Saturday, June 6, 2020

சமூக இடைவெளி: கவிஞர் தணிகை

சமூக இடைவெளி: கவிஞர் தணிகை
Tamil Nadu introduces cashless ticketing system in government ...

பொதுப் போக்கு வரத்து ஆரம்ப நாட்களில் இருந்து நான் பயணம் செய்ய ஆரம்பித்துள்ளேன். முதல் பேருந்தில் இடம் பிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன் அது சேலம் நோக்கி செல்லும் பேருந்து முதல் நாள் மிகவும் ஒழுங்காக இயங்கியது52 பயணிகள் கொண்ட பேருந்தில் 31 அல்லது 32 பயணிகள் சமூக இடைவெளியுடன் ஏற்றப்பட்டு அமரவைக்கப்பட்டனர்.

இருவர் அமரும் இருக்கையில் ஒருவரும்,மூவர் அமரும் இருக்கையில் இருவரும், முகக் கவசம் அணிந்திருக்கிறார்களா என்றும் பார்க்கப்பட்டு சரியாக இயங்கி வந்தது.சேலத்தில் இருந்து இயக்கப் பட்ட ஈரோடு செல்லும் பேருந்தில் உடல் சூடு சோதிக்கப் பட்டு கைகளுக்கு சேனிட்டைசர் கூட வழங்கப்பட்டது நாம் இந்தியாவில் இருக்கிறோமா என்ற வியப்பும் அரசு சொல்வதைக் கேட்டு அதன்படி மக்களும் ஒத்தழைக்க வேண்டும் என்ற கருத்தை முன் மொழிவதாகவும் இருந்தது.

2 ஆம் தேதி அதே போல இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் ஓமலூரில் இருந்து சேலத்திற்கு பேருந்து காலையில் இருந்து இன்னும் துவக்கப்படவில்லை என சுமார் 45 பேர்களுடன் பயணம் செய்தது...மனிதாபிமானம் பற்றி எல்லாம் ஒரு போக்குவரத்து ஊழியர் பயணத்துக்கு கட்டணமின்றி பயணம் செய்து கொண்டிருந்த அவர் இடம் விடாத இருக்கை நிற்பார்க்கு அளிக்காத சமூக இடைவெளி பின் பற்றும் அரசுக் கட்டளையைப் பின் பற்ற நினைக்கும் பயணிகள் பற்றி தனியார் பேருந்தில் ஏறுபவர்கள் எல்லாம் அரசு பேருந்தில் ஏறுகிறார்கள் தனியாரில் வேலை செய்கிறார்கள்...போட்டோ எடுத்து அனுப்புகிறார்களாம் என மிகவும் பெரிய சமூகப் பொறுப்பாளராக பேசியபடி வந்தார். அவர் பெண்கள், மற்றும் மாணவர்களுக்கு ஆதரவாக இயங்குபவராம்...அரசுப் பணியில் இருந்தபடி வீடு கட்ட கடனுதவி பற்றி எல்லாம் பேசியபடி இருந்தார்  அவர் ஊதியம் எவ்வளவு எனக் கேட்க ஆரம்பித்து இந்த அபாயமான காலக் கட்டடத்தில் விவாதப் போக்கை தவிர்த்தேன்...

கூட்டம் அதிகமாக ஏறுவதைப் பார்த்தவுடன் அவரே கொஞ்சம் குறைத்து ஏற்றுங்கள் என நடத்துனரைக் கேட்டுக் கொண்டார் அவரின் மனிதாபிமானம் அப்போது எங்கே போயிற்று எனத் தெரியவில்லை. அவர் மற்றும் ஒரு நாள் வழக்கமாக வரும் ஒரு நோயாளியாய் வரும் ஒரு கணவனுக்கும் அவரை அழைத்து வரும் மனைவிக்கும் இடம் அளியுங்கள் என அடுத்தவரைக் கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் எழுந்து இடமளிக்கவில்லை. சேவை என்பது தன்னிலிருந்து எழுவது ஆரம்பிப்பது என்பதை அவர் அறியாமல் வெறும் வாய்ச் சொல் வீரர் என்பதை அறிந்து கொண்டேன்

அவர் கிடக்கிறார் நாம் நமது கதைக்கு வருவோம்..03.06.2020 அன்று புதன் கிழமையாம் திருமண முகூர்த்த நாளாம் முதல் பேருந்தில் இடம் எங்களுக்கு இல்லை. சரி என பயந்து கொண்டே எப்படியும் இன்று அலுவலக கல்லூரியின் நேரத்துக்குள் போகமுடியாதே என  அடுத்த பேருந்து அதாவது ஒரு பேருந்துக்கும் இரண்டாம் பேருந்துக்கும் இடையே அரை மணி நேரம் வித்தியாசம். நல்ல வேளை அதில் இடம் கிடைத்தது ஆனால் செல்லும் வழி எல்லாம் அந்த ஓட்டுனரும் நடத்துனரும் இருக்கும் பயணிகளை எல்லாம் ஏற்றிக் கொண்டனர்.

ஓட்டுனர், நடத்துனர் பொறுத்த வரை இந்த சட்ட அமல் முறைகள் மாறி விடுகின்றன. சிலர் சமூக இடைவெளி, முகக் கவசம் போன்றவை கடைப் பிடித்து அரசு சொல்லியிருப்பதை அனுசரிக்கின்றனர். சிலர் அதைக் காற்றில் பறக்க விட்டு தான் தோன்றித் தனமாக இயங்கி வருகின்றனர் அபாயம் அறியாமல்.

Image may contain: one or more people, people sitting and indoor

அடுத்த இரண்டு நாட்களும் கூட அப்படித்தான் விருப்பப் படி நடத்துனர்கள் நடந்து வருகின்றனர். இதற்கு எல்லாம்  அடிப்படைக் காரணம் அரசு சொல்லியது போல இயங்காததும் போதுமான அளவு பேருந்துகளை இயக்காததும்... ஒரே ஒரு நல்லது என்ன வெனில் கட்டணம் உயர்த்தப் படாததுதான். ஆனால் பேருந்துகளின் இயக்கம் போதுமானதாக இல்லாத காரணத்தால் பயணிகள் எந்த சமூக இடைவெளியும் பின் பற்றுவதில்லை

ஒரு நாள் மதியம் சேலத்தில் மேட்டூர் வர ஒரு பேருந்தும் பேருந்து நிலையத்தில் இல்லை. காலியாக வெறிச்சோடிக் காணப்பட்டது...சிறிது நேரத்தில் ஒரு பேருந்து வர கூட்டம் முண்டியடித்துக் கொண்டு ஏறி விட எல்லாம் ஏறிய பின் ஓட்டுனர் பின்னால் உடனே ஒரு பேருந்து இருக்கிறது நிற்பாரெல்லாம் அதில் ஏறிக் கொள்ளுங்கள் என்றார். அதை முன் கூட்டியே 2 பேருந்துகள் இருக்கின்றன ஏறுபவர் பொறுமையாக ஏறுங்கள் எல்லாருக்கும் இடம் இருக்கிறது என்று சொல்லி இருந்தால் என் போன்றோர் எல்லாம் பொறுமை காத்திருப்போம்.
Image may contain: one or more people, people sitting and indoor


வெயிலின் கொடுமை வீட்டுக்குப் போய்ச் சேரவேண்டுமே என்ற ஆதங்கம் அனைவரும் அரசின் அறிவிப்புகளை புறக்கணிக்கிறார்கள்...அரசு போதுமான பேருந்துகளை இயக்காமல் வேடிக்கை காட்டுகிறது. பெரும்பாலும் அரசை மட்டுமே குறை சொல்ல வேண்டியிருக்கிறது. போதுமான ஓட்டுனர்களும் நடத்துனர்களும் பணியில் இருக்கிறார்கள்...ஆனால் அவர்களை பயன்படுத்தி நிறைய பேருந்துகளை அரசு செலவாகிறதெ நட்டமாகிறதே எரிபொருள், ஓட்டுனர் நடத்துனர் ஊதியம், வண்டி தேய்மானம் எல்லாவற்றையும் கணக்குப் பார்த்து குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளை அதிகப்படுத்தாமலே இருக்கிறது. முதல் நாளில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து இருக்கும் என்ற விதி காற்றில் பறக்க விடப்பட்டு சுமார் 7.30 மணிக்கே கடைசி பேருந்து என அனைவரையும் ஒரே பேருந்தில் அடைத்து பயணம் செய்ய வைத்து விட்டது.


மேலும் ஒரே நாள் நள்ளிரவில் பணமதிப்பை இழக்க வைத்த மத்திய அரசும், மதுவை மாநிலமெங்கும் உச்ச நீதிமன்றம் வரை சென்று  ஓடவைக்கும் மாநில அரசும் இந்த முக்கியமான தேவையான நேரத்தில் தனியார் பேருந்து முதலாளிகள் ஏற்கெனவே ஓவர் லோடு செய்து சம்பாதித்த அவர்களை ஒரு மிரட்டு மிரட்டி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ட்ரிப்கள் ஓட்டவில்லை எனில் பெர்மிட் ரத்து செய்யப்படும் என்றால் ஓரளவு இந்த இடரைத் தடுக்கலாம்.அவர்களும் ஓட்டுவார்கள்.ஆனால் இது தனியார் முதலாளிகளின் ராஜ்யம்.அதனால் ஆனால் இவர்களுக்கு மனிதர்களைப் பற்றி எல்லாம் அக்கறை இல்லை. ஏன் அந்த ஓமலூர் பேருந்து நிலையத்திலிருந்து சேலம் வரை இயக்கப் பட வேண்டிய பேருந்துகள் இயக்கவில்லை என்ன காரணம் என கேட்டு பிரச்சனையைத் தீர்த்து பணியை முடங்காமல் செயல்படுத்தும் அரசோ அரசு அலுவலர்களோ ஏன் அந்த நேரத்தில் செயல்பட வேண்டிய நேரத்தில் செயல்படாமல் இருந்து மக்களுக்கு துன்பம் ஏற்படுத்துகின்றனர் என்பதெல்லாம் கேட்கக் கூடாத கேள்விகள்...அதன் பிறகு அரசு அலுவலர்கள் எல்லாம் கோவித்துக் கொள்வார்கள்...அரசியல் பிரமுகர்கள், அரசின் மக்கள் பிரதிநிதிகள் எல்லாம் குறி வைப்பார்கள் கேள்வி கேட்பாரைப் பார்த்து. கேள்விதான் கேட்கக் கூடாது ஆயிற்றே இந்த அரசுகளின் முன்...

மக்கள் குரல் ஒரு புறம் கோவிட் 19லும் மற்றொரு புறம் அரசின் ஆளுமையிலும் ஒடுங்கிப் போகட்டும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment