Friday, June 16, 2017

நல் ஆரம்பமே: கவிஞர் தணிகை

நல் ஆரம்பமே: கவிஞர் தணிகை

Image result for vivekananda life span:

1. 900 ஆண்டுக்கு மேல் இருந்த ஆயுளை மனிதனின் நேர்மையின்மையைப் பார்த்த இறைவன் 120 ஆகக் குறைத்தான்....பைபிள்

2. 125 ஆண்டுகள் வரை வாழ்வேன் என்று மகாத்மா காந்தி தன் சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

3. திருவரங்க இராமானுஜரின் ஆயுள் :120. மறுபிறவியில் மணவாள மாமுனிவரான போது: 80  மொத்தம்: 200 ஆண்டுகள்

4. ஈசலின் ஆயுள் 1 நாள், வண்ணத்துப் பூச்சியின் ஆயுள் 18 நாள்
பாம்புகளின் ஆயுள் 30 __ 40 ஆண்டுகள்(யாரையும் கடிக்காமல் அவர்கள் அடிக்காமல் இருந்தால்)

5. பாரதி வாழ்ந்தது:39 ஆண்டுகள்

6. விவேகானந்தர் வாழ்ந்தது: 39 ஆண்டுகள்

7. அலெக்ஸாண்டர் வாழ்ந்தது: 32 ஆண்டுகள்

8. ஆதி சங்கரர் வாழ்ந்தது: 32 ஆண்டுகள்

9. சே குவாரா வாழ்ந்தது: 39 ஆண்டுகள்

10.ஆமை 200 ஆண்டு வரை கூட வாழும்....இதுவரை 184 வயது வரை வாழ்ந்ததாக ஆதாரங்கள் உள்ளன. .திமிங்கலங்கள் 211 வரை வாழ்ந்துள்ளன.

Related image


Tuesday, June 13, 2017

விடியல் நண்பர்களின் சந்திப்பு: கவிஞர் தணிகை

விடியல் நண்பர்களின் சந்திப்பு: கவிஞர் தணிகை
Image result for vidiyal

அன்பால் இணைவோம் நட்பால் உயர்வோம்

 என்ற தாரக மந்திரம் இவர்களுக்குள் இவர்களை இணைத்து வந்தது இணைந்திருந்தது. இணைந்து கொண்டது.

கடந்த ஞாயிறு அன்று 11.06. 17ல் கரூர் அர்ச்சனா உணவகத்து வளாகத்துள் சுமார் 50 பேர் கொண்ட குழுவினரின் சந்திப்பு நிகழ்ந்தது அது காலை முதல் இரவு வரை அந்த எண்ணத்துக் குவியலிடை மிதந்து கிடந்தது. குடும்பத்தினருடன் வந்திருந்தவர் இருந்தனர், நண்பர்களுடன் கலந்து கொண்டவர் வந்திருந்தனர் அந்த சந்திப்புக் கூடமே தித்திப்பால் நிறைந்திருந்தது. நல்ல மணம் கமழ்ந்திருந்தது.

பாடினார்கள், ஆடினார்கள், பேசினார்கள், குழந்தைகள் குதூகலமாக பலூனை வெடித்து சத்தம் எழுப்பினார்கள், மேடை என்றும் கீழ் என்றும் மேல் என்றும் பார்க்க அந்தக் குழந்தைகள் என்ன நம் போன்றவர்களா பாகு பாடு எல்லாம் பார்க்க....எல்லா வயதினரும் கலந்து கொண்டிருந்தனர்.

என்னையும் பேச அழைத்தனர் நண்பர் ஏற்கெனவே எனது வரவை உறுதி செய்து கொள்ள எனது கணக்கில் ரூபாய் 5000 தொகையை வரவு செய்து விட்டார் மேலும் நினைவுப் பரிசு, சிறப்புப் பரிசு, மேடையில் துண்டு, போக்கு வரவுக்கான ஏற்பாடுகள், மேலும் அங்கு சென்றதால் நமது 30 புத்தகங்கள் , நேசமுடன் நினைவதுவாகி, பாலியல் விழிப்புணர்வு நூலான அளவுக்கு மிஞ்சினால், மற்றும் முன்னோரின் முன் மொழிகளும் தணிகையின் மணி மொழிகளும் ஆகிய நூல்கள் மிக விரைவாக விற்றுத் தீர்ந்தன. அதன் மதிப்பு சுமார் ரூ.1500 இப்படி எனக்கு அன்று நல்ல சிறப்பு கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற வாக்கு மெய்யாக.

எனக்குரிய இடமாக நான் நீண்ட காலத்துக்கும் பிறகு மகிழும் ஒரு விதமாக அந்த அன்றைய சம்பவங்கள் அமைந்திருந்தன. மேலும் திருச்செங்கோடு டைனர்ஸ் எல்.ஐ.சி. கிளப் மெம்பரான எமது தோழர் டி.சேகர் அவர் வீட்டுக்கு அழைத்து சென்று சிற்றுண்டி அளித்து காரில் அழைத்து சென்று கரூரை அடைந்ததும் குறிப்பிடத்தக்கதாய் அமைந்தது. அவரது துணைவியார் மிக நெகிழ்வுடன் விருந்தோம்பல் அனுசரித்தது எனை தமிழர் கால பண்டைய பண்பாட்டுக்கு அழைத்து சென்று விட்டது. அதே போல திரு.மணிவண்ணன் வழக்கறிஞர் என்னை மிகப் பாங்குடன் கொண்டு வந்து சேலம் 5 வழிச் சாலையில் இறக்கி விட இரவு 8.20 மணிக்கே வந்து சேர்ந்து விட்டேன் மறு நாள் பணிக்கு செல்ல ஏதுவாக...

மொத்தத்தில் எனக்குப் பிடித்தமான நிகழ்வு ....எனக்கு கிடைத்த பொருள் வரவு யாவுமே எனது வாரிசுக்கு படிப்பு செலவுக்கு பயன்பட ஒதுக்கி விட்டேன்.

ஓர் ஏழை மாணவருக்கு அங்கே கலைக்கல்லூரியில் படிக்க நண்பர்கள் அனைவரும் அந்த இடத்திலேயே தேவையான ரூபாய் பத்தாயிரத்தை சேர்த்து கொடுத்து தமது அறப்பணியை ஆரம்பித்திருந்தது அந்த முதல் சந்திப்பே.

அதிலும் எழுத்தாளர் நாகசந்திரன் மகள் ஸ்ருதி 9 ஆம் வகுப்பு மாணவி தமது சேமிப்பில் இருந்து 500 ரூபாய் கொடுத்து தமது காருண்யத்தை வெளிப்படுத்தினார். இவர் தமது இந்த சிறுவயதிலேயே புகைப்படக் கலையில் மிகத் தேர்ச்சி பெற்றவராகவும் விளங்குகிறார் கடந்த வாரத்தில் இவர்  எடுத்த இவரது தந்தையின் புகைப்படத்தை தமிழ் இந்து நாளிதழ் வெளியிட்டு நூலிலிருந்து நெசவு என்ற ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தது

எல்லா நண்பர்களும் எனது வாழ்க்கை வட்டத்திலிருந்து மிக வெளியிலிருந்த போதும் அன்றைய பொழுதில்  பழ(ம்) நட்பை கடைசிவரை உதிர விடா அன்பன் நண்பன் என்ற எனது பழைய கால எழுத்தின் பொருளுடன் என்னுடன் ஒர் மனப்போக்கில் இணைந்திருந்தனர்   இணைக்கும் நூலாக‌ அந்த கிராமத்து நண்பன் இருக்கிறான்.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Friday, June 9, 2017

ஒரு துளி: குறும்பட விமர்சனம்: கவிஞர் தணிகை

ஒரு துளி: குறும்பட விமர்சனம்: கவிஞர் தணிகை

தெரிந்த கதை தெரியாத முகம்: கவிஞர் தணிகை

கோகுல கிருஷ்ணன் என்ற இந்த பல் மருத்துவம் படிக்கும் இளம் மருத்துவர் சினிமாத் துறையில் ஏதாவது செய்ய வேண்டும் என ஆர்வமாய் இருக்கிறார். அவர் எடுத்துள்ள 3 நிமிடமே ஓடும் " ஒரு துளி" எ ட்ராப் என்ற குறும் படத்தைப் பார்த்தேன். மிக நேர்த்தியாக வந்திருக்கிறது.

அனைவருமே பார்த்து அதில் உள்ளவற்றை உணரலாம். அந்த சிறுமியும்     நன்றாக செய்திருக்கிறார். மேலும் அதில் காட்டப்பட்ட மழையில் நனையும் தென்னை, நீர் இல்லாக் கிணறு, கோமியம் ...சிறு நீர் கழிக்கும் மாடு...அப்துல் கலாம் குரல் விவேக்கின் பின்னணியில் இந்தக் கதை நகர்கிறது நல்ல சேதியும் தருகிறது.

மரம் வைக்க, மரம் வளர்க்க வேண்டும் என்ற சிந்தனை எல்லாராலும் பேசப்படுவதுதான் அதையே வைத்து  3 நிமிடங்களில் ஒரு நம்பிக்கையை ஊட்டியிருக்கிறார்.

செடியை வைக்கும் சிறுமி நீர் இல்லா நிலையில் மாட்டின் கோமியத்தை நீராக எண்ணி ஊற்றியபடி இருக்க, மழையும் பொழிய...மரம் வைத்தால் மழை பொழியும், மழை பொழிந்தால் மரம் வளரும், மரம் பிழைக்கும், உயிர்கள் யாவும் உணவு பெறும்...எனவே மரமும் மழையும் நமது வாழ்வில் என்றும் இன்றியமையாதவையே.

இதையே நல்ல அழுத்தத்துடன் நேர்த்தியாக இந்தப் படம் உணர்த்துகிறது.

இந்த இளம் இயக்குனர் கோகுல்கிருஷ்ணன் வீட்டுக்காகவே பல் மருத்துவம் படிப்பதாகவும், தமது ஈடுபாடு யாவும் சினிமா தரும் செய்திகளில் நாட்டு மக்களுக்கு உதவும் நிலையில் இருக்க வேண்டும் என்பதையே விரும்புவதாகவும் சொல்லி இருக்கிறார்.

வாழ்த்துகள்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, June 4, 2017

குளித்து விட்டு வரச் சொல்வது சரிதான் ஆனால்...கவிஞர் தணிகை

குளித்து விட்டு வரச் சொல்வது சரிதான் ஆனால்...கவிஞர் தணிகை

Image result for narendra modi priyanka chopra


யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேச தலைமைச் செயலகத்துக்கு வரும்போது பொது ஏழை எளிய மக்களை குளித்து விட்டு வரச் சொன்னது சரிதான் ஆனால் சரியில்லை, வரும் ஆனா வராது என்பது போல...நீங்க குளிக்க, குடிக்க நீர் ஏற்பாடு செய்து கொடுத்தால் அவர்களை குளித்து வரச் சொல்வது நியாயம்தான். கால் கழுவாமல் மலம் கழித்து விட்டு டிஸ்யூ பேப்பரில் துடைத்துக் கொண்டு வரும் வெள்ளைக்காரத் துறைமார்களிடமும், துரைசானிகளிடமும் அதை சொல்ல வேண்டியதுதானே மோடி...ப்ரியங்கா சோப்ரா கால் மேல் போட்டு தொடை தெரிய உட்கார்ந்து மோடியை திக்கு முக்காட விட்டிருக்கிறார் நீ ராஜா ஆனாலும் நான் கவர்ச்சி ராணி நீ எனக்கு அடிமை என விவரம் எல்லாம் தெரிந்து, இவர்கள் பொங்கலுக்கு எல்லாம் அந்த ராணி அலட்டிக் கொள்ளவே இல்லை.

இருக்கும் நீர்வளத்தை நிலவளத்தை எல்லாம் தனியாருக்கும் அந்நிய நாட்டு சக்திகளுக்கும் விற்று விட்டு நியாயம் பேசினால் யார் மணத்துக் கொள்வார்கள்.

ரகுராம் ராஜன் போன்ற நல்ல மனிதரே சொல்லிவிட்டார், மோடி டீ விற்றாரோ இல்லையோ நாட்டை விற்று விட்டார் என...

ஜி.எஸ்.டி எனப்படும் கூட்ஸ் சேல்ஸ் டேக்ஸ் ஜுலை முதல் அமலாகிறது என்ற பெரும் செய்தியை அடக்க மாட்டுக்கறி அலையும் அதன் பின் நாங்கள் ஒன்றும் அப்படி சொல்லவில்லை என்ற பின் வாங்கும் மறுதளிப்பும்

சர்வதேச நாணய நிதியம் என்னும் ஐ.எம்.எப் இந்தியாவை வேகமாக வளர்ச்சி அடையும் நாடுகளின் வரிசையில் இல்லை என்று ஜனவரி 2017ல் அடையாளப்படுத்தி விட்டது.  இது மோடியின் டி மானிட்டேசன் செயலுக்கு பெரும் பின்னடைவு. 7 சதம் முதல் 8 சதவீதத்திற்கு போகும் என எதிர்பார்த்த மொத்த உள் நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 6.6 சதவீதமாக குறைந்து 77 நாடுகள் பட்டியலில் 60 வது நாடாக சீனா, பங்களாதேஷ் , இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் கேடாக பின் நிற்கிறது.

இந்த பணப்பரிவர்த்தனை பழைய திட்டத்தை ஒழித்து மகுடம் கட்டப் போகிறேன் என்னும் இந்த மத்திய அரசின் மோடித்திட்டம் ஒரு வரலாற்றுப் பிழை என்கிறார் மன்மோகன் சிங்க்.

சாதாரண மனிதராய் எந்த வித பொருளாதார நிர்வாகவியல் அறிவும் பெரிதாக இல்லாத எம் போன்றோரே எழுதினோம், இந்த நாசமாப் போற நாட்டை மேலும் நாசமாக்கி விட்டார் இந்த ஆட்சியாளர் என, ஆயிரம் ரூபாய் நோட்டை இல்லாமல் செய்து இருந்த காந்தி படத்தை எல்லாம் பணத்தில் இருந்து நீக்கி இரண்டாயிரம் நோட்டை உள் விட்டு அதில் ஆப் வைத்து இவர் படத்தை பேச்சை ஒலி, ஒளிபரப்பிக் கொண்டதுதான் இவர்கள் இதில் அடைந்த இலாபம்.

அதற்கு பாமரனை பாமா மக்களை பாடாய் படுத்து தமது உழைத்த காசுக்கே நாயாய் பிச்சைக்காரராய் அலைய வைத்த மோடி அரசுக்கு வடக்கே எல்லாம் வாக்களித்து விட்டனர் என்றனர் அவர்கள் எல்லாமே எப்போதுமே அறிவு கெட்டவர்கள் தானே...கேரளா, தமிழகம், மே.வங்கம் போன்ற அறிவில் சற்று முன்னேறியவர்களிடையே இவங்க பப்பு வேகாது என்றுதான் அந்த பிழி பிழிந்து விவசாயிகளை திரும்பிப் பார்க்காமல் வறட்சி பற்றி துளியும் அக்கறையின்றி, காவிரியில் நீர் விடாமல், அ.இ.அ.தி.மு.கவை பொம்மலாட்ட கயிற்றுள் நுழைத்து ஆடவைத்துக் கொண்டு நாசப்படுத்தி வருகின்றனர் இதில் ராஜா தமிழிசை ராணி இராமன் கிருஷ்ணன் கணேசன் என எகத்தாளப் பேச்சு வேறு...

லலித் மோடி, விஜய் மல்லையா, வெளிநாட்டில் இருந்து இந்தியர் பணத்தை கொண்டு வருவதாகச் சொன்னது பற்றி எல்லாம் 3ஆண்டு சாதனைப் பட்டியலில் ஒன்றைக் கூடக் காணோமே...



எங்கள் ஊரில் ஒருவன் எல்லாரையும் சேர்த்துக் கொண்டு ஒரு கோவில் கட்டினான் பொதுமக்களை குளித்து விட்டு வரச்சொன்னான் கோவிலுக்கு ஆனால் அந்த ஊருக்கு செல்ல வேண்டிய குடி நீரை எல்லாம் ஆட்சியாளரை கட்சிக்காரரை எல்லாம் கைக்குள் போட்டுக் கொண்டு தாம் கட்டிய கோயிலுக்கும் தாம் நடத்தும் கெமிகல் கம்பெனிக்கும் பெரிய நீர்க் குழாய்கள் பூமிக்கடியில் பதித்து பயன்படுத்திக் கொண்டு, இரசாயன புகையை அனுப்பி காற்றை , இரசாயன நீரை வெளி அனுப்பி நிலத்தை எல்லாம் மாசு படுத்திக் கொண்டு ஒரு புறம் கோவில் , சாமி, காவி, மேலாடை  அணிவதில்லை, சித்து, தியானம், என வேடிக்கை காட்டிக் கொண்டு மறுபுறம் தம் பிறவிச் சுபாவம் மாறாமல் நீசத்தனம் நிறைய கெமிகல் கம்பெனி முதலாளியாகவே இருக்கிறான். அவனைப் போலவே இந்த  மத்திய அரசு.

இவர்கள் முதலில் மக்களுக்கான கடமையை உரிமையை ஒழுங்காக செய்யட்டும் தாமாக சுத்தம், சுகாதாரம், வளர்ச்சி எல்லாமே நிகழும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, June 3, 2017

கவிக்கோ அப்துல் ரகுமான்: கவிஞர் தணிகை

அப்துல் ரகுமான்: கவிஞர் தணிகை

கவிக்கோ
Image result for kaviko abdul rahman



தன்னை தனது சுய கௌரவத்திலிருந்து தாழ்த்திக் கொள்ளாத ஒரு கவிஞன். நான் நிறைய பிரபலங்களுடன் உறவாடுமளவு பழக வில்லையெனிலும் ஓரிரண்டு முறை சந்தித்திருக்கிறேன் அதன் பின் அவரவர் வழி வாழ்வுக்கு வந்து விடுவோம். அதன்படி அப்துல் ரகுமானையும் ஓரிருமுறை சந்தித்திருக்கிறேன்.

சாகுல் அமீது என்னும் இன்குலாப் என்ற கவிஞரை மக்கள் கலைப் பண்பாட்டுக் கழகம் சேலத்தில் நடத்தும்போது அழைத்து வந்து ஒரு கவியரங்கம் செய்தோம். அதில் அவர்தான் தலைமைக் கவிஞர் . அவர் தலைமையில் நான்  செய்த கவிதையின் தலைப்பு நீதி...இன்னும் நினைவிலிருக்கக் காரணம் அவர் நீதி என்றாலே சற்று அதிகமாகவே இருக்கும் என எனது கவிதையை பாராட்டுவது போல பாராட்டியும் நீதி யின் பண்பை உரித்துக் காட்டியதும் அத்துடன் அவர் ஒரு கருத்தை சொன்னார்: கவிஞர் என்றால் எப்போதும் கவிதை பாடல் என்று எழுதிக் கொண்டிருப்பவன் அல்ல வாழ்வில் வாழ்ந்து காட்டுவானே. என்பார். அதன் படி இந்த அப்துல் ரகுமான் ஒரு தனக்கென்ற தகுதியை ஒரு மேன்மையை ஒருகவிச் செருக்குடன் நடந்து கொண்டு மிளிர்ந்தபடியே மறைந்து விட்டார்.

இவரை சேலத்து தமிழ் சங்கத்தில் தனிப்பட்ட முறையில் சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன் அந்த விழாவிற்கு மு.மேத்தா , மற்றும் அன்றைய காலத்தின் உச்சியில் இருந்த கவிப் பெருமக்கள், நா.காமராசன், வைரமுத்து தவிர பெரும்பான்மையானவர் வந்திருந்தனர். சிலம்பொலி செல்லப்பன் தலைமையில் அந்த விழா நடந்தது.

ஈரோடு தமிழன்பன், மீரா, இப்படி பலரும் வந்திருந்தனர். அனைவர்க்கும் எனது முதல் நூலை பரிசளித்தேன் மறுபடியும் பூக்கும் என்ற நூல்தான். அப்போது அந்த அவையிலேயே அந்த நூலை வெளியிட்டு ஒரு பெருமை தேடிக்கொள்ளலாம் என இருந்ததை ஒரு நூலை விமர்சனம் செய்த காரணத்தால் வங்கியில் பணிபுரிந்தவரும், அந்த தமிழ் சங்கத்தின் நிறுவனர்களின் உறவினரான கா.வை பழனிசாமி என்பார் தடுத்து விட்டார்.

அப்போது எனக்கு ஒரு வேதனை, இந்த ஜாம்பவான்களுடன் எனது நூலை வெளியிட்டிருக்க வேண்டிய வாய்ப்பு பறிபோயிற்றே என்று. ஆனால் அப்போதே மிக கம்பீரமாய் இருந்த அப்துல் ரகுமான் போன்றோரை சந்தித்தோமே என்ற எண்ணம் மேலோங்கி நின்றது.

சிலர் நேரில் பார்க்கும்போது அந்த கவர்ச்சியை இழந்து சாதாரணமாக காட்சி அளிப்பர் ஆனால் அப்படி அல்ல இந்தக் கவிஞர் தனக்கென ஒரு தனி பாணியை வைத்திருந்தார். சுருக்கமாக சொல்லி வியக்க வைக்கும் வார்த்தைகளுக்கு சொந்தக்காரராக இருந்தார் அது ஒரு கூட்டல் என்றால் நேரில் பார்க்கும் போதும் அந்த ஜிப்பா வேட்டி வெண்மையிலும் அந்த குறுந்தாடியிலும் ஒரு மெஜஸ்டிக் லுக்குடன் திகழ்வார்.

வைரமுத்துவின் பேராசிரியராக இருந்த பெரியார் தாசன் கூட தம் கடைசிக் காலத்தில் முகமதியம், புத்தம் என்றெல்லாம் தடுமாறி கிடைக்கும் வாய்ப்பு அது தகுதி இல்லாத இடமாக இருந்தாலும் கூட சிறு சிறு வாய்ப்புகளை எல்லாம் பயன் படுத்தி பேர் அழித்து மாய்ந்த போது...

இந்த அப்துல் ரகுமான் தமது கம்பீரம் கீழ் இறங்காமல் வாழ்ந்து முடிந்து விட்டார் இதுதான் கவிஞர் என்ற பேருக்குகந்த வாழ்வு.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

அது ஒரு காலம்: கவிஞர் தணிகை

அது ஒரு காலம்: கவிஞர் தணிகை

Image result for there was a time

பகுதி 1.
Related image



1986 தந்தை மறைந்த போது என்னிடமிருந்தது வெறும் 450 ரூ சேமிப்பு,     அவருடைய உடலை எடுத்து வர கார் வாடகைக்கு பயன்பட்டது. மாத பராமரிப்பு பயிற்சி ஊதியம் ரூ.750 மட்டுமே.

2006 தாய் இறந்தபோதெல்லாம் 108 ஆம்புலன்ஸ் சேவை ஆரம்பிக்கப்படவே இல்லை. அப்போது இப்படி இருந்திருந்தால் இன்னும் என் தாய் அதிகம் நாட்கள் உயிருடன் இருந்திருக்கலாம். பௌர்ணமி கிரிவலத்துக்கு என எல்லா வாடகைக் கார்களும் சென்றிருந்தன எங்கள் ஊரில் ஒரு வாடகைக் காரைத் தேடிப்பிடிக்கவே மணிக்கணக்காயிற்று அவளைக் கொண்டு மருத்துவம் பார்க்க, மருத்துவமனையில் உள் நோயாளையாக அனுமதிக்க...அதற்குள் நிலை 24 மணி நேரக் கெடு என்று வைக்கப்பட்டது . முடிந்தும் போனது.

1992ல் ஹனீபா டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக அலுவலர்  பணி சிங்கப்பூரில்  என வரச் சொன்னார்கள் ஆனால் தனியாக தாயை விட்டுப் போகவில்லை. அப்போது மின்னஞ்சலும், செல்பேசியும் , சமூக வலை தளங்களும், ஊடகங்களும் தினமும் பேசும் பார்க்கும் வசதி வாய்ப்புகள் ஏதுமில்லை.

 எனக்குவயது 36, தாய்க்கு 70 ஐ எட்டி விட்டது அது இந்தியாவின் சுதந்திரப் பொன் விழா ஆண்டு.1997. மணம் புரிந்தேன் அதன் பின் 9 ஆண்டுகள் மட்டுமே தாய் வாழ்ந்திருக்கிறாள். அந்த ஒன்பது ஆண்டுக்கானது இன்று 18ஆக விளைந்து நிற்கிறது மேலும் மேலும் வளர்ந்தபடி ...

அப்போதெல்லாம் எந்த ஊடகமும் இல்லை இவ்வளவு எளிமையாக காதலை சொல்ல அப்போதெல்லாம் கடிதங்கள் மட்டுமே, அய்யய்யோ லவ் லெட்டர் கொடுத்து விட்டான் என கடமை தவறியதாகவும் கருணை யற்றதாகவும் உலகு தீண்டத்தகாததை பார்ப்பது போலவும், செய்யக் கூடாததை செய்தது போலவும் உலகே பார்க்கும்.

என்றாலும் எங்களை இழந்தவர்க்குத்தான் இழப்பே தவிர எமக்கல்ல.எங்களை உதாசீனப்படுத்தியவர்க்கே சிறுமை தவிர எமக்கல்ல
காதலில் வெற்றி என்பது தோல்வி என்பது வாழும் வாழ்க்கையில் என்பார்கள் நாங்கள் ஒரு அலையில் விழுந்தோம் மறு அலையில் எழுந்தோம். எங்கள் அலை அனைவரையும் காப்பாற்றும் அலை. எவரையுமே கை தூக்கி விடும் அலை. அமிழ்த்து மாய வைக்கும் மாய வலை அல்ல...

வீட்டுக்கே மிகவும் தாமதமாக 8 வதாக பிறந்த பிறப்பு, எல்லாருக்கும் சாதாரணமாக சுலபமாக, எளிமையாக கிடைக்க வேண்டியதெல்லாம் கிடைக்க நமக்கு பிரம்மப் பிரயத்தனம் என்பார்களே அது போல எல்லாமே போராடிப் போராடித்தான் கிடைக்கும் கிடைப்பதற்குள் அதில் உள்ள ஆசை, விருப்பம், எண்ணம் எல்லாம் மாறி சீ என்றாகிவிடும்...அப்படிப்பட்ட பிறப்பு நம் பிறப்பு.

1978 ல் இரண்டு செட்டுகள் பள்ளி இறுதித் தேர்வை எட்டியதுவே அதில் மூத்த செட் எங்களுடையது, எங்களுடையதுதான் எஸ்.எஸ்.எல்.சி என்பதில் கடைசி செட் 11 ஆம் வகுப்பு.

கல்லூரியிலும் உதவாத ஒரு படிப்பை கல்லூரி நிர்வாகமும், எமது சீனியர் மாணவர்களும் எங்களுடன் ஒட்டி வைத்திருந்தார்கள், எங்களுக்கு எல்லாம் புரியாத எதை தேர்வு செய்வது எதிர்காலம் எப்படி என்றெல்லாம் சிந்திக்கத் தெரியாத முடிவு எடுக்கத் தெரியாத பிறர் சொல்லியதை அப்படியே கேட்டுக் கொள்ளும் பருவம்....பாழ் படுத்தி விட்டது. ஆனாலும் எழுந்து நிற்கிறோம்.

முடியவே முடியாது
என்ற
களங்களில்தான்
என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது

பூக்களை காலம் உதிர்த்து விட்டாலும்
செடி காத்திருக்கிறது
அது மறுபடியும் பூக்கும் ...

என கால மாற்றத்தினால்
எழுந்து நிற்கிறோம்

Related image

பகுதி 2.

ஆனால் இப்போது காதல் ஆசிட் ஊற்றுகிறது , காதலியை மதுக் குப்பிகளால் குத்திக் கொல்கிறது சொல்லிவிட்டு தற்கொலை செய்கிறது...
இப்படி எப்படியோ எத்தனையோ? உலகெலாம் இவர்கள் இருவரும் மட்டுமே இருக்க வேறு எவருமே பேருந்தில் கூட இருக்கக் கூடாது என்கிறது முட்டாள்தனத்துக்கு அளவே இல்லையாடா, என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? இதில அவன் எந்த பஸ்ஸா இருந்தாலும் ஒருத்தன் இருக்கான் அப்படிங்கறா அவள் காதில் கேட்டு விடப் போவது என்கிறாள், அவன் கேட்டா கேட்டு விட்டுப் போகட்டுமே என்கிறான்

அப்பன் தயிர் ஊத்தி சாப்பிடச் சொல்வானாம், இவளுக்கு பிடிக்காதாம், ஊ, கருமம் நான் திங்கவே மாட்டேன் என்கிறாள், அவன் எனக்கு அது பிடிக்காது நான் திங்கவே மாட்டேன் என்கிறான் ...முளைச்சு மூனு இலை என்னைக்கு என முளைக்கும்போதே கேட்கிறதுகள்....
எச்சரிக்கையாக இல்லை எனில் நமது பயிர்களைக் காத்து வாழ வைக்க முடியத நச்சுக் காற்று ஊடகமெங்கும், நாடெங்கும், உலகெங்கும். உற்ற எண்ண முடையார் மட்டுமே நட்பாக, உறவாக இயற்கையே எமது விழுதுகளுக்கு துணை செய்யுங்கள்.

கலையாத கல்வியும்....

துய்ய நின் பதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு காண அருள் செய்யட்டும்.  இயற்கை. இயலும் கை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Thursday, June 1, 2017

திரௌபதி மர்மு: கவிஞர் தணிகை

திரௌபதி மர்மு: கவிஞர் தணிகை

மலைவாழ் மக்கள் பிரிவைச் சார்ந்த திரௌபதி மர்மு ஜூலை 25க்கும் பிறகு இந்த நாட்டின் குடியரசுத் தலைவி அல்லது தலைவர் ஆகலாம் என பேச்சு அடிபடுகிறது.
Image result for traubathi marmu sattiskar governor


இவர் சாதாரண கவுன்சிலர் பதவி முதல் ஜார்கண்ட் கவர்னர் பதவி வரை வகித்தவர், சிறந்த எம்.எல்.ஏ என ஒரிஸா அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

ஆனால் இவர் குடியரசுத் தலைவர் ஆனாலும் மலை வாழ் மக்களும், பழங்குடிகளும் என்ன பயன்பெறப் போகிறார்கள்? இவரும் இவரைச் சார்ந்த குடும்பம், உறவுகள், நட்பு ஆகியவை வேண்டுமானால் தனிப்பட்ட முறையில் அப்துல்கலாம் தமிழர்கள் என்றால் குடியரசுத் தலைவராய் குடியரசு மாளிகையில் பார்க்க அனுமதித்தது போல ஏதாவது பயன்பெறலாம். ஆனால் மற்றபடி இந்தப் பதவிக்கு வருவதால் இவர்களால் என்னதான் செய்ய முடிந்திருக்கிறது?

பிரதிபா பாடீல் சினிமா பார்க்க பல கோடி நாட்டின் பணத்தை மக்களின் பணத்தை செலவிட்டு மகிழ்ந்தது போல, பதவியில் இருக்கும் வரை 5 ஆண்டுகளிலும் கோட்டையில் கொடி ஏற்றுவது அரசு மரியாதை பெறுவது, முப்படைத் தளபதி என்று பேருக்கு இருப்பது  வெளி நாட்டு சுற்றுப் பயணங்கள், தனி விமானங்களில் பயணங்கள் இவை  போன்றவை தவிர வேறு என்ன செய்ய முடியும் என நினைக்கிறீர்கள்?

ஆனானப் பட்ட அப்துல் கலாமே 2020 கனவு காலம் என்ற காலனின் காலடியில் பெரும் மதம் கொண்ட இந்திய அரசியல் யானையின் பிடியில் சிக்கி காணமல் போய் காலத்தால் மறவாத ஒரு மாமனிதர் ஆகியது  நமக்கெல்லாம் தெரியும். இவர் போன்றோரை அதாவது சிறுபான்மையினர் எனச் சொல்லப்படுவாரை,

கே.ஆர். நாராயணன் தாழ்த்தப் பட்ட இனத்தார், பக்ருதீன் அலி அகமத், ஜாகீர் ஹுசேன்அப்துல்கலாம் போன்றோர் முகமதியர்,ஜையில் சிங் சீக்கிய இனத்தார், இப்படி அந்த அந்தக் காலக் கட்டத்தில் பேர் கெட்டுப் போகாத தலைவர்கள் எவராவது இருந்தால் அவர்களும் இப்படி சிறுபான்மை இனத்தாராய் இருந்தால் அவர்களை எதிர்க்கட்சி எதிர்க்காமல் இருக்க, அப்படி எதிர்த்தாலும் ஜெயிக்காமல் இருக்க, மக்களிடம் அதனால் கெட்ட பேர் அவரை எதிர்த்ததனால் வாங்கிக் கொள்ள ஆளும் கட்சி செய்யும் குள்ள நரித் தந்திரம்.அப்படித்தான் இந்த திரௌபதி மர்மு மலைவாழ் கவர்னரும் வாய்ப்பளிக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆவதும், ஆனாலும்...

மற்றபடி இந்த பதவியினால்  குடியர்சுத் தலைவர் தேர்தலால் எந்தவித பெரிய மாற்றமும் நிகழ்ந்து விடப் போவதில்லை சாதாரண மக்களுக்கு. இந்தியாவில் இதெல்லாம் ஒரு அலங்காரப் பதவி. இடத்தை எவரை வைத்தாவது பிரச்சனை அதிகம் இன்றி தாம் விரும்புவாரை, தாம் சொல்வாரை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்து அவரையே தேர்ந்தெடுத்து பிற்காலத்தில் எந்தப் பிரச்சனை என்று நாடினாலும் கை எழுத்தை எளிதாக வாங்கி அரசியலில் எந்த நெருடலும் இல்லாதவாறும், இந்த வாய்ப்பை மேலும் தமது கட்சிக்கு எவ்வளவு சாதகமாக்கிக் கொள்ள முடியும் என்று போடும் கணக்கீட்டிற்கு இந்த தேர்தல் உதவும்.
Related image

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.