Thursday, March 23, 2017

உதிர்ந்த இரட்டை இலை மீண்டும் துளிர்க்குமா? கவிஞர் தணிகை

உதிர்ந்த  இரட்டை இலை மீண்டும் துளிர்க்குமா? கவிஞர் தணிகை

உதிர்ந்த மலர்
மீண்டும் கிளைக்குத் திரும்புகிறது

ஓ! வண்ணத்துப் பூச்சி.



Image result for haiku kavithai in tamil

என்ற ஒரு ‍ஜப்பானிய ‍ஹைக்கூ கவிதையை ஹைக்கூ கவிதைக்கு ஒரு நல்ல அடையாளம் என்பார்கள். அந்த கவிதைதான் எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. இரட்டை மின் விளக்கு கம்பம் இரட்டை இலைக்கு சமம் என பன்னீர் அணி கனவு அதிலும் இதிலும் இரட்டை என்ற சொல் இடம் பெறுகிறாதாம். வண்ணத்துப் பூச்சி பூமி மேல் அம்ர்ந்திருந்தது பறந்து சென்று மரக்கிளையில் ஒட்டிக் கொண்டதைப் பார்த்தால் காய்ந்து கீழே கொட்டி இருந்த மலரில் ஒன்று மரக்கிளையில் ஏறி மறுபடியும் ஒட்டிக் கொண்டது போலத் தெரிந்ததாம் அந்த கவிஞருக்கு. கவிதைக்கு நன்றாகவே இருக்கிறது. கட்சிக்கு நன்றாக இருக்குமா என்பதுதான் கேள்வி. ஆனால் இவர்கள் 1989ல் இரட்டைப் புறா, சேவலுமக சண்டையிட்டவர்கள் மறுபடியும் இரட்டை இலையை தக்க வைத்துக் கொண்டார்கள். ஆனால் அப்போதைய நிலை வேறு. இப்போதைய நிலை பல கூறு(கள்)

சில ஆயிரம் பக்கங்களை பரிசீலிக்க நேரம் காலம் இடம் கொடுக்காததால்தான்  சசிகலா அணிக்கு இரட்டை இலை ஒதுக்கப்படவில்லை எனச் சொல்லி இருக்கிறது தேர்தல் ஆணையம், மேலும் இது இடைக்காலத் தீர்ப்புதான் என்றும் சொல்லி இருக்கிறது

எப்படியோ பாரதீய ஜனதாக் கட்சி எண்ணிய நாடகம் இரண்டு பிரிவுக்குமே இரட்டை இலைச் சின்னத்தை தராமல் முடக்கி வைப்பது என்ற எண்ணம் நிறைவேறி விட்டது.

இனி இரட்டை மின் விளக்கு கம்பத்தை இரட்டை விரலை நீட்டி பன்னீர் அணி காட்டும் தொப்பியை தினகரன் எடப்பாடி சசிகலா அணி காட்டும் தீபா அணி வெற்று அணி படத்தை காட்டும்.

அம்மா அ.இ.அ.தி.மு.கவாம், அ.இ.அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மாவாம். அய்யய்யா எங்க பார்த்தாலும் இந்த அம்மா என்ற சொல் நாரசமாய் விட்டது. பெற்ற அன்னையின் புனிதம் கூட இந்த சொல்லில் காணாமல் போய்விடுமோ என்று சொல்லுமளவு...

வாரிசாக யாரையும் குறிப்பிடாத கட்சி அமைப்புகள் தமிழகத்தை ஆண்ட கட்சிகளாக இருக்கும் வரை இந்த நிலை நீடிக்கும். இனியும் வெல்ல முடியவில்லை எனில் ஸ்டாலின் கட்சி அதோகதிதான் என்று சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

நிரந்தர முதல்வர் என்ற கட்சி இன்று சின்னத்தை இழந்து சின்னா பின்னப் பட்டு உடைபட்டு மண்குடமாய் உதைபட்டு பந்தாய் கிழிந்து கிடக்கிறது. சுக்கல்களாய், சிக்கல்களுடன்

இந்த அவதியிலிருந்து இனி இது தேறுமா?  மறுபடியும் கூடுமா? ஒன்று பட்டு தமிழகத்துக்கு ஒரே தனிப்பட்ட பெரும்பான்மை ஆட்சி தர முடியுமா? எடப்பாடி தாங்குவாரா? என்பது போன்ற நிறைய கேள்விகள்.

உதிர்ந்த ரோமங்கள், உதிர்ந்த இலைகள் , சட்ட சபைகள், சென்னா ரெட்டிகள், துரைமுருகன்கள் எல்லாவற்றையும் ஏற்கெனவே சந்தித்த இந்தக் கட்சி இம்முறை எப்படி தேறப் போகிறது என ஏப்ரல் 12 வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டியது அவசியம்.

மேலும், இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் எடப்பாடி முதல்வராக நீடிப்பது உறுதி என்ற ஒரு ஆருடம் எனக்குத் தோன்றுகிறது. ஸ்டாலின் கட்சி ஜெயித்தாலுமே தமிழக அரசை ஆளும் கட்சியை அதன் தலைமையை இது ஏதும் பாதிக்காது என்றே தோன்றுகிறது. அவ்வளவு சீக்கிரம் ஆட்சியை பதவியை விட மாட்டார்கள் மேலும் அப்படி நடைபெறும் பட்சத்தில் சசி தமிழ்நாட்டுசிறைக்குள் மீட்கப்படுவதும், மேலும் இரட்டை இலையை அவர்கள் தக்கவைத்துக் கொள்வதும் எளிது என்பதும் சாத்தியமே என்று சொல்லத் தோன்றுகிறது. எல்லாவற்றுக்கும் பணம் இருக்கிறது.இடையில் பெரிய மாற்றம் என்ன நிகழப் போகிறது என்பதை பார்க்க தமிழகம் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.இன்று சட்ட சபையில் சபாநாயகர் மேல் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்த அதே கெட்டி அப்படியே இருந்தால்... அட நம்ம எடப்பாடிக்கு நல்ல இராசி இருக்கும் போல இருக்கே..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.




4 comments: