Wednesday, March 22, 2017

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்னும் அல்லா ர‍ஹ்ஹா ரஹ்மானும்,எல்லாப் பணமும் எனக்கே என்னும் இளையராஜாவும்: கவிஞர் தணிகை.

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்னும் அல்லா ர‍ஹ்ஹா ரஹ்மானும்,எல்லாப் பணமும் எனக்கே என்னும் இளையராஜாவும்: கவிஞர் தணிகை.

Image result for ar rahman and ilayaraja


உலகை தம் இசையால் வென்ற மேதையாய் ஏ.ஆர்.ரஹ்மான் இருக்க 2 ஆஸ்கார் விருதுகளுடன் கொடி கட்டிப்பறக்க அந்த 4 வயதில் தந்தையுடன் இசைக்கருவியை கையில் எடுத்த சிறுவன் நினைத்திருக்கவே மாட்டான்.9 வயதில் தமது தந்தையை பறிகொடுத்த அந்த சிறுவன் முயற்சியை மட்டும் கைவிடவே இல்லை.

அவனிடம் என்றுமே இருக்கும் ஒரு அடக்கம்: எல்லாப் புகழும் இறைவனுக்கே என்னும் இறை நெருக்கம்...அது ஏற்ற முடியா இன்னும் ஏற முடியா ஏணிகளையும் ஏற்றி வைத்தது இனி ஏற படிகளே பெரும்பாலும் இல்லை.அவ்வளவு உயரம்...

ஆனால் இளைய ராஜா என்னும் மாமனிதரும் ஒரு இசை மேதைதான். ஆனாலும் இவரிடம் எப்போதும் இருக்கும் தலைக்கனம். இவர் நிறைய ஆன்மீக பக்தி, கடவுள் சார்ந்த வழிபாட்டுப் பாடல்களைப் படைத்த போதும் இவர் எப்போதும் தம்மையே வியந்து பார்த்துக்கொள்ளும் குணத்தை இன்னும் விட்டார் இல்லை ஏற்கெனவே ஒருமுறை ஒரு பத்திரிகையாளரை நீ யார் என கொச்சையாய் துசாய், துரும்பாய் மதித்து அனைவரது அதிருப்தியை பெற்றுக் கொண்டார்.


Related image


இப்போது எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் விட்டு பேரைக் கெடுத்துக் கொண்டார். எல்லாவற்றுக்கும் வாரிசுகளும், பெரும்பண விளையாட்டுமே காரணம். இந்த சினிமாக்காரர் எல்லாமே யோக்யம் எல்லாம் இல்லை. இந்த எஸ்.பி.பாலசுப்ரமணியமும்தான். சரண் , கார்த்திக் இளையராஜா இவர்களுக்கு எதிர்கால பேஸ்மட்டத்தை அமைத்து தரும் இந்த போராட்டத்தில் தான் இப்படி நண்பர்கள் அசிங்கப் பட்டுப் போய் இருப்பது பேராசைக் களத்தில் பெரும் புகழுடும் பெரும்பணத்தை பெறவே பங்கு போட்டுக் கொள்ளவே இந்தப் வாய் மொழிப்போர் யாவுமே...

ஒரு தயாரிப்பாளர் முதல் போட்டு ஒரு படத்தை ஒரு இயக்குனரைத் தேர்த்நெடுத்து திரைக்கதை அமைத்து, பாடல் செய்யச் சொல்லி,இப்படி எல்லா நிலைகளிலும் ஒரு கூட்டு முயற்சியை செய்கிறார்கள், பாடல் எழுதுவோரும் இசை அமைப்பாருமாக...எல்லாம் பணத்துக்காக...

இதில் கற்பனை கலக்கிறது வார்த்தைகள் பிறக்கிறது இசை மலர்கிறது இதில் வரும் எல்லா இலாப நஷ்டம் பெரும்பாலும் எல்லாத் துறைகளையும் சார்ந்து பணி செய்தோரை பாதிக்கிறது. ஆனாலும் இலாபத்தை பெரும்பாலும் தயாரிப்பாளர் மட்டுமே எடுத்துக் கொள்கிறார் அது தோல்வி அடைந்து நஷ்டம் வந்தாலும் சம்பளம் வாங்கிய அனைவரும் தப்பித்துக் கொள்ள தயாரிப்பாளர் தற்கொலை செய்யும் நிலையெல்லாம் இந்த சினிமாவில் உண்டு.

பேருந்தில்  தமது பாடல் ஒலிபரப்பாவதை இளையராஜாவால் தடுக்க முடியாது,வானொலியில், தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பாவது,ஒளிபரப்பாவது யாவற்றையும் வேண்டாம் என்று சொல்லப்போவதில்லை

மேலும் சொல்லப் போனால் இவரது தனிப்பட்ட ஆல்பம் போன்ற இசைக் கோர்வை பற்றி இவர் காபி ரைட் கொண்டாடினால் அது நியாயம். அடுத்தவர் காசில் எல்லாம் செய்து விட்டு பிறர் சொத்துக்கு உரிமை கொண்டாடுவது சிந்திப்பார்க்கு விளங்கும் இளையராஜாவின் நிலைப்பாடு கேலிக் கூத்தானது என்று...

Image result for ar rahman and ilayaraja


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

43 comments:

 1. சரியான பதிவு. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. thanks for your feedback on this post vanakkam sir. please keep contact

   Delete
 2. நல்ல பகிர்வு.

  இளையராஜா மீண்டும் மீண்டும் தன்னை ஒரு கேலிப் பொருளாக மாற்றிக்கொண்டு வருகிறார். ரஹ்மான் அடக்கமாக அமைதியாக அடுத்த அடுத்த வளர்ச்சிக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

  ReplyDelete
  Replies
  1. அப்போ ரஹ்மான் சம்பளம் மட்டும் வாங்கிட்டு இசை அமைக்கின்றார் என்று சொல்லுறீங்களா
   அறிவு கொழுந்தே

   Delete
  2. well said kaarigan, your wavelenth of thoughts are similar to me. thanks for your feedback and comment on this post. vanakkam.please keep contact.

   Delete
  3. thanks karigan your wavelength of thoughts and mine are similar on this subject.please keep contact.

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. மிஸ்டர் எதிகாலிஸ்ட்,

   முதலில் உங்களின் பிடல் காஸ்ட்ரோ படத்தை முகப்பிலிருந்து எடுத்துவிடுங்கள். உங்களுக்கு அந்த தகுதி இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளவும். As for Fidel, he was a communist narcissist. A dictator. He gained popularity stolen from Che, the real fighter.

   ரஹ்மான் காப்பி ரைட் வாங்கி தனது பாடல்களை வெளியிடுவது அவர் விருப்பம். He was far ahead of IR in this sense. முதலில் அதை செய்யாத உங்கள் அருமை இளையராஜா இப்போது மட்டும் திடீரென ரஹ்மானை பின்பற்றுவது வெறும் வணிக நோக்கத்திற்க்காகததானே ? இதில் என்ன பெரிய உரிமை, நல்லெண்ணம் இருக்கிறது? திட்டினால் இருவரையும் ஏசுங்கள். அதில் என்ன ரஹ்மானுக்கு ஒரு நிலை இராவுக்கு ஒரு மரியாதை? மட்டித்தனம்.

   அறிவுக் கொழுந்தே என்று சொல்ல மாட்டேன். அது உங்களுக்கு இருக்கிறது என்று நிரூபிக்காதவரையில்.

   You guys seem to think with your foot. Heaven help u.

   Delete
  6. you caught the right pulse. thanks Mr .karigan.thanks once again for your feedback and comment on this post and defend my side. vanakkam.please keep contact.

   Delete
 3. அடிப்படை அறிவு கூட இல்லாத நீயெல்லாம் எதுக்கு பதிவு போடுறாய்
  .
  எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொன்ன ரஹ்மான் தான் இந்த ராயலடி விடயத்தில் முன்னோடி என்பது உனக்கு தெரியுமா ?
  ரஹ்மானை சம்பளம் மட்டும் தான் வாங்கிகிட்டு இசை அமைக்கின்றார் என்று நினைச்சுகிட்டு இருக்கிறாயா ?
  முடடாள்
  ரஹ்மான் கூடத்தான் ராய்லடி வாங்கிகிட்டு இருக்கான்
  .
  ஆனால் ரஹ்மான் புத்திசாலி ஆரம்பம் முதல் தெளிவாக ஒப்பந்தம் போட்டு காசாகிகிட்டு இருக்கான்
  இளையராஜா முடடாள் இப்போதான் முழிச்சுகிட்டு இருக்கார்

  ReplyDelete
  Replies
  1. நீயெல்லாம் சொல்லியா நான் பதிவை நிறுத்திக் கொள்வேன், கத்திரிக்காய் புழுத்தாலும் சந்தைக்கு வந்தால் அதை புழுத்த கத்திரிக்காய் என்றுதான் சொல்ல முடியும், நீயே சொல்லிட்டியே ஒருவர் அறிவாளி, மற்றொருவர் முட்டாள் என ,...நான் கூட சொல்லவில்லை, நீதான் சொல்லி இருக்கிறாய்,அப்புறம் அடிப்படை அறிவு என்றெல்லாம் உனக்கிருந்தால் பொது விஷயம் பற்றி எழுதுகையில் மரியாதைக் குறைவாய் எழுதுவாயா குணக்கடலே...அறிவுக் குன்றே,நீயெல்லாம் ஒரு எதிகலிஸ்ட் என பேர் வைத்துக் கொண்டிருக்கும்போதே தெரியவில்லையா உன் வண்டவாளம், உனக்கு பிடிக்க வில்லையெனில் கருத்தை நாகரீகமாக பதிவு செய்ய கற்றுக் கொள்.நீ எல்லாம் மரியாதை சொல்லித் தருமளவு அவ்வளவு கீழ் நிலையில் நாங்கள் இல்லை.உனது தராதரம் உனது எழுத்தில் தெரிந்து விட்டது...இனியும் நீ கருத்து அடிப்படையில் எழுத முற்பட வில்லை எனில் உனது பின்னோட்டம் இடம் பெறாது. மாற்று கருத்தானாலும் அதை நல்ல வகையில் சொல்லிப் பழகு.
   எதெடுத்தாலும் தான் நான் என்று சொல்வார்க்கும் அடக்கமாக இருக்கும் நபர்களுக்கும் என்றுமே வேறுபாடு உண்டு.

   Delete
 4. இளையராஜா - காப்புரிமை. ஒருசில சுருக்கமான கருத்துகள்.
  1. பாடலாசிரியருக்கும் பாட்டில் உரிமை உண்டு. இசைக்கலைஞர்களுக்கும் உண்டு. தயாரிப்பாளருக்கும் உண்டு. இளையராஜாவுக்கு மட்டுமே உரிமை உண்டு என்று அவர் சொல்வது தவறு - பல்வேறு வாதங்கள்.
  அப்போது, ஏதோ ஒரு உரிமை இதில் யாருக்கோ உண்டு என்பது புரிகிறதுதானே? அந்த ராயல்டியைக் கூடக் கொடுக்காமல் SPB ஆயிரக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு பாட எண்ணியதுதான் இங்கே பிரச்னை. இப்போது புரிகிறதுதானே? இதுதான் மிக அடிப்படையான பிரச்னை. காப்புரிமைக்கான ராயல்டியை அவர் கொடுக்க நினைக்கவில்லை. யாருக்குக் கொடுக்கவேண்டும் என்பதெல்லாம் secondary. கொடுத்தே ஆகவேண்டும் என்பதுதான் இங்கே பிரச்னை. அவர் கொடுக்க நினைக்கவில்லை. மொதல்ல பழத்தை டேபிள்ள வைங்கய்யா.. யாருக்கு எந்தப்பங்குன்னு நாங்க முடிவு பண்ணிக்கிறோம். பழத்தை முழுசா நீங்க முழுங்குவீங்களா?
  2. ஒரு பாடலின் கர்த்தா யார்? உலகின் சிறந்த பாடலாசிரியராக இருக்கலாம். இசைக்கலைஞராக இருக்கலாம். அவரை அழைத்துக்கொண்டுவந்து, இப்படி வாசியுங்கள்.. இப்படி எழுதுங்கள் என்று சொல்வது யார்? இசையை முழுதும் இவர்களை வைத்துக்கொண்டு உருவாக்குபவர் யார்? இதுதான் வித்தியாசம். ஒரு இசையமைப்பாளர் நினைத்தால் எத்தனையோ பாடலாசிரியர்களை உருவாக்கலாம். ஆனால் பாடலாசிரியரால் இசையமைப்பாளர்களை உருவாக்க முடியுமா? உருவாக்குபவர்களுக்கும் அதில் அழைப்பின்பேரில் பங்கேற்பவர்களுக்கும் இதுதான் basic வித்தியாசம்.
  இளையராஜா என்று நபர் இல்லாவிட்டால் அவர் உருவாக்கிய எந்தப் பாடலும் இங்கே இல்லை. அதில் பங்கேற்றவர்கள் எல்லாம் secondary. ஒவ்வொரு பாட்டும் ஒரு உருவாக்கம். தனித்தன்மை உடைய பொருள். அது வெறும் 5mb ஃபைல் மட்டும் அல்ல. இதைப் புரிந்துகொள்ளுங்கள்.
  3. ஒரு விஷயத்தை உருவாக்குபவர்களுக்கும், அவர்களின் அழைப்பின் பேரில் அதில் பங்கெடுப்பவர்களுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. இளையராஜா இங்கே, இந்த அனைவருக்கும்தான் ராயல்டி பகிர்ந்து அளிக்கப்படும் என்றேதானய்யா சொல்கிறார். அதை ஏன் வசதியாக மறக்கிறீர்கள்?
  4. இளையராஜா செய்துகொண்டிருப்பது ஒரு யுத்தம். யுத்தத்தில் நண்பனாவது எதிரியாவது. நோக்கம் ஒன்றேதான் முக்கியம். அந்த நோக்கில் அவர் வெற்றியடைவது, பிற இசையமைப்பாளர்களுக்கும் கண்டிப்பாக முக்கியம். எல்லாருக்குமான யுத்தம்தான் இது. அந்த நோக்கம் உயரியது. நல்லது. அதைப் பாராட்டுவோம்.
  5. ரஹ்மான் போன்றவர்கள் துவக்கத்தில் இருந்தே செய்வதை, இதெல்லாம் தெரியாமல்/ நேரமில்லாமல் இருந்துவிட்டு, இப்போது முழுவீச்சில் களத்தில் இறங்கியிருக்கிறார் இளையராஜா. இதில் அவர் வெற்றிபெறவேண்டும் என்றே விரும்புகிறேன். விருப்பு வெறுப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு, இதுதான் நியாயம். யோசியுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. இந்த பின்னூடடம் திரைப்பட கதாசிரியர் கருந்தேள் என்னும் புனைபெயரில் இயங்கும் ராஜேஷ் என்பவரின் பதிவில் இருந்து எடுக்கப்படடவை

   Delete
  2. yes I do agree, I also came to know about SPB activities and controversies with their relationship. thanks for your feedback on this post. vanakkam. please keep contact.your answer is very satisfactory.

   Delete
 5. இளையராஜா சம்மந்தப்பட்ட சுருக்கமான பதில்.
  1. இளையராஜா சம்மந்தப்பட்ட பாடல்களில், தயாரிப்பாளருக்குக் காப்புரிமை இல்லையா? அது எப்படி இளையராஜாவே எல்லாப் பாடல்களுக்கும் உரிமை கோரலாம்?
  இது, காண்ட்ராக்டைப் பொறுத்த விஷயம். பல தயாரிப்பு நிறுவனங்கள், பாடல்களின் உரிமை அவர்களுக்கே சேரும் என்ற ஒப்பந்தத்தைப் போடக்கூடியவைதான். அவைகளுக்குத்தான் அப்பாடல்கள் சொந்தம். அதிலெல்லாம் இளையராஜா உரிமை கோரமாட்டார். அவருக்குச் சொந்தம் என்று ஒப்பந்தம் இருக்கும் பாடல்களின் ராயல்டி மட்டும்தான் அவர் கோருவது.
  2. அதெப்படி? இசைக்கலைஞர்கள், பாடகர்கள், பாட்டெழுதியவர்கள் ஆகியோருக்கெல்லாம் ராயல்டி இல்லையா? இளையராஜாவுக்கேதான் எல்லாமேவா?
  இல்லவே இல்லை. இளையராஜா, இவர்கள் அனைவருக்கும் ராயல்டி பிரித்தளிக்கப்படும் என்றுதான் சொல்கிறார். இது மிகவும் தெளிவான கருத்து. நீங்களே அவரது பேட்டிகளைப் படித்துக்கொள்ளலாம்.
  3. அது ஏன் அவரது பாடல்களுக்கு நாம் பணம் கொடுக்கவேண்டும்? இறைவன் கொடுத்த இசை என்றுதானே அவர் சொல்கிறார்? பின் ஏன் பணம் கேட்கிறார்?
  ஒரு பாடலை உருவாக்குவதன் பின்னணியில் உள்ள விஷயங்கள் தெரிந்தால் இக்கேள்வியே வராது. பாடல் என்பது ஒரு படைப்பு. இசையமைப்பாளரின் மூளையில் உருவாவது. அது செயல்வடிவம் பெற்று, பாடலாக மாறும் ப்ராசஸ் மிகப்பெரியது. பலரின் உழைப்பையும் தன்னுள் கொண்டிருப்பது. எப்படி ஒரு திரைப்படத்தை முறையாகத் திரையரங்கு சென்று பார்க்கிறோமோ, அப்படி இதற்கும் பணம் கொடுத்தே நாம் அதைப் பாவிக்கவேண்டும். அதுதான் முறை.
  4. தனது நண்பனான SPBயிடம் அவர் ஏன் தனிப்பட்ட முறையில் பேசியிருக்கக்கூடாது? ஏன் வழக்குப் போடவேண்டும்?
  சிம்பிள். அது யாராக இருந்தாலும், தானே பங்கேற்றிருந்தாலும், இன்னொருவரின் இசையை முறையாக அனுமதி பெறாமல் பொதுமேடையில் பாடிவிடமுடியாது. அது ராயல்டி சட்டங்களின்படி குற்றம். இது பாடல் இண்டஸ்ட்ரியில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். மேலும், இது இலவச நிகழ்ச்சி அல்ல. ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கப்படும் நிகழ்ச்சி. அப்படியென்றால், இசையைப் படைத்த படைப்பாளிக்கு ராயல்டி தராமல் எப்படி? ஏன்? SPB இளையராஜாவிடம் முன்கூட்டியே அனுமதி வாங்கியிருக்க வேண்டியதுதானே?
  SPB அதே மேடையில் ரஹ்மான் பாடலைப் பாடிவிடமுடியுமா? முடியவே முடியாது. ஏனெனில் ரஹ்மான் மிகத்தெளிவாக, ஆரம்பத்தில் இருந்தே அவரது இசையும் பாடல்களும் அவருக்கே சொந்தம் என்றே ஒப்பந்தம் போட்டுவருபவர். அவரிடம் யாரும் விளையாடமுடியாது. இதைத்தான் இப்போது இளையராஜா செய்ய முயல்கிறார். அதுதான் சரியும் கூட
  இறுதியாக, இது நட்பு சம்மந்தப்பட்ட விஷயம் என்பதைவிட, வியாபாரம் சம்மந்தப்பட்டது என்பதைத்தான் நாம் புரிந்துகொள்ளவேண்டும். படைப்பின் உரிமை படைப்பாளிக்கே. இதில் சந்தேகமே வேண்டாம். உலகம் முழுக்கவும் அப்படியே. நீங்கள் ஒரு புத்தகம் எழுதினால், உங்களைக் கேட்காமல் யாரும் அதைப் பிரதி எடுத்துப் பயன்படுத்தமுடியாது. இதேதான் இசைக்கும்.
  எனவே, இளையராஜா செய்துகொண்டிருப்பது மிகவும் சரியான விஷயம். அவரை ஆதரிப்பதன்மூலம் காப்பிரைட் என்ற நல்ல விஷயத்தை நாம் ஆதரிப்பவர்கள் ஆகிறோம். காப்பிரைட் பற்றி எதுவுமே புரிந்துகொள்ளாமல், அவர் மீது பிற விஷயங்களில் இருக்கும் கோபத்தால் நாம் அவரை விமர்சிப்பது சரியல்ல. முதலில் காப்பிரைட் என்றால் என்ன என்பதையாவது முழுதாகத் தெரிந்துகொண்டு, அதன்பின் கம்பு சுற்றவும்.
  .
  நான் போட் ட இரண்டு பின்னூடடங்களும் திரைப்பட கதாசிரியர் கருந்தேள் என்னும் புனைபெயரில் இயங்கும் ராஜேஷ் என்பவரின் பதிவில் இருந்து எடுக்கப்படடவை

  ReplyDelete
  Replies
  1. yes I do agree, I also came to know about SPB activities and controversies with their relationship. thanks for your feedback on this post. vanakkam. please keep contact.your answer is very satisfactory.

   Delete
 6. கவிஞர் தணிகை அவர்களே ,
  உங்கள் பதிவு வெறும் காழ்ப்புணர்வு அடிப்படையில் வந்துள்ளது . உங்களுக்கு உள்ளது இளையராஜா எதிர்ப்பு வெறி நோய்
  இளையராஜா ஜாதி சார்ந்து உங்களுக்கு இந்த எதிர்ப்பு வெறி நோய் வைத்திருக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. no its not right my dear senthilkumaran Ramachandran. I also liked him and his art and good fan of him, but his activities towards public is not right . I have watched him from many occassions. So; its not against him, but against his attitude.anyhow thanks for your feedback on this post. vanakkam.

   Delete
 7. அடுத்து Vvbala Bala என்பவர் முகநூல் பதிவு - part 1
  ----------------------------------------------------
  இளையராஜாவும் உரிமையும்

  நேற்றிலிருந்து பலர் இதை பற்றி எழுதி விட்டார்கள்.
  இருந்தாலும் நான் என் கருத்தை கூறுவது அவசியம் என்று நினைக்கிறேன்.
  ராஜா அவர்களின் இசை உரிமை சார்ந்த வழக்குகளின் போக்கை தொடர்ந்து கவனித்து வருபவன், வழக்கறிஞன்,இசையில் ஈடுபாடு உள்ளவன், இசைக்கருவிகள் வாசிப்பதோடு இல்லாமல் இசைக்குழுமத்தையும் நடத்திய அனுபவம் உள்ளவன், பல இசைக்குழுக்களுடன் தொடர்பு கொண்டவன் என்பதால் இந்த நினைப்பு.
  பெரும்பாலான கருத்துக்கள் தவறான புரிதலின் அடிப்படையில் எழுதப்பட்டவை..

  இந்த விவகாரத்தில் பலர் கூறும் குற்றச்சாட்டுக்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  1. ராஜா பாலுவின் நண்பரில்லையா, அவர் இப்படி செய்திருக்கலாமா? இது துரோகமில்லையா?

  2. ராஜா கர்நாடக மும்மூர்த்திகளுக்கு என்ன ராயல்டி கொடுத்தார்?

  3. ராஜா காப்பி அடித்ததில்லையா? அவர் அப்போது காப்பி அடித்த கலைஞர்களுக்கு ராயல்டி கொடுத்தாரா?

  4. ராஜாவுக்கு ஆணவம் அதிகம். வயதாகி விட்டதால் மூளை மழுங்கி விட்டது இத்யாதிகள்.

  5. ராஜா தயாரிப்பாளரிடம் பணம் வாங்கி கொண்டுதானே இசை அமைத்தார். அப்போது அவருக்கு எப்படி உரிமை இருக்கும்?

  6.MSV, KVM போன்றோர் இப்படி கேட்கவில்லையே. இவருக்கு மட்டும் ஏன் பேராசை?

  7. பாடலை பாடியதால் பாடகருக்கு பாடலில் உரிமை இல்லையா? SPB வழக்கு போட்டால் ராஜா டங்குவார் கிழிஞ்சுடும் போன்றவை.

  ReplyDelete
 8. Vvbala Bala என்பவர் முகநூல் பதிவு - part 2
  --------------------------------------------
  இவை எல்லாவற்றிற்கும் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் இதில் பல கேள்விகள் நம் மக்களின் அறிவுக்குறைபாட்டையே பறைசாற்றுகின்றன. இந்த ஒரு விவகாரத்தில் தர்க்கபூர்வமான பதில்களை கூறுவதின் மூலம் தமிழ் சூழலில் ஒரு அறிவுபெருக்கத்தை ஏற்படுத்தி விட முடியாது என்பது ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போன்ற பல விஷயங்களில் பொதுக்கருத்தாக்கங்களை பார்த்து நொந்து போன நான் கொண்ட விரக்தியான முடிவு. அதனால் ஒரு சில விஷயங்களுக்கு மட்டும் பதில் கூறுகிறேன். மற்றவைகளுக்கு ஒரு சில வரிகள் மட்டும் போதும் என்று நினைக்கிறேன்.

  மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதில் கூறுவதற்கு முன்னால் ஒரு சில விஷயங்களை கூறிவிடுகிறேன். நம் ஊரில் IPRS என்று ஒரு அமைப்பு இருக்கிறது. indian performing Rights society என்ற இந்த அமைப்பு எங்கெல்லாம் கலை நிகழ்ச்சிகள் தொழில் முறையில் நடக்கின்றதோ அங்கெல்லாம் சென்று நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் இருந்து ஒரு தொகையை வசூலித்து அதை மொத்தமாக வருடத்திற்கு ஒரு முறை சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு அவர்கள் பங்கை சேர்ப்பிப்பதர்க்காக ஏற்படுத்தப்பட்டது. இதில் இருந்தே புரிந்திருக்கும் படைப்பாளிகளே இதற்கு தகுதியானவர்கள் என்று. பணம் போடும் தாயரிப்பாளர்கள் அல்ல. அவர்களின் உரிமை படத்தை தியேட்டரில் வெளியிட மற்றும் பல நவீன ஊடகங்களில் வெளியிட மட்டுமே. இசையை பொறுத்தவரை திரையிடலை தவிர ஒலித்தகடு விற்பனை, காஸட் விற்பனை, Radio மற்றும் TV சானல்களில் ஒளி/ஒலிபரப்பு, போன்றவற்றிற்கான உரிமை இதில் அடங்காது. பெரும்பாலும் அதற்கென தனி ஒப்பந்தங்கள் போடப்படும். ராஜாவுக்கு முந்தைய இசையமைப்பாளர்கள் இத்தகைய உரிமையையும் படத்தின் தயாரிப்பாளருக்கே கொடுத்திருக்கலாம் அல்லது அவை இசைத்தட்டு வெளியிடும் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டு இருக்கலாம். ராஜா வந்த பிறகு நிலைமை வேறு. அப்போது ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்கள் காரணமாக வானொலியில் மட்டுமே பாட்டு கேட்டு கொண்டிருந்த நாம் நமக்கு பிடித்த பாடல்களை காசட்டில் வீட்டில் டேப் ரிக்கார்டரில் கேட்க்கும் வசதி வந்தது இக்காலத்தில் தான். அதற்க்கு முன்பு இசைத்தட்டுக்கள் தான். அவற்றை பெரும்பாலும் சவுண்ட் சர்வீஸ் எனப்படும் ஒலிப்பெருக்கி வாடகைகடைகள்தான் வாங்கும். ஹோட்டல்களும் க்ளப்களும் கூட உண்டு என்றாலும் எண்ணிக்கை குறைவு. ஆகவே அவற்றிற்கு என பெரிய வியாபார தளம் இருக்கவில்லை, அவர்களும் (அக்கால இசை அமைப்பாளர்கள்) அது குறித்து பெரிய அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. IPRS அமைப்பு (1969) இந்த காலகட்டத்தில் தான் துவங்கப்பட்டது.

  ReplyDelete
 9. Vvbala Bala என்பவர் முகநூல் பதிவு - part 3
  --------------------------------------------
  இந்த அமைப்பு படைப்புக்களில் உரிமை உள்ளவர்களுக்கு எந்த விதத்திலும் அவை பயன்படுத்தப்படும்போது பலன் அளிக்கும் விதத்தில் செயல்படவில்லை. அங்கத்தினர்கள் பலர் இதில் மனக்குறை கொண்டிருந்தார்கள். இந்த அமைப்பு தன் நோக்கத்தை நிறைவேற்றும் விதத்தில் செயல்படுவதில்லை என்று கூறி அங்கத்தினர்களை் ஒன்று கூட்டி இசை அமைப்பாளர் MBஸ்ரீநிவாசன் என்பவரால் முழுவதுமாக கட்டுப்பாடுக்குள் எடுக்கபட்டது இந்த அமைப்பு. இவர் ஒரு இடதுசாரி, Trade unionist. அதன் பிறகு இதன் செயல்பாடு மாறியதா என்றால் இல்லை. ஆனால் எங்கெல்லாம் கச்சேரி அது மேற்கத்திய இசை நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, திரை இசை பாடல்களை இசைக்கும் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அங்கு சென்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்பவர்களை சந்தித்து என்னென்ன பாடல்களை பாட போகிறீர்கள் என்று கேட்டு அதற்க்கு ஒரு தொகையை கூறி வசூல் செய்து விட்டு வந்து விடுவார்கள். தொகை நிகழ்ச்சியின் தன்மை அது நடக்கும் இடம் இவற்றிற்கு ஏற்ப மாறும். இந்த தொகையை அவர்கள் சம்பந்தப்பட்ட கலைஞர் களுக்கு ஒழுங்காக கொடுப்பதில்லை என்பதே ராஜாவின் குற்றச்சாட்டு. அதற்காகவே அவர் வழக்கையும் போட்டார். அதை தவிர தனக்கு ராயல்டி தராமல், மேலும் ஒப்புக்கொண்ட தொகையை முழுவதுமாக குடுக்காத ஒப்பந்ததாரர்கள் மேலும் அவர் வழக்கு போட்டார். இதில் உயர்ந்நீதிமன்றதில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்திருக்கிறது. அதன் பிறகே அவர் ராயல்டியை எனக்கு தந்து விட்டு நீங்கள் நிகழ்ச்சியை நடத்திகொள்ளுங்கள் என்றார். அதை தவறாக புரிந்து கொண்ட பல லைட் ம்யூசிக் குழுக்கள் அவருக்கு எதிராக குரல் எழுப்பினர். தங்கள் வாழ்க்கையே அவரால்தான் அமைந்தது என்பதை மறந்து. ஆனால் அவரோ டிக்கட் போட்டு கமர்ஷியலாக நடத்தப்படும் நிகழ்சிகளுக்கே இது பொருந்தும் என்று விளக்கம் கொடுத்தார். கொதித்தவர்கள் தணிந்தனர். இதுதான் பின்னணி. இந்த IPRS என்ற அமைப்பு பல கோடி ரூபாய்களை கலைஞர்களுக்கான உரிமை பணம் என்று கூறு வசூல் செய்து விட்டு அதில் இருந்து சொற்ப தொகையையே கொடுத்து வருகிறது என்பது பல படைப்பாளிகளின் மனக்குமுறல். இடதுசாரிகள் ஒரு அமைப்பை கையிலெடுத்தால் என்ன செய்வார்கள் என்று தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியமாக இருக்காது. ஆனால் கலைஞர்களுக்கு இடது வலது என்ற பேதமெல்லாம் தெரியாது. அவர்கள் உலகம் சிறியது. அதற்குள்ளேயே உழன்று கொண்டிருப்பதால் அவர்கள் இதை குறித்து கேள்வி எழுப்பவில்லை. முதன்முதலில் IPRS அமைப்பு படைப்பாளிகளுக்கு என்று கூறி வசூல் செய்யும் பணத்தை முறையாக அவர்களிடம் கொடுப்பதில்லை, இந்த பணத்தை கொண்டு அவர்கள் பல செலவுகளை செய்கிறார்கள். நிர்வாக செலவுகள் என்று அவர்கள் கூறும் கணக்கு ஒப்புகொள்ள முடியாத அளவு அதிகமாக இருக்கின்றது என்று கூறி எதிர்த்தவர் ராஜா. ஒரு உதாரணதிற்கு இந்த புள்ளிிவிவரத்தை பாருங்கள். கடந்த ஆண்டு IPRS அமைப்பு licence feeஎன்று வசூல் செய்த தொகை கிட்டத்தட்ட 35கோடி ரூபாய்கள். அதில் அவர்கள் ராயல்டியாக கலைஞர் களுக்கு கொடுத்த தொகை கிட்டத்தட்ட ஆறரை கோடி. மீதம் எல்லாம் அந்த அமைப்பின் டைரக்டர்களின் fee, மற்றும் இதர நிர்வாக செலவுகள். இதன் லட்சணம் இப்போதே உங்களுக்கு புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். புரியவில்லை என்றால் தொடர்ந்து படிக்காதீர்கள். இத்தகைய சூழலில்தான் ராஜா இந்த அமைப்பிடம் நீங்கள் ராயல்டி தொகையை கொடுக்காதீர்கள், மாறாக என்னிடமே நேரடியாக கொடுத்து விடுங்கள் என்று கூறினார். இதில் என்ன தவறு இருக்கிறது.
  இதுதான் இந்த விவகாரத்தின் பின்புலம்.
  இப்போது சமூக வலைதளங்களில் தொடுக்கப்படும் கேள்விகளுக்கு வருவோம்.

  ReplyDelete
 10. Vvbala Bala என்பவர் முகநூல் பதிவு - part 4
  --------------------------------------------
  1. ராஜா பாலுவின் நண்பரில்லையா, அவர் இப்படி செய்திருக்கலாமா? இது துரோகமில்லையா?
  இதில் நட்பு, துரோகம் எல்லாம் எங்கு வருகின்றது? தான் சம்பாதிக்கும்போது அதற்கு காரணமான தன் நண்பனிடம் அனுமதியோ அல்லது அதற்கான ராயல்டியோ கொடுத்து விட்டால் தீர்ந்தது பிரச்சினை. ராஜா அவருக்கு பணம் எதுவும் பெறாமலேயே கூட அனுமதி கொடுத்துவிடலாம். ஆனால் அனுமதி கேட்கபடாமல் அவை பயன்படுத்தபட்டால் அதுவே முன்னுதாரணமாக கொண்டு பல நிகழ்வுகளுக்கு காரணம் ஆகும்.

  2. ராஜா கர்நாடக மும்மூர்த்திகளுக்கு என்ன ராயல்டி கொடுத்தார்?
  இது காப்பிரைட் சட்டத்தை பற்றிய விஷயஞானம் எதுவும் இல்லாமல் எழுப்பப்படும் பாமரத்தனமான கேள்வி. நீங்கள் காப்புரிமையை பதிவு செய்தாலே அது குறிப்பிட்ட காலத்துக்குத்தான் செல்லுபடியாகும்.பிறகு அது நீட்டிக்கப்பட வேண்டும். அதுவும் அறுவது ஆண்டுகளுக்குத்தான். அதன் பிறகு அவை பொதுவுடமைதான். சங்கீத மும்மூர்த்திகளின் படைப்புகள் படைப்புரிமை பெறப்படாதவை. அது வேற காலகட்டம். சங்கீத மும்மூர்த்திகள் பற்றி கேள்வி எழுப்பும் நபர்கள் அவர்களுக்கு காலத்தால் மூத்தவர்களான பண்ணிசை மும்மூர்த்திகள் எனப்படும் அருணாச்சல கவி, முத்துத்தாண்டவர்,மாரிமுத்தா பிள்ளை பற்றி எதுவும் பேசுவதில்லையே ஏன்? அவர்களுக்கு ராயல்டி தரப்பட வேண்டாமா?

  3. ராஜா காப்பி அடித்ததில்லையா? அவர் அப்போது காப்பி அடித்த கலைஞர்களுக்கு ராயல்டி கொடுத்தாரா?
  இது மறுபடியும் காப்புரிமை சட்டம் பற்றிய ஞானம் மற்றும் இசை படைப்புரிமை பற்றிய போதிய தகவல் ஞானம் இல்லாமையால் எழுப்பப்படும் கேள்வி. காப்புரிமை சட்டம் ஒரு படைப்பை அதற்கு முந்தய வேறொரு படைப்பை தழுவியது என்று கூற அதில் Chord progressions, Rhythm pattern மற்றும் lead arrangements ஆகியவை substantialலாக முந்தையதை ஒத்திருக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்த விவரம் ரொம்பவும் தெளிவாக அதாவது எழுத்தென்றால் இத்தனை வரிகள், இசையென்றால் இதனை வினாடிகள் என்று கூறாமல் கொஞ்சம் குழப்பமாக இருப்பதால் உலகெங்கும் இந்த விஷயத்தை ஒட்டியே பல வழக்குகள் நடந்து வருகின்றன. இந்த substantial similarities குறித்து பல வழக்குகள் நடந்து இருந்தாலும் ஒரு பிரபல வழக்கை உங்களுக்கு சொல்கிறேன். பிரபல பாப் பாடகர் Roy Orbison இயற்றிய Pretty womenஎன்ற பாடலை Richard Gere, Julia Roberts நடித்த Pretty womenபடத்தில் பயன்படுத்தி இருந்தனர். அதற்கு வழக்கு போடப்பட்டது. ஆனால் நீதிமன்றம் அதனை fair use என்று கூறி படத்தாயரிப்பாளருக்கு( உரிமம் அவரிடம் இருந்ததால்) சாதகமான தீர்ப்பை கொடுத்தது. இரண்டு பாடலையும் கேட்டவர்களுக்கு இரண்டாவது பாடல் எப்படி அந்த legality யை கடந்தது என்பது புரியும். எனக்கு தெரிந்த வரை ராஜா அன்றைய காலகட்டத்தில் மிக பிரபலமாக இருந்த சில பாடல்களை (சில என்றால் அதிகபட்சம் நான்கு அல்லது ஐந்துதான் இருக்கும்,) அடியொற்றி ஆனால் அதேநேரம் அவற்றை indianise பண்ணி இசைத்திருக்கிறார். ( கனவு காணும் வாழ்க்கை யாவும் பாடல் இதில் சேராது, அது உரிமம் வாங்கி பண்ணப்பட்டது) இதை inspiration என்று கூறலாம். அவரை பிடிக்காதவர்கள் இதை காப்பி என்றும் கூறலாம். இரண்டிலுமே கொஞ்சம் உண்மையும் நெறைய மனச்சாய்வுமே இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. nice answers. thanks for this feedback on this post. vanakkam.lot of information u have.

   Delete
 11. Vvbala Bala என்பவர் முகநூல் பதிவு - part 5
  --------------------------------------------
  4. ராஜாவுக்கு ஆணவம் அதிகம். வயதாகி விட்டதால் மூளை மழுங்கி விட்டது இத்யாதிகள்.
  இதுபோன்ற வெறுப்பு உமிழ்தல்களுக்கு பதில் தேவை இல்லைதான் என்றாலும் ஓரிரு வரிகள் கூறுவேன் என்று கூறிய காரணத்தால் இதை எழுதுகிறேன். ராஜாவுக்கு ஆணவம் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் நமக்கு என்ன? அதை பற்றி கவலைப்பட வேண்டியவர்கள் அவருடன் இருப்பவர்கள். நாமல்ல. ஆணவம் இல்லாத நாம் ஆணவம் கொண்ட அவர் சாதித்ததில் நூறில் ஒரு சதவிகிதமாவது சாதித்திருகிறோமா என்று கேட்டுகொள்வோம். இல்லையென்றால் அத்தகைய ஆணவத்தை நமக்கும் தர இறைவனை வேண்டுவோம். அப்படியாவது எதாவது உருப்படியாக செய்ய முடிகிறதா என்று பார்ப்போம். ஆணவம் கொண்ட மனிதர் MSV அவர்களின் குடும்பத்திற்கு என ஒரு நிகழ்ச்சி மூலம் ஒரு கணிசமான தொகையை வசூலித்து கொடுத்தது இத்தகையவர்கள் மனதில் என்றும் நினைவில் இருக்க வேண்டுகிறேன். அத்தகைய ஒரு நிகழ்வு அதற்க்கு முன்பும் பின்பும் திரைத்துறையில் நடந்ததில்லை.
  5. ராஜா தயாரிப்பாளரிடம் பணம் வாங்கி கொண்டுதானே இசை அமைத்தார். அப்போது அவருக்கு எப்படி உரிமை இருக்கும்?
  ஒரு காலத்தில் இத்தகை இசை உரிமைகள் இசைதட்டை வெளியிடும் நிறுவனங்கள் தாங்களே வைத்து கொண்டிருந்தன. அவர்கள் பணம் ஒழுங்காக கொடுப்பதில்லை என்ற காரணத்தினால்தான் ராஜா தன் நண்பரை கொண்டு echo என்ற இசை வெளியிடும் நிறுவனத்தை ஆரம்பித்தார் என்று செய்தி. ஆனால் அதிலும் பிரச்சினை ஏற்பட்டு பிறகு ராஜா காசட்ஸ், பிறகு வேறொரு நிறுவனம் என்று பல ஏற்ற இறக்கங்கள். ஆனால் உயர்நீதிமன்றம் ராஜவிடமே உரிமை இருப்பதாக கூறிய தீர்ப்பில் இடைக்கால தடை எதவும் மேல்முறையீட்டில் வழங்க படவில்லை என அறிகிறேன். அதானாலேயே அவர் தன் Attorney மூலமாக இத்தகைய நோட்டீஸ்களை அனுப்புகிறார். உரிமை இல்லாத விஷயத்தில் உரிமை கோருமளவுக்கு அவர் முட்டாளல்ல என்பதை நாம் நினைவில் இருத்த வேண்டும். ஆனால் இந்த விவகாரங்களில் பல ஆணுகளாக அவர் தவறாக வழிநடத்தப்டுகிராரோ என்ற ஐயம் எனக்கு உண்டு. ஆனால் அதனால் அவர் இப்போது கோரும் உரிமை தவறு எண்டு ஆகி விடாது.
  6.MSV, KVM போன்றோர் இப்படி கேட்கவில்லையே. இவருக்கு மட்டும் ஏன் பேராசை?
  இதற்க்கு ஏற்கனவே பதில் கூறியாகி விட்டது என்று நினைக்கிறேன்.

  7. பாடலை பாடியதால் பாடகருக்கு பாடலில் உரிமை இல்லையா? SPB வழக்கு போட்டால் ராஜா டங்குவார் கிழிஞ்சுடும் போன்றவை.
  காப்புரிமை சட்டம் கீழ்கண்டவாறு கூறுகிறது,
  AUTHORSHIP AND OWNERSHIP
  Whose rights are protected by copyright?
  Copyright protects the rights of authors, i.e., creators of intellectual property in the form of literary, musical, dramatic and artistic works and cinematograph films and sound recordings.
  Who is the first owner of copyright in a work?
  Ordinarily the author is the first owner of copyright in a work.
  Who is an author?
  In the case of a literary or dramatic work the author, i.e., the person who creates the work.
  In the case of a musical work, the composer.

  link: http://copyright.gov.in/documents/handbook.html

  இதன் அடிப்படையில் வைரமுத்து பாடல்கள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வரும்போது அவர் author, ஆனால் அதுவே இசையுடன் கூட வரும்போது ராஜா தான் author. பாடகர்களுக்கும் இது பொருந்தும்.
  பின்னுரை: எனக்கும் ஒரு ராஜா ரசிகனாக அவர் சக இசைக்கலைஞர்களை அங்கீகரித்து கவுரவிக்க வேண்டும், இன்றைய இளம் இசை அமைப்பாளர்களை பாராட்டி பேச வேண்டும், ரஹ்மானுக்கு நடந்த ஆஸ்கர் பாராட்டு விழாவில் இசை சம்பந்தமாக பேசி விட்டு போகாமல் ரஹ்மானை இறுக்கி அணைச்சு ஒரு உம்மா கொடுத்திருக்கலாம் என்றெல்லாம் சீரியல் பார்க்கும் பெண்களை போல உணர்ச்சி பூர்வமான அல்ப ஆசைகள் உண்டுதான். ஆனால் அதே நேரம் அவரை அவராக புரிந்து கொண்டு ஏற்றுகொள்வதுதான் யதார்த்தம். நாம் விருப்பும்படிஎல்லாம் நாம் இருப்போம். மற்றபடி அவரின் இசையை ரசிப்போம். இப்படிப்பட்ட ஒரு யுக கலைஞனுக்கு நாம் செலுத்த கூடிய நன்றி, அவருடைய இசையை காசு கொடுத்து வாங்குவது. அவர் மீது சேற்றை வாரி வீசாமல் இருப்பது.

  ReplyDelete
 12. https://www.facebook.com/vvbala.bala/posts/1640177765998222?pnref=story

  ReplyDelete
 13. செந்தில்குமரன் அழகாக தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார். நன்றி.சாதியப் பார்வையோடு விமர்சிக்கும் பலர் மற்ற எந்த இசையமைப்பாளரையும் இவ்வளவு வசை பாடியதில்லை. அடுத்தவன் குடியை கெடுத்துப் பிழைப்பவரல்ல...தனக்குரிய பங்கினை கேட்டுப் பெறும் உரிமையை நிலைநாட்டிக் கொள்பவர் இளையராஜா. அவரை குறை சொல்ல யாருக்கும் உரிமையில்லை

  ReplyDelete
  Replies
  1. thanks for your feedback on this post. vanakkam.

   Delete
 14. மெத்த படித்த முட்டாள்களே...இசைஞானி விவகாரத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் அதிமேதாவி போன்றும் தாம் மட்டுமே உன்னதமானவர் என்ற மனப்பான்மையோடு கருத்து சொல்வதை முதலில் நிறுத்துங்கள். மேற்கண்ட W Balaவின் பதிவு மிகச்சறியாக விவரத்தை தெளிவு படுத்துயுள்ளது. அதை படித்தாவது தெளிவடையவும்....

  ReplyDelete
  Replies
  1. you first search for the total reality, dont partial and keep same stand with out analysing other sides.BDO P.R.Patti, vetti.

   Delete
 15. ஒரே துறையினைச் சார்ந்தவர்கள்
  என்ன பிரச்சினை என்றாலும் வெளியே தெரியாமல்
  பேசித் தீர்த்திருக்க முடியும்
  ஆனாலும் செய்யவில்லை

  ReplyDelete
  Replies
  1. thanks for your feedback on this post sir. vanakkam

   Delete
 16. ஏ.ஆர்.ரஹ்மான் தான் அதிகமாக ராயல்ட்டி வாங்குபவர். அது தெரியாதா உங்களுக்கு?

  இளைய ராஜா பஸ்ஸில் ஒலிக்கும் மற்றும் ஊர்ப்பக்கம் நடத்தப்படும் இசைக்கச்சேரிகளில் ஒலிக்கப்படும் அவரது பாடல்களுக்கு ராயல்டி கேட்க்கவில்லை.

  அவரது பாட்டை வைத்து கொள்ளை லாபம் அடிக்கும் பெரு முதலாளிகளிடம்தான் கேட்க்கின்றார். அதில் என்ன தவறு?.

  பாடல்களில் அவருக்கும் ஒரு பங்கு உண்டு என்று சட்டமே சொல்லுகின்றது.

  பாடகர்களுக்கும் பங்கு வேண்டும் என்று S.P.B அவர்கள் உன்னாவிரதம் இருந்தாரே அப்ப அதும் தவறா?

  ReplyDelete
  Replies
  1. no wrong in it. thanks for your feedback on this post usilai vijayan. vanakkam.please keep contact.

   Delete
 17. Friend,

  There is a crowd of people who are die hard fans of Ilayaraja and they will always justify whatever he does. If it is Rahmaan who started this then the copyright credit goes to him. Not ilyaraja. But they will defend IR as if he was the first to do it. Because now they are forced to support him in the name of obscure copyright tangle which is not openly available to us. Never mind them. When it comes to MSV and others they simply and squarely blame it on their generosity and call it ignorance. If it is IR then the record companies have to take the blame which he IR himself did not take much care about when he ruled the industry.

  Anyway if this legal fight is right then it lies with Rahmaan who started this awareness. IR never followed Rahman in any sense then why now for this alone? For cash?

  when it is cash IR can even stoop to Rahman. Thats the truth we have learned.

  Rahman showed IR the way to make money and survive. Period.

  ReplyDelete
  Replies
  1. I heard many things about IR , He used to not settle other musicians bills sincerely. But he have every right to climb.But we want to talk about his attitude not the rights. I thank Mr. karikan to participate in this exchange of thoughts on this post. vanakkam.please keep contact

   Delete
 18. And for that Ethicalist you used the same damn language he did that he deserves. Fine.

  ReplyDelete
  Replies
  1. nice way of expression. I welcome your feedback on this post. vanakka. please keep contact

   Delete