Wednesday, August 28, 2019

அது ஒரு காளான் காலம்: கவிஞர் தணிகை

அது ஒரு காளான் காலம்: கவிஞர் தணிகை

Mushrooms the Size of Dinner Plates -- Kyoto, Japan -- Copyright 2007 Jeffrey Eric Francis Friedl, http://regex.info/blog/


எனது வயது 38 இருக்கும். நடைப்பயிற்சி அப்போதும் உண்டு. அரை கி.மீ கூட போயிருக்கமாட்டேன். மாபெரும் காளன்களை பனை மர வேலியோரம் பார்த்தேன் உடனே அள்ள முடியாமல் இரு கைகளையும் இணைத்து மார்புடன் சேர்த்து எடுத்து வந்து வீடு சேர்த்தேன். எனது தங்கை வீட்டுக்கும், ஒரு அக்கா வீட்டுக்கும் கூட கொண்டு போய்க் கொடுத்து வந்தேன்.

அவ்வளவு பெரிய பெரிய‌ காளான்களையும் அதுவும் அத்தனை காளான்களையும் எனது வாழ்நாளில் அதற்கு முன்பும் அதற்கு பின்பும் நான் காணவேயில்லை மிகவும் விரிந்திருந்தன புதிதாகவும் இருந்தன எனக்காகவே முளைத்தமாதிரி வேறு எவர் கண்களும் படும் முன்பு எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருந்தது. அதை எந்நாளுமே மறக்க முடியாது.

பொதுவாக இடி இடித்தால்தான் மழைக்காலத்தில் இந்த நல்லக் காளான்கள் வரும் பூமியிலிருந்து வெளிக்கிளம்பி என்பர். இது இறந்து போன பனை போன்ற மரங்களின் எச்சமான மூலக்கூறுகளில் இருந்து செல்களில் இருந்து புறப்படும் விரியும் என்றும் அரை குறையாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

அன்று அத சிறு தொலைவுக்குள்ளேயே என்னைப் பார்த்தவர்கள் அட என்ன இப்போதுதான் போனார் இவ்வளவு காளானோடு வருகிறாரே என பார்த்தவர்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டுப் பேசினார்கள். அவையெல்லாம் என்னுள் இன்னும் மறவாத சித்திரங்களாக அழியாமல் இருக்கின்றன.
100 Pcs Green Healthy Super Big Mushroom Seeds, Delicious Vegetables Rare Gaint Mushrooms Funny Succlent Plant High-Nutrition 10
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

P.S:  அதை உணவாக சமைத்துச் சாப்பிட்டாலே அதன் அலாதி ருசிக்கு ஈடு இணையே சொல்ல முடியாது அத்தனைக்கும் அது புதிதாக இருக்க வேண்டியதவசியம். பொறியல் செய்யலாம், குழம்பும் வைக்கலாம். அந்த வகைக் காளன்கள் பிரியாணி செய்ய உதவாது கரைந்து விடும். எனக்கு மிகவும் பிடித்த உணவு வகைகளில் அது ஒன்று...நாவில் உமிழ் நீர் சுரக்கிறது செய்யும்போதே அந்த ருசியின் மணம் நாசியில் தெரிகிறது... நான் கடையில் வாங்கிய ஊட்டி பட்டன் காளான் போன்ற நெகிழிப்பையில் வைத்தடைத்த குளிர்பதனப்பெட்டியில் வைத்த காளான்களைச் சொல்லவில்லை. இயற்கையாக கிடைப்பதைப் பற்றியே இங்கு அனுபவித்ததை பகிர்ந்துள்ளேன்.

2 comments:

  1. எனக்கும் அந்த காளான் அனுபவம் உண்டு

    ReplyDelete
  2. thanks soundar for your comment on this post. vanakkam. please keep contact.

    ReplyDelete