Monday, July 11, 2016

ஜீவ ஒளி: கவிஞர் தணிகை

ஜீவ ஒளி: கவிஞர் தணிகை




இந்தியாவில் எம்மதமும் சம்மதம், அல்லது மத நல்லிணக்கம், அல்லது மத சமரசப் போக்கு இருப்பது வரவேற்கத் தக்கதாகவே இருக்கிறது. கடந்த ரம்ஜான் அன்று ஒரு நாள் அரசு விடுமுறை என அறிவிப்பு வந்து பணிக்கு செல்லாதபோது இந்த ஞானோதயம் ஏற்பட்டது என்ன புத்தருக்கு ஏற்பட்டது போதி மரத்தடியில் நமக்கு ஏற்படுவது விடுமுறை நாட்களில்.

இப்படி எல்லா மதங்களும் கலந்திருப்பதால் இந்தியாவில் அந்த அந்த மதங்களின் முக்கியமான நாட்களுக்கு எல்லாம் ஒவ்வொரு நாள் அரசு விடுமுறை கிடைப்பதால் பணியில் அதன் நெருக்கடியில் இருப்பார் எல்லாம் மகிழ்கிறார்கள் என்பது உண்மைதான்.

அதை எல்லாம் விடுங்கள், எங்களது வீட்டில் குரான், பைபிள், பகவத் கீதை எல்லாம் உண்டு. எல்லா மதங்கள் பாலும் பற்றும் உண்டு புத்தம், ஜைனம், சீக்கியம் ,இப்படி எல்லா தத்துவங்களிலும்
 நம்பிக்கையுண்டு ஆனால் அவை அபினாக மாறி வெறியேற்றும் போது மார்க்ஸ் சொன்ன வார்த்தையை நினைத்து அது எவ்வளவு சரியான வார்த்தை என ஏற்றுக்கொள்வதும் உண்டு.




மதங்களை , அதன் கோடுகளை அதன் கேடுகளை எல்லாம் கடக்க வேண்டும். ஓரளவு கடந்தாகி விட்டது. அப்போதும் சில நேரங்களில் கொஞ்சம் நஞ்சம் பிடிப்பு இருப்பதாகவும் காணப்படுகிறது.

எந்த மதச் சின்னங்களையுமே அணிவதில்லை. எல்லா மதங்களுமே நல்ல போதனையை மானுட குலத்துக்கு வழங்கியபோதும் எவரும் அதன் பால் பின் தொடர்ந்து நடக்காத போது அதெல்லாம் எதற்கு எனத் தோன்றுவதும் உண்டு

ரமலான் உண்ணா நோன்பு கஞ்சி குடித்த அனுபவம் உண்டு. ஆனால் இந்த முறை ஒரு குடும்பத் தோழியின் கணவர் ரம்ஜான் அன்று சரியாக நண்பகல் 2 மணிக்கு உணவுப் பாக்கெட்டுடன் நின்றார். நானும் மகனும் மரக்கறி உண்பாரே ஆயினும் குடும்பத் தலைவி ஊன் தின்னும் வழக்கமுடையாரே எனவே அவருக்காக இந்த முகமதிய பர்தா போடும் பழக்கமுள்ள குடும்பத்தார் உணவை கொண்டு வந்து கொடுத்து அன்பை வெளிப்படுத்த உடனே இதுவரை சில முறை அவர்கள் குடும்ப நிகழ்வுக்கு அவர்கள் அழைத்த போதும் நாம் சென்று கலந்து கொள்ளத் தவறி விட்டோம். இன்றாவது சென்று அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து சொல்வோம் என இனிப்புகள் வாங்கி எடுத்து அவர்கள் வீட்டுக்கு சென்றுக் கொடுத்துப் பேசி மகிழ்ந்து வந்தார்.



அதென்னவோ அன்று அந்த நினைவே அந்த நாள் முழுதும் மிதந்து கொண்டிருந்தது எல்லா இயக்கங்கள் மேலும்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment