Monday, September 28, 2026

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் மகேந்திரனை: கவிஞர் தணிகை

 கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் மகேந்திரனை: கவிஞர் தணிகை



கண்டேன் சீதையை என்று ஒற்றை வரி அனுமனால் சீதையைக் காணாது ஏங்கிக் கிடந்த‌ இராமனுக்கு உரைக்கப் பட்டது என்கிறது கம்பராமாயணம்.

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் திரைப்படம் பற்றி சொல்ல வேண்டியதில்லை

மகேந்திரன் என்னும் பெயர் சரித்திரத்தில் நிலை பெற்றிருக்க மஹாபலிபுரம் சான்று. சிவகாமியின் சபதத்தில் கல்கி நிறைய எழுதி இருக்கிறார். மகேந்திர வர்மன் , சித்திரக்காரப் புலி ,விசித்திர சித்தர் என்றெல்லாம் அழைக்கப் பட்டவர். இவரின் புதல்வர்  நரசிம்ம வர்ம பல்லவர் சாளுக்கிய நாட்டை தீக்கிரையாக்கி புலிகேசியை வென்று அப்பா தோற்றதற்கு பழி வாங்கி அங்கிருந்த விநாயகர் சிலையை பரஞ்சோதி படைத்தளபதி மூலம் தமது நாட்டுக்கு கொண்டு வந்தார் என்பதெல்லாம் வரலாறு!


ஒரு வேலையை செய்ய எவர் எவர் தகுதியாய் இருப்பார் என தகுதி அறிந்து அவரிடம் அவ்வேலையை ஒப்படைப்பதில் இந்தக் காலத்தில் மிக்க சிரமம் இருக்கிறது.


இதை குறள் சொல்கிறது: இதனை இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல் என்று...

சரி. சுருங்கச் சொல்ல முனைகிறேன், இவனைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்ற குறளும்

மகன் தந்தைக்காற்றும் உதவி அவையத்து முந்திருப்பச் செயல் என்றும் குறள் தந்தை, மகன் உறவின் மேன்மை பற்றியெல்லாம் சொல்கிறது.


மகன் உயரமான கூரை உடைய வீடாக இருப்பது ஆசை எனக் கேட்டதால் அமைத்தோம். மற்றொரு மகன் அதில் சரவிளக்கை தொங்க வைத்தான்.அதில் அந்த 28 விளக்குகளுடைய சரத்தில் மேல் 3, கீழ் 3 விளக்குகள் மொத்தம் 6 விளக்குகள் எரியவில்லை.


வீட்டின் பல பகுதிகளில் கண்ணாடி மற்றும் பல விலையுயர்ந்த மதிப்புடைய பொருட்கள்...வடிவேலு, விஜய், சூரியா ப்ரண்ட்ஸ் படக் காமெடி like Apprentice story ஆகிடாமல் பொறுப்புடன் பணி செய்ய வேண்டும் சுமார் 20 அடிக்கும் மேலான உயரத்தில். நிலத்தில் நல்ல டைல்ஸ் வேறு. ஏதாவது சேதமானால் ஈடு செய்ய முடியாது என்ற பயம்.நிறைய பயம் மற்றும் நிதர்சனமான தடைகள்.


விவேகானந்தர் பாறை, இராமகிருஷ்ணர்  கைப் பிடித்து கடல் நீரைக் கடந்து அழைத்து செல்வதான உருவெளித் தோற்றம் என்ற நிகழ்வுகள் பற்றி எல்லாம் விவேகானந்தர் இராமகிருஷ்ணர் வரலாறு அமெரிக்கப் பயணம், சிகாக்கோ பிரசங்கம் பற்றி எல்லாம் படித்தவர் அறிவார்.


சாக்ரடீஸ் பகல் நேரத்திலேயே ராந்தலை ஏந்திக் கொண்டு மனிதரைத் தேடியது போல நல்ல மனிதரைத் தேடுவது என் வேலை.


இங்கு நமது மகேந்திரன் எனது துன்பம் தொலைக்க அறிமுகமான கதை நிகழ்கிறது. அதற்கு சற்றேறக் குறைய மாதமே ஆகிவிட்டது. மிகவும் பொறுப்புடன் சாரம் அமைத்து அந்த விளக்குகளை தினேஷ்குமார், மற்றும் சங்கர லிங்கம் பாலாஜி லைட்ஸ் சரி செய்து கொடுக்க பெரும் உதவியை எந்தவித சிறுக் கீறலும் இன்றி பொறுப்புடன் செய்து கொடுத்தார். சுமார் 20 அடியில் இருவர் நின்று மணிக் கணக்கில் அதுவும் வீட்டுள் உள்ள டைல்ஸ் தரை மேல் அமைத்துக் கொடுத்த சாரப்பலகையில் நின்று பணி செய்ய தமது நேர்த்தியான பணியை செய்து கொடுத்திருந்தார்.


மகேந்திரன் சாரம் அமைப்பாளர் மேட்டூரின் ஒரு மண்ணின் மைந்தர், இவர் தந்தை கல் உடைப்பதில் விற்பன்னராகவும் நுட்பமாகவும் இருந்த கதை எல்லாம் வேறு...மகேந்திரனின் மகன் மணிவேல் தற்போது ஆஸ்திரேலியாவில் ஒரு பிரபலக் கம்பெனியில் பொறியாளர். தாய் எட்டடி என்றால் எப்போதுமே குட்டிகள் பதினாறு அடி தாவும் என்ற பழமொழி என்றும் நிகழும் பொருள்மொழி...பொதுமொழி.


 மகேந்திரன் மற்றும் அவரின் உதவியாளர் செங்கோடனிடமும் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் நமது அனுபவக் கல்வியைப் பகிர்ந்து கொண்டோம். ஒரு நட்பின் கதை என்றும் தொடரும் என்றே நம்புகிறேன் அதன் பதிவுதான் இந்த ஒரு நாள் நாட்குறிப்பு.


மகேந்திரன் ஒரு கண்ணியமான தொழில் விற்பன்னர் நன்றி மகேந்திரன்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment