Wednesday, June 24, 2020

அரச மரத்தின் ஆட்சி: கவிஞர் தணிகை

அரச மரத்தின் ஆட்சி: கவிஞர் தணிகை

BTM Layout Bus Stop,BTM LAYOUT 2ND STAGE | Mapio.net


அதுவும் அந்தக் காலத்தில் இருந்து அங்கேயே நின்று கொண்டுதான் இருக்கிறது. இவன் இப்போதுதான் அதனுடன் பேச ஆரம்பித்துள்ளான். மிகப் பெரியதாக வளர்ந்து மேலிருந்து நூல் விட்டுக் கொண்டிருந்தது.

இதை விடப் பெரிய வேம்புடன் இணைந்ததை தினமும் இவன் வீட்டிலிருந்து பெரும்பாலும் இவன் மட்டுமல்ல சகோதர சகோதரிகள் எல்லாருமே ஒர் சொம்பு நீரைக் கொண்டு சென்று காலையில் அதனடியில் இருந்த பிள்ளையாருக்கு ஊற்றி விட்டுத்தான் சாப்பிட்டு பள்ளி செல்லவே கிளம்புவார்கள்...

ஊருக்கே மாபெரும் அரசாயிருந்த அதை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி காய்ந்தது என்று வேர் எடுத்து அதன் பின் மறுபடியும் மேல் காய்ந்து விட்டது என வெட்டி இப்படியே அதை முழுதாக முடித்துவிட்டார்கள் இனி எப்படி வளர்த்தாலும் அவ்வளவு பெரிய அரசைக் காணவே முடியாது. இப்போது ஒரு காங்கிரீட் கூட்டில் அந்தப் பிள்ளையாரும்...

அதற்கும் பின் இந்தப் பேருந்து நிலையத்தில் இருக்கும் இந்த அரசு தான் மாபெரும் அரசாக விளங்குகிறது. இவனது தந்தை, தாய், சகோதரிகள் என அனைவரையும் பார்த்தது. இவனையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது

இவன் இப்போதுதான் விடியற்காலையில் இதனடியில் இருந்து தினமும் தனது வாழ்வின் தேடலை ஆரம்பிக்கிறான்
சில நிமிடம் சில நாட்கள் பல நிமிடம் இத்துடன் சேர்ந்து நின்று பார்த்துக் கொண்டிருக்கிறான். பேருந்து வரும் வரைதான்...

இவன் ஒரு சொல் பொறுக்காதவன்...வார்த்தைக்கு முக்கியம் தருபவன் அதன் கனம் உணர்ந்தவன்...எனவே இதற்கு தெரியாமலேயே இவன் வாழ்வில் பல கதைகள் நிகழ்ந்து விட்டன. இவன் வெற்றி அடைந்த கதைகளையே இது வரை எழுதி இருக்கிறான். தோல்வி அடைந்த ஊரே கூடி எதிர்த்து இவனைத் தோற்கடித்த கதை மற்றும் எதிரிகள் இவனை காவல் நிலையத்தில் சிக்க வைக்க முயன்ற கதை பற்றி எல்லாம் இவன் எழுதவே ஆரம்பிக்கவில்லை. அதனிடையே மறுபடியும் இவனிடம் கதைகள் வந்து சேர்ந்து கொள்கின்றன. பிரச்சினையில் இவன் ஆதவன்...

இப்போது தனது உருவத்தை வெளிக்காட்டாமல் ஒரு குறிக்கோள் நிறைவேறட்டும் என தவ வாழ்க்கை போல போவதும் வருவதுமாக இருக்கிறான். அதனிடையேதான் இந்த அரசும்...ஒரு நாள் இவனும் இல்லாது போவான் ஆனால் இது இருக்கும்....
Pipal Leaves Font - Illustration - Free Transparent PNG Download ...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment