கவனக் குறைவுக்கு அளவே இல்லையா? கவிஞர் தணிகை
செரித்துக் கொள்ள முடியா இரு மரணங்கள்:
அவர் ஒரு சமூகத்தில் முக்கியமான நபர்,ஒரு பேரூராட்சியின் உதவிப் பெருந்தலைவராகவும் இருந்தவர், கம்பீரமான தோற்றம். அதற்குத் தக்க பெயர் போரில் மன்னன் என...அவர் ஒரு ட்ராக்டர் வண்டி வீட்டில் அதற்குண்டான கூடாரத்தில் நிறுத்தி இருந்தார் .அதற்கு இயக்கத்தில் பிரச்சனை எனவே அதை முன் நாளில் வந்து ஒரு பழுது பார்ப்பவர் பார்த்துப் போய் இருக்கிறார்.
மறு நாள் காலை இவர் அந்த வாகனத்தை சோதித்துப் பார்க்க முயல அது கியரில் இருந்து ஓட ஆரம்பித்து இவரை இவரது வாகன அறையின் சுவற்றிலேயே தேய்த்து இடுப்புக்கும் கீழ் அரைத்து இல்லாமல் செய்து உயிரைப் பறித்தது.
இந்த நினைவே இன்னும் மறக்க முடியாதிருக்க நேற்று ஒரு செவி வழிச் செய்தியில்:
எண்ணெய்ச் செக்கு மோட்டாரில் ஒரு நடுத்தர வயது பெண் சிக்கி அவரது உடலே துண்டுகளாகி வீட்டுக் கூரைக்கும் மேல் எல்லாம் தெறித்து விட்டதாகவும் உடலே இல்லாது பாதிக்கும் மேல் துண்டுகளாகிப் போனதாகவும் காரணம் அவரது கட்டிய சேலை அந்த மோட்டாரில் சிக்கியதே காரணம் என்று பேசப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மனிதர்கள் மேலும் மேலும் வளர ஆசைப்படுவதில் தவறில்லை. அத்தனைக்கும் ஆசைப்படு என்றவர் கண்ணீர் வடிப்பது போல...ஆனால் நாம் நம் நிலையை என்றும் உணரத் தலைப்பட வேண்டும். தூக்கக் கலக்கத்தில் ஒரு போதும் பணி புரியவே கூடாது. உடல் இரும்பாயிருந்தாலும் துரு ஏறத்தானே செய்யும்.
பிறப்பின் வழி ஒன்றாயிருந்த போதும் மரண வழிகளில்தாம் எத்தனை வகைகள். முகலாய மன்னன் ஹுமாயுனின் மரணம் விசித்திரமாய் நிகழ்ந்ததாக வரலாறு சொல்கிறது. 1556ல் கையில் நிறைய புத்தகங்களுடன் நூலகத்தில் இருந்து வருகையில் தொழுகைக்கான அறிவுறுத்தல் குரல் கேட்க இவர் அப்படியே அதற்காக பணிந்து (தொழுகைக்கு நேரமாகி விட்டதே என்ற பதற்றத்தில்) தமது நீளமான அங்கியில் காலை வைத்து தடுமாறி படிகளில் விழுந்து உருண்டு சுவற்றுக் கல்லில் தலை அடிபட்டு 3 நாட்கள் உயிருடன் இருந்து மறைந்ததாக சொல்கிறது ஒரு வரலாற்றுச் செய்தி.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment