விண்ணில் இன்னும் கொஞ்சம் வெளிச்சம் இருக்கிறது: கவிஞர் தணிகை
அழியாத எழுத்துகளை எழுதி வைக்கவே ஒவ்வொரு ஆக்கபூர்வமான மனிதருமே முயல்கிறார்.இந்த அபூர்வமான காலக் கட்டத்தில் ஏன் மத்திய மாநில அரசுகள் யாவுமே உச்ச நீதி மன்றம், மத்தியப் பல்கலைக் கழக மானியக் குழு எல்லாம் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஒரு முடிவையுமே ஏற்படுத்தாமல் பொறுப்புகளிலிருந்து விலகி தட்டிக் கழித்தபடியே சென்று கொண்டிருக்கின்றன.
கடந்த மார்ச் மாதத்திலேயே இறுதித் தேர்வை முடிக்க வேண்டிய வாய்ப்பிலிருந்த மாணவர்கள் இப்போது 6 மாதத்திற்கு மேலான போதும் எந்த வித முடிவையும் சந்திக்க முடியாத இயலாமையில் இருக்கிறார்கள். மற்ற மாணவர்களுக்கு எல்லாம் 20 முதல் 30 வரையிலான தவறிய பாடங்களுக்கு தேர்வு எழுதாமலேயே எல்லாம் தேர்ச்சி, 10 ஆம் வகுப்பு அனைவரும் தேர்ச்சி, பள்ளி மேனிலை மாணவர்களுக்கும் ஒரு விடியல், ஆனால் இதோ நாளை எல்லாம் முடிந்து விடும் என்றிருந்த ஒரு சில தேர்வுகள் 6 மாதத்திற்கு மேலாகியும் நடைபெறாமல் அவர்கள் தேர்ச்சி, மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் யாவுமே கைக்கும் வராமல் எந்த நிறுவனத்திற்குமே விண்ணப்பிக்க முடியாமலும் அவர்கள் படும் பாடு சொல்லில் சொல்ல முடியாததே.
இந்நிலையில் அவர்களை கேவலத்திலும் கேவலப் படுத்துவதாக தொழிலகங்கள் நடத்தி வருவதும், அவர்களுக்கு ஆரம்பத்திலேயே பல்விதமான வேலை நேரத்தையும் கொடுத்து கடுமையாக கசக்கிப் பிழிவதும் இப்படியாக உலகு இயங்கி வர எதற்கு இந்த படிப்பு வசதிகள் எல்லாவற்றையுமே நிறுத்தி விட்டால் அவர்கள் எதையும் எதிர்பார்க்கும் நிலையே வந்திருக்காதே.
மேலும் அவர்களுக்கும் பின் ஆண்டுகளில் படித்து வரும் நபர்களை தேர்வே இன்றி அரசு உத்தரவால் தேர்ச்சி பெறுவதை கல்வியாளர்கள் சரியானதல்ல எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஆன்லைனில் வைத்தாலும் சரி,ஒரு மார்க் ஆப்ஜெக்ட் டைப் எனப்படும் கேள்வி பதில் தேர்வானாலும் சரி அல்லது ஒரு மார்க் கேள்வி பதில் அத்துடன் எழுதி விளக்கும் வினாவிடைகளானாலும் சரி ஒரு மணி நேரமானாலும் சரி எப்படியாவது வைத்து அவர்களை உங்கள் கல்விச் சிறையிலிருந்து விடுவியுங்கள். அந்தப் பறவைகளும் பறக்கத் துவங்கட்டும்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment