திருமண வாழ்த்து
மணமகன்:Dr.S. பிரதாப் மேத்தா B.D.S மணமகள்: N.சுஜித்ரா B.D.S
இடம்: ப்ளோரா பார்க் இன் ஹால் கோவை நாள்: 24.08.2020
பூமி, சூரியன் விண்மீன் நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் மழை யாவும் இயற்கை
இந்த உறவேற்படுவதும் அப்படித்தான்.
விட்ட குறை தொட்ட குறை போல பூர்வ ஜென்மத் தொடர்பு
மணப் பெண் சுஜித்ரா
நான்கு வருடமாக இருந்திருக்கிறாள் எனது உறவாக நாங்கள் அறியாமலேயே
நான் பணி புரியும் கல்லூரியில் போகும் போதும் வரும் போதும்
எனக்கு கையை அசைக்காமல் என்னுடன் அங்கிள் அங்கிள் எனப் பேசாமலும்
சென்றதே இல்லை.
திருமண அழைப்பிதழ் குடும்ப அழைப்பாயிருக்க அவசரத்தில் அதையும்
சரியாக கல்லூரியில் பார்க்காமல் வீடு வந்து பிரித்துப் படித்தால்
அதில் ஒரு இன்ப அதிர்ச்சி
காலத்தால் இடை நாட்களை நழுவ விட்ட ஒரு பேரன்பு
மணப் பெண்ணின் தாய் மாமாவாக பெயர் விரியக் கிடந்தது
சண்முகம் நாகரத்தினம் மணிமாறன் என ஒரு காலத்தில்
எங்கள் கல்லூரிக் காலத்தில் இரு குடும்பமும் ஒரு சேர பாராட்டிய நட்பாக...
காலம் பெரும் உண்மையான நட்பை பிரிக்கவே முடியாத சக்தியற்றதாக
அதை விட அன்பு அதிக சக்தி மிக்கதாக வாழ்வெலாம் தொடர்கிறது
நாம் எல்லாம் மூன்றாம் சுற்றில் இருப்பதை மறந்து
மறுபடியும் முதல் சுற்றுக்கு சென்றது எனது இளமையும் வாழ்வும்...
நேசம் உண்மையானதாக இருந்தால் அவர்கள் இணைவார்கள்
எங்கள் நட்பு மட்டுமல்ல எல்லா உறவுகளுமே அப்படித்தான்.
வழக்கமாக திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுவதாக சொல்வார்கள்
பிரதாப் மேத்தா சுஜித்ரா திருமணமும் அப்படித்தான்
நிச்சயிக்கப் பட்டு இருக்கிறது
அழைப்பிதழை இருவரும் நீட்டிய ஒரு கண நொடிப் பொழுதில்
உண்மை மிளிர்ந்தது...உங்கள் வாழ்வில் எனது பேரும் இடம் பெறட்டும்
வரையறையுள் அடங்காத வாழ்த்துகள் அத்துடன் எங்கள் நேசமும்
எங்கள் குழந்தைகளான உங்களுக்கு என்றும் தொடர....
என்றும்
கவிஞர் தணிகை
த.சண்முக வடிவு
த.க.ரா.சு. மணியம்
மனம் கொள்ளா வியப்புடனும் மட்டற்ற மகிழ்வுடனும்
திருமண வாழ்த்து
No comments:
Post a Comment