Thursday, September 8, 2016

குற்றமே தண்டனை: கவிஞர் தணிகை

குற்றமே தண்டனை: கவிஞர் தணிகை


Image result for kutrame thandanai length of movie


ஆங்கில பனிஷ்மென்ட் தமிழில் குற்றமே தண்டனை ஆகி இருக்கிறது. நன்றாக இருக்கிறது என்றும் சொல்லும்படியாக...காக்கா முட்டை எடுத்த மணிகண்டன் முதலில் இந்தப் படத்தை எடுத்தாலும் இது இப்போது செப்டம்பர் 2ல் இந்த ஆண்டுதான் வெளி வந்துள்ளது.

படமாகவே தெரியவில்லை இதுதான் இந்த படத்துக்கு கிடைத்த வெற்றி. யதார்த்தமாக அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் கதாபாத்திரங்கள் இயல்பாக வாழ்ந்துள்ளனர் இந்த சினிமாவில்.

விதார்த்  ரவி என்ற பாத்திரத்துடன் பின்னப் பட்ட கதை எனவே வேறு எந்த நடிகருமே இதில் பெரிதாகத் தெரியவில்லை அது நாசர் , ரகுமான் இருந்தபோதிலும். ஏன் எனில் கதைக்கு வலுவான அடித்தளம் உள்ளதால்.

சுமார் 1மணி 35 நிமிடம் இருக்கும் இந்தப் படத்தில் பாடல்களுக்கோ, மற்ற நடிகர் நடிகைகளுக்கோ அதிகம் வேலை இல்லாத படம். அதிகம் வேலை தராத படம்.

பார்வை நிரந்தரமாக இருண்டு குருடாக போய்க் கொண்டிருக்கும் ரவிக்கு அலுவலகத் தோழியும் உண்டு. குடி இருக்கும் இடத்தில் எதிரில் ஒரு பெண் கொலை செய்யப் பட, அவள் ரவிக்கு தெரிந்த நபராக இருக்க கொலை செய்த நபர்கள் ரகுமான் வீட்டில் முதலில் 3 இலட்சத்து 72 ஆயிரம் பெறுகிறார். அதுதான் அவரது கண் ஆபரேஷனுக்கு தேவையான பணம் என்று கண் மருத்துவ மனையில் ஒரு மருத்துவர் தெரிவிக்கிறார்.

எனவே ரகுமானிடம் இருந்து பெறும் அந்தப் பணம் போதவில்லை.ஏன் எனில் முதலில் சொன்ன கணக்கு தவறு..நீங்கள் 4 இலட்சத்துக்கும் மேல் கட்ட வேண்டும் எனச் சொல்ல இப்போது அந்த அதிகபடியான பணத்தையும் அந்த கொலைகார ரகுமானிடம் இருந்தே கேட்க முனைகிறார். ஆனால் ரகுமான் பிடி கொடுக்க மறுத்து விட...

இந்த கொலை குறித்த விசாரணை இவரது வீடருகே நடக்கும்போது காவலரிடம் அங்கு வந்து சென்ற பணக்கார இளைஞர் ஒருவரை அடையாளம் காட்ட அந்தக் குடும்பத்திலிருந்து மேலும் மேலும் பணத்தை பெற முயல்கிறார்.

இதனிடையே இவரது பார்வை மேலும் மங்கி வருகிறது. இவர்மேல் பரிதாபம் கொண்ட இவரது தோழி இவருக்கு பலவகையிலும் அன்றாட வாழ்க்கைக்கு உதவி செய்கிறார்.

இதனிடையே இவனை தற்செயலாக ஒரு சாலையில் கண்ட அந்த மருத்துவர் , இவருக்கு பார்வை வரும் எனச் சொன்னதே பொய். இவருக்கு அந்த வாய்ப்பு இல்லை. அப்படிப்பட்ட நோய் அது. என்றும் மருத்துவமனைக்கு வருவாய் சேர்க்கவே அந்தப் பொய் சொல்ல வேண்டியதாயிற்று எனச் சொல்கிறார்.

கண் மருத்துவத்துக்கு கொலையை மறைத்து தாம் பெற்ற பணம் பயனாகதது மட்டுமல்ல...சட்டம் நீதி ஆகியவற்றிலிருந்தெல்லாம் தப்பி விடலாம் ஆனால் இயற்கையிடமிருந்து மனச் சாட்சியிடமிருந்து தாம் செய்யும் குற்றமே தண்டனைதானே என்ற கேள்வியுடன் படத்திலிருந்து அதன் கேள்வியிலிருந்து வெளியேறுகிறோம்.

நமது குடிகார மதுபான நண்பர்களுக்கு எல்லாம் இதெல்லாம் சுஜுபி பா...

நல்ல படம் பார்க்க வேண்டிய படம் . நான் தியேட்டரில் பார்க்க விரும்பிய எவரும் தொந்தரவு தராமல் பார்க்க விரும்பிய படம். ஆனால் தியேட்டர் பிரிண்ட் போல ஆன்லைனில் பார்த்தேன் சமயங்களில் வசனம் சற்று விளங்காமலே...ஆனால் உள்ளீடு நன்றாக தெரிந்ததால் செரித்துக் கொண்டு பார்க்க முடிந்த படம்.

இதற்கு 60 மதிப்பெண் நூற்றுக்கு தாரளமாக வழங்கலாம். ஆனால் நமது தமிழ் இரசிகர்களுக்கு இதெல்லாம் பிடிக்குமோ என்னவோ?

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, September 7, 2016

நீர்ஜா பனோத். - kavignar Thanigai.

340 பயணிகள் உயிரை காத்தவர் : இந்தியாவும் பாகிஸ்தானும் கொண்டாடிய வீர மங்கை!#Neerja Bhanot


Image result for neerja bhanot

வீரதீரச் செயல்களுக்கு வழங்கப்படும் 'அசோகச் சக்ரா' விருதை இளம் வயதிலேயே வென்றவர் பஞ்சாப்பை சேர்ந்த நீர்ஜா  பனோத். இந்த விருது அளிக்கப்படும் போது 23 வயது நீர்ஜா உயிருடன் இல்லை. அண்டை நாடான பாகிஸ்தானும் தம்ஹா இ இஷானியத் என்ற கவுரவமிக்க விருதை இந்த வீர மங்கைக்கு வழங்கியிருக்கிறது. இந்த இரு தேசங்களும் ஒரு பெண்ணை கொண்டாடுகின்றன என்றால் அதன் பின்னணி என்னவாக இருக்கும்?
கடந்த 1986ம் வருடம் செப்டம்பர் 5-ம் தேதி மும்பையிலிருந்து நியூயார்க் நோக்கி அமெரிக்காவைச் சேர்ந்த பான் ஆம் விமானம் பறந்தது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் இறங்கி எரிபொருள் நிரப்பப்பட வேண்டும். விமான ஊழியர்கள் தவிர, 361 பயணிகளும் விமானத்தில் இருந்தனர். மாடலாக இருந்து விமானப் பணிப் பெண்ணாக மாறிய, நீர்ஜா பனோத்துக்கு இன்னும் 2 நாட்களில் 23வது வயது பிறக்கிறது. அந்த உற்சாகத்தில் அவர் இருந்தார்.
கராச்சி விமான நிலையத்தில் அந்த விமானம் இறங்கியது. அப்போது, கராச்சி விமான நிலைய பாதுகாப்பு படையினர் உடையில் அவர்கள் பயன்படுத்தும் வாகனம் ஒன்று பான் ஆம் விமானத்தின் அருகே வந்து நின்றது. அது வழக்கமான ஒன்றுதான் என்பதால் யாருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை.  அந்த வாகனத்தில் இருந்து குதித்த சிலர் திடீரென்று துப்பாக்கி சகிதமாக பான்ஆம் விமானத்தின் படிக்கட்டுகளில் ஏறினர்.விமானத்தின் கதவை சராமரியாகச் சுட்டுத் திறக்க முயற்சித்தனர். துப்பாக்கி சத்தம் கேட்டதுமே நீர்ஜா உஷாராகி விட்டார். உடனடியாக இன்டர்காமில் பைலட்டுக்குத் தகவல் தெரிவித்து உஷார் படுத்தினார். அவர்களை விமானத்தில் இருந்து வெளியேறுமாறும் கூறினார். பைலட்டுகள் விமானத்தில் இருந்து குதித்து தப்பி விட்டனர்.
விமானத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள், விமானம் கடத்தப்படுவதாக அறிவித்தனர். 'பயணிகளை இருக்கைகளை விட்டு நகரக் கூடாது. நகர்ந்தால் சுட்டு பொசுக்கி விடுவோம்' என எச்சரித்தனர். பெண்கள் குழந்தைகளின் கண்களில் மரண பீதி. விமானத்தில் மயான அமைதி நிலவியது.  லிபியாவை சேர்ந்த, 'அபு நிதால்' என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த நான்கு பேரின் கட்டுப்பாட்டில் அந்த அமெரிக்க விமானம் வந்தது. சைப்ராஸ் நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தங்கள் கூட்டாளிகளை விடுவிக்க வேண்டும் என்பது தீவிரவாதிகளின் கோரிக்கை. விமானத்தில் இருந்த அமெரிக்கப் பயணிகளை இனம் கண்டு சுட்டுக் கொல்ல வேண்டும் என்றும் தீவிரவாதிகள் வெறி கொண்டிருந்தனர்.
இதற்கிடையே, விமானத்தின் காக்பிட்டில் பைலட்டுகள் இல்லை என்பதை அறிந்தும் தீவிரவாதிகளின் கோபத் தலைக்கேறியிருந்தது.  விமானத்தை சைப்ரஸ் நாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்பதால், முதலில் பைலட்டுகளை விமானத்திற்குள் வரவழைக்கத் தீவிரவாதிகள் திட்டமிட்டனர். பாகிஸ்தானுக்கான பான் ஆம் விமான நிறுவனத் தலைவருடன் இதற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அடுத்த, பதினைந்து நிமிடங்களுக்குள் பைலட்டுகள் விமானத்திற்குள் வரவில்லை என்றால் குமார் என்பவரை சுட்டுக் கொல்லப் போவதாக தீவிரவாதிகள் எச்சரித்தனர்.
விமானத்தின் கதவு அருகே குமார் முழங்காலிடப்பட்டு நிறுத்தப்படிருந்தார். கைகளை மேலேத் தூக்கியவாறு குமார் முழங்காலிட்டிருந்தார். அவரது கண்களில் மரணபீதி. பேச்சுவார்தையில் பலன் கிடைக்கவில்லை. ஆத்திரமடைந்த தீவிரவாதிகள் பயணிகள், பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் கண் முன்னரே குமாரை தலையில் சுட்டுக் கொன்றனர். பின்னர் விமானத்தில் இருந்து அவரது உடல் வெளியே வீசப்பட்டது. இதனை பார்த்த பயணிகள் பயத்தில் வெட வெடத்து போனார்கள். பயணிகள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடுநடுங்கினர்.
ஒரு கட்டத்தில் தீவிரவாதிகளில் ஒருவன் நீர்ஜாவை அழைத்தான். அனைத்து பயணிகளிடம் இருந்தும் பாஸ்போர்ட்டுகளை வாங்கி வர உத்தரவிட்டான். புத்திசாலியான நீர்ஜா, தீவிரவாதிகளின் நோக்கத்தை அறிந்து கொண்டார். பாஸ்போர்ட்டை வாங்கிய அவர், அமெரிக்க குடிமகன்கள் என்றால், அந்த பாஸ்போர்ட்களை சீட்டுக்கு கீழே ஒளித்து வைத்தார். அப்படி 41 பாஸ்போர்ட்களை நீர்ஜா விமானத்துக்குள் ஆங்காங்கே ஒளித்து வைத்திருந்தார். இதனால் தீவிரவாதிகளுக்கு அமெரிக்கர்கள் யார் மற்றவர்கள் யார் என வேறுபடுத்திப் பார்க்க முடியாததால் பல அமெரிக்கர்கள் உயிர் பிழைத்தனர்.
                             
இதற்கிடையே பாகிஸ்தான் அரசும் தீவிரவாதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. பதினேழு மணி நேரப் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. ஒரு கட்டத்தில், கோபமடைந்த தீவிரவாதிகள், விமானத்தினுள் கண்டபடி சுப்பாக்கிச் சூடு நடத்தினர். தீவிரவாதிகள் சுட்டதில் 20 பயணிகள் இருக்கையிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இறந்தவர்களில் 12 பேர் இந்தியர்கள். இந்த சமயத்தில், நீர்ஜா சமயோசிதமாக செயல்பட்டு, விமானத்தின் எமர்ஜென்சி கதவை கண்ணிமைக்கும் நேரத்தில் திறந்தார். அவர் நினைத்திருந்தால், முதலில் வெளியே குதித்து தப்பியிருக்க முடியும். உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையிலும் நீரஜா தனது கடமையில் இருந்து நழுவவில்லை.
கதவைத் திறந்த நீர்ஜா, அவசர அவசரமாக விமானத்தில் இருந்து பயணிகளை வெளியேற்றத் தொடங்கினார். பயணிகள் உயிர் பிழைத்தால் போதுமென்று குதித்து தப்பி ஓடினர். தன்னால் முடிந்த வரை, விமானப்பயணிகளை காப்பாற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் நீர்ஜா படு வேகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்து விட்ட தீவிரவாதி ஒருவன், நீர்ஜாவை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான். அப்போது நீர்ஜாவிடம் 3 அமெரிக்க குழந்தைகள் இருந்தன. தீவிரவாதி சுடத் தொடங்கியதுமே அந்த குழந்தைகளை கட்டியணைத்து தழுவிக் கொண்டார் நீர்ஜா. நீர்ஜாவின் உடலை துப்பாக்கிக் குண்டுகள் சல்லடையாகத் துளைத்தன. ரத்த வெள்ளத்தில் நீர்ஜா சரிந்து கிடக்க, அவரது அரவணைப்பில் மூன்று அமெரிக்க குழந்தைகள் உயிருடன் இருந்தன. அந்த வீரமங்கைக்கு இன்று 53வது பிறந்த நாள். வீரமங்கைகளை தேசம் மறந்து விடக் கூடாது!

thanks: vikatan
dedicated by
Kavignar Thanigai.

Monday, September 5, 2016

கிடாரி: பார்த்த கதை: கவிஞர் தணிகை

கிடாரி: பார்த்த கதை: கவிஞர் தணிகை
Image result for kidari wiki


ஆட்டில் ஆண் ஆடு கிடாரி, பசுவாயிருந்தால் கடாரி என்றால் ஈனாத இளம் பசு. பொதுவாக ஆட்டுக் கெடா பின் வாங்கி வந்து தலையுடன் தலை மோதி நொறுங்கி நொறுக்கிக் கொள்ளும், நொறுக்கிக் கொல்லும்.அதன் பின் வாங்கும் போக்கு அந்த அளவு முன் வந்து தாக்கும் வேகத்திற்காக.அப்போது அது வந்து தாக்கும் எடை 300 கிலோ எடை வந்து தாக்குவது போல இருக்கும் இது சுமார் அளவுக்குறிப்புதான்.

சசிகுமாருக்கு இந்தவிதமான ஒரேவிதமான ரோல்தான் எப்போதும் கிடைக்கும்போலும். பழிக்குப் பழி, சண்டைக் காட்சிகள்.பொதுவாக இது போன்ற கட்சி, காட்சி யாவுமே அடுத்தவரைக் கொல்லும்போது அது நியாயப் படுத்தும் காட்சிகளாகவும், அந்தக் காட்சிகளில் நாயகத்துவமாக இருக்கும் பாத்திரங்கள் ஏதோ அதிசயம் போலும் அது  துன்பப் படும்போது நாமும் துன்பம் கொள்ளுமாறுமே அமைக்கப்படுகிறது. தனது உயிர் வெல்லக் கட்டி, அடுத்த உயிர் அறுபடவேண்டிய கோழி, ஆடு, மனிதம் இப்படியாக...

எனவே இந்த படத்துக்கு எல்லாம் நாம் எழுத வேண்டிய அவசியமில்லைதான். ஊடகங்கள் எல்லாம் இது போன்ற படங்களை  தமது எழுதும் பிரபலங்களை வைத்து நன்றாக இருக்கிறது என்றே சொல்லும். ஆனால் சாதாரணமாக பார்க்கும் நமது பார்வையாளர்கள் கணிப்பே செல்லும்.

இது ஒரு பத்தோடு சேர்ந்த பதினொராவது படம்தான். எதிர்பாராத கொலைகளும், இரத்த வெள்ளமும், காதலனும், காதலியும் கட்டிப் பிடித்தால் கூட எவராவது வந்து முதுகில் குத்திக் கொன்று விடுவார்களோ என எதிர் பார்க்க வைக்கும், எதிரியை பார்க்க வைக்கும் மனோபாவம் விளைக்கும் படம்...

அடுத்தடுத்த கொலைகள் வாழ்வதற்கும், தமது இடத்தை தக்க வைப்பதற்கும் அல்லது தலமை இடத்தை பிடித்துக் கொல்வதற்கும், தலைமை இடத்தை பிடித்துக் கொள்வதற்கும், சட்டம் ஒழுங்கு, காவல் நிலையம் எல்லாம் இருப்பதாகவும் ஆனால் பயனின்றி இருப்பதாகவும் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது.

மற்றபடி இந்தப் படத்தைப் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் பெரிய பாதிப்போ நஷ்டமோ இல்லை. காதலுக்கு எல்லாம் இடம் அதிகமில்லை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

செப்டம்பர் 5 .2016: கவிஞர் தணிகை

செப்டம்பர் 5 .2016: கவிஞர் தணிகை

Image result for mother teresa quotes

ஆசிரியர் தினம், டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த தினம், வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் மற்றும் அன்னை தெரஸா நினைவு நாள். மேலும் இது ஒரு விநாயகர் சதுர்த்தி என்பதும் முகூர்த்த நாள் என்பதாகவும் இதன் சிறப்பு

Image result for mother teresa quotes


மகன் மணியம் கோவையிலிருந்து முதல் ஆசிரியராக அவனுக்கு விளங்கியதால் எனக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள் சொன்னான். எமது குடும்பத்தில் நிறைய ஆசிரியர்கள். முதலில் எனது தங்கையை ஆசிரியராக ஆக்கினேன். அதன் பிறகு நிறைய...சகோதரிகளின் மகள்களும் உறவுகளுமாக....ஒரு நல்ல ஆசிரியர் விருது பெற்ற உண்மையிலேயே ஒரு நல்ல ஆசிரியர் தமது உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியை செய்வதிலிருந்து பின் வாங்கி மீண்டும் நடு நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகவே பணி தொடர்வதிலிருந்தே நமது கல்வி அமைப்பு எப்படி எனத் தெரிந்து கொள்ளலாம். இணை வேந்தர் பதவி பல்கலைக் கழகத்தில் விலைக்கு ஏலம் விடப்படுவதாகவும் செய்திகள்.

டாக்டர் இராதாகிருஷ்ணன் ஒரு அரிய நபர். ஆசிரியராகத் தமது பணியை ஆரம்பித்து இந்த நாட்டின் உச்ச பதவியை அடைந்த மாமனிதர். அவரின் வாசகம் எப்போதுமே எனக்குப் பிடித்தது: கட்டுப்பாடில்லா விடுதலையும், ஒழுக்கமில்லா சுதந்திரமும், தியாகமிலா சாதனையும் ஒரு நாட்டை நல்வழிப் படுத்தாது என்பதே.

Image result for vo chidambaram

வ.உ. சிதம்பரனார் வாரிசுகள் கூலி வேலை பார்த்து பிழைப்பதாக அறிந்தோம் கொஞ்ச காலம் முன். கப்பலோட்டிய தமிழன் மிகவும் சின்னாபின்னப் படுத்தப் பட்டு சிதலமடைந்து மறைந்த மாமனிதம்.செக்கிழுக்க வைக்கப்பட்டு வழக்கறிஞர் உரிமம் பறிக்கப்பட்டு, சொத்திழந்து, கப்பல் கம்பெனி இழந்து இப்படி ஏகப்பட்ட இன்னல்கள்...யாரெல்லாம் இந்த நாட்டு மேம்பாட்டுக்கு உழைக்கிறார்களோ அவர்களுக்கு கிடைக்கும் பரிசு இப்படித்தான் இருக்கிறது இதற்கு மரணம் என்ற பரிசு பரவாயில்லை.


அன்னை தெரஸா அம்மையாருக்கு இன்று செயின்ட் என்னும் புனிதர் பட்டம் வழங்கப் படுகிறது. இனி செய்ன்ட் அன்னை தெரஸா என்று அழைக்கப் படுவார். இவர் மனித வாழ்விற்கு வந்த தெய்வம்.

நான் ஒரு முறை எழுதினேன்: ஓ! பெண்களே
                                உங்களில்
                                யாராவது
                                அன்னை தெரஸாவாகத்
                                 தயாராக இருந்தால்

                                 அவர்க்கு
                                  நான்
                                   செருப்பாகக் தயாராயிருக்கிறேன்
என...

இப்படி மாமனிதர்களை நினைவு படுத்தும் தினமான இன்று விடுமுறை எதற்காக எனில் விநாயகர் சதுர்த்தி என....இது ஒரு முகூர்த்த தினமாக மண நாளாகவும் விளங்கி இருக்கிறது.

Image result for dr.radhakrishnan

இப்படி நாலைந்து நிகழ்வுகளை உள்ளடக்கிய இந்த ஒரே தினத்தில் நாமும் நமது கருத்துகளை பதிவு செய்கிறோம். அஞ்சலிகளையும் வணக்கத்தையும் தலை தாழ்த்தி செலுத்தி...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Image result for dr.radhakrishnan

Sunday, September 4, 2016

விநாயகர் சதுர்த்தி பாதிப்புகள், விளைவுகள், அதிர்வலைகள்: கவிஞர் தணிகை

விநாயகர் சதுர்த்தி பாதிப்புகள், விளைவுகள், அதிர்வலைகள்: கவிஞர் தணிகை

Image result for vinayagar chaturthi


 தந்தை மகேந்திர பல்லவன் தோல்விக்கு பழி வாங்கி வாதாபி கொண்டு நரசிம்ம வர்மன் சாளுக்கிய நாட்டிலிருந்து திரும்புகையில் அவனது நண்பரும் போர்ப்படைத் தளபதியுமான பரஞ்சோதி பிற்காலத்தில் சிறுத் தொண்ட நாயனார் என பெயர் பெற்றவர், கணபதி சிலை ஒன்றை எடுத்து வந்து தமிழகத்தில் பிரதிஷ்டை செய்து கணபதியை வணங்குவதை ஆரம்பித்து வைப்பதாக சரித்திரம் சொல்கிறது. சரித்திர ஆதாரத்துடன் சிவகாமியின் சபதத்தில் கல்கியும் குறிப்பிடுகிறார்.

காணபத்யம்: கணபதி வழிபாடு, மற்ற 5 வகையான சௌரம்‍‍: சூரிய,சைவம்" சிவம், வைணவம்: திருமால், கௌமாரம்:முருகன்,சக்தேயம்: சக்தி வழிபாட்டுடன் கூடி இந்து மத வழிபாடானது...

Image result for vinayagar chaturthi


கணநாதன் கணங்களுக்கு எல்லாம் தலைவர், வானோரும் ஆனைமுகத்தானைக் காதலால் கூப்புவர் தம் கை....என திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற் பீடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் காதலால் கூப்புவர் தம் கை என முடிக்கிற பாடல், வானாதி தேவ தேவரும் இவரை வணங்கியே தமது  செயலில் முதலாய் இவரை வைப்பதாகவும் முழு முதற்கடவுள் எனவெ இவரே எல்லாக் கோயில்களுள் புகு முன்னும் முதல் வணக்கத்துக்குரிய முதல்வனாகவும் இருப்பதாகவும், பிடிக்க வந்த சனீஸ்வரனை இன்று போய் நாளை வா என்று சொல்லியே தட்டிக் கழித்த அறிவுக் கொழுந்தாகவும்...

ஐந்து கரத்தினை....பாலும்  தெளி தேனும்...இப்படி கணபதியை , விநாயகரை வணங்குவதில் எல்லாருக்கும் ஒரு அலாதி பிரியம்...ஆனால் அப்பனுக்கே இந்தப் பிள்ளையை அடையாளம் தெரியாமல் போகவே தன் மனைவி குளித்துக் கொண்டிருப்பவளை கணவன் போய் பார்க்கும்போது காவல் காத்துக் கொண்டிருந்த தனது முதல் பிள்ளையை அடையாளம் தெரியாமல்,  மனைவியைக் காணச் சிவன் செல்ல முயல.. அப்பனைத் தெரியாமல் மகன் யாரோ  எனத் தடுக்க, யுத்தம், மகனது தலையைக் கொய்து விட்டு மனைவி பார்வதி வந்து உண்மை சொல்ல உடனே அருகிருந்த யானைத் தலையை வெட்டி( மேனகா காந்தியும் மிருக வதை தடுப்புச் சட்டமும் இல்லை அப்போது, கடவுளாய் இருந்தும் நின்று கொண்டிருப்பது தம் பிள்ளை எனத் தெரியாத கோபம், காமம் மயக்கம் கடவுளுக்கு) அப்போதே மாடர்ன் சர்ஜரி செய்து  மனித உடலுக்கு அல்லது தெய்வ உடலுக்கு மிருகத் தலையை வைத்த கதை கணபதி வரலாறு. தம்பிக்கு வள்ளியை மணமுடிக்க யானையாக வந்ததாகவும்... புராணம் கட்டுக் கதை...நம்பிக்கை பக்தி...காவிரியை காக உருவில் வந்து அகத்திய முனிவர் கமண்டலத்தில் இருந்து மீட்ட கதை, வியாச முனிவருக்கு ம‍ஹாபாரதக் கதை எழுத தம் தந்தத்தில் ஒன்றை ஒடித்து தாம் எழுதும் வேகத்துக்கு உன்னால் கதை சொல்ல முடியுமா என்ற கேட்டு எழுதிய ம‍ஹாபாரதம்...

இப்படி எங்கு எங்கு தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் கதாநாயகன் இந்த கணபதி.

Image result for vinayagar chaturthi

அப்போதெல்லாம் எங்கள் வீட்டுல் 5 சகோதர சகோதரிகள் ஒரே பள்ளியில் படித்து வந்தோம். அதற்கு பின் ஒரு சகோதரியும் முன் இரு சகோதரியும், ஒரு சகோதரனும் இருந்தனர், அப்போதெல்லாம் காலையில் குளித்து முடித்து நெற்றி நிறைய திரு நீறு பூசி கையில் ஒரு சொம்பு நீருடன் அரசமரம்+ வேம்பு அடியில் இருக்கும் ( அந்த அரச மரம் ஊருக்கே பெரிய மரம், வேரும் பட்டைக்க்கும் ஆசிட் ஊத்தி வீடுகளில் வேர் போகிறது என கொஞ்சம் கொஞ்சமாக கொன்று காயவைத்து அடுப்பெரிக்க விறகுக்காக வெட்டி எடுத்துக் கொண்ட அதே குடும்பங்கள் எல்லாம் சேர்ந்து இப்போது ஊரில் வசூல் செய்து மேடை அமைத்து, மேலே சீட் போட்ட விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது வேறு) அந்த விநாயகரை தினமும் நிதமும் கும்பிட்டே உணவுண்டு பள்ளிக்கு செல்வோம்.

பக்கத்து வீட்டு சுந்தர முதலியார் தங்கவேல் முதலியார் வீட்டுக்கு குடி வந்தவர், ஆஜானுபாகுவான தோற்றம், 6 அடிக்கும் மேலான உயரம், நல்ல குண்டு கை வீசி நடந்தால் அந்த வீதியில் வேறு யாரும் போக முடியாது...பற்கள் வாயிலிருந்து சிறிது வெளியே துருத்திக் கொண்டு தலைகாட்டும். குண்டு முகம் நல்ல தொப்பை. அழகிய குணம்...பாருங்கடா இவனை எவ்வளவு அழகா நெற்றியில் நீறு பூசி  கோவிலுக்கு சென்று அழகை பாருங்கடா, என தன் வீட்டு மக்களை திட்டுவார்,  தலையாடிக்கு தேங்காய் சுட்டால் ( பருப்பு, எள், சர்க்கரை என எல்லா திரவியங்களும் தேங்காயுள் இட்டு சுட்டு,சுடும் பழக்கம் இல்லாத எங்கள் வீட்டுக்கு பிள்ளைகள் உள்ள பெரிய குடும்பம் என மறக்காமல் அனுப்பி வைப்பார், காடயாம்பட்டி காட்டில் இருந்து எந்த வெள்ளாமை வீடு வந்தாலும் அதில் கொஞ்சம் எங்கள் வீட்டுக்கும் வந்து சேரும்.ஆனால் அவை எல்லாம் அந்த  அவருடைய 2 ஆம் மனைவிக்கு பிடிக்கவே பிடிக்காது..,) அவர் வீடு மாறி பெரிய வீடு கட்டி வேறு வீட்டில் இறந்து கடைசி மலத்தை எடுத்து வேட்டியிலிருந்து சுத்தம் செய்யும் முன்னே நான் அவர்கள் வீட்டில் இருந்தேன்.

Image result for vinayagar chaturthi

அப்போது தொலைபேசி கிடையாது, யார் இறந்தாலும் முக்கியமானவர்களுக்கு, அந்த ஊரின் கீழ் சாதிக்காரரை வீட்டு சொல்லி அனுப்புவார்கள்...ஆனால் அன்று என்னை ஒரு நபர் பயன்படுத்திக் கொண்டார் நானும் தொளசம்பட்டி சென்று செய்தி சொன்னேன்..வீட்டுக்கு வந்ததும் எனது தந்தையிடம் அதிகம் கோபமே வராத வந்தால் சாதரணமாக போகாத‌ (சாது மிரண்டால் காடு கொள்ளாது,,,உடல் எல்லாம் கிடு கிடுவென நடுங்கும்) தந்தையிடம் செம அடி வாங்கினேன்...அன்று ஆறுபடை வீடு எனப் பெயர் வரக் காரணமான வீடு ஒன்று தீப்பற்றி எரிந்தது...தந்தை அடித்தது மறந்து தீ விபத்தை வானளாவ கங்குகள் பறந்ததை வேடிக்கை பார்த்தபடி இருந்தேன்.

எவ்வளவு நேசித்திருக்கிறார் தந்தை. அவர் அடித்தது எவ்வளவு நியாயமானது. தனது மகனை என்னவாக்க எண்ணியிருந்தாரோ? எழவு சேதி சொல்ல சென்று வந்து விட்டானே? என அவரின் கோபம் நியாயம். ஆனால் சுந்தர முதலியாரை நான் அவ்வளவு நேசித்திருக்கிறேன்...எனவே சென்று வந்து விட்டேன். நான் எழவு சேதி சொல்லப் பிறந்தவனல்ல...யேசு போல இந்த உலகுக்கு ஆள் பிடிக்க வந்தவன் தான் இந்த நாட்டை இந்த உலகை மேம்படுத்த வந்தவன் தான்...ஆனால் இப்போதும் எப்போதும் அந்த செய்தியை ஒருவருக்கொருவர் தெரியப்படுத்திக் கொள்வது அப்படி ஒன்றும் பெரிய குற்றமாக கருதப்படுவதில்லை. ஒரு வேளை வேறு ஊருக்கு பேருந்து ஏறி சொல்லாமல் வீட்டுக்கு கால தாமதமாக வந்ததற்காகவும் அந்த அடிகள் கிடைத்திருக்கலாம்...

விநாயகர் கதைக்கு வருவோம். இப்படி விநாயகரை கும்பிட்டதாலோ மகனுக்கு, விக்னேஷ் என்கிற கணபதி ராம சுப்ரமணியம் என்ற பெயர் வைத்தேன்? விநாயகா மிஷனில் இன்று பணி புரிகிறேன்...இதெல்லாம் வேறு விந்தைகள்.. அந்த‌ மகன் கணபதி என்கிற விக்னேஷ் கற்பக மரத்தின் அடியில் குடியிருக்க 4 ஆண்டுகள் வாடகைக்கு சென்றிருக்கிறான். விக்னேஷ் என்றால் விக்னங்கள் தீர்க்கும் ஈஸ்வரனாம்...


Image result for vinayagar chaturthi celebration

ஆனால் இந்த விநாயகர் சதுர்த்தி நிறைய மதுபானம் விற்க காரணமாகிற மற்றொரு திருநாள்...நான் பரஞ்சோதி முனிவரைப் போல் போர்ப்படைத் தளபதியாக இல்லாமல் சேவைப்பணிக்காக பயிற்சிக் காலத்தில் ஆந்திராவெங்கும் சுற்றித் திரிந்திருக்கிறேன். முக்கிமாக ‍‍ஹைதராபாத்தில் சில விநாயக சதுர்த்திகளில் இருந்திருக்கிறேன்

ஊரடங்கு உத்தரவில்லாமல் அதாவது 144 தடை இல்லாமல் அங்கு விநாயக சதுர்த்தி நடப்பதில்லை. இதே போல மும்பை, கொல்கத்தா ஆகிய நகர்களிலும். முக்கியமாக குறிப்பாக ‍ஹைத்ராபாத் = பாக்ய நகரம் நகரம் எங்கும் முகமதிய மக்களின் தொகை அதிகம்,,,அதை சுற்றி எல்லா கிராம நகர்களிலும் இந்து மக்கள் தொகை அதிகம். அன்று எல்லா வண்டி வாகனங்களிலு இடி முழக்கத்துடன் தம் பலம் காட்ட விநாயகர் வண்டிகளில் வலம் வருவார்கள் நிறைய வன்முறை வெடிக்க‌

அதே போல இன்று தமிழகமும், மது பானம் வழிய வண்டிகளில் விநாயகர் ஊர்வலம் நடத்தும் மக்கள் ஆய் ஊய் எனக் கத்துவதும், அடுத்து வருவாரை திட்டுவதும், வம்புக்கு இழுப்பதுமாக... கீழ்த்தரமாக நடந்து கொள்வதும், சண்டையிடுவதும், மோதுவதும் வசவி அள்ளி வீசி வருவதும் நான் கண்ட உண்மைகள்...இது பக்தியா? வேறு மதங்களில் அல்லது சிறுபான்மையோர் இப்படி செய்தால் எப்படி இருக்கும்? விட்டு விடத் தோணுமா?

எல்லாமே மனிதம் சார்ந்த கதைகள், புராணங்கள், இதிகாசங்கள் இதில் உண்மை எள்ளளவும் இல்லை...ஆனால் நம்புவார் நம்பட்டும் ஆனால் அதற்காக ஆடும் ஆட்டம் அடுத்தவரை பாதிக்காமல் இருக்கட்டுமே... இதனால் எந்த மனிதரும் பாதிக்காமல் , பிறர் வாழ்க்கை சேதமாகாமல் கொண்டாடப்படட்டுமே...என்ன குடி முழுகி விடப் போகிறது ? அடுத்தவர் குடி முழுகாமல் கொண்டாடினால்?

வியாபாரிகளுக்கு நல்ல இலாபம் தரும் இப்பண்டிகைகள் பற்றி நாம் நன்கு புரிந்து கொள்வது நலம்.

ஆனால் நான் விட்டு விடாமல் இந்த ஆண்டும் மண் தொழிலாளிக்கு சாதகமாக எப்போதும் போல வழக்கம் போல ஒரு சிறு மண் விநாயகரை வாங்கி செய்ய வேண்டியதை செய்து விட்டு குளத்தில் விட்டு விடச் சொல்லி இருக்கிறேன். என்னதான் மகன் வெளியூரில் இருந்தபோதும் பழக்கத்தை நல்ல பழக்கத்தை விட்டு விடல் ஆகாது என்ற நோக்கத்தில்...

பொதுவாக பண்டிகையும், திருவிழாவும் அவரவர் சொந்த விசயம், அவரவர் சொந்த வீட்டில் வைத்து யாருக்கும் பாதிப்பில்லாமல், யாருக்கும் எந்த வித கெட்ட விளைவையும் ஏற்படுத்தாமல், எந்த வித தீய அதிர்வலைகள் ஏற்படாமலும் செய்து கொள்வது நல்லது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


வீட்டில் செய்யும் கொழுக்கட்டை, மோதகம், மாவு, சுண்டல், பொங்கல் , தேன் பாகு,அவல், பொட்டுக்கடலை உருண்டை.. இவை பற்றியும் அதன் சுவை பற்றியும் நான் எழுதவில்லை. சிறு பிள்ளைகளுக்கு இந்த சத்து எல்லாம் தேவைதான் தேவாமிர்தம்தான்.








Saturday, September 3, 2016

கல்வி நமை எங்கு கொண்டு செல்ல வேண்டும்? கவிஞர் தணிகை

கல்வி நமை எங்கு கொண்டு செல்ல வேண்டும்? கவிஞர் தணிகை
Image result for Education to enlighten and lead the nation to bright


அண்மைக் காலத்தில் எனக்கு நிறைய கல்லூரி மாணவ மாணவர்களுடன் நாட்களை செலுத்தும் வாய்ப்பு.ரயிலில் பேருந்தில் பயணம் செய்யும் வாய்ப்பு.நிறைய கலப்படமான சிந்தனையை உருவாக்கி உள்ளது? நேர்மறையிலும் எதிர்மறையிலும்.

கல்வி நம்மை மனிதரை உருவாக்குவது என்றார் மகாத்மா. முதலில் கல்வி கற்பவரை உருவாக்க வேண்டும். அதன் பின் சமுதாய அமைப்புக்கு அதன் மேம்பாட்டுக்கு பிற உயிர்களுக்கு ஏதாவது பங்களிப்பாற்ற வேண்டும். அப்படி இல்லாத கல்வி என்ன கல்வி? அப்படிப்பட்ட கல்விக்கும் ஒரு மரியாதை வேண்டும். ஒரு பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பதவி முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும் அதற்கு பல கோடிகள் பல கேடிகள் முயற்சி செய்வதாக பேச்சு வழி செய்திகள், மேலும் அரசு பி.‍ஹெச்.டி ஆசிரியர் தேர்வு செய்யவிருப்பதாகவும் அதற்கும் பல இலகர கையூட்டுகள் கைமாறல்கள் தேவை ஏன் எனில் அந்த அரசுக் கல்லூரியின் ஆசிரியர் பணிக்கு மாதம் ஒன்றுக்கு அதிகபட்சம் ஒரு இலட்சம் வரை வருவாய் மற்றும் வாய்ப்புகள் சலுகைகள்....

ஆனால் பி.‍ஹெச்.டி படித்துக் கொண்டிருக்கும், பாடம் கல்லூரியில் நடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கும் கூட அரசு எந்த பொருளாதார உதவியும் செய்யாமல் அவர்களிடமிருந்து உழைப்பை மட்டும் கல்லூரியில் பிடுங்கிக் கொண்டு சுரண்டிக் கொண்டிருப்பது வகுப்பு எடுக்கச் சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் வேறு.அதைப் பற்றி நான் இப்போது இந்த எழுத்துப் பதிவில் கவலைப் படவில்லை.

மாறாக: கல்வி இந்த மாணவர்களுக்கு ஒரு பெரும் அழுத்தமாக சுமையாக மாறி இருக்கும் சூழல் அவர்கள் எதிர்காலத்தை அச்சுறுத்துவதாக உள்ளது. அதுவும் தேர்வுக்காலம் என்று வந்து விட்டால் அவர்கள் படும் பாட்டை சொல்லி மாளாது.

Image result for Education to enlighten and lead the nation to bright

இதன் வடிகாலாக மாணவர்கள் புகைப்பது, மது அருந்துவது, போன்ற உடல் நலம், சமூக நலம் பற்றி அக்கறை இல்லாமல் போவது நாம் சமுதாயத்தின் மற்ற மனிதர்கள் எல்லாருமே இப்படித்தானே இருக்கிறார்கள் இவர்கள் மட்டும் என்ன எனக் கேட்கலாம்.ஆனால் மாணவ சமுதாயத்தை இப்படி நாம் விட்டு விட முடியாது, விட்டு விடவும் கூடாது அது பேராபத்து.

கலாம் அழகாக சொல்வார், ஒரு சமுதாய மேம்பாடு என்றால் அது நல்ல ஆசிரியர், நல்ல பெற்றோர், நல்ல மாணவர்கள் அதன் முக்கோண இணைப்பு கொண்டு ஏற்படுத்தப்படும் தங்க முக்கோணம். இப்படி இருக்கும் நிலையில் பெற்றோர் ,ஆசிரியர், நல்ல வழிகாட்டிகளாக இருந்தால் மாணவர்கள் அனுமதி சீட்டு இல்லாமல் பயணிகள் ரயிலில் பயணம் செய்ய வர முடியுமா?

ஒரு மாணவரை மற்ற சில மாணவர்கள் அவமானப்படுத்த முடியுமா? அவள் கறுப்பாக இருப்பது அவள் குற்றமா? அவள் அழகாக இல்லாதிருப்பது அவள் தேர்வா? அவர் அவருடைய வாய்ப்புகளை இந்த முறையில் செய்யத் தவறியது மற்றவர்களை பாதிப்பதாக இருந்தால் அவருக்கு நம்மால் ஆன முயற்சியை உதவியை செய்து ஈடுகட்ட வேண்டுமே தவிர அவரை காயப்படுத்துவது எந்தக் கல்வியில் சேர்ந்தது?

பெற்றோர் இப்போதெல்லாம் ஒரிரு குழந்தைகளை உருவாக்கவே தாவு தீர்ந்து விடுகிறது என ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொண்டு கடனை உடனை வாங்கி, வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி படிக்க வைக்க அனுப்பினால் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ரேக்கிங் ‍ கேலி வதை வேறு செய்து அவை தற்கொலையில் முடிந்து போகும் அளவு கல்வியின் தரம் இருக்கிறது...

இப்படிப் பட்ட கேலிவதைகளைத் தடுக்க அரசும், கல்லூரியும்,எவ்வளவோ முயன்றாலும் இவை அழுகிய மனம் படைத்த மாணவர்களால் தொடர்ந்து கொண்டு வருவது கவலை அளிப்பது வருத்தத்திற்குரியது. இவை முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும் எப்பாடு பட்டாவது எப்படிப்பட்ட நீதி செய்தாவது அல்லது கடுமையான குற்ற நடவடிக்கை தடுப்பு செய்து தண்டனை அளித்தாவது...

Image result for Education to enlighten and lead the nation to bright

அரசு முதலில் கல்வி சார்ந்த கொள்கைகளில் தெளிவு பெறல் வேண்டும் அதற்கு கல்வியில் சிறந்த சான்றோர்கள் வழி காட்ட உதவ வேண்டும் அவர்களை அரசு முதலில் அங்கீகரித்து அவர்களின் எண்ணப் பதிவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து சமுதாய மேம்பாட்டுக்கு அவர்களின் தாராளமான பங்களிப்புகள் தொடர போதிய வாய்ப்புகளும் வசதிகளும் செய்து தர வேண்டும்.

ஒரு பக்கம் நீட்டு, ஒரு பக்கம் மடக்கு என்பதில் எல்லாம் ஒரு தெளிவான திறந்த எல்லாருக்கும் வாய்ப்பளிக்கும் முறைகள் வேண்டும். பல்லில்லாத  நிலை போக்கப் பட வேண்டும்...
Image result for Education to enlighten and lead the nation to bright


மொத்தத்தில் இந்தியா போன்ற ஒரு அத்தியாவசியத் தேவைகளே சென்று சேராத நாட்டில், கழிப்பறை, மருத்துவம், ஆரோக்யம், சாலைவசதி,உணவு, உடை, உறையுள் சென்று சேராத நாட்டில் மனித இறந்த உடலை அப்புறப் படுத்த, போக்குவரத்து செய்யக் கூட முடியாத நாட்டில் ஆனால் தனி மனித வருவாயில் உலகில் 7 வது பணக்கார நாடாக உள்ள நாட்டில் கல்வியின் பங்கு பிரதானமாக மகத்தானதாக இருக்க வேண்டும்

அரசுகளே கூட சரியில்லாமல் இருந்தும் கூட படித்த பெருமக்கள் தமது சேவையை கீழ் நோக்கி மக்களுக்காக கல்வி சார்ந்த பணிகளுக்காக மாணவ மாணவியர்க்காக அப்துல் கலாம் செய்த பணிகள் போல செய்ய முற்பட வேண்டும்.

அந்தக் கல்வி சமுதாய மேம்பாட்டுக்கு, முன்னேற்றத்திற்கு பிற உயிர்களுக்கு, கீழ் இருக்கும் மனிதர்களுக்கு கை தூக்கி மேல் வர உதவிட வேண்டும். அதல்லாத கல்வி கல்வியே அல்ல...தாம் வாழ செய்திடும் தொழில் போல இதுவும் ஆனால் இதற்கு மரியாதை இருக்காது...

எனவே கல்வியும் தரமும் மேம்பட வேண்டும், கல்வியால் நாடும் வளம் பெற வேண்டும், கல்வி இந்த நாட்டை மேம்படுத்த எப்படி சுதந்திரப் போர்த் தியாகிகள் தம்மை அந்த விடுதலை வேள்விக்கு ஆகுதி செய்தார்களோ, அர்ப்பணித்தார்களோ அப்படி அடியிலிருந்து வித்தாக விதைக்கப் பட வேண்டும். அடிமட்ட மனிதர்களுக்கு சென்று சேர வேண்டும், கடையனுக்கும் கடைத்தேற்றம் என ரஸ்கின், டால்ஸ்டாய், காந்தி போன்ற மகான்கள் கண்ட கனவுகள் மெய்ப்பட வேண்டும்..

Image result for Education to enlighten and lead the nation to bright


அதற்கு தடையாய் இருக்கும் ஒழுக்க கேடுகள், சீரழிவுகள், மதுக்கடைகள் யாவும் முற்றிலும் ஒழித்தொழிக்கப் படவேண்டும் அது எந்த முறையில் இருந்தாலும்  சரி.

சுய நலம் காக்க நீ கற்கும் கல்வி வியாபரம் தான். கல்வி அல்ல. கல்வி நிறுவனம் என்ற பேரில் ஆலைத் தொழில், பண்ட மாற்று வியாபாரம் அதற்கும் மேலாக பணம் காய்க்க நிறுவனம் நடத்துவது கல்விச் சாலையல்ல,,,,கடைதான் இலாபமாக்கும் இலாபம் பார்க்கும் முறைதான். இவை கல்வியை உருவாக்கும் என்று நாம் எதிர்ப்பார்ப்பதற்கில்லை. முதலைப் போடுகிறார் இலாபம் பார்க்கிறார். அதேபோல மாணவர்களும் முதலைப் போடுகிறார் இலாபம் பார்ப்போம் என்றே...எனவே இந்த முறைகளில் கல்வி எதையும் சாதிக்காது..

அதில் அவர்கள் பிழைப்புக்கே  நடத்த முடியாத நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் பேயாட்டம் போட குஜராத் மும்முறை நாயகன் மோடி இந்தியாவையே மாற்றுவார் அனைவர்க்கும் வேலை தந்து விடுவார் என்ற கனவெல்லாம் பாழ், தூளாகிட... ஒரு தபால் எழுதினால் ஒரு உயிர் போகும் கோரிக்கை பற்றி எழுதினாலும் மாதக்க்கணக்கில் ஆனாலும் அதுபற்றி எந்த வித மூச்சும் பேச்சும் இல்லாத இந்த அரசுகளால் எப்படி கல்வி மேம்பட முடியும்? மாணவர் பிரச்சனை தீர முடியும்?  எப்படி இந்த மாணவர்கள் சமுதாயத்துக்கு உதவி மேம்படுத்த முடியும் ? எல்லாம் சிக்கல். மன நலம் குன்றிய ஆசிறியர்  இருக்கிறார்கள்...மன நலம் குன்றிய மாணவர்களை உருவாக்குகிறார்கள்.

Image result for Education to enlighten and lead the nation to bright

அவர்கள் எல்லாம் நமைப்போன்றோரை மென்டல், என்றும், பைத்தியம், என்றும் மன நலம் குன்றியவர்களாக இருக்கிறார்கள் என கமென்ட் அடிப்பதுதான் பெரும் வேடிக்கை. ஏன் எனில் இனி இந்த( தமிழ்) நாட்டில் புகைக்கும் மது அருந்தும் பழக்கமும் இல்லார் எவராக இருந்தாலும் அவர்கள் இவர்கள் பாணியில் சொன்னால் சமுதாயத்தின் விதிவிலக்குகள் தாம்.

BUT WE SHOULD LEAD THE NATION.IT IS MUST  NEED.IN THIS HOUR OF TIME.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை


Wednesday, August 31, 2016

எல்லாப் பக்கங்களிலும் கூர்மையானது அஹிம்சை என்னும் ஆயுதம்: கவிஞர் தணிகை

எல்லாப் பக்கங்களிலும் கூர்மையானது அஹிம்சை என்னும் ஆயுதம்: கவிஞர் தணிகை

Image result for ahimsa is sword with all sharp corners

சேலத்திலிருந்து மேட்டூர் ரயில்வே நிலையம் வரை வரும் பயணிகள் ரயில் அது.மாலைப் பயணம்.

ஓமலூரில் ரயில்வே காவலர் ஒருவர் வருகிறார் என்றவுடன் நான் அமர்ந்திருந்த கடைசிப் பெட்டி காலியாகி அனைவரும் விழுந்தடித்த வண்ணம் குய்யோ முறையோ என அலறி அடித்தபடி ஓடி மறைந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அனுமதிச் சீட்டு பெறாத கல்லூரி மாணவர்களும், அன்றாடம் பணிக்கு செல்லும் அலுவலர்களும் அடங்குவர். நாங்கள் எங்கள் பெட்டியில் 3 பேர் மட்டுமே அமர்ந்திருந்தோம். விதி விலக்கு.இப்படித்தான் நமது ஜனநாயகத்தில் ஆட்சியும் அரசியலும் தேர்தலும் கூட...

Image result for ahimsa is sword with all sharp corners

ஓடுகிற ரயிலில் இருந்து இறங்குவதற்கு வசதியாக இருக்கட்டுமே என நான் கடைசிப் பெட்டியில் அமர்ந்து ஊர் நெருங்குகையில் மற்றவர்கள் போட்டியிடும் முன் முதலாவதாக வந்து கதவருகே நின்று கொண்டு பொறுமையாக படிகளில் இறங்கி உரிய வாய்ப்பு வந்ததும் வண்டி மெதுவாகியதும் இறங்கி விடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். ஆனால் நான் சீசன் பாஸ் டிக்கட் மாதமுழுதும் பெற்று வைத்திருப்பவன்.

என்னுடன் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்களையும் அப்படி மாதாந்திர பாஸ் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் மாதம் முழுதும் ரூ. 185தான் செலவு. எத்தனை முறை வேண்டுமானால் ஒரு மாதத்தில் செல்லலாம் நல்லது என அறிவுரை பல முறை செய்துள்ளேன்.

ஆனால் இன்று நடந்தது என்னால் செரித்துக் கொள்ள முடியாதிருக்கிறது. என்னுடன் அமர்ந்திருந்த கல்லூரி மாணவர்கள் தங்களது பாடத்தை பொறுப்பாக எழுதிக் கொண்டு வந்தனர். அவர்களுக்கு நன்றாக இடம் கொடுத்து எழுதுங்கள் ,என ஊக்குவித்து அவர்கள் பற்றி விசாரித்தேன் அவர்கள் மேட்டூர் சார்ந்த மாணவர்கள்.

Image result for ahimsa is sword with all sharp corners

ஆனால் மேட்டூர் வரவேண்டிய அவர்கள் ஓமலூரில் இறங்க ஆரம்பித்தனர். ஏன் எனக் கேட்டேன் எங்கள் சீனியர் இறங்கி விட்டார் எனவே நாங்களும் இறங்கிக் கொள்கிறோம் என விடு விடு வென இறங்கிக் கொண்டனர். அதன் பின் செக்கிங்க் வருகிறார் என எவரோ சொன்னதைக் கேட்டதும் அந்த பயணிகள் ரயில் பெரும்பாலும் காலி. அனைவரும் புகுந்து ஓடி மறைந்து விட்டனர். அந்தக் காவலர் என்னுடன் சேலத்தில் பேசி பரிச்சயமானவர்தான்.

ஆனால் அந்த இரு காவலர்களும் சேலம் சந்திப்பில் ஒரு ஆண், ஒரு பெண் ஆகிய இரு நபர்களிடம் ரயில் பெட்டியில் உள் சென்றும் வெளியிலும் பணம் அதட்டி பெற்றதும் ,அதில் இவர் ஒருவர் வாங்குவதில்லை எனவும் குரல் கேட்டது.

அந்தக் காவலரில் ஒருவர்தான் இந்த ரயில் பயணிகள் சோதனையில் ஈடுபட்டவர், இந்த மாணவர்களுக்கு சிம்ம சொப்பனமாகி அனைவரும் இறங்கி ஓடக் காரணமானார்.

Image result for ahimsa is sword with all sharp corners

வீட்டிற்கு வந்ததும் சொன்னேன் நடந்ததை.அதில் என்ன தவறு? விஜய் மல்லைய்யா, லலித் மோடி,போன்றவரை விடவா இந்த பயணிகள் தவறு செய்தவர்கள்? அவர்களை எல்லாம் பிடிக்கத் துப்பில்லாத இந்த அரசு, இந்தக் கல்லூரி மாணவர்களை ஏன் இந்த ரயிலில் அனுமதிச் சீட்டு இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது? என்றது சரியான வாதமாகவே படுகிறது இல்லையா?

ஒரு புறம் தமிழக அரசு கல்லூரி மாணவர்களுக்கு பயணம் செய்ய பாஸ், பள்ளி மாணவர்களுக்கு அரசுப் பேருந்தில் இலவச பாஸ் என்றெல்லாம் கொடுக்கும்போது இந்த ரயில் பயண இலவசத்தையும் கல்லூரி மாணவர்களுக்கு என்று தரலாம் அது நியாயம்தான்...

ஆனால் அதை ஒருங்கிணைத்து போராட்ட வடிவில் கேட்க வேண்டிய மாணவர்களே டிக்கட் வாங்காததற்காக விழுந்தடித்து ஓடிக் கொண்டிருக்கிறார்களே....என்ன சொல்ல...

Image result for ahimsa is sword with all sharp corners

காவலர் தனது கடமையை செய்வதை நாம் தவறு என்றும் சொல்ல முடியாது, அவர் நல்லவரா கெட்டவரா, இலஞ்சம் வாங்குகிறாரா என்பதை விட தனது பணியை செய்வதில் நாம் குறுக்கிடவும் கூடாது குற்றம் சொல்லவும் முடியாது...சட்டம் ஒழுங்கு சீராக இருக்க வேண்டுமானால்

ஆனால் உரிய அரசாங்கம் வேண்டிடும் மக்கள் போராட்டட்தை நாம் தவறு என்றும் சொல்ல முடியாது. அதற்கு குறுக்கிடும் சட்டம், காவல், நீதி யாவும் அப்புறப்படுத்தப்பட்டு மக்களுக்கான நல்ல சக்தியாக அதன் துணையாக அந்த சக்திகள் மாற்றப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கக் கூடாது.

Image result for ahimsa is sword with all sharp corners

சரி நமது பணி இந்த ரெயில்வே பற்றி ஏற்கெனவே சொல்லியிருந்தோம் இந்த மாணவர்களிடை கையெழுத்து பெற்று பிரதமருக்கும் குடியரசுத் தலைவருக்கும் ரயில் நிறுத்த புதுசாம்பள்ளியில் கோரி, மேலும் அவர்களுக்கு ஆன்லைன் மூலம் தகவல் கொடுத்திருந்தோம் குறை தீர்க்கும் பிரிவுக்கு.

மேலும் சேலம் கோட்டம், தென்னக ரயில்வே சென்னை, ரயில்வே  மந்திரி அனைவருக்குமே தெரியப்படுத்தி இருந்தோம். அதன் பின் விளைவு இப்படித் தாக்கி இருக்குமோ?

ரயிலில் டிக்கட் வாங்காமல் பயணம் செய்வது தவறுதான். ஆனால் அதையே அரசு அனுமதித்தால் அது சரிதான். சும்மாதானே ரயில் வருகிறது அதில் அந்த பையன்கள் வந்தால் என்ன இந்த அரசுக்கு குடிமுழுகி விடும் எனப் பேசும் எனது துணைவியாரின் நேர்மை இந்த உலகத்தின் தற்காலம்.

ஆனால் நான் கேட்பதெல்லாம் எதிர்த்து கூட்டு சேர்ந்து உரிமையைப் போராடி வெல்வது அதற்கு நேர்மை, உண்மை, சத்தியம், இன்னும் தேகபலம் தாண்டிய ஆன்ம பலம் எல்லாம் வேண்டும். அதற்கு இவர்களுக்கு யார் சொல்லித் தருவது?
Image result for ahimsa is sword with all sharp corners


இவர்களின் பெற்றோர் தரும் போக்குவரத்துச் செலவை தவறான வழியில் பயன்படுத்த இந்த திருட்டு ரயில் ஏறுகிறார்களா? அல்லது இவை இவர்களின் பெற்றோருக்கு எல்லாம் தெரிந்தே நடக்கிறதா? நாம் இவர்களை நல்வழிப்படுத்தியாக வேண்டிய நிலையில் இருக்கிறோம்

நாம் சொல்வதை இவர்கள் கேட்பார்களா?
சமத்துவம் என்றும் நாத்திகம் என்று பேசிக்கொண்டு நாம் போகாத ராமேஸ்வரம் எல்லாம் போகிறவர்கள் எல்லாம் கூட இந்த திருட்டு வழியை சரி என உபயோகிக்க நமக்கே அறிவுரை எல்லாம் சொன்னதை நாம் கேட்டிருக்கிறோம். அவர்கள் மிக்க அறிவாளிகள் என்று எண்ணிக்கொண்டிருந்தாலும் அவர்கள் தேர்வு செய்யும் வழி தவறானதாகவே இருக்கிறது..

நாம் நாமகவே இருந்ததால் என்றும் இறுமாந்திருக்கிறோம். நம்மால் இப்படி பயந்து கொண்டு ஓடி ஒளிய முடியுமா? காவலர்கள் நம்மிடம் கேட்பதில்லை அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது கேட்கும் கேள்விகளிலும் வரும் பதில்களிலிருந்துமே யார் எப்படி என...

அ‍ஹிம்சை என்னும் ஆய்தம் எல்லாப் பக்கங்களிலும் கூர்மையானது பிடிக்கத் தெரியாதவர் பிடித்தால் சசிபெருமாளைப் போல பாதியில் போக வேண்டியதுதான். ஆனால் நமக்கு இன்னும் நிறைய தூரம் போக வேண்டிய தேவையிருக்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.