Sunday, August 2, 2020

2020 ஆடிப் பெருக்குத் திருவிழா கோவிட் 19 வைரஸ் நோய்த் தொற்றால்...கவிஞர் தணிகை

2020 ஆடிப் பெருக்குத் திருவிழா கோவிட் 19 வைரஸ் நோய்த் தொற்றால்...கவிஞர் தணிகை

After 11 years, Tamil Nadu to open Mettur Dam for paddy ...
இது ஒரு சாதி மத இன வேறுபாடற்ற பொதுத் திருவிழா மேட்டூர் நீர்த்தேக்கத்தில் குவியும் மக்கள் கூட்டத்துக்கு அளவே இராது. இந்த திருவிழா மாநிலம் தழுவிய அளவில் மக்கள் கூடும் ஒரே பெரு விழா.

 தொன்று தொட்டு நடைபெற்று வந்தது எனக்குத் தெரிந்தே 58 ஆண்டுகளாக பெரும்பாலும் தவறாமல் செய்து கொண்டிருந்த ஆடிப் பெருக்குத் திருவிழா இன்று கோவிட் 19 கொரானா நோய்த் தொற்று காரணத்தால் கைவிடப் பட்டது. 59 ஆம் ஆண்டு இந்த விளைவு உலகளாவிய வைரஸ் பரவலால் நிகழ்ந்துள்ளது. அதிலும் இந்த ஞாயிறு முழு அடைப்பு. எவரும் வெளி வரக்கூடாது என்ற அரசின் கட்டளை. அவ்வளவு கூட்டம் சேர்ந்தது ஆனாலும் மக்கள் கூட்டம் பெரும் திமிலோகப் பட்டது ஆனாலும் பெரும் பாலான குற்றங்கள் ஏதும் நடக்காது. அங்கொன்றும் இங்கொன்றுமாக திருட்டு இருக்கும். ஆனால் உடல் பிணி எல்லாம் தொற்றுமளவு  இருக்காது.

இதை பதிவு செய்தாக வேண்டிய நிலை

பொதுவாகவே காலம் செல்லச் செல்ல இந்த நீர்ப் பெருக்குத் திருவிழாவின் சிறப்பு குறைந்தே வந்தது. பழைய மனிதர்கள் காலம் போகப் போக இதன் சுவை குறையவே ஆரம்பித்தது.

நீர் குறைந்திருந்தால் ஆடி 18 அல்லது ஆடி 28 என்றால் மக்கள் கூட்டம் குறைந்திருக்கும் என்றாலும் அப்படி எல்லாம் வராமல் இருக்க முடியாது என்பார்கள் வந்து கலந்து கொண்டே இருப்பார்கள்

ஒரு காலத்தில் வெளியூர்களில் இருந்தெல்லாம் உறவினர்கள் அதன் முன் நாளிலேயே வந்து படுத்துறங்கி அதிகாலையில் எழுந்து சென்று ஆற்றில் குளித்து தலை முழுகுவார்கள்.. 

Mettur Dam - Wikipedia

அந்தக் காலங்களில் அந்த நாளுக்கு  முன் சில நாட்களில் இருந்தே மண் சட்டி, கலயம், பேரிக்காய், அன்னாசி,கொய்யா ,பொம்மைகள், புதிய புதிய விளயாட்டுச் சாமான்கள், உண்டியல் , தட்டு முட்டுச் சாமான்கள்,பரமபதம், பல்லாங்குழிகள் கட்டையால் செய்தவை, நகவெட்டிகள், தண்ணீர் பந்து, பலூன்கள், ஊதிகள் , கேட்வில்கள், இப்படி பலவித பொருள்களாய் ஆற்றங்கரையில் வியாபாரிகளால் வந்து குவிந்திருக்கும். சினிமா அதிகாலை காட்சி முதல் நள்ளிரவு இரண்டாம் ஆட்டம் வரை 6 காட்சிகள் நடக்கும் எங்கும் எங்கும் ஜனத் திரள். ஒரு பக்கம் நீர்த் திரட்சி மறுபக்கம் மக்கள் கூட்டம். மேலே ஹேர்பின் வளைவு கொண்டை ஊசி வளைவுகளில் இருந்து பார்த்தால் மக்கள் எறும்புகள் போல் ஊர்ந்து கொண்டும் நதியின் வாய்க்கால்கள் வளைந்து வளந்து முழு நீருடன் பாம்புகள் போல் வளைந்து வளைந்து சென்று கொண்டிருக்க கண் கொள்ளாக் காட்சி.  மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவில் மிக்க கோலகலத்தில் திளைத்திருக்கும் அருகிருக்கும் மீன் கடைகள் வறுவல் குழம்பு என ஏக தடபுடல் வருவாய். லால் பகதூர் சாஸ்த்திரி பூங்கா மக்கள் ஜனத் திரளால் பிதுங்கி வழியும்...

ஆடி பதினெட்டாம் பெருக்கு கிராமங்களில் இருந்து எடுத்து வந்த விக்கிரகங்கள், கற்சிலைகள், கத்தி, வேல், போன்ற கூரிய ஆய்தங்கள் எல்லாம் முழுக வைத்து கழுவி எடுக்கப் பட்டு அலங்கரித்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்
Cauvery delta in distress
 காவிரி ஆற்றிலும் மேட்டூர் அணையிலும் கட்டுப் பாட்டு வேலி எல்லாம் அப்போது கிடையாது. எல்லாக் குடும்பங்களையும் அந்த நீர்க்கரையில் பார்க்கலாம். மேலும் பல நாட்களுக்கும் முன்பிருந்தே முளைப்பாரி அதாவது பாலி அல்லது பாலிகை பல தானியம் கொண்டு தாம்பாளத்தில் அல்லது மண் சட்டியில் அல்லது ஏதாவது பாத்திரத்தில் முளைக்க வைத்து திருமணமாகாத பெண்கள் எடுத்து வந்து நதி தீரத்தில் மிதக்க விடுவார்கள்...ஓ... அந்தக் காட்சிகளை எல்லாம் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். வெற்றிலையில் காதோலைக் கருகமணி வைத்து கற்பூரம் ஏற்றி அதை வேறு நீரில் விடுவார்கள். பச்சை மாவு அல்லது மாவு இடித்து விளக்கிட்டு படையல் முடித்து அனைவர்க்கும் கொண்டு வந்த தின்பண்டங்களை பரிமாற்றம் செய்து கொள்வார்கள்... கடலை பொறி வியாபாரம் மட்டும் அளவில்லாமல் இருக்கும். இப்போது அந்த சுவை பொறி கடலைக்கு இல்லை. 

அணையின் மேல் அக்கா தங்கைகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு நடந்த நாள் எல்லாம் இனி என்றும் வாராது

இப்போது 16 கண்மாய்ப் பாலத்தின் மேலே கூட போக வழி இல்லை என்னும் போது எங்கே அணையின் மேல் செல்வது...

மனிதம் வளர்கிறதா தேய்கிறதா?

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment