Wednesday, March 8, 2017

குற்றம் 23: கவிஞர் தணிகை

குற்றம் 23: கவிஞர் தணிகை


Related image

23 குரோம்சோம்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். செயற்கை முறை கருத்தரித்தல், கருவூட்டல் என்பார் கால்நடைகளுக்கு, அது விந்து தானத்தில் வந்து இந்த உலகில் அந்த விந்து விற்பனை நல்ல மதிப்பு மிக்க சந்தையை உலகில் கொண்டு வந்திருக்கிறது என்பதை நல்ல திரைக்கதையுடன் சொல்லும் படம்.

அருண் விஜய்க்கு இது ஒரு சொல்லிக் கொள்ளும் படம்.மஹிமா நம்பியார் சரியாக செய்திருக்கிறார் நடிப்பதாகத் தெரியாமல் இயல்பாக செய்திருக்கிறார்.தம்பி இராமய்யாவுக்கு வெற்றி மாறன் ஐ.பி.எஸ் என்கிற அருண் விஜய்க்கு துணை செய்யும் காவல் துறைப் பாத்திரம் சோபித்திருக்கிறார்.


நல்ல கதை தேர்வு இராஜேஸ்குமாரின் கதை. படத்தின் முக்கால் பாகம் நன்றாகவே பார்க்கும்படி செய்யப்பட்டிருக்கிறது. அறிவியல் தொழில் நுட்பம் விளக்கும் கடைசிக் கட்டத்தில் கொஞ்சம் அதிகம் காட்சிகளும், இன்னும் எளிமைப் படுத்தி தெளிவாக விளங்கும்படி செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

அதாவது புருஷனின் விந்தணுவை வாங்கிக் கொண்டு வயிற்றில் வளர்க்க முடியாமல் வேறு அந்நிய நபர்களின் விந்தணுவை வாங்கி வயிற்றில் வளர்ப்பது பற்றிய சர்ச்சை. அதைப்பற்றி பிளாக் மெயில் செய்வது அதை உலகுக்கும், ஊருக்கும், உறவுக்கும், உற்றாருக்கும் வெளிப்படுத்துவோம் என்று சொல்லி பெரும்பணத்தை மிரட்டி வாங்குவதாக 4 பேர் அடங்கிய நபர்கள் அதில் ஒருவர் மருத்துவம் தெரிந்த நபர்.

இதனிடையே மற்ற 3 பேருக்கும் காசு பணம் பேராசை என்றால் ஒருவருக்கு அவரின் விந்தணுவை வாங்கிக் கொண்ட பெண் அதை வளர்த்து பிள்ளையாகப் பெற்று வாழ வளர்க்க வேண்டும் இல்லையேல் கொலை என்ற நிலை.

இந்தப் படம் எல்லா தரப்பு சினிமா இரசிகர்களையும் எட்டி வெற்றி ஈட்டுமா என்பது சற்று சந்தேகமே. ஏன் எனில் அருண் விஜய் கதாநாயக வேடத்தில் அதுவும் ஐ.பி.எஸ் வேடத்தில் நல்ல படியாக செய்திருந்த போதிலும்,கதை நல்லபடியாக நகர்ந்த போதிலும், இறுதியில் சற்று காட்சிகளும் சொல்லிய கதையும் சற்று அழுத்தம் அதிகத்தை கொடுத்து விடுகிறது.

நன்றாக கற்று இந்த விஷயத்தில் தெளிந்து தேர்ந்தவர்களுக்கு ஏற்றுக் கொள்ளும் புரியும் படம். வெற்றி மாறனின் அண்ணி குழந்தை இல்லாதிருந்து நல்லபடியாக கருத்தரித்து விட்டாள் என்னும்போதே கதையை நாம் ஊகித்தறிய முடிகிறது. அதன் பின் கொலையின் பின்னணிகளும் எல்லா கொலை செய்யப்பட்ட பெண்களின் அறிக்கைகளும் 23 என்ற எண் நிழலாக பின் புலத்தில் இருப்பதும் கதைக்கு வலு சேர்க்கிறது
என்றே சொல்ல வேண்டும்.

துப்பறியும் கதை, சொந்த வாழ்வில் பின்னிப் பிணைந்து அறிவியல் கூறுகளை அள்ளித் தெளித்திருக்கும்படம்.மேலை நாடுகளில் விந்தணு வியாபாரம் நன்கு இருக்கிறதாம், விந்தணுவுக்கு நல்ல விலை கிடைக்கிறதாம்.

ஆனால் இப்படிப் பார்த்தால் எந்தப் பெண்ணுக்கு யாருடைய விந்தணு வேண்டுமோ அவர் விருப்பப் பட்டால் அதை வாங்கி பெற்றுக் கொள்ளலாம் என்றால் அறிவியல் விற்பன்னர்களும், சாதனையாளர்களும், தலைவர்களும் நல்ல விலைக்கு எதிர்பாராத விலைக்கு கனவிலும் நினைக்காத விலைக்கு தமது விந்தணுக்களை விற்க முடியுமே.

இந்த நாட்டில் இப்போதே 140 கோடி மக்கள் தொல்லை, எனவே இந்த ஒரு சிலரின் பிரச்சனையான குழந்தையில்லா நிலைக்கு தீர்வு சொல்வதாக விந்தணு தானம், வியாபரம் என்ற ஊக்குவிப்பு செய்வதை விட அனாதைகளை,  ஆதரவற்றாரை தத்துக்கு எடுப்பதும் கொடுப்பதும் தான் சமூக அளவில் சரியானத் தீர்வைத் தரமுடியும்.

Related imageசினிமா என்பதற்கு சரிதான்.

மற்றபடி பாடல் தயாரிப்பு பற்றி எல்லாம் பெரிதாக சொல்ல ஏதுமில்லை. நல்ல முறையில் முயற்சி செய்து தயாரிக்கப் பட்டிருக்கும்படம். எதற்காக கொலை செய்யப்படுகிறார்கள் இந்த விந்தணுவைத் தாங்கிய தாய்மார்கள் என்பதை இன்னும் தெளிவு படக் கூறியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

கணவனது இல்லாமல் வேறொருவரின் விந்தை ஏற்கும் விஷயம் வெளியே தெரியாமல் இருக்க ப்ளாக் மெயில் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள் கட்டளைக்கு கீழ்ப்படியாமல் பிறரிடம் இந்த உண்மைகளை வெளிப்படுத்த முனைவரையும் அதைப்பற்றித் தெரியவருகிறவரையும் ....அந்த முதல் காட்சியில் சர்ச் பாதர்....கொலை செய்து விடுகிறார்கள் அதை  யார் செய்கிறார்கள் எதற்காக செய்கிறார்கள் என உண்மை கண்டறியும் காவல்துறை முயற்சி என சுருக்கமாக சொல்லி விடலாம்,

48 மார்க் கொடுக்கலாம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments:

  1. அருமையான விமர்சனம் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  2. thanks for your feedback on this post sir. vanakkam

    ReplyDelete