Tuesday, August 25, 2026

பகாசூரன் 2023 தமிழ் திரைப்படம்: கவிஞர் தணிகை

 பகாசூரன் 2023 தமிழ் திரைப்படம்: கவிஞர் தணிகை





செல்வ ராகவன், நட்ராஜ் ஆகியோர்  கதையின் இரு நாயகர்கள்


மஹாபாரதம் பீமராஜா, கூத்து, 


சினிமா பற்றிய பார்வையை எல்லாம் விட்டிருந்தேன். இந்தப் படத்தை பார்க்க வேண்டி வந்தது ஒரு தொலைக்காட்சியில் அதன் பிறகு இன்று பார்த்தால் அதை யூ ட்யூபிலேயே பார்த்திருக்கலாம் 2023லேயே வந்த படம் என்று தெரிந்தது.


செல்பேசியின் நச்சுத் தனம் பற்றி கடைசியில் நடராஜின் அறிவுரையுடன் பீமராஜுவின் வேண்டுகோளுக்கு இணங்க முடிகிறது. 


பகாசூரன் என்பது தொடு திரை செல்பேசி என்று அரியவகையில் சொல்லி இருப்பது ஏற்புடையதாகவே இருக்கிறது.


முழு திரைப்படமுமே பெண்களை தவறான வழியில் பிளாக்மெய்ல் செய்து பயமுறுத்தி தம் இச்சைக்கு பயன்படுத்துவார் மற்றும் அதன் தொடர்பில் இருக்கும் பெண்கள் ஆண்கள், பாலியல் தொழில், பணம் சம்பாதித்தல் பற்றியதாகவே இருக்கிறது. அதில் நிறைய பருவ வயதுப் பெண்களும், கல்லூரி பெண்களும் எப்படி பழி ஆகிறார்கள் என்று தெளிவாகச் சொல்கிறது.


அந்த தீயவர்கள் எப்படி ஒரு வலைப்பின்னலுடன் செயல்படுகின்றனர் வாழ்கின்றனர், அதில் நட்ராஜ் எப்படி ஒரு யூ ட்யூபராக அவற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார், செல்வராகவன் தனது பெண்ணுக்கு நடந்த கொடுமைக்கு எப்படி பழி வாங்குகிறார், என்பதெல்லாம் படத்தை நம்மைப் பார்க்க வைக்கிறது. 


அதில் ஒரு கல்லூரி நிர்வாகமும் அதன் தாளாளரும் , விடுதி காப்பாளரும், ஒரு காவல்காரரும் எப்படி எல்லாம் ஈடுபடுகிறார்கள் என்பதையும் அவர்க‌ளை எப்படி பீமராஜி(செல்வராகவன்) தண்டிக்கிறார் என்பதுமே படம். ராதாரவிக்கு இனிமேலும் இப்படிப்பட்ட வில்லத்தனமான பாத்திரங்கள் தேவையா என்று கேட்கத் தோன்றுகிறது.


எல்லாக் கதையையும் சொல்லி விட்டு கடைசியில் எதைத் தின்றாலும் பசி ஆறாத பகாசூரன் இந்த செல்பேசி என்று முடிக்கிறார் நட்ராஜ் அதற்கு மஹாபாரத கதைகள் அங்கு தூவப்பட்டுள்ளன சில அத்தியாயங்களை அடையாளப்படுத்தி,கீசக வதம் இல்லை, ஜராசந்தன் வதம், பகாசூரன் வதை இப்படி....


சதுரங்க வேட்டை நட்ராஜ் தமது சித்தப்பா ஒருவர் புதிதாக கட்டிய வீட்டில் பளபளப்பான டைல்ஸ் வழுக்கி விழுந்து இறந்து விட‌ இனி வீடுகளில் டைல்ஸ் போடாதீர்கள் என ஒரு காணொளி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கதே...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


No comments:

Post a Comment