Sunday, March 12, 2017

சேலம் 5 ரோடு: கவிஞர் தணிகை

சேலம் 5 ரோடு: கவிஞர் தணிகை
In Tamil Nadu Salem stood 6th place in city line.
Related image

முன் ஒரு காலத்தில் அதாவது 1980களில் சேலம் 5 ரோடு சேலத்து டவுனிலிருந்து வெளியில் இருந்தது இன்று இதுதான் சேலத்தின் மையப்பகுதி.சேலத்தில் இருந்தது அன்று ஒரே நகர பேருந்து நிலையம், இன்று டவுன் பஸ் ஸ்டேன்ட் எனச் சொல்லப்படுவது நகர் பேருந்துகளும், வெளியூர் பேருந்து களும் நகர இடமின்றி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியேறவே அரை மணிக்கும் மேலான நிலையைப் போக்கி பேறு பெற்றது தற்போதைய பாரத ரத்னா எம்.ஜி.ஆர் மத்திய பேருந்து நிலையம்.

 இது வெளியூர் பேருந்துகளுக்கும், பழைய பேருந்து நிலையம் நகர பேருந்து நிலையங்களுக்கும் என்று பிரித்து போடப்பட்டது அந்தக் காலம் மலையேறி இன்று சேலத்தில் இரண்டு அடுக்கு பால வேலைகள் நடைபெற்று வருவதில் சேலம் அடுத்த கட்ட பரிமாணத்திற்கு செல்கிறது.

சேலத்து வியாபாரிகள் சேலத்து பேருந்து நிலையத்தை  மாற்றுவதற்கு இல்லாமல் வழக்கிட்டு ஸ்டே வங்கியபடியே இருந்தனர். எமது நண்பர் எம்.எப். ஃபாருக்கி கலெக்டராக இருந்த காலக் கட்டத்தில் நள்ளிரவில் அர்ச்சுவான் ஏரிக்கு வெளியூர் பேருந்து நிலையத்தை மாற்றினார் மார்ச்சிங் செய்து நடந்தே சென்று துவக்கி வைத்தார். நல்லது செய்தார்.

அது முதல் அந்த பேருந்து நிலையம் வெகுவாக இயங்கி வர, அதனருகே இருக்கும் ஐந்து வழி சாலையும் பெரும் முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்து விட்டது அது எந்தவிதமான துறை சார்ந்த வியாபாரம், பணிகளானாலும் இப்போது போக்குவரவில் 5 வழிச் சாலையை மையப்படுத்தி நடந்தேறி வருகிறது.

காலை வந்து பார்த்தால் இந்த கட்டுமானப் பணியாளர்கள் இங்கு தயாராக இருப்பார்கள். சில்லறை வேலைக்கு அவர்களை அங்கேயே பேசி அழைத்துக் கொள்ளலாம், அழைத்துச் செல்லலாம்.\


Image result for salem city and 5 roads
இன்னொரு பெரிய விஷய்ம் என்ன வெனில், இந்த 5 வழிச்சாலை 2 கி.மீ அருகே சேலம் ரயில் சந்திப்பும் இருப்பது. அது மட்டுமின்றி இப்போது இந்த 5 வழிச்சாலை இப்போது இரு அடுக்கு பால வேலைகளில் பெரும்பங்கு வகிக்கிறது. ஒரு வழி வந்து இரண்டாய் பிரிந்து போவதாக ....நல்ல டிசைன்.பெரும்பாலும் பயணிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இன்றி இந்தப் பணிகள் நவீன தொழில் நுட்பத்துடன் வெகு விரைவாக நடந்து வருகிறது.

இந்தப் பணிகளை இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி என்னும் இராமலிங்கம் என்பாரின் மதுரை சார்ந்த இன்ஃப்ரா என்ற  கம்பெனியே ஒப்பந்ததாரராக இருந்து செய்து வருகிறது.

சேலம் ஸ்மார்ட் சிட்டி என்ற மத்திய அரசின் திட்ட ஒதுக்கீட்டின் படி பல்லாயிரக்கணக்கான கோடிகள் இந்த சேலத்து நகர்புற மேம்பாட்டுக்கு செலவிட இருப்பதாகவும் அதில் பல நூறு கோடிகள் இந்த பாலத்திட்டப் பணிகளுக்கும் ஒதுக்கப்படுகிறது.

மேலும் சேலம் ரெயில்வே கோட்டம் இதனருகில் இருப்பது இதன் முக்கியத்துவத்தை மேலும் கூட்டுகிறது. சேலம் என்றாலே சைலம் மலைகள் அடர்ந்த பகுதி. அதில் 5 வழிச் சாலை சரித்திரம் சொல்லி வருகிறது.

சென்னைக்கு கத்திப்பாரா போல இந்தப் பாலம் கட்டி முடிக்கப்பட்டால் சேலம் 5 ரோடும் ப்ளை ஓவரில் பறக்க வைத்திடும் பயணங்களை, சிட்டிக்குள் நுழையத் தேவையில்லாதாரை விரைவாக சிட்டியை தாண்டிச் செல்ல தாண்டிச் சொல்ல...

ஒரு காலத்தில் தியேட்டர்களுக்கென்றே புகழ் பெற்றிருந்த இந்த நகரம் இப்போது நிறைய தியேட்டர்களை இழந்து விட்டது, நிறைய மண்டபங்களை கூட இழந்து எல்லாமே சாப்பிங்க் காம்ப்ளக்ஸ் மால்களாக மாற்றி வைத்துள்ளது.

Image result for salem city and 5 roads

இந்த சாலையருகே வரும்போது பிறந்த குழந்தைகளுக்கு பஞ்சமூர்த்தி என்ற பேரும் வைக்கப்படுகிறது. எப்போதும் ஜனத்திரள் உள்ள பகுதி, நாலுரோடு பகுதி போல இந்தப் பகுதியில் பிக்பாக்கெட் ஜோன் ஏதும் கிடையாது. இது என் வாழ்வில் ஒன்றாகி விட்ட ஒன்றாகிவிட்டது.

கடந்த ஒராண்டாக இந்த 5 வழிசாலையை தினமும் சந்திக்கிறேன், விடுமுறை நாள் தவிர, பேருந்து நிலையத்தை விட சுத்தம் அதிகம் ஆனாலும் ரத்னா காம்ப்ளக்ஸ் அருகே உள்ள பெரிய சாக்கடையில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு பஞ்சமில்லை. நகரியம் இதை எல்லாம் கண்டு கொண்டதாக தெரியவில்லை. எப்போதாவது ஒரு முறை சுத்தம் செய்வதையும் கண்டதுண்டு, ஆனால் அதன் மறு நாளே அந்த சாக்கடை அப்படியே பிளாஸ்டிக் கழிவுகளின் மேற்பரப்புடனே காட்சி அளிக்கும்.

அதிகாலை சுமார் 6.30 மணியளவில் அங்குள்ள ஒரு ரத்னா காம்ப்ளக்ஸில் எனது சாப்பாட்டு குடிநீர் பையை மாட்டி விட்டு 15 நிமிடம் அந்த சாலையின் வேகத்தை நிதானமாக அவதானித்துக் கொண்டிருப்பேன். ஒரே இயக்கம். ஒரே வேகம்.( Salem பேருந்து நிலையத்தில்    முடை நாற்றம் அதிகம், மேலும் பை மாட்ட எந்த ஒரு கேட்டும் கிராதிக் கம்பிகளும் லகுவாக உதவிகரமாக இருப்பதில்லை)

சென்னை செங்கல்பட்டு, காஞ்சீபுரம் வரை விரிவடைந்து வருவது போல இன்றைய  சேலமும், தனது பரப்பை அதிகரித்தபடியே எல்லா சாலைகளிலும் எடுத்துக் காட்டாக இந்த 5 வழிச்சாலையின் நீட்சி, குரங்குச் சாவடி, சேலம் ஸ்டீல் பிரிவு ரோடு, முனியப்பன் கோயில், ரேடிசன் மாமங்கம், என விரிந்து கொண்டபடியே இருக்கிறது...அது போலவே எல்லா வழிகளிலும்...மேட்டூர் சாலையைப் பொறுத்தவரை மணிப்பால் மருத்துவமனை வரை விரிந்து சுங்கச் சாவடி வரை கூட ஒரு நாளுக்கு வந்து விடலாம்.... சேலத்தை இப்படி 5 வழிகளில் தொட இந்த 5 வழிச்சாலை உதவுகிறது. இதை அடுத்துத்தான் 4 ரோடு, 3 ரோடு எல்லாமே..



Related image

மறுபடியும் பூக்கும் வரை
மறுபடியும் பார்க்கும் வரை

சேலத்து 5 தலை நாக வழிச் சாலையுடன்
சேலத்து 5 தலை நரக வழிச் சாலையுடன்
சேலத்து 5 தலை நகர வழிச் சாலையுடன்

கவிஞர் தணிகை.





Related image

3 comments:

  1. சேலம் பற்றிய பல செய்திகளை அறிந்து கொண்டேன்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  2. thanks for your sharing and caring sir. vanakkam.

    ReplyDelete