அன்பு வழி இன்ப ஒளி மக்கள் மன்றம்: கவிஞர் தணிகை
அன்பு வழி இன்ப ஒளி மக்கள் மன்றம் என்ற ஒரு புதிய பயணத்தில் எனது நண்பர்கள் 74 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகளை மாணவ மாணவியர்க்கு நடத்தினர். அதில் எனது பதிவு செய்யப் பட்ட கருத்துகள்
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று....குறள்
நமது முன்னாள் குடியரசுத் தலைவர் எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களின் :
THERE IS NO FREEDOM WITH OUT RESTRICTION
THERE IS NO INDEPENDENCE WITH OUT DISCIPLINE
THERE IS NO ACHIEVEMENT WITH OUT SACRIFICE
கட்டுப்பாடு இல்லா விடுதலை இல்லை
ஒழுக்கமில்லா சுதந்திரம் இல்லை
சாதனை என்றால் தியாகமில்லாமல் இல்லை
என்ற வரிகளை நினைவு கூர்ந்தேன்..சுதந்திரம் நினைவு கூற வேண்டிய தினமல்லவா அதைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமல்லவா...
வார்த்தை உயிர்ப்பூட்டுகிறது, உயிர்ப்புற வைக்கிறது, எண்ணத்திலிருந்து எழுந்தாலும் அது பிறர்க்கும் ஆகிறது. எண்ணம் அவர்கள் உள்ளே மட்டும். வார்த்தை அனைவர்க்கும் உள்ளேயும் வெளியேயும்.
வார்த்தைக் குதிரைகள் எண்ண வெளியில் பரந்து விரிந்து வெளியில் திரியும் அதைப் பிடித்துச் சரியாக கட்டத் தெரிந்தவர்க்கே அது ஒரு வரம்.
கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி மட்டுமல்ல வார்த்தைகள் வாழ்வின் தருணங்களை முடிவு செய்கின்றன. கவனமாக தேர்ச்சியுடன் கையாள்பவர் சொல்லின் செல்வர்.
கம்பன் அனுமனை சொல்லின் செல்வன் என்பார். அந்தக் கதை கற்பனையோ உண்மையோ ஆனால் அந்தக் கதா பாத்திரம் தனது துணையை தொலைத்து விட்டு விரக்தியில் என்ன ஆயிற்றோ ஏது ஆயிற்றோ என்று தவித்துக் கிடக்கிற நிலையில் தேடிச் சென்ற அனுமன் வந்தவுடன் ஒரே வார்த்தையில் கண்டேன் சீதையை என்றதாக கம்பன் சொல்வார்.
அந்த வார்த்தையில் அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் உங்கள் சீதையாகவே இருக்கிறார் நான் கண்ணாரக் கண்டேன் என்ற பல பொருள் பொதிந்த வார்த்தைகள் அடங்கும்.
" வார்த்தை கடவுளாயிருந்தார் " என்கிறார் பைபிளில் யோவான்
அல்லா கொடுக்க நினைப்பதை எவராலும் தடுக்க முடியாது என்கிறது முகமதியக் குரான்
என்ன கொண்டு வந்தாய்? கொண்டு செல்ல என்கிறது கீதை
வாகனத்தில் செல்லும் போது கூட சில வேடிக்கையான சொற்களை வாகனங்களில் எழுதி இருக்கின்றதைக் கண்டேன்
முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும் முயற்சி செய்தால் என்கிறது ஒரு வாசகம்
மோதி விடாதே மொத்தமும் கடன் என்கிறது ஒரு வாகனத்தின் பின் புறம்
கொம்புகிட்ட வம்பு வச்சுக்காதே என மாட்டுக் கொம்பை படமாகப் போட்டு ஒரு வாசகம்
இப்படி எல்லாம் இரசிக்கும்படியாக ஆனால் அதில் பொருள் செறிவுடன்
பாட்டி காக்கா வடை சுட்ட கதையைக் கூட நீட்டலாம், விரிக்கலாம் சுருக்கலாம் வேண்டியபடி...காக்கா கூட்டமாக படை திரட்டி வந்து நரியை பயமுறித்தி மறுபடியும் வடையை பிடுங்கியதாக, அதை அடுத்து அந்த வடை அனைவர்க்கும் போதாமல் எல்லா காக்கைகளும் ஒன்றை ஒன்று உணவுக்காக சண்டையிட்டுக் கொள்கிறது என்ற படி, பாட்டி இந்த அடுப்பை பார்த்துக் கொள் உனக்கு ஒரு வடை தருகிறேன் என காகத்துக்கு கூலியாக கொடுப்பது போல, காகம் கிடைத்த வடையை தவற விடாமல் காலுக்கும் கிளைக்கும் இடையே தவற விடாமல் பிடித்துக் கொண்டே நரியின் தந்திரத்தைப் புரிந்து கொண்டு பாடியதாக... இப்படி எல்லாம் வார்த்தை விளையாட்டு செய்யலாம் ( இதைப் பற்றி நேரம் கருதி சொல்ல வில்லை பாட்டி காக்கா.... கதை நீட்டலை)
ஒரு நல்ல கவிதையின் படிக வரிகள்
மனதை விட்டகலாது
ஒரு சிறந்த விதை
மண்ணுக்குள்ளேயே மக்காது..
முடியவே முடியாது என்ற களங்களில் தான்
என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது
பூக்களை உதிர்த்து விட்டாலும்
செடி காத்திருக்கிறது
அது
மறுபடியும் பூக்கும்.
முள்ளின் முனையில் அமர்ந்து கொண்டு ரோஜாவைப் பற்றிப் பாடுகின்ற ஆற்றல் வேண்டும் என்பார் கண்ணதாசன்
பாரதியாரின் அக்கினிக் குஞ்சு என்பதன் பொருள் வரையறையற்றது.
பாரதி தாசன் விசாலமாக்கு விண்ணைப் போல விரியட்டும் உங்கள் மனம் என்பார்
இப்படி
வார்த்தைகள் வாளை விடக் கூர்மையானவை
துப்பாக்கி தோட்டாக்களில் ஏற்படும் புரட்சியை விட வார்த்தைகளால் செய்யப் படும் ஏற்படும் புரட்சி பொருள் பொதிந்தது எனவே வார்த்தை வழி சிகரம் தொடுங்கள். சிகரம் ஏறுங்கள்
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment