Sunday, March 19, 2017

தமிழகத்தில் என்ன நடக்கிறது? கவிஞர் தணிகை.

தமிழகத்தில் என்ன நடக்கிறது? கவிஞர் தணிகை.

Related image


அ.இ.அ.தி.மு.கவை யாராலும் அழிக்க முடியாது,என்கிறார்கள் பதவி ஆசையில் இருக்கும் அந்தக் கட்சிக்காரர்கள், பதவி கிடைக்கவில்லை என்றதும் தூய்மை பற்றி பேசுகிறார்கள் ஏசுகிறார்கள்...ஆனால் அந்தக் கட்சி மட்டும் அழியாதாம்  ஏன் எனில் அது தானாகவே அழிந்து விடும். ஜெவை அப்படித்தான் சொன்னார்கள், அவர் முடிவை காலம் நமக்கு காட்டிக் கொடுத்தது...இப்போது யார் யார் எல்லாமோ என்ன என்னவோ சொல்கிறார்கள்,ஜெவுக்கு வாரிசாக ஜெயக்குமார் என்ற இளைஞர் நீதிமன்றத்தில் சோபன்பாபுவுக்கும், ஜெவுக்கும் தாம் பிறந்த வாரிசு என்கிறார்,எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் சந்திரன் என்பவர் கட்சி ஆரம்பித்துள்ளதாக செய்தி வருகிறது, ஜெ.தீபா மாடி மேல் இருந்து கொண்டு,தமது அடிமைகளுக்கு காட்சி கொடுக்கிறார், அவரது கணவர் ஒரு புதிய கட்சி ஆரம்பித்துள்ளதாக சொல்கிறார்,

Image result for election RK nagar 2017

ஜெ.தீபாவும், ஓ.பி.எஸ்ஸும் அடிக்கடி ஜெ சமாதியை போதி மரம் என நினைத்துக் கொண்டு புத்தராக நினைக்கிறார்கள், ஜெவோ குற்றவாளி எண் ஒன்று, உச்ச நீதிமன்றத்தில் தண்டனை தரும் முன்னே இயற்கை தந்த தண்ட்னையைப் பெற்று தாக்குப் பிடிக்க முடியாமல் நிரந்தர முதல்வர் என்றவர் நிரந்தரமாக நீளா மீளா துயில் கொண்டு விட்டார்,

சசி கலா என்றார்கள் அவர் உள்ளே இருந்து வெளி வரமுடியாமல் தமிழகத்து சிறைக்கு வர முயற்சிக்கிறார், இவருக்கு பதிலாக லகானை கையில் வைத்துக் கொண்டு எடப்பாடியை ஆட்டி வைக்க சசிகலா நியமித்த டி.டி.வி. தினகரன் இவர் அ.இ.அ.தி.மு.கவால் பாரளுமன்ற இராஜ்யசபாவுக்கு எம்.பியாக நியமிக்கப் பட்டவராம், என்.ஆர்.ஐ, கார் வழக்கு எல்லாம் இருக்கிறதாம், ஆனால் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் இவர்தாம் எடப்பாடியார் கட்சியின் வேட்பாளராம், இப்போதைக்கு எடப்பாடியாருக்கு போட்டியாக முதல்வராக வர மாட்டேன் என  உறுதியாக உரை நிகழ்த்துகிறார், எடப்பாடி நெற்றியில் வைக்கும் திருநீர் நிரந்தர முதல்வராக வேண்டி குலதெய்வத்திடம் வேண்டி வைப்பதாக கட்சியினர் வத்தி வைத்து அதை இவர் விசாரித்து எடப்பாடியார் அதை வைக்காமலே இரண்டு கூட்டத்தில் கலந்து கொண்டார் என்ற செய்திகளும் வருகின்றன‌

Image result for deepa jayalalitha

மக்கள் நலக் கூட்டணி உடைந்து கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை இராதாகிருஷ்ணன் நகரில் நிறுத்துகிறது, பா.ம.க வு நிற்கவில்லை எனச் சொல்லிவிட விஜய்காந்த் கட்சி பிரேமலதாவை நிற்கச் சொல்ல அவரோ யாரோ வேறு ஒருவரை நிற்கச் சொல்லி விட்டார், மதுசூதனன் ஓ.பி.எஸ் கட்சியாம், மருது கணேஷ் என்பார் தி.மு.கவாம், இவர்கள் எல்லாம் இல்லாமல் எத்தனை பேரோ என்ன வெல்லாம் கூத்தோ?

சொல்ல மறந்தே விட்டது பெரிய வேட்பாளராக இந்தியாவின் பெரிய தேசியக் கட்சியின் வேட்பாளராக‌ பி.ஜே.பி கங்கை அமரனை நிறுத்துகிறது.
என்ன வென்று சொல்ல இந்தக் கெட்ட காலத்தை ஆர்.கே நகர் ஏற்கெனவே ஒரு முதல்வர் வேட்பாளரை வேறு கொன்றிருக்கிறது 6 மாதம் ஆவதற்குள்ளே, இந்த தேர்தல் மூலம் எத்தனை பேரை பலி வாங்கப்போகிறதோ ஐ மீன் ஒருவர் தானே வெல்ல முடியும்? மற்றவர் எல்லாம் தோற்றுதானே ஆக வேண்டும் அதைத் தான் சொன்னேன்...

இந்நிலையில் இரட்டை இலை உண்டா இல்லையா என்பது 22 ஆம் தேதியில் அல்லது அதன் பிறகு எடப்பாடியா ஓ.பி.எஸ் கட்சிகளுக்கா என்பதை முடிவு செய்ய புதிய தேர்தல் கமிஷனரை தி.மு.க போன்ற கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு செவி சாய்த்து தேர்தல் ஆணையம் அல்லது அரசு நியமித்ததாக செய்திகள்...

ஏப்ரல் 12 தேர்தல் அதற்குள் எத்தனை ஆட்டம் பாட்டமோ? அசிங்கங்களின் தெறிப்புகளோ? அடுத்த நாள் தெரியும் யார் அதிகம் செலவு செய்தார் என...இதுதான் தேர்தல், இதுதான் மக்களாட்சி...ஆனால் இவர்களுக்கு எவருக்குமே தேர்தலில் நிற்கவோ மக்களை ஆளவோ மக்களுக்கு சேவை செய்யவோ ஒரு தகுதியும் இல்லை என்பதுதான் உண்மை...

இந்த என்.ஆர்.ஐ தினகரனுக்கு தேர்தலில் நிற்கவே தகுதி இல்லை என்கிறார்கள் இதெல்லாம் எப்படி முடிகிறது என்று பார்ப்போம்...

இனியும் தமிழக மக்கள் யார் மக்களுக்கு சேவை செய்வார் எனப் பார்த்து வாக்களிக்கும் கடமையை ஒழுங்காக நிறைவேற்ற வில்லை எனில் ஜனநாயகமும் தேர்தலும் ஒரு பயனையும் விளைவிக்கப் போவதில்லை.

From this Election onwards D.M.K will re - starts its career again..I think that is different...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

இதைப் பற்றி எல்லாம் எழுத வேண்டும் என்கிறார்கள், நான் இதைப்பற்றி எல்லாம் எழுத விரும்புவதே இல்லை, குற்றவாளி சமூகம், குற்றவாளிப் பிரதிநிதிகள் எல்லாம் இப்படி ஆன பின் இரோம் சரிமிளா போன்றோர் 90 வாக்கு பெற்றதே அதிகம்தானே? தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவே இப்படித்தான் இருக்கிறது..உ.பிக்கு இன்று ஆதித்யநாத் என்ற இந்து மத பி.ஜே.பி துறவி துறவியா, மதம் சார்ந்த ஒரு சார்புடைய மனிதரா, இவர் முதன் மந்திரி ஆகி இருக்கிறார் இந்தியாவின் மாபெரும் முக்கியமான இருதயம் போன்ற மாநிலத்தில்...ஆக அரசியலும், நாடும் ஒரு வழியாகிக் கொண்டிருக்கிறது. மோடியும் தி.மு.கவும், அ.இ.அ.தி.மு.கவும் தேர்தலில் வெல்வது எப்படி எனக் கற்றுக் கொண்டுள்ளனர்.ஆனால் மக்களுக்கு எந்த பயனும் இன்றி ஜனநாயகம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

4 comments:

  1. இனியும் தமிழக மக்கள் யார் மக்களுக்கு சேவை செய்வார் எனப் பார்த்து வாக்களிக்கும் கடமையை ஒழுங்காக நிறைவேற்ற வில்லை எனில் ஜனநாயகமும் தேர்தலும் ஒரு பயனையும் விளைவிக்கப் போவதில்லை.
    உண்மைதான் நண்பரே

    ReplyDelete
  2. thanks for your participation in this post activity. vanakkam.

    ReplyDelete
  3. அருமையான, சரியான பதிவு.
    காலத்தின் கோலம்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. thanks sir vanakkam for your comment on this post.please keep contact

      Delete