இலஞ்ச ஊழலை இன்னும் 2 ஆண்டுகளில் ஒழிக்க முடியுமா? கவிஞர் தணிகை
நடுவண் அரசு இன்னும் 2 ஆண்டுகளில் இலஞ்ச ஊழலை ஒழிப்பதாக ஒரு அறிக்கையைக் காண நேர்ந்தது. அது சாத்தியமா என்றால் ஒர் எழுத்தறிவிலாதார்க்கும் தெரியும் அது வெறும் சொல்லாடல் என்று
ஏன் எனில் நமது தமிழகத்தில் எல்லா சான்றிதழ்களுமே ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள் ஆனால் எந்த வேலையுமே அப்படி ஆன்லைனில் பதிவு செய்த சான்று பெற்றதாக இல்லை. அதை ஒப்பம் இட்டு கொடுக்க வேண்டியவர்கள் அதை இலவசமாக அல்ல அல்ல அதை தனது வேலையாக செய்யத் தயாராக இல்லை. எப்போதும் இலஞ்சம் பெற்றுக் கொண்டுதான் செய்யும் கைகளாயிற்றே.
தெலுங்கானாவில் முதல் நாளில் சிறந்த காவலர் என்று சுதந்திர தினத்தில் விருது பெற்றவர் அடுத்த நாளில் ரூ. 17000 இலஞ்சம் பெற்றதாக பணி இடைநீக்கம் செய்யப்படுகிறார்
ஒரு சின்ன வேலைக்கும் கூட எதையும் பெறாமல் அரசின் செயல்பாடுகள் இல்லாதபோது எப்படி மத்திய அரசு இப்படி சொல்கிறது என்றுதான் விளங்கவில்லை.
கண்ணதாசன் சொல்லியபடி மனிதகுலம் இருக்கும் வரை அது இருக்கும் என்பது போல ஒவ்வொரு பணி சார்ந்த அதாவது மின்பணியானாலும், குடி நீர் வழங்கல் ஆனாலும், பஞ்சாயத்து பணிகள் ஆனாலும், ஒரு தெருவிளக்கு எரிய வேண்டுவதானாலும் ஒரு சாக்கடையை தேங்கிக் கிடப்பதை தள்ளி விட வேண்டுமானாலும், இந்தியாவில் எந்தப் பணியை செய்வதானாலும் போக்குவரத்து, காவல்துறை இப்படி எந்தத் துறை ஆனாலும் குறுக்குவழிகளே காய் நகர்த்த பயன்படுகின்றன.
மோட்டார் வாகன ஆய்வாளர்கள், பத்திரப் பதிவாளர்கள், காவல்துறை வழியே நிகழும் பாஸ்போர்ட் வெரிவிகேஷன்...வாகன கட்டுப்பாடு பற்றிய கவனம்...சில உதாரணங்களாகச் சொல்லலாம்.
அடிமட்டத்தில் பணி புரியும் ஊழியர்கள் அனைவருமே பொது உறவு வழியே மக்களிடம் ஒரு தொகையை வசூலித்தபடிதான் சேவையை ஆற்றுவதாக கூறிக்கொண்டு பலர்நலத்தை புறக்கணித்து சுயநலத்துக்கு துணை போய்க் கொண்டிருக்கிறார்கள்.
இதில் 2 ஆண்டுகளில் இலஞ்ச ஊழல் இல்லாததாக ஆக்குவதென்பது இயலாத காரியமே. மேலும் அரசியல், அரசு அதிகாரிகள்,தனியார் முதலாளிகளிடம் சிக்கிக் கிடக்கும் நாட்டில் வங்கி ஊழியர்கள் மற்றும் மேலாளர்களின் இந்த வகையான செயல்பாட்டினால் பொதுமக்களின் கீழ்த்தட்டில் உள்ளாரின் பணம் மேல் தட்டு மனிதர்க்கு எப்படி கொண்டு செல்லப்பட்டது என்பதை அம்பானிகள் குடும்ப நலச் செயல்பாட்டில் புரிந்து கொள்ள முடியும்
தம்பியின் கட்ட முடியாக் கடனை எப்படி அவரது கம்பெனியை ஏலம் விடுவதை இவரே எப்படி குறைந்த விலைக்கே எடுத்து அந்தக் கம்பெனியையும் மீட்டு மேலும் மேலும் இந்தியாவின் முதல் பணக்காரார் ஆன கதையை உலகே அறியும்.
இலஞ்சமில்லாமலா லலித் மோடிகளும், விஜய்மல்லையாக்களும், நீரவ் மோடிகளும், தோன்றி இருக்கிறார்கள்...மேலும் காஷ்மீர் உண்மையிலேயே படேல் வழியில் தான் செல்கிறதா...
மேடையிலேயே தனியார் தான் சேவை செய்கிறார்கள் அவர்களுடன் இருப்பதும் பெருமிதத்துக்குரியது எனச் சொல்லும் ஒரு பிரதமர் நமக்கு உலகெலாம் புகழ் பரப்பி வருகிறார். தனியார்மயத்தை காங்கிரஸ் ஆதரித்தது இந்த ஆளும் கட்சி தனியாரிடமே நாட்டைக் கொடுத்துவிட்டது.
தனியார் கை அரசின் பையுள்
அரசின் கை தனியார் பையில்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
அரசுப் பணிக்கு
வேலை வாய்ப்புக்கே உரிய தரம் இருந்தபோதிலும் பெரும் தொகை கை மாறாமல் எவருக்குமே பணி வாய்ப்பும் கிடைக்காது என்ற நிலை உள்ள போது, இடமாறுதலுக்காக கன்னியாகுமரியில் இருப்பார்க்கு சென்னையிலும் சென்னையில் இருப்பார்க்கு ராமநாதபுரத்திலும் வேலைக்கான இட உத்தரவை வழங்கிவிட்டு மாறுதல் கேட்கும்போது பெரும் தொகையை பெற்றுக் கொண்டு அந்த மாறுதலை தருகின்ற அரசுகள் உள்ள போது இலஞ்ச ஊழலை எப்படித்தான் ஒழிக்கப்போகிறதோ இந்த நடுவண் அரசு என்ற கேள்வி ஒரு சமுதாய சேவகனாக எனது உள்ளத்தில் எழுந்துள்ளதை பதிவிட்டிருக்கிறேன்.

No comments:
Post a Comment