விசித்திரமானவை உயிர்கள்: கவிஞர் தணிகை
இன்று இரண்டு செய்திகளைப் படித்ததன் ரீங்காரம் என்னுள் அடங்கவில்லை. அதன் அதிர்வலைகளை உங்களுக்கும் பரவச் செய்யவே இந்தப் பதிவு.
ஆந்திராவில் ஒரு கோசாலை: பசுமாட்டுக் கூடம் என்று சொல்லலாம், அதை ஒரு மண்டல் பரிஷத் அப்படித்தான் அங்கே தாசில்தார், கோட்டாட்சியர் வட்டாட்சியர் எல்லாம் அழைக்கப் படுவர். மண்டல் பரிஷத் ஜில்லா பரிசத் என்றெல்லாம் சொல்வார்கள்.
அப்படி ஒரு மண்டல் பரிஷத் ஒரு கோசாலையை காலி செய்து அப்புறப் படுத்தி இருக்கிறார். இது சட்ட ரீதியாகச் செய்யப் பட்டதா என்பது பற்றி இங்கு சொல்லப் படவில்லை. சட்டத்திற்கு புறம்பாக இந்த கோசாலை இருந்ததாகவே இருந்திருக்கலாம் அதை அப்புறப் படுத்தி இருக்கலாம். அதெல்லாம் முக்கியச் செய்தியாக இல்லை.
ஏன் நமது ஊர்களில் கூட கோவில்களே கூட இது போன்று அப்புறப் படுத்தப் பட்டு இருக்கின்றன என்ற செய்திகள் உண்டு.
இங்கு அந்த அப்புறப்படுத்தப் பட்ட கோசாலையின் ஒரு பசுமாடு அந்தக் கோசலையை காலி செய்யக் காரணமான அந்த மண்டல் பரிஷத் தலைவரை இராமராஜன், தேவர், ராம நாராயணன் படங்களில் வரும் மிருகம் பறவை பாம்புகளை விட மிகவும் அதிகமாக உணர்ச்சி பூர்வமாக உண்மையாகவே பழி வாங்கத் துடித்துக் கொண்டிருப்பதாகவும், அவர் வீட்டு முன் அவர் எப்போது வெளியே வருவார் எனக் காத்திருந்து அவர் வெளியே வந்தவுடன் அவரை முட்டித் தள்ள வருவதாகவும் மேலும் அவர் காரில் வெளியே சென்றாலும் அதைத் தொடர்ந்து துரத்தி அவரை காயப்படுத்தி முடித்துக் கட்ட முயல்வதாகவும் இது பெரும் செய்தியாக அந்த வட்டாரங்களில் வழங்கி வருவதாகவும் இன்றைய செய்தி ஒன்றைப் படித்தேன்.
அது முதல் அந்த பிராணிகளின் நேசம், பறவைகளின் நேசம் பற்றி எல்லாம் எண்ண அலைகள் விரிய ஆரம்பித்தது எங்கோ விட்டு விட்டு வந்த பூனை பல நாள் கழித்துப் போராடி சொந்த வீடு வந்து சேர்வதும் விற்று விட்ட கால்நடைகள் பழைய எஜமானர்களை வீடு வந்து ஊர் கடந்து வந்து சேர்வதும் பூனை நாய் கிளி பறவைகள் ஏன் பிற நாடுகளில் சிங்கம் புலி போன்ற காட்டு விலங்குகளைக் கூட வசப்படுத்தி அன்பு பாராட்டி வைப்பதும்
அதை அடுத்து மற்றும் ஒரு செய்தியாக: உ.பியில் ஆட்டுக்கு முகக் கவசம் மாஸ்க் ஏன் அணியவில்லை என ஒரு காவலர் அதைப் பிடித்து அதன் முதலாளியிடம் வம்பு வளர்த்து வருவதாகவும் திரும்பிக் கேட்டதற்கு நாய்களுக்கு எல்லாம் முகக் கவசம் அணிந்து வரும் காலத்தில் ஏன் ஆட்டுக்கு அணிந்து வரக்கூடாதா என்று கேட்டு தனது அதிகார மேதாவித் தனத்தை காட்டினாராம். நாலறிவு ஐந்தறிவு ஆறறிவு என்பதெல்லாம் மனிதரை விட அந்த நேசமிகு உயிர்களுக்கு அதிகம் இருப்பதாகவே படுகிறது.
ஒரு வேளை அந்தக் காவலர் அந்த ஆட்டை அடுத்த நாள் கசாப்பு போட்டு விட நினைத்தாரோ? ஒரு வேளை படிக்காத பாமர ஆட்டுக்காரரிடம் இவர் தனது அதிகாரத்தை நிறுத்தி பொருள் பிடுங்க நினைத்தாரோ...யாமறியோம்...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment