சினிமாவை சினிமாவாப் பாருங்கடா: கவிஞர் தணிகை
கோமாளி பட ட்ரெய்லர் ஒரு அலை எழுப்பி கமல் அதற்கு வருத்தம் தெரிவித்ததகவும் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அந்தக் காட்சி நீக்கம் செய்யப்படும் என்றும் செய்திகள்
அப்படி என்ன அதில் பெரிய சேர்க்கக் கூடாது என்றால் 16 ஆண்டுகளாக கோமாவில் இருந்த படத்தின் நாயகன் அது 1996 என ரஜினி அரசியல் சேர்வதாக சொன்னது என்பதுதானாம்.
சினிமாவை சினிமாவாகவும் கலைப் படைப்புகளாகவும் பார்க்க சக்தியற்ற மனிதர்கள் நிரம்பிய நாடு என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. இதற்கு கமலும் விதிவிலக்கல்ல.
ஹாலிவுட் படங்கள் மற்றும் மேலை நாட்டு படங்களில் எல்லாம் ஆள்வோருக்கு எதிராகவும், நேரடியாகவும், மறைமுகமாகவும், சட்டையர் எனப்படும் சவுக்கடிகளாகவும் நிறைய தயாரிப்புகள் இருக்கும் உண்மையான நாகரீகம் உடையவர் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டதே இல்லை. இந்த நாட்டில்தாம் எதற்கு எடுத்தாலும் அதற்கு ஒரு ஆட்சேபணை போராட்டம் எல்லாம் ஜெவால் சினிமாத் துறையில் கலைஞர்க்கு ஆதரவாக தி.மு.க மேடையேறிய காரணத்தால் வடிவேலுவின் வாழ்க்கை வரலாறு மாறிப் போனது.
ஆனால் ஜெவின் வாழ்வு வாழ்வாங்கு வாழ்ந்ததாக சரித்திரத்தில் இல்லை.
இருவர் என்ற படம் கலைஞர் வாழ்ந்த காலத்திலேயே எம்.ஜி.ஆர், கலைஞர் காலத்தை திரைப்படத்தில் நாகரீகமாக நாசூக்காக சொல்ல முயன்றது. ஆதலால அந்தப் படம் மணிரத்தினத்திற்கு தோல்விப் படமானது.
ஜெயம் ரவியின் கோமாளி படம் நல்லாவே இருக்கு என்பது ட்ரெய்லரில் தெரிந்துவிட்டது
விருமாண்டி, தேவர்மகன், பல்ராம் நாய்டு விஸ்வரூபம் எல்லாம் கமலுக்கு மறந்து விட்டது போலும்...
சார்லி சாப்ளின் டிக்டேட்டரில் ஹிட்லரைக் கேலி செய்து படம் எடுத்திருக்கக் கூடாது என்பதுதான் இவர்களின் கருத்தா?
எல்லாமே பச்சோந்தித்தனமா இருக்கே...
கமல் ஒரு மாற்று குறைந்து விட்டார் கலைஞானி என்ற தரத்தில் இருந்து...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
கலைஞர்களும் கலைப்படைப்புகளும் தாம் இரசிகர் தரத்தை உயர்த்த முடியும் பாலூத்தி கட் அவுட்டுக்கு பூப்போடும் ரசிகராகவே வைத்திருக்கத்தான் இவர்களுக்கு எல்லாம் ஆசையா...சிந்திக்க வைக்க சினிமா எடுத்தால் அதில் ஒரு கீறலாய் அறிவுத் தீற்றல் இருந்தாலும் அதை விடமாட்டார்களா அது எப்படி இருந்தாலும் அது பொல்லாப்பா...
காஷ்மீர் பிரச்சனயை விடவா இவை எல்லாம் மாபெரும் பிரச்சனை...ரஜினிகாந்தை பெரிய மனிதராக்கும் கூட்டம் அவரை முதல்வராகவும் ஆக்கிவிடுமோ என்ற எதிர்கால சமூக பயம் ஏற்படுவதற்கு இதெல்லாம் அடையாளம்....

No comments:
Post a Comment