Saturday, June 6, 2026

முடியவே முடியாது என்ற களங்களில்தான் நம் வெற்றியே: கவிஞர் தணிகை.

 நார்வே செஸ், பிரக்ஞானந்தா, புலியின் குகையிலேயே ...Anand Mahindra


நன்றி: 

பிபிசி தமிழ்.



இந்தப் பக்கம் வைபவ், அந்தப் பக்கம் பிரக்ஞானந்தா ஒன்னும் சொல்லிக்கவே முடியலை போங்க... மிக்க மகிழ்ச்சி. இந்த மாதம் புது மாதம், நல்லா விளையாடுவே...தாய்

நார்வே செஸ் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதிச்சுற்றில் ஜெர்மனி வீரர் வின்சென்ட் கீமரை வீழ்த்தியதன் மூலம் பிரக்ஞானந்தா முதன் முறையாக இந்த தொடரில் சாம்பியன் ஆனார்.

அலிரேசா ஃபிரோஸ்ஜாவை வென்று வெஸ்லி சோ இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பிரக்ஞானந்தா தனது இறுதிச்சுற்றில் வெற்றி பெற்றிருக்காவிட்டால் வெஸ்லி சோ சாம்பியன் ஆகியிருப்பார். ஃபிரோஸ்ஜா மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

நடப்பு உலக சாம்பியனான இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு தமிழக வீரர் குகேஷை வீழ்த்தியதன் மூலம் நார்வேயைச் சேர்ந்த முன்னணி வீரர் மேக்னஸ் கார்ல்சன் நான்காவது இடத்தைப் பிடித்தார்.

நார்வே செஸ் தொடரில் ஒரு கட்டத்தில் பிரக்ஞானந்தா ஆறாம் இடத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார். அதாவது, ஆறாம் சுற்று முடிவில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த வெஸ்லி சோவை (11.5)விடவும் பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகள் பின்தங்கியிருந்தார்.அதன் பிறகு தான் விளையாடிய 4 போட்டிகளிலும் கிளாசிக்கல் ஆட்டங்களில் வெற்றி பெற்று 12-க்கு 12 என்ற வகையில் முழுமையான புள்ளிகளை பிரக்ஞானந்தா வென்றார். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 18 புள்ளிகள் சேர்த்த அவர் சாம்பியன் பட்டம் வென்று சாதித்தார். கடைசி சுற்றுக்கு முன்பு வரையிலும் முதலிடத்தில் இருந்த வெஸ்லி சோவை விட இறுதியில் அவர் ஒரு புள்ளி அதிகம் பெற்று மகுடம் சூடினார்.

இறுதிச் சுற்றில் ஒரே ஒரு ஆட்டத்தைத் தவிர மற்ற அனைத்தும் கிளாசிக்கல் செஸ் முறையிலேயே தீர்மானிக்கப்பட்டன. வெஸ்லி சோ தனது கிளாசிக்கல் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால், பிரக்ஞானந்தாவுக்குப் பதிலாக அவரே பட்டத்தை வென்றிருப்பார்; ஆனால் அவரால் 'ஆர்மகெடன்' (armageddon) சுற்றில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. .

ஆறாவது சுற்றில் வெஸ்லி சோவிடம் தோல்வியடைந்த போது, முதலிடத்தில் இருந்தவரை விட 5.5 புள்ளிகள் பின்தங்கி கடைசி இடத்தில் இருந்த பிரக்ஞானந்தா, அதன்பிசாம்பியன் பட்டம் வென்ற பிறகு பேசிய அவர், "நான் செஸ் விளையாட மட்டுமே விரும்பினேன். ஆனால் எப்படியோ அனைத்தும் எனக்குச் சாதகமாக அமைந்தன. நான் அதிக கட்டுப்பாட்டுடன் விளையாடத் தொடங்கியதாக உணர்கிறேன்; அது எப்போதும் ஒரு நல்ல விஷயமாகும்." என்றார்.

பிரக்ஞானந்தா வேகமாக விளையாட முயன்றாலும், தன் தாயின் நம்பிக்கையையும் கொண்டிருந்தார்.

"அலிரேசாவுடனான ஆட்டத்துக்கு முன், ஜூன் ஒன்றாம் தேதி நான் என் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர், 'இது ஒரு புதிய மாதம், நீ நன்றாக விளையாடுவாய்!' என்று கூறினார். அம்மா எப்போதும் சொல்லும் வழக்கமான விஷயங்களில் இதுவும் ஒன்று; ஆனால் அதன் பிறகு நான் நான்கு ஆட்டங்களில் வெற்றி பெற்றேன். அவருக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்று நினைக்கிறேன்!" என்றார் பிரக்ஞானந்தா.

அதன் பிறகு நடந்த அனைத்துமே செஸ் உலகில் வியக்கத்தக்க ஒன்று. ஃபிரோஸ்ஜா, மேக்னஸ் கார்ல்சன், குகேஷ் மற்றும் கீமர் ஆகியோரை பிரக்ஞானந்தா கிளாசிக்கல் ஆட்டங்களில் அடுத்தடுத்து வீழ்த்தினார். மீண்டு வந்து சாம்பியனானது வியக்கத்தக்கது.

பிரக்ஞானந்தாவுக்கு கார்ல்சன் புகழாரம்

பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றது குறித்துப் பேசிய மேக்னஸ் கார்ல்சன், " இது நம்ப முடியாத ஒன்று! மிக முக்கியமான தருணத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படுவதற்கான (clutch) ஒரு சிறந்த உதாரணம் இது. இதேபோன்றதொரு சிறப்பான ஆட்டத்தை என்னாலும் வெளிப்படுத்தியிருக்க முடியும் என்பதையே இது காட்டுகிறது; ஆனால் உண்மையில் இது வியக்கத்தக்கது. அவர் ஒரு அற்புதமான போராளி; அதற்கான பலனை அவர் பெறுவதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது." என்று புகழாரம் சூட்டினார்.

மறுபடியும் பூக்கும் வரை

 கவிஞர் தணிகை




No comments:

Post a Comment