நாளாய் எங்கிருந்தாய் விஜய் மில்டன் அவர்களே என்று? ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி என்னுள் நீங்காதிருப்பதால் இதை உங்களுக்கு உடனே சொல்லத் தோன்றியது.

இது போன்ற படம் சிறிய அளவிலான பொருட் செலவில் எடுப்பதை விட்டு விட்டு சங்கர் போன்றோர் 2.0 என பல நூறு கோடிகள் ஒரு நூறு கோடி அதற்கு இன்சூரன்ஸ் என தமிழ் இரசிகர்களை திசை திருப்பிக் கொண்டிருக்கின்றனர் பெரிய இயக்குனர்கள் என பேர் சொல்லிக் கொண்டு...அவர் எந்திரன் கூட அப்படித்தான். மேலும் சந்திரமுகியிலேயே பல் செட்டை வைத்து இருந்த நமது சூப்பர் ஸ்டார் தான் என்றுமே சூப்பர் ஸ்டாராம்.

எல்லா சமையலிலும் கடுகை,கறிவேப்பிலையை,கொத்துமல்லிக் கீரையை, பொதினாக் கீரையைப் போட்டு கடைசியில் தாழிப்பார்கள். இன்று நான் முதலில் தாழித்து விடலாம் என நினைக்குமளவு கடுகு முதல் இடம் பிடித்து விட்டது.

Related image


பொதுவாகவே கடுகு விதை மிகச் சிறியதே ஆனாலும் அதன் மரம்தான் மரங்களில் மிகப் பெரிது என்கிறது பைபிள். அப்படி இந்தப் படம் மிகவும் பிடித்துப் போனது எனக்கு. பரத் நீண்ட நாள் கழித்து இந்தப் படத்தில் ஒரு பாடி பில்டராக ஊரில் முக்கிய புள்ளியாக எல்லா பிரச்சனைக்கும் இவரைத்தான் ஊரில் உள்ளோர் நாடுவாராக, ஏன் மிகப் பெரும் பணக்காரராகவும் நடித்து கடைசியில் புலி பாண்டியால் ,மாட்டி வைக்கப் படாமல் மாற்றி வைக்கப்பட்டு கதையை நிறைவு செய்கிறார். ( இராஜகுமாரன்) அதாங்க தேவயானியின் கணவர் தேவகுமார் நீ வருவாய் என...எனக்கென்ன சொல்லத் தோன்றுகிறது எனில் "அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்துக்கோ" கமல் நேர்த்தியாக ஒரு இன்பக் கலவையாக புலி வேஷம் போட்டிருப்பார் அதை மறக்க முடியாது....ஆனால் இந்த இராஜகுமாரன் இந்தப் படத்தில் அதையும் மிஞ்சி விட்டார் புலிவேஷம் போட்டு புலிப் பாண்டியாகி...அந்த அளவு மெச்சூரான கனமாக ஒரு மறக்க முடியாத மறு வாழ்க்கை கிடைத்திருக்கும் பாத்திரம் இராஜகுமாரனுக்கு. நல்ல திரைக்கதை அமைப்பு. நல்ல பாத்திரப் படைப்புகள். சராசரியான வாழ்வில் நாம் சந்திக்க வேண்டிய முத்துகள்.

உருவத்தில் எள்ளி நகையாடப்படும், தோற்றத்தில் மிகவும் கீழான ஒரு மனிதர் சமூக நீதியில் எவ்வளவு மேலாக இருக்க முடியும் எனச் சொல்லியிருக்கும் பாத்திரம். நடந்து கொள்ளவும் ஏன் பிறரை அந்த வழிக்கு நடந்து கொள்ள வைக்கவும் கூடிய முதிர்ச்சியுடனான குணாம்சமுள்ள பாத்திரம் படைப்பு. இதற்கு அந்த புலிப்பாண்டி, அநிருத் என்னும் பாரத் சீனி, அந்த ஆசிரியாக வரும் சுபிக்ஷா என்பார் பாசிடிவ்வான சமூக முன்னோடிகள் எனவரும் அனைவரும் ஏற்று பாராட்டும் படைப்புக் கதா பாத்திரங்கள்.

Related image

மினிஸ்டர் அதன் கூட்டம், கடைசியில் அவர்களின் கைப்பாவை எஸ்.ஐ.ஆகியோர் நெகடிவ்வான படைப்புகள். அங்காடித்தெரு வெங்கடசேனா, அல்லது தமிழரசனா எனத் தெரியவைல்லை அந்த எஸ்.ஐ ஒரு சமுதாயத்துக்கு செய்ய நினைத்தும் செய்ய முடியாத பாத்திரம், அது போலவே நம்பி நல்லவர்தான் ஆனால் அநியாயம் கண் முன்னே நடக்கும்போதும் அதை பல்வேறு காரணம் பற்றி நினைத்து யோசித்து ஊர்நலம் என்று கெட்டதுக்கு துணை போகும் பாத்திரம்...ஆனால் இதை திருந்தி பின்னால் வில்லனை முடிக்கும் கருவியாக மாற்றி பரத்தை நெகடிவ்  கேரக்டரிலிருந்து மாற்றி நமது கதாநாயக நல்லவர் எனச் சொல்லி முடித்திருக்கிறார்கள்.
Image result for kaduku movieபெண்கள் நல்ல முறையில் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள். அந்த டீச்சர் கேரக்டர் செய்யும் சுபிக் ஷா எக்ஸ்ட்ரார்டினரி கேரக்டர்.பாராட்டும்படி அந்த நடிப்பும் படைப்பும் இருக்கிறது.

புலிப்பாண்டி புலிவேசத்தில் புலி வேசம் என்றுதான் முதலில் படத்துக்கு பேர் வைக்க இருந்தார்களாம், ஆனால் எவ்வளவுதான் சிறியதாக மனித குலத்தில் இருந்த போதும் மதிக்கப்பட்ட போதும் தம்முடைய குணாம்சத்தை கைவிடக்கூடாது என்னும் கடுகு (அருமையான டைட்டில்) பாத்திரம் கதை மாந்தராக சமுதாய வழிகாட்டியாக  எழுந்து நிற்கிறது... கூரை, உயரங்களில் எல்லாம் புலி பாய்ந்து அசத்துவது போல உண்மையில்யே இந்த பயற்சியும் சினிமா முயற்சியும் பாய்ச்சலும் இராஜகுமாரனுக்கு வெகுவாக பேரை கொடுக்கும் என எதிர்பார்க்கிறேன்.

Related image


அதாவது இன்று மட்டுமல்ல என்றுமே மஹாபாரதக் கதையில் கூட தீயது செய்வாரை விட தீயது செய்வாரைத் தடுக்காமல் நெட்டை மரங்கள் என நின்றார் என மகாரதர்களான பிதாமகர் பீஷ்மர், துரோணர் ,கிருபாச்சாரியார்,போன்ற மாமனிதர்களும் வீதியில் ஓராடையில் இருக்கிறேன் மாதவிடாயில் இருக்கிறேன் எனச் சொல்லியும் கேளாமல் மயிரைப்பிடித்து வீதியில நகரில் சாலையில் இழுத்து வரும்போது அதை வேடிக்கைப் பார்த்த படி இருந்த மக்களையும் பாரதி சாடுவார், அதே மக்கள்தான் இன்றைய தமிழக நிலைக்கும், இந்திய நிலைக்கும் குடி நீர் பற்றாக்குறைக்கும், கர்நாடகா நீர் விடாமைக்கும் போன்ற எல்லா செயல்பாடுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் காரணம்.

அந்த நாடித் துடிப்பைத்தான் இந்த படம் உணர்த்தி சமூகத்தில் ஒரு அவலம் நடைபெற்று வருவதைக் கண்டும், அதைத் தட்டிக் கேட்க வேண்டிய உடலளவில் மிக வலுவான சக்தியாக இருக்கும் பரத் கேரக்டர் அதை வேடிக்கை பார்க்க, ஆனால் டீச்சர் கேரக்டர் தம்மை இழந்து (தியாகம் அதற்கு பட்டப் பெயர் வேசி) அந்த சிறுமியைக் காத்தும், அந்த சிறுமி தம் உயிரை மாய்த்துக் கொள்ளல், அதற்கு புலி உறுமல்....இப்படிச் செல்லும் படம் ஓர் உயர் ரகப் படம்தான்.

ஒரு படத்தை பார்த்தால் பார்த்த உடன் ஒரு நல்ல திருப்தி கிடைக்கும் அந்த திருப்தி இந்தப் படத்தில் கிடைக்கிறது. இந்தப் படத்தை உண்மையிலேயே நாம் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டும் அங்கும் நிகழும் அநியாயத்தை இராஜகுமாரனின் பாணியில் தட்டிக் கேட்கவும் கேட்டுக் கொள்கிறேன்.

பாரத் சீனி என்ற துணைப் பாத்திரமும், புலிபாண்டி பாத்திரமும் மிகவும் சமூகத்தில் கேலியான பாத்திரம்தான் ஆனால் அவை எப்படி உயர்வானவை என்று சொன்ன விதம் மிக நேர்த்தி. சூரியா என்று சொல்கிறார்கள் அது நடிகர் சூரியாவா வெளியிட்டது தயாரித்தது எனத் தெரியவில்லை...நல்ல காரியம் செய்திருக்கிறார்.

Related image

பல வகையிலும் பாராட்ட வேண்டிய படம் என்று சொன்னேன், அதிகம் குடி மதுக்குடி காண்பிப்பது இல்லை காண்பித்த இடம் மினிஸ்டர் பாட்டிலுடன் குடிப்பது புலிப்பாண்டியும் அநிருத்தும் குடிப்பது என 2 காட்சிகள் தாம் என நினைக்கிறேன்.

அன்றாடம் நாம் இது போன்ற பாத்திரங்களை சந்திக்கலாம், ஆனால் அதை பாரட்டாமல் கவனத்தில் கொள்ளாமல் விட்டுச் செல்கிறோம் அவசரகதி என...நேற்று கூட பேருந்து பயணத்தில் ஒரு கல்லூரி இளைஞர் காசு போதாமல் நடத்துனரிடம் கெஞ்சுகிறார், கையில் அரசுப் பேருந்து பாஸ் உண்டு, இது தனியார் பேருந்து, கையில் டிக்கட்டுக்கு போதாமல் சில ரூபாய் காசு குறைவு, நான் நிலை என்ன ஆகிறது எனப் பார்க்கலாம் இந்த இளைஞர் உண்மையானவர்தானா என கொஞ்சம் சமயம் எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு குழந்தை மனைவி என இருந்த ஒரு தோற்றத்தில் டல்லாக இருந்த ஒருவர், அவருக்கும் சேர்த்து டிக்கட் எடுத்து விட்டார், சில்லறையை இந்த கல்லூரி இளைஞர் அவரிடம் தரும்போது, எனக்கது ஒரு டீ குடிக்கற காசு, வைத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லி விட்டார், இருவரையும் பாராட்டினேன்...

அப்படி சிறு சிறு விஷயத்திலிருந்து, விஷத்திலிருந்து நாட்டை நாட்டு நடப்பை மாட்டி விடாமல் மாற்றி விடத் தெரிந்த மனிதர்கள் கொள்கை மாறாத குணக்குன்றுகள் எண்ணிக்கை புலிப் பாண்டி போல அந்த டீச்சர் போல, அந்த அநிருத் போல ஏன் கடைசியில் மாறி விடும் நம்பி போல வரும்போது இந்த நாட்டின் நிலை மாறலாம் அதிலும் புலிப்பாண்டீ பாத்திரம் எக்ஸலன்ட். ஆனால் இதை எல்லாம் சினிமாவாக பார்க்காமல் அன்றாட வாழ்வின் நிதர்சன நடப்புகளாக பார்க்கக் கற்றுக் கொண்டு நல்லன செய்ய இந்த மனிதர்கள் முன் வரவேண்டும் அதற்கான தூண்டுகோல்கள் தாம் இது போன்ற படங்கள்.

Related image

நம்பிக்கையூட்டும் படம், நம்பிக்கயூட்டும் படைப்பு, பாத்திரப் படைப்புகள்

தணிகையின் அரசில் இதற்கு நூற்றுக்கு அறுபது மிகச் சுலபமாக தரப்படுகிறது. மறுபடியும் மறுபடியும்  இது போன்ற நாட்டுக்குத் தேவையான திரைப்படங்கள் பூக்கட்டுட்ம். நல்ல‌ திரைக்கதை அமைப்பு, அருமையான வசனங்கள்...

கெட்டது நடந்தாலும், நடக்காமல் மயிரிழையில் காப்பாற்றப் பட்டு இருந்தாலும் இதெல்லாம் நாட்டுக்குத் தேவையா? இதற்கெல்லாம் தண்டனை ஏதும் இல்லையா? இதை எல்லாம் கேட்பாரே இல்லையா என்று புலிப்பாண்டி இன்ஸ்பெக்டரிடம் அழும்போது நாமும் கடையனுக்கும் கடைத்தேற்றம் என்னும் காந்தியின் வழியை எண்ணுகிறோம்..

என்னால் இடையில் எந்த வேலையும் செய்ய விடாமல் என்னை முழுதாக முழு முனைப்புடன் காலையில் முதல் வேலையாக பார்க்க வைத்தப் படம் நீங்களும் பாருங்கள்...நல்ல அனுபவமும், நல்ல சிந்தனையும் தெளிவும் தோன்றும்.Related image

ஆனாலும் எதிரியின் வலுவைப் பொறுத்துதான் அன்றாட வாழ்வில் நம்மால் மோதமுடியும் என்றும் அதற்கு நாம் பலியாக தயாராக முடியாது என்று சொல்வாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. ஏன் எனில் அவர்களுக்காகத்தான் இந்தப் படம்

Related image

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

4 comments:

 1. விஜய் மில்டனின் கடுகு: கவிஞர் தணிகை = அருமையான திரை விமர்சனம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Tanigai Ezhilan Maniam

  ReplyDelete
 2. thanks for your sharing sir vanakkam

  ReplyDelete
 3. Replies
  1. thanks for your comment on this post sir. vanakkam Adhi.please keep contact

   Delete