Sunday, June 12, 2016

உண்மைக்கு பரிசு எப்போதுமே துப்பாக்கி குண்டுகளும் துரு மரணமும்தான்: கவிஞர் தணிகை

உண்மைக்கு பரிசு எப்போதுமே துப்பாக்கி குண்டுகளும் துரு மரணமும்தான்: கவிஞர் தணிகைஉண்மையை எழுதுவதால் உறவுகள் முறிவதும், நட்பு பிரிவதும் எல்லாத் தரப்பும் எதிர்ப்பாக மாறுவதும் உண்மையான சத்திய சோதனைதான்.வயதில் இளையவரானாலும் அறிவில்,அனுபவத்தில் ஒரு சிறந்தவர் என் பால் அக்கறை உள்ளவர் சொல்கிறார்: எழுதுவது அதை படிப்பவரிடம் என்ன பாதிப்பு ஏற்படுத்தும்? அதை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் எனப் பார்த்து எழுத வேண்டும் என்றார். அது சரிதான்.
நாம் பெரும்பாலும் நமது உணர்வுகளை தெறிக்க விடுவதை, ஓட விடுவதை, எண்ணங்களை எடுத்து எழுத்துகளில் வைப்பதை ஏதாவது பெயரிட்டு வடிகாலான கதை கட்டுரை,சொற்கோவை என வடித்திடுகிறோம். மற்றொரு புறம் சமுதாய மேம்பாட்டுக்காக நமது சார்பாக நமது அனுபவத்தை பங்கிட்டுக் கொள்கிறோம். நாம் பெற்றதை திருப்பிக் கொடுத்துச் செல்வது போல.\

புத்தகங்கள் உயிரற்றவைதான் ஆனால் அவை என்றும் உயிர் வாழ்கின்றன என ஒரு பள்ளியின் மதில்  சுவர் தன்னில் எழுதி வைத்திருந்த செய்தி பாருக்கே நன்மை பயக்கும். ( இந்த பார் என்பதற்கு உலகு என்பது பொருள் மதுபான விற்கும் ஆங்கில  பார்/bar அல்ல). எனவே ஒவ்வொருவரும் எழுதத் தான் வேண்டும். ஒரு நூலாவது.யார் எழுதியிருந்தாலும் அது யாவருக்கும் பயன்படும் என்பதால்.
ஆனால் நாம் பெரியார் போல எழுதுகிறேன் அண்ணா போல எவரையும் புண்படுத்தாமல் எழுத வேண்டும் என்பார் மற்றொரு ஆர்ட்டிஸ்ட்.  இவர்கள் எல்லாம் சொல்வது சரிதான். பெரும்பாலும் அதை படிப்பவர்களிடம் என்ன மாறுதல் என்ன விளைவு என்ன பாதிப்பு ஏற்படுத்தும் என கணிக்காமலே நிறைய முறை எழுதி விடுகிறேன் என்பதும் உண்மைதான். அதன் விளைவை பாதிப்பை தாக்குபிடிக்க முடியாமல் எதற்கு இப்படி செய்தோம் என கூசிப்போனதும் என்னிடம் நிகழ்ந்தவைதான்.

ஆனாலும் நண்பர்களுக்கு சொல்வேன், ஒளிவு மறைவு இன்றி பட்டவர்த்தனமாக அப்பட்டமாக சொல்லும்போது பகை வரத்தான் செய்யும். பிறகு எப்படி மாற்றத்தை உருவாக்க முடியும்? நண்பர்கள் கூட பயந்து கொள்கிறார்கள்தான் இவனுக்குத் தெரிந்தால் எப்போதாவது அதை , நம்மைப் பற்றியும் எழுதி விடுவானே என்று... எனவே எதை எழுதுவது, எதை எழுதாமல் விடுவது என்றெல்லாம் கணக்குப் பார்த்துச் செய்தால் அது வாழ்க்கை விளையாட்டு ஆகிறது.ஆனால் எழுத்து என்பது பொறுக்க முடியாமல் பொங்கிடும் ஊற்று அதை வெளியே எடுத்து விட்டாக வேண்டும். அதனால் ஏற்படும் பாதிப்பு அனுபவங்களையும் அனுபவத்துத் தான் தீர வேண்டும் அப்போதுதான் அவர் ஒரு படைப்பாளியாக இருக்க முடியும். ஒரு போராளியாக இருக்க முடியும். ஒளிவு மறைவு, நெளிவு சுளிவு கொண்டு எல்லாம் எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் அதிக வேறுபாடு இல்லை.

நான் வாழ்க்கை முழுதும் போராடிக் கொண்டே இருப்பவன். அதிகமாக மிஞ்சிப் போனால் இன்னும் இந்த 55 வயதான மக்களுக்காக பாடுபட்டு உருக்குலைந்து போன‌ உடலும் உயிரும் ஒட்டி இருக்கிறது அதையும் இந்த சமுதாய மேம்பாட்டுக்கு விதைத்து விடவே தயாராய் இருக்கிறேன். அப்படியே வளர்ந்து விட்டதால் என்னால் அவ்வளவு எளிதாக எனது எழுத்தின் பாணியை, ஸ்டைலை , மாற்றிக் கொள்ள முடிவதில்லை. அப்படி மாற்றிக் கொள்ளும் எண்ணமும் இல்லை.(Most of biography and Auto biographies books are earning negative points more than normal books)

சமுதாயத்தின் பாதையோடு செல்வார் பலர் பலம் பொருந்தியோரக‌, பாதையை புதிதாக சமைப்பார் சிலர் , அல்லது அதற்காக முயல்வார் சிலர் நிறைய வருந்துவாரக‌. இந்த சிலருள் நானும் இருக்கிறேன் என்றே எண்ணுகிறேன்.மகாத்மா,நல்ல எழுத்தாளர் என்று சொல்வதற்கில்லை என்றாலும் அவர் 60,000 பக்கங்களுக்கும் மேல் எழுதியுள்ளார். உண்மையை  மட்டும்தான்
அப்படி எழுத முடியும். உண்மைக்கு உறை போட்டுக் கூட அப்படி எழுத முடியாது.

நானறிந்தவரை கலாம், தெரஸா போன்ற மாபெரும் ஆன்மாக்கள் மட்டுமே இயல்பாக மறைந்தன கடவுளைப் போல சேவையின் மூலம் உயர்ந்ததால் அவர்கள் தற்கொலையும் செய்து கொள்ளவில்லை கொலையும் செய்யப்படவில்லை. மற்றபடி இப்படி முயற்சி செய்த பலருக்கும் துப்பாக்கி குண்டுகளும் துருமரணங்களுமே பரிசாக கிடைத்திருக்கின்றன.

மனிதர்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் செய்வதுதான் கடவுளுக்கு.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment