Saturday, March 4, 2017

செல்லாத நாணயங்கள்: கவிஞர் தணிகை

Image result for indian coins
செல்லாத நாணயங்கள்: கவிஞர் தணிகை

நிறைய எழுத வேண்டும். நிறைய நிறைய சம்பவங்கள் நடைபெறுவது பற்றி.ஆனால் நேரம் காலம் தேடல் ஒத்து வரவில்லை.ஒரு புறம் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன், திருப்பதி ஏழுமலையானிடம் செல்லாத நோட்டுகள் 5 கோடி,சுசித்ராவின் உண்மைகள்,சமையல் எரிவாயு விலை ஏற்றம் அது இன்று:டெலிவரி பாய்க்கு நீங்கலாக ரூ.771. வீட்டு உபயோகத்திற்கானது, எல்லா வங்கிகளிலுமே இனி சேவைக்கு கட்டணம் இருக்கும் , முக்கியமாக பாரதிய ஸ்டேட் வங்கி தனி மனித சேமிப்பு இருப்பை உயர்த்தியும், 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணமும்...மல்லையாக்களிடம் விட்டதை எடுக்க வேண்டுமல்லவா? இப்படி மோடி ஆட்சி தலை விரித்து ஆடிக் கொண்டு மக்களுக்கு ரேஷன் கூட கிடைக்க விடாமல் செய்து வருகையில் மோடி ஜக்கியின் கட்டணக் கூட்டத்தில் குஜராத், ஒரிஸா ஆங்கிலத்தில் பேசியபடி போட்ட நீலக் கலர் சால்வையை ட்விட்டரில் கேட்ட பெண்ணுக்கு அனுப்பி வைக்கிறார்.

Image result for indian coins

மாநில மசாலாக்களோ, நிரந்தர முதல்வர் மக்களுக்காகவே வாழ்ந்த முதல்வர் அம்மா ஜெயலலிதாவை புனிதராக்க, தெய்வமாக்க, அந்த தெய்வம் எப்படி மறைந்தது என ஆய்வு நடத்திக் கொண்டு குடிக்கவும் நீர் கொடுக்க நாதி இன்றி ஒரு கொடுங் கோடையை சந்திக்க வைக்க இருக்கிறது.

பள்ளி மாணவர்கள் இறுதித் தேர்வை எட்டி வருகையில் மின் வெட்டு பயம் வேறு அச்சுறுத்தி வருகிறது.ஓ.பி.எஸ்கள்  பி.எச் பாண்டியன்கள் அம்மாவை தள்ளி கீழே வைத்து கொன்றிருக்கிறார்கள் என்ற உண்மைக்கு அருகே வந்து விட்டதாக பேராண்மை பேசுகிறார்கள் அந்த 75 நாட்களை மறந்துவிட்டு, ஆட்சியும் பதவியும் கிடைக்க வில்லை என....

ஆங்காங்கே உள்ளூரில் ஜெ கட்சி அதாவது உச்ச நீதி மன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப் பட்ட குற்றவாளியின் கட்சி , அதற்காக கலைஞரையும்,ஸ்டாலினையும், வைகோவையும், நாம் மிகத் தூய்மையானவர்கள் எனக் கருதவில்லை...உள்ளூர்களில் ஜெ தீபா பேரவை என்றும் எடப்பாடி சசி பார் அவை (டாஸ்மாக் பார்தான்) என்றும் பிரிந்து முகங்களுடன் சாலைகளில் பொது சந்திப்புகளில் மக்களை பயமுறுத்தி வருகிறது

இதனிடையே செல்லாத நோட்டு வைத்திருந்தால் அபராதம் ஜெயில் என்றெல்லாம் பேசும் மத்திய மாய்மால மோடி அரசு ஒரு நோட்டு வைத்திருந்தாலும் 3 ஆண்டு சிறை என்று பேசும் மத்திய அரசு திருப்பதி வெங்கடாஜலபதியிடம் உள்ள 5 கோடி ரூபாய் செல்லாத நோட்டுகளை வைத்திருக்கும் அந்த உலக நாயகன் வசூல் மன்னனுக்கு எப்படி தண்டனை தரவிருக்கிறது? எவ்வளவு அபராதம் இடப் போகிறது?

நாம் ஒன்றை கவனிக்க வேண்டும்: கடவுளுக்கும் காசுக்கும் துளியும் தொடர்பில்லை .பணக்காரர் இறையருள் பெறுவதென்பது ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைப்பது என்கிறது விவிலிய மறை.

ஆக நான் சொல்ல வேண்டியது இப்போது இனி சொல்லப் போவதுதான்: நான் இப்போது 55 வயதை நிறைவு செய்யும் நிலையில் உள்ள மனிதன். எனது இளைமையில், சிறுவனாக இருந்த போது ஒரு பைசாவுக்கும் மதிப்பு உண்டு ஒரு மிட்டாய் கண்டிப்பாக கிடைக்கும், இரண்டு பைசாவுக்கு ஒரு பட்டாசு ரோல் கிடைக்கும், 3 பைசாவுக்கு ஒரு முறுக்கு கிடைக்கும், 5 பைசாவுக்கு வேண்டியது பொட்டுக் கடலை, பட்டாணி கூட கிடைக்கும், நிலக்கடலை பர்பிகள், தின்பண்டங்கள், போண்டா, பஜ்ஜி, வடை எல்லாமே கிடக்கும், அது அணாக்கள் காலம் மறைந்து ரூபாய்க்கு 100 பைசா வந்து விட்ட காலம்தான்.

என்றாலும், 25 பைசாவை நாலணா, அதாவது 4 பெருக்கல் 6 பைசா  அதாவது 24 பைசாவுடன் ஒரு பைசா சேர்த்து  இருந்தாலும் அதை நாலணா என்றுதான் சொல்வார்கள். ஐம்பது பைசாவை எட்டணா என்றுதான் சொல்வார்கள் எட்டு பெருக்கல் ஆறு 48 பைசா என்பது 50 ஆகா இருந்தாலும்

25 பைசா, 30 பைசா, 50 பைசாவுக்கு எல்லாம் சாதரணமாக ஒரு சினிமா பார்க்க முடியும், பத்து பைசாவுக்கே ஏகப்பட்ட திட்டங்கள் தீட்டுவோம், அதை வைத்து சில நாட்கள் இன்பமாக போகும், மேலும் அந்த வெள்ளி நிறக் காசை.அதன் பிறகு தங்க நிறத்துக்கும் அந்த பத்து பைசாவும், 20 பைசாவும் மாறியது வேறு...

கையில் அதை எல்லாம் வைத்திருப்போம் தூங்கும்போதும் பாக்கெட்டில் இருக்கும் அதை யாராவது ஒரு விருந்தாளி வந்தபோது பெற்றோர் வேண்டாம் எனச் சொன்னாலும் இருக்கட்டும் என அவர்கள் ஆசையாய் தந்து சென்றதாய் இருக்கும் அது...
Related image


எனது சகோதரி ஒருவர் அடிக்கடி நாங்கள் பள்ளி செல்கையில் ரயில் ரோட்டில் தான் செல்வோம் அப்போதும் காசுகளை கண்டு எடுப்பார், ஏதாவது தின்பண்டங்கள் வாங்கி வீட்டுக்குத் தெரியாமல் தந்து விடுவார், அதில் தான் எமது பற்கள் முதலில் சொத்தை விழ ஆரம்பித்து இருக்கும் என நம்பி குற்றச் சாட்டை சொல்வதுண்டு, ஏன் எனில் அந்த இனிப்பு மிட்டாய்கள் அல்லது தீனிகள் சாப்பிட்டு விட்டு வாயை சுத்தம் செய்யாமல் இருந்திருக்கிறோம்.

வீட்டிலேயே கொழுஞ்சிப் பழங்கள், கொய்யாப் பழங்கள், கொடுக்காப் புளி(நாங்கள் அதை கோண புளியாங்காய் என்போம்) இப்படி நிறைய சத்துப் பண்டங்கள் காய்களாக கனிகளாக கிடைத்த போதும் கடையில் வாங்கித் தின்பது ஒரு இனிப்பான விஷயமாகவே இருக்கும். மாங்காய் உப்பு, காரம் போட்டது, சௌ மிட்டாய்கள், வாட்ச்கள், கையில் ஒட்டி வைக்கும் பொம்மைகள், மணியுடன் அடித்து மிட்டாய் விற்கும் வயதான நபர்கள் அந்த ரோஸ் வண்ண மிட்டாய்கள். இப்போது அந்த மரங்கள் இல்லை கெம்ப்ளாஸ்ட் கழிவு நீருக்கு அந்த இரசாயன மாற்றத்தில் காலாவதி ஆகிவிட்டன.

அப்படிப்பட்ட 20 பைசா தங்க நிறத்தில் இருப்பதைப் பார்த்து காசை உருக்கி எனது தந்தை ஒரு முறை மோதிரமாக செய்து போட்டுக் கொண்டதாகவும் நினைவு. அந்த காந்தி தலைக் காசுகள், மொட்டைத் தலைக்காசுகள் அவ்வளவு பிரபலம்.நாலணா  இருந்தால் போதும் எந்தக் காய் கறியும் கிடைக்கும் ஒரு பெரிய குடும்பத்துக்கே காய் கறி சமைக்க, குழம்பு வைக்க...பெரிய குடும்பம் என்றால் எங்களுடையது போல 10 பேர் அடங்கியது அல்லது 5 அல்லது 6 பேருக்கும் மேல் உள்ளது... இப்போது ஐந்து அல்லது ஆறு பேர் இருந்தால் வீடே வாடகைக்கு கிடைப்பதில்லை என்பது வேறு விஷயம்.பொறி கடலை வாங்கி குடும்பமே அதை வறுத்து உண்டு மாலை நேர டிபனாக மாற்றிக் கொள்ளும் வருவாருக்கும் கொடுக்கும்.

ஒரு எட்டணா அதான் 50 காசு கொடுத்து விட்டால் அதை மறக்கும் வரை எனது அம்மாவிடமிருந்து மறுபடியும் காசு வாங்க முடியாது, அன்னைக்குத்தானே கொடுத்தேன் , அன்னைக்குத் தானே கொடுத்தேன் என 6 மாதமானாலும் ஒரு வருடமானாலும் சொல்லிக் கொண்டே மறுத்தார்கள் சில வருடங்கள் கூட அப்படி சென்றிருக்கலாம்...குடும்பம் பெரிது பிரச்சனைகள் அதிகம், அதில் நாங்கள் சிறுவர்கள் எங்களுக்கு அந்த கஷ்ட நஷ்டங்களை உணரும் அளவில் நாங்கள் பக்குவம் பெறாத வயது...

அரிசி இல்லாமல் உணவில்லாமல் கஞ்சி வைத்துக் காய்ச்சி பசி ஆறிய அனுபவங்கள் எல்லாம் எங்களிடம் உண்டு.. எனவே காசு என்பது எப்போதும் எமக்கு பெரிய விஷயம்தான்.

எமது சகோதரிகள் கோலப்பொடியை கெமிகல் லைனில் இருந்து எடுத்து வருவார்கள், வீட்டில் வளர்த்த‌ கனகாம்பரம், மல்லிகை பூக்களை கட்டி விற்று விட்டு வரும்போது...அதையும் விற்று பைசாவாக்கியதாக குடும்பத்திற்கு உதவியதாக நினைவு...ஏன் காடுகளிடம் சென்று அரப்பு மரங்கள் செடிகளிடம் அரப்பு இலை பறித்து வந்து, காய வைத்து இடித்து பொடியாக்கி நைசாக இருக்க அதை அனைவரும் தலைக்கு குளிக்க பயன்படுத்தியதுண்டு வீட்டில் உள்ள 5 பெண்களுக்கும் நல்ல அடர்த்தியான தலைமுடி காசுக்கு வாங்கி தலைக்கு குளிக்க வேண்டுமெனில் அதுவும், கடினமானது எனவே இந்த முயற்சி இதில் மீதமாகும் அரப்பை அக்கம் பக்கம் ஒரு கால் படி உழக்கு, அரைப்படி, ஒரு படி இவ்வளவு விலைக்கு என விற்று காசு சேர்த்து குடும்பத்துக்கு உதவியதும் உண்டு...

செல்லாத காசு எங்கே எங்கெங்கே போகிறது பாருங்கள்... எமது பள்ளியை அடுத்துள்ள காவிரிக்கு துணி துவைக்க சென்று துணி துவைத்து அவர்கள் நீச்சல் அடித்து குளித்தும் விட்டும் வருவார்கள் எனச் சொன்னதுண்டு...நாங்கள் சிறுவர்கள் எங்களுக்கு இன்னும் நீச்சல் தெரியவில்லை....அவர்கள் அனைத்தும் கற்றிருந்தார்கள் ஆனால் அதிகம் படிக்கவேயில்லை...

நேற்று ஒரு அரசுப் பேருந்தில் சேலத்தில் இருந்து எமது பகுதிக்கு 19 ரூபாய் கட்டணத்துக்கு 20 ரூபாய் கொடுத்தேன். டிக்கட் கொடுத்த அவர் நேர்மையாக வாய் விட்டு ஒரு ரூபாய் அப்புறம் கொடுக்கிறேன் என்றார். நல்ல மனிதர் வாய் விட்டே சொல்லி விட்டார் அவர் கொடுத்து விடுவார் என ஏதேதோ நினைவில் மூழ்கியபடி ஊர் வந்து சேர்ந்தேன், அவரும் கொடுக்கவில்லை, நானும் கேட்க வில்லை. அப்போது கேட்க எனக்கும் நினைவில்லை...

ஆக இப்போது பிச்சைக்காரர் கூட 50 பைசா நாணயத்தை அங்கீகரிக்க மறுத்து விடுகிறார்கள்...எனக்கு இன்னும் ஒரு ரூபாய் பெரியதுதான்...இந்த காசுக்கு எல்லாம் மதிப்பு போயிற்றா? மனித மதிப்பும் அரசியல், ஆட்சி, பதவி இதன் மதிப்பு எல்லாம் போய் செல்லாக் காசாக போயிற்றா?

Image result for indian coins

எம்.ஜி.ஆர் சொல்வார் தமது முதல் கூட்டங்களில் எல்லாம், அது ரெக்கார்டாகவே எல்லா ஊர்களிலும் முழங்கியது ,நாட்டை ஆள வருவாரிடம் நா நயம் இருந்தால் மட்டும் போதாது நாணயம் இருக்க வேண்டும் என...இப்போது நாணயம் எங்கும் இல்லை நான் சொல்வது காசு எனப்படும் நாணயத்தையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். ரிசர்வ் வங்கி 10 ரூபா  காசு நாணயம் செல்லும் செல்லும் என அறிக்கை விடுத்தாலும் மக்கள் நம்பி வாங்க மறுக்கிறார்கள்...ஆயிரம், ஐநூறு செல்லாது , வங்கிக் கணக்கில் இருக்க வேண்டும் அது தான் செல்லும் என்று மோடி சொன்னாலும் சொன்னார் அன்றிலிருந்து எல்லாம் மாறி விட்டது ஆமாம் உப்பு 200 முதல் 750 ரூபாய்க்கும் கூட விற்று விட்டார்கள்...ஆட்சியும் அதிகாரமும் கட்டளை விதித்து கட்டுப் படுத்த வேண்டியதாயிற்று...

எடப்பாடி தமது காசு பணம் செல்வாக்கை மட்டுமே நம்பி முதல்வரான வரலாறு நம் தமிழ் மண்ணுக்கு புதிது. அவரிடம் தங்கக் காசு வாக்குக்கு பெற்றுக் கொண்டு அவரை ஜெயிக்க வைத்த எடப்பாடி தொகுதி மக்கள் வாங்கிய காசுக்கு நாணயமாக அவருக்கு வாக்கு அளித்து அவரை வெற்றி பெறச் செய்து விட்டார்கள்..இப்போது அவர் முதல்வராகி இருக்கும் வரை..

ஆனால் எம் வீட்டில் உள்ள ஒரு வாயில் காக்கும் பிள்ளையாருக்கு நாங்கள் செல்லாத காசுகளை ஞாபகமாக  5 காசு, 10 காசுகள், 20 காசுகள் 25 காசு, 50 பைசா நாணயம் என அடுக்கி வைத்து விளக்கேற்றி வைத்து வழிபட்டு வருகிறோம்...அவை எல்லாம் செல்லாத காசு செல்லாத நாணயம்...

எனை எனது நெஞ்சார்ந்த நண்பர் ஒருவர் : நீ உஷாராக இரு இல்லாவிட்டால் செல்லாக் காசாகி விடுவாய் என எச்சரிக்கை செய்தார் எனவே நான் இப்போது விடியற்காலம் 4 மணிக்கே அலாரம் வைத்து தூங்கியும் தூங்காமலும்  தூக்கக் கலக்கம் கண்களில் இருந்தாலும் மகனை படிக்க வைக்க கட்டணம் கட்ட ஒரு கல்லூரியில் முகாம் அலுவலராக  இருந்து சேவை செய்து வருகிறேன்


Related imageநீண்ட நாள் கழித்து 2 கி.மீ தாண்டி மேட்டூர் அணை காவிரி நீர்த்தேக்கம் சென்றிருந்தேன்...பயம் நெஞ்சை பிசைந்தது....நீர் நிலை கண்களில் நீர் முட்ட ...வழியெங்கும் சுமார் உணவுக் கடைகள் மட்டும் 50க்கும் மேல் புதிதாகத் தோன்றியிருந்தது...உறவுகளும், வீடும், குடும்பமும் அற்ற சூழலில் மனிதர்கள் அதிகமாகி இருப்பதைக் காட்டியது...

சாலை எல்லாம் ஒரே புழுதிகாடாக மாறி இருந்த்து...சாலையோரக் கடையில் ஒரு புத்திசாலி மட்டும் மாஸ்க் அணிந்திருந்தார் ஒர் இருசக்கர வாகன ஓட்டியும்....16 கண்மாய் பாலமருகே பாதாள சாக்கடைப்பணி நகராட்சி சார்பாக நடைபெற்று வருகிறது. கொட்டியிருந்த மணலை ஒரு சிறுவன் சைக்கிள் வைத்து மூட்டைகளில் அள்ளிக் கொண்டிருந்தான். இருட்டு. திருட்டு. என்னைப் பார்த்த உடன் ஏன் பார்க்கிறீர்கள்? எல்லாம் வாங்கி விட்டோம், ஒரு 4 சட்டி போதவில்லை, அதற்காக வாங்க முடியுமா? அவர்களைக் கேட்டோம். என்றான் இது 4 சட்டி இருக்குமா என்றான், அது இருக்குமடா 10 சட்டிக்கும் மேல் என்றேன் கொஞ்ச தூரத்தில் அந்தக் கடையின் வாசல் கட்டுமானப் பணி மும்மரமாக நடந்து கொண்டிருந்தது.காளி குபேர இலட்சுமி அலங்காரத்தில் இருக்கிறாள் என பார்த்து வரச் சொன்னார் துணைவி....சென்றிருந்தேன், எல்லாம் வணங்கி வழிபட்டனர், அனைவர்க்கும் எலுமிச்சை, பூக்களை காணிக்கையாக கொடுத்துக் கொண்டிருந்த அந்த பூசாரிக் குடும்பம் சார்ந்த அந்த நல்ல தாய் தமது மகனின்( (இளம் காளை போல சரியான உயரம் சரியான நிறம், எடையுள்ள ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருந்தது) இரண்டு வருடங்களாக அந்த க் கோயிலில் அந்த மகனின் மறைவை எண்ணி என்னிடம் கண்ணீர் சிந்த ஆரம்பித்தார் அந்த தாய்....மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

6 comments:

 1. அருமையான பதிவு. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. thanks for your participation on this post. vanakkam sir

   Delete
 2. அருமையான பதிவு

  ReplyDelete
  Replies
  1. thanks for your feedback on this post vanakkam.please keep contact

   Delete
 3. அருமை
  நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய நாணயங்களைப் பார்க்கும் ஒரு வாய்ப்பு தங்களால் கிடைத்திருக்கிறது
  நன்றி நண்பரே

  ReplyDelete
 4. thanks for your feedback on this post vanakkam.sir.

  ReplyDelete