Friday, June 26, 2020

காகிதப் புலி அரச மரமும் மனிதமாகாத மாக்களும் : கவிஞர் தணிகை

காகிதப் புலி அரச மரமும் மனிதமாகாத மாக்களும் : கவிஞர் தணிகை
Arasamaram Pillayar: Lord Ganapathi - YouTube


இந்த நாட்டில் விதிகளும், சட்டங்களையும் எவருமே பெரும்பாலும் மதிப்பதில்லை. அது மட்டுமல்ல அப்படி மதித்து ஒழுகுவாரை எல்லாம் பைத்தியக்காரராக எண்ணி எள்ளி நகையாடப் படுகிறார்கள். கோவிட் 19 வைரஸ் காலத்தில் அன்றாடம் நான் பயணம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறேன். அதனால் நடப்பு நாட்களில் என்ன என்ன நடந்து வருகிறது என்பதை என்னால் கவனிக்க முடிகிறது.

பெரும்பாலான மக்கள் அப்படித்தான் வாழ்ந்து வருகிறார்கள்...
நடந்தவற்றில் சிலவற்றைப் பதிவு செய்கிறேன். 1. அதிகாலை மணி 6 தான் . ஒரு பெண் வயது 50 வயது முதல் 55க்குள் இருக்கும் என நினைக்கிறேன். நான் பேருந்துக்கு நிற்கும் இடத்தில் அதிகாலை வந்து நீளமான தலை மயிற்றை உருவி எடுத்துக்  கொண்டே வெளக்கமாறு கட்டுடன் இருந்ததை வைத்து விட்டு என்னுடன் பேச்சு கொடுத்தார் வண்டி வந்தால் சொல்லுங்கள் என்றார். ஜலகண்டாபுரத்துக்கு செல்ல வேண்டும் வெள்ளிக்கிழமை கொஞ்சம் வியாபாரம் ஆகும். ஆனால் பேருந்துக்காரர்களே இதற்கு 200 ரூ வாங்கிக் கொள்கிறார்கள் அந்தளவா எனக்கு விற்பனை நடக்கிறது என்றார். கொஞ்ச நேரத்தில் அவர் கொஞ்சம் உடைந்து சாய்ந்த நிலையில் கால் ஒன்றுடன் இருக்கும் பேருந்து நிறுத்த நிழற்கூட்த்தின் பின் ஒளிவு மறைவில்லாமல் இருக்கும் இடம் சென்று போய் யார் இருக்கிறார் இல்லை என்றெல்லாம் பொருட்படுத்தாமல் சிறுநீர் கழிக்க ஆரம்பித்து விட்டார். ஒதுங்கி நமது அரச மரத்தடிக்கு நகர்ந்து நின்று கொண்டேன்.

  நான் செல்ல வேண்டிய பேருந்து வந்தது....நான் அதில் ஏறத் தயாரானேன்...அந்த வண்டி அந்தப் பெண் செல்ல வேண்டிய பேருந்தாக‌ இல்லாததால் நான் பின்னால் வரும் என்றதை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் நான் மறுபடியும் ஏம்மா இப்படி இங்கேயேவா சிறுநீர் கழிப்பது என்று கேட்டதையும் இரண்டு முறையும் காதிலேயே போட்டுக் கொள்ளாதது போல வேறு எதையோ கேட்பது போலவே கேட்டுக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் அவர் அத்தனை படிப்பறிவு இருப்பதாகத் தெரியவில்லை.

 2. பேருந்து புறப்பட்டது 15 கி.மீ தள்ளிய உடன் ஒரு முக்கிய நிறுத்தம் மறுபடியும் அடுத்த 15 கி.மீ தூரத்தில் அடுத்த முக்கிய நிறுத்தம். வேறு பேருந்து இல்லாததால் அதில் வழக்கம் போல நிற்கும்படியான கூட்டம். என்னதான் நடத்துனர் சொன்னபோதும் எவரும் கண்டு கொள்ளவே இல்லை. 3 சீட்டுக்கு இருவர், இரண்டு இருக்கைக்கு ஒருவர் என்பதெல்லாம் இல்லை. அனைவரும் ஏறி வழக்கம் போல அமர்ந்து கொண்டனர். நின்றபடியே பயணம் செய்தனர். சமூக இடைவெளி அரசின் அறிவுப்புகள் எல்லாம் விதிகள், சட்டங்கள் எல்லாம் காணப்படவேயில்லை.  மேலும் இருக்கையில் ஒரு டிக் மார்க் இருந்ததும் எந்த வகையிலும் பயன்படவில்லை

முடிந்தவரை நான் அரசின் கொள்கையை பின் பற்ற பார்த்தேன் ஒரு நபர் வந்தார் அவர் கொத்து வேலை செய்வார் போலும் அவருடன் சிலர். எவரும் முகக் கவசம் அணியவில்லை. முக்கியமாக அவர் அணியவில்லை. என்னை நகர்ந்து அமரக் கேட்டார். நான் நடத்துனரைக் கேளுங்கள் என்றேன். அதெல்லாம் இல்லை எல்லாரும் அமர்ந்து தானே இருக்கிறார்கள் இங்கே மட்டும் என்ன என எதிரும் புதிருமானோம். நான் அவரை முகக் கவசம் எங்கே முதலில் போடுங்கள் முகக் கவசம் போடாதாரை பேருந்தில் ஏற்றவே கூடாது இப்போது நான் ஆரம்பித்தால் பேருந்து உரிய இடத்துக்கே போய்ச் சேராது என்று அறிவுறுத்தினேன். உடனே சில பெண்குரல்களும், இந்த நபரும் எல்லாம் தலையில் எழுதி இருக்கிறது விதிப்படிதான் நடக்கும், எவருக்கு எப்போது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அப்படித்தான் என பேச ஆரம்பித்தனர்...பாரதியின் வரிகள் என்னுள் ஓடின...பொருளாதார சமப்படுத்தலையும் கூட மனிதரால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையற்றார், இவர் கண்டு நான் சிரிப்பதா அழுவதா, நெஞ்சு பொறுக்குதிலையே என்றபடி முகக் கவசம் அணிந்து கொண்டு அமரச் சொல்லி அனுமதித்தேன். சேலம் தலைமை மருத்துவமனையிலும் மேட்டூர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார் எல்லாம் யார் நோயாளிகள் இல்லையா எனக் கேட்டு விட்டு இந்த கோவிட்...19 வைரஸ் கூட விதிப்படிதான் தொற்றும் என நினைத்தபடி இருக்கும் இந்த மனிதர்களுக்கு எப்படித்தான் புரிய வைக்கப் போகிறோம் என அமைதியடைந்தேன்.

நடத்துனரும் வந்து 3 இருக்கையில் இருவர்தாம். அமர்ந்திருப்பார் அனுமதித்தால் ஒருவர்க்கொருவர் அனுசரித்தால் பிரச்சனையில்லை. அனுமதிக்கவில்லையென்றால் பேசாமல் இருக்க வேண்டியதுதான் என அவர் பேசி அவர் தரப்பு நியாயத்தை சொல்லியதைக் கூட விடாமல் இந்த நபர் பேசியபடியே இருக்க, நான் அவரை நடத்துனர் பேசட்டும் கொஞ்சம் கேள் என்றேன்...
What is the significance of the Peepal tree in Indian Culture? - Quora
அதன் பின் மடித்துக் கட்டியுள்ள வேட்டியை இறக்கி இருக்கையில் அமர் என்றேன்... மேலும் இந்த நடவடிக்கையில் இவர்களை எல்லாம் விட அரசாங்கம் என்ன செய்கிறது? என் போன்றோரை நடத்துனர் ஓட்டுனர் போன்றோரை பணி செய்ய வைத்து இது போன்று வரும் மக்களை எல்லாம் கட்டுப் படுத்தும் படி அல்லது அவர்க்கு வசதி செய்து தரும்படி கூட்டம் ஒரே பேருந்தில் தொற்றாமல் அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக ஏன் பேருந்தை ஒன்றன் பின்னாக ஒன்றை அனுப்ப வில்லை. எல்லாம் பொருளாதாரம்.

திருமழிசை தினசரி சந்தையில் வாங்குவார் இன்றி கொட்டிக் கிடந்த காய்கறிகளை உடனடியாக காய்கறி தேவைப்படும் விலை அதிகமுள்ள மாவட்டங்களுக்கு ஒரு அரசாங்கம் நினைத்தால் விநியோகிக்க முடியாதா?

இது கட்டட வேலை, மரவேலை, போன்று பணிகளுக்கு செல்லும் நபர்களுக்கு இது போன்ற காலங்களிலாவது 5 அல்லது 10 கி.மீ சுற்றளவுக்குள் உள்ள ஊர்களில் அவர்களே நடந்தோ சைக்கிளிலோ சென்று பணி புரிய ஏற்பாடு செய்து பேருந்தின் கூட்டத்தை அதிக அத்தியாவசியம் உள்ள மருத்துவ பணியாளர்கள் போன்றோர் பயன்படுத்த வசதியாக மாற்ற முடியாதா?

நூறு நாள் திட்டம் இருநூறு நாள் திட்டம் என்ற திட்டம் வந்த பின் விவசாயத்துக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாகி தமிழகத்தில் விவசாயம் குட்டிச் சுவராகிவிட்டது அதை ஒரு அரசின் துறை பொறுப்பேற்று அந்த அந்த ஊர்களில் உள்ள விவசாயப் பணியாளர்கள் மற்றும் விவசாயம் செய்ய முற்படுவோர்க்கு எத்தனை பேர் தேவை அன்றாடம் அதற்கு அரசு எவ்வளவு பங்கீடு தரமுடியும் குறைந்த பட்ச கூலியாக விவசாய நிலமுடையோர் எவ்வளவு தரவேண்டியது என நிர்ணயம் செய்து தர முடியாதா?

மக்களை எடுத்துக் கொண்டால் நேற்று ஒரு பேருந்திலிருந்து இறங்கும்போது சற்று வயதான பெண் கழுத்தில் வெள்ளை மணி ஏழமை தெரிகிறது உடன் ஒரு கனமான பை, படியில் இறங்க அவர் முற்படுகையில் அவரிடம் அவருக்கு நல்லது செய்வதாக எண்ணி அம்மா நீ இறங்கும் முன் நான் இறங்கி விடுகிறேன் நீ சுதாரித்து இறங்க சற்று நேரம் கிடைக்கும் என்றேன். அது அவருக்கு பிடிக்கவில்லை நீயே முன்னால் இறங்கு நீதான் விழாமல் இறங்குவாய், நாங்கள் எல்லாம் விழுந்து விடுவோம்  என அவர் முணகியதிலிருந்து தெரிந்து கொண்டேன்... ஆக சக மனிதர்க்கு ஒருவர்க்கொருவர் எவருமே உதவி செய்யும் மனப்பாங்கு வெகுவாக குறைந்த காலத்தில் இவர் எதற்காக சொல்கிறார் என்ன செய்கிறார் என்பதைக்கூட புரிந்து கொள்ள முடியா மனிதர்கள் இருக்கும் காலக் கட்டம் வந்து விட்டது. அப்போது பழங்குடி இன மக்கள் புதிய நபர்களைக் காணும்போது நம்பிக்கையற்று இருப்பார்களே அது போல...

What is the significance of the Peepal tree in Indian Culture? - Quora
எமது ஊரில் வாகனம் தொடர்ந்து வந்து போகும் பாதை, ஒரு கல்லூரி மாணவன் சிறார்களை சேர்த்துக் கொண்டு எப்போதும் மட்டைப் பந்து, சிறகுப் பந்து போன்றவற்றை விளையாடி வருகிறார்கள். ஒரு நாள் எங்கள் வீட்டில் வந்து பந்து விழுந்தபோது அதைக் கண்டிக்க அதுதான் நேரம் என வாகனம் போக்குவரத்து நடைபெறும் இடத்தில் இப்படி செய்யலாமா ஒதுக்குப் புறமாக, காலியாக இருக்கும் இடத்தை இதற்கு பயன்படுத்தி விளையாடலாமே, உங்கள் பெற்றோர் எல்லாம் இப்படி சொல்லவில்லையா? ஏதாவது வாகனம் ஓட்டுபவர் வந்து இடித்துவிட்டால் என்னடா செய்வீர்கள் என்று கேட்டதன் விளைவு அந்த விடலைப் பயல் ஜாடை மாடையாக கிரிக்கெட் மட்டையை சுழட்டிக் காண்பிப்பது அடித்து விடுவானாம், டேய் போடுங்கடா பந்தை நேரா அடிக்கிறேன் பாரு என்பதும், காலைத் தூக்கி செருப்பைக் காட்டுவதுமாக செய்துவர எங்கள் வீட்டிலோ அதெல்லாம் வேண்டாங்க அவங்க வீட்டில் தெரிந்து தான் எல்லாம் நடக்கிறது  அங்குள்ள அந்த பிள்ளைகளின் பெற்றோரே கூட வந்து இரசித்து வருகின்றனர் இந்த விளையாட்ட எல்லாம் என கட்டுப் படுத்த ஆரம்பித்துள்ளனர். இது போன்ற மனிதர்களுடன் தாம் நான் வாழவேண்டி இருக்கிறது...
What is the significance of the Peepal tree in Indian Culture? - Quora
இந்த நிலையில் கோவில்பட்டி சம்பவம் நினைவு வரத்தான் செய்கிறது...சட்டமும், நீதியும், அரசின் துறைகளும் பல லட்சங்களைக் கொடுக்கலாம் உயிர்களைக் கொண்டுவர முடியாதே. இங்கு சட்டம் நீதி அரசு எல்லாமே இருக்கிறது ஆனால் அதை எல்லாம் மீறுகின்ற கூட்டம் எண்ணிக்கை கூடி வருகிறதே...இந்த சட்டம் நீதி அரசு எல்லாமே சாட்சி கொடுத்தால் நிரூபித்தால்  நஷ்ட ஈடு மற்றும் தண்டனை வாங்கித் தருகிறோம் என்றுதான் சொல்கிறதே தவிர இது போன்ற கொடுமைகள் நிகழாமல் தடுக்க வரும் முன் காக்க ஒன்றுமே செய்ய முடியவில்லையே...இலஞ்சம், மது மதம், சாதி, இனம் ,மொழி இப்படி எந்தவித காரணமாகவும் இருக்கட்டும் யாவும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருந்து மனிதம் காக்க வேண்டுமே... எனக்கு ஏனோ George Floyd ப்ளாய்ட் கழுத்தில் கால் வைத்து கொல்லப்பட்ட கறுப்பு இன மனிதனின் நினைவையும் இங்கு மறுக்க முடியவில்லை...

 இந்த சட்டமுறைமைகள் முடிவதற்குள்ளாகவே ஆண்டுகள் பல ஆகிவிடுகிறதே...தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப் பட்ட நீதி என்றும் சொல்லப்படுகிறதே... குற்றம் இழைத்தவர்க்கு நிரூபிக்கப் பட்டால் தண்டனை என்பது மட்டுமே இழைக்கப் பட்ட அநீதிக்கு தீர்வாகாது... அதே போல சட்டத்தை எப்படி எல்லாம் அவரவர் பக்கம் நீதியின்றி நியாயமின்றி திருப்ப என்ன என்ன வெல்லாம் செய்ய முடியும் என்பதற்கு சொல்லித் தர அரசின் துறைகள் பெரிதும் பயன்படுகின்றனவே...அதில் எல்லாம் சுயநலம் ஒளிந்து கிடக்கின்றனவே... சட்டம் என்பது தவறு செய்வாரை சரி செய்யும் முகமாக இல்லாமல் பல நேரம் அவருக்குத் துணை போகும்படியாக அல்லவா இருக்கிறது? என்னதான் இருந்தாலும் அவர்கள் காவல் பணி செய்வாரை எதிர்த்தே பேசியிருந்தாலும் தகாத வார்த்தை பேசியிருந்தாலும், செல்பேசி இலஞ்சம் என்றெல்லாம் பேசப்படுகிறது அவை எல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் சக மனிதரை எப்படி அய்யா இப்படி துன்புறுத்திக் கொல்ல மனம் வந்தது? நாம் மனிதமா மனிதமாகி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகி விட்டது என்கிறார்களே அதெல்லாம் வெறும் பொய்தானா? சட்டமும் நீதியும் அரசும் அதன் துறைகளும் இந்தத் துணிச்சலை எப்படி உங்களுக்கு கொடுத்தது புதிராகவே நாங்கள் எல்லாம் விளங்காமலே வாழ்ந்து வருகிறோம்.
இலஞ்சம் கொடுப்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம் என்று இந்தியச் சட்டம் சொல்கிறதே...மதுக் கலாச்சாரம் மாபெரும் அநீதி என்றும் மனித குலத்தின் பெரும் எதிரி என்றும் மகாத்மாக்களால் சொல்லப் பட்டுள்ளேதே அவர்கள் வழிதான் ஆள்கிறோம் என அவர்கள் பேர் சொல்லியே ஆள்பவர்கள் ஆள்வதாகச் சொல்லிக் கொள்கிறார்களே அதெல்லாம் வேறா நான் குழப்பத்தில் இருக்கிறேன்...குழப்பமான மனது கேள்வி எழுப்பும், கேள்வி எழுப்பும் சிந்தனை உண்மையைக் கண்டறியும்.
How the Buddha Got His Face – DNyuz
வரு முன் காக்க என்ன இங்கு இருக்கிறது? யோசிப்போம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.






No comments:

Post a Comment