இளங்கோ இல்லத் திருமண வாழ்த்து
மணமகன்: கௌதம் B.E, M.B.A மணமகள் வைபவி.B.E
நாள் 30.08.2020 இடம்: ஹோட்டல் சென்னீஸ் சேலம்.
காலக் குறுக்கீட்டையும் மீறி வளர்ந்த செயல் பாட்டாளர்கள் தலைமை ஏற்கிறார்கள்
இளங்கோ பெரியசாமி ஒரு தொழில் முனைவரானார் காலத்தை சரியாகப் பயன்படுத்தி
சுமார் 40 வருடங்களுக்கும் முன் ஒரு சாதாரண பதினைந்து பைசா அஞ்சல் அட்டையில்
ஆண்களிறுடன் பெண்ணதுவும் சேர்ந்து வர என ஒரு பொங்கல் வாழ்த்தை எழுதினேன்
அதை தந்தை தாரை T.A பெரியசாமி மிகவும் பாராட்டியதாக இளங்கோ வழியாக கேள்விப்பட்டேன்
எங்கள் நட்பு நடந்து ஆண்டுகள் கடந்தது இருவருமே குடும்பம் தெரியவும் சேர்ந்தே சென்றோம்.
சென்னை சென்று ஒரு சில நாள் இவரது அறையில் முகாமிட்டு காமிரா வாங்கினேன்
அது அடையாளப் பொருளாய் இன்றும் இருக்கிறது அதன் தலைமுறை முடிந்த பின்னும்.
இளங்கோ கௌதம் வைபவி ஒரு சொல் கொண்டு பொருள் கொள்ள முடியாப் பெயர்கள்
இவர்கள் பெயர் விரிவது போல இவர்கள் வாழ்வும் விண்ணளாவ விரிந்து புகழ் பெறட்டும்
எப்படி இப்படி சிலர் வாழ்வில் மட்டும் எல்லாம் நன்றாகவே அமைந்திருக்கிறது என்பார்
அவர்கள் வாழ்வில் உள்ள ஒழுங்கமைவையும் உழைப்பையும் முயற்சியையும் காண வேண்டும்
கண்டிருக்கிறேன் இளங்கோவை, அவரது தாய் தந்தையை சகோதர சகோதரியை குடும்பத்தை
காலத்தின் முன்னோடிகளாக பொருளாதாரத்தின் மெய்ப்பொருள் நாடி வாழ்ந்து வரும்
இவரை மணமக்களை எந்நாளும் போற்றுகிறோம் என்றென்றும் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ
வாழ்த்துகிறோம். உங்கள் காற்று எங்கள் பக்கம் வரும் போது எங்கள் வீடு நோக்கியும் வீசட்டும்.
என்றும் என்றும்
வாழ்த்துகள்.
கவிஞர் சு. தணிகை
த.சண்முக வடிவு
த.க.ரா.சு. மணியம்.
No comments:
Post a Comment