Saturday, August 29, 2026

யோகி: கவிஞர் தணிகை

 யோகி: கவிஞர் தணிகை



பாம்புடன் உரையாடி விளையாட்டு,சுண்டெலியுடன் செல்லம் கொஞ்சுதல், வீடா அது அல்ல ஒரு மனிதனின் கூடு அதில் எல்லா உயிர்களுக்கும் அடைக்கலம்.ஒரு குழந்தையும் வந்து சேர்ந்து கொள்கிறது அந்த கொலைகார‌ கொள்ளைக்காரத் திருடனுக்கு. இரவு வேட்டையாடி பிழைக்கும் ஒரு கொடும் பிழைப்பு. அதில் குழந்தைக்கு தாய்ப்பால் கேட்டு ஒரு பெண் பிள்ளையை மிரட்டிப் பணிய வைப்பது அந்தப் பெண்பிள்ளை இளகிய மனம் படைத்தவளாய் இருப்பது, அவள் இவனின் அதிர்ஷ்ட வாய்ப்பாய் துணையின்றி குழைந்தையுடன் தூளி கட்டிக் கொண்டு பொம்மை விற்று பிழைப்பது இப்படியாகச் செல்கிறது கதை


கொடுமைக்கார அப்பனை முதலில் ஈவு இரக்கமின்றி தள்ளிக் கொண்டு சென்ற வண்டியை அப்படியே சாலையில் செல்லும் பெரிய வாகனத்தில் தள்ளி காவு வாங்கி விடுகிறான் ஆனால் அந்த தள்ளு வண்டியில் கட்டி இருக்கும் நாயை கருணை கொண்டு அவிழ்த்து விட்டு விடுகிறான்.


அந்தச் சிறுவன் நல்லவனாகவே இருக்கிறான் தாயை மருந்து வாங்கி காப்பாற்ற நினைக்கிறான் தமக்கு கிடைக்கும் பிச்சையில்...எல்லாம் பிச்சைதான்...அதையும் அனுமதிக்க மறுக்கும் தந்தை அவனது தாயை மிகவும் சொல்ல முடியா அளவு கொடுமைப்படுத்தி கடைசியில் அவள் தூக்கிலிட்டுக் கொண்டு இறக்க அந்த தந்தை இந்தச் சிறுவனை மிரட்டி பிச்சை எடுத்து சொகுசாய் வாழ எண்ணுகிறான். 


பார்க்கவே அருவருக்கத் தக்க கதா பாத்திரமாய் அந்தச் சிறுவனின் சினைப்பன்றி போன்ற தந்தை.அந்தச் சேற்றில் இருந்து முளைத்த செந்தாமரையாய் இந்தச் சிறுவன்...எவ்வளவு கீழ்த்தரமாய், கீழாய் இருக்கும் இடத்தில் இருந்து உருவாகும் இந்தச் சிறுவன் இளைஞராய் எதற்கும் அஞ்சாமல் மாறி நிற்கிறான்.


சாவுக்குத் துணிந்து விட்டால் எதுதான் தடை?எவ்வளவு கீழாக இருந்தானோ அவ்வளவு மேலாக உயரத்தில் நின்று அந்தக் குழந்தைக்காக அதன் உயிர் காக்க தம் உயிரைத் தியாகம் செய்கிறான் அந்தக் குழந்தையின் தாயின் கையால் மடிகிறான், அவளிடம் தாம் அவளிடம் அந்தக் குழந்தையை நல்லபடியாக சேர்க்க எண்ணியதை சொல்லக் கூட முடியாமல்...பார்க்கும் நமக்கு தெரிய வைத்து விடுகிறார்கள் இவனது கதையை, ஆனால் அந்தக் குழந்தையின் பணக்காரத் தாய் எதையுமே தெரியாமல் இருக்குமாறு தமது கணவன் கூட ஒரு கயவனே என்பதை அறியமுடியாமலே இந்தக் கதை முடிவுக்கு வந்து விடுகிறது.


இதுதான் யோகி என்ற 2009ல் வந்த திரைப்படம். ஏற்றிருக்கும் எல்லா பாத்திரத்தை எல்லா நடிகர்களுமே நன்றாக  செய்திருக்கிறார்கள் கயல் செல்வராஜ் என்பவர் எல்லாரும் வெறுக்குமளவிலான ஏய்த்துப் பிழைக்கும் பிச்சைக்காரத் தந்தையாக வருகிறார். இந்தப் படம் ஏனோ நான் கடவுள் போன்று மிக அடிமட்டத்தையும் மனிதம் என்ற‌ மிக உயர் உச்சி சிகரத்தையும் கதையின் மூலம் தொடுவதாய் இருக்கிறது.


கல்லுக்குள் ஈரம், என்பார்களே அப்படி குழந்தை என்றால் தெய்வமும் இரங்கும் பேயும் இரங்கும் என்பது போல....ஒரு அமீர் கேரக்டர். அமீர் நல்லப் பக்குவப்பட்ட ஒரு குற்றப் பின்னணி உள்ள சிறுவன் எல்லா அனுபவங்களையும் பெற்ற ஒரு ரௌடி, கொலைகார, கொள்ளைக்கார பயமில்லா இளைஞரை நம் முன் கொண்டு நிறுத்தி இருக்கிறார்.

இந்த சினேகன் என்ற நபரை அவரின் குரலை வைத்துதான் அடையாளம் காண வேண்டி இருக்கிறது அப்படிப்பட்ட  தத்ரூபமான ரௌடியாக, ரௌடியின் நயவஞ்சக தோழராக வருகிறார்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment