Tuesday, October 4, 2016

ஊடகங்களின் கேடு கெட்ட ஊமைத்தனமும் ட்ராபிக் இராமசாமியின் துணிச்சலும்: கவிஞர் தணிகை

ஊடகங்களின் கேடு கெட்ட ஊமைத்தனமும் ட்ராபிக் இராமசாமியின் துணிச்சலும்: கவிஞர் தணிகை

Image result for media fails


இந்த பி.பி.சி, என்.டி.டி.வி, போன்ற சிறந்த ஊடகங்கள் கூட வாய் மூடி ஊமையாக தமிழக முதல்வரின் உடல் நிலையை தெளிவு படுத்தாமல் இருப்பது ஊடகங்களின் பெரும் வெட்கக் கேடு.இந்த அப்பல்லோ மருத்துவமனையை ஊடுருவி செய்தி தராத ஊடகங்களான சன் டிவி, புதிய தலைமுறை, இன்ன பிற தொலைக்காட்சி நிறுவனங்கள் எல்லாம் முதுகெலும்பற்றவை.

Image result for traffic ramaswamy


ஆட்சி என்றால் மக்களாட்சி என்றால், ஜனநாயக நாடு என்றால் ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படவேண்டும். செயல்பட விட வேண்டும்.இங்கு உடல் நிலை கெட்ட தமிழக முதல்வரின் ஒரு படமோ காட்சிப் பேழையோ 13 நாட்களாகியும் ஒன்றுமே வெளிவரவில்லை.

எம்.ஜி.ஆரை விட பெரும் புகழ் படைத்தவரல்ல இந்த அம்மா. ஆனால் எதற்காக இப்படி இவரது உடல் நலம் கெட்ட‌ செய்தியை வராமல் தடைப்படுத்த வேண்டும் என மக்கள் ஐயப்பட்டுக் கொண்டு வெளியில் நடமாடவே யோசித்து வருகிறார்கள்.

உயர் நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை டிசம்பருக்கு ஒத்தி வைத்திருப்பது ஒரு நல்ல செய்தி. தமிழக ஆளும் கட்சிக்கும், தமிழக ஆட்சிக்கும் ஒரு பின்னடைவு.

Image result for media fails


இந்நிலையில் உச்ச நீதிமன்ற சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு அருகாமைக்கு வந்து விட்டது ( அது வரும் 7 ஆம் தேதியாக இருக்கலாம் என்றும் பேச்சு இருக்கிறது .இந்தியாவில் தமிழகத்தில் எதுவும் நடக்கலாம், எதுவும் நடக்காமலும் இருக்கலாம், எதுவும் நடந்தால்தான் நிஜம்.) போலியாக செய்தி பரப்பியே உண்மை பிரச்சனையை சென்னை கடலூர் வெள்ளப் பிரச்சனைகளை மறக்கடித்தார்களே அப்படி  இப்படி என அந்த தீர்ப்புக்காகத்தான், அதற்காகத் தான் நாடகம் என அவர்கள் கட்சிக்காரர்களே பேசிக் கொள்கிறார்கள். இது மத்திய உள் துறை அமைச்சரின் இரகசிய பேச்சு வார்த்தையால் விளைந்தது என்றும் வதந்திகள் நிலவுகின்ற நிலையில் பெரும்பாலானோர் இவர் வென்டிலேட்டர் ‍ செயற்கை சுவாசம் பொருத்தப்பட்ட நிலையில் இருப்பதாக மருத்துவ மனை தெரிவித்த நிலையில், கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும் செய்திகள் நிலவுகின்றன.
Image result for traffic ramaswamy


எப்படி இருந்தாலும் டாக்டர் பிரதாப் சி.ரெட்டியின் அப்பல்லோ சென்னை மருத்துவமனைக்கு ஒர் கண்டம் இருக்கிறது. இவர்களின் பாதுகாப்பை உடைத்து சென்று செய்தி கொடுக்காத, சசிகலாவின் காப்பு வளையத்தை உடைத்து உள் புகாத தொலைக்காட்சிகளும், செய்தி ஊடகங்களும் வேஸ்ட்.

மேலை நாடாக இருந்திருந்தால் இந்த வேலையை விடாமல் செய்திருப்பார்கள் தனிமனிதராக அல்லாமல் அமைப்பு ரீதியாகவும்.

இந்நிலையில் ட்ராபிக் இராமசாமி ஒருவர்தான் முதல்வர் நிலை என்ன? முதல்வருக்கு பணி செய்ய மாற்று ஏற்பாடு செய்து வேறு ஒருவரை நியமியுங்கள் என நீதிமன்றம் வரை சென்றுள்ளார். இவர்தான் ஒரு ஜனநாயக நாட்டின் உண்மையான துணிச்சலான மனிதராகத் தெரிகிறார். வேறு அனைவரும் என்னையும் சேர்த்துத்தான் செய்ய வேண்டியதை செய்யாதவர்கள் பட்டியலில்தாம் இருக்கிறோம்

Image result for traffic ramaswamy



முதல்வர் அம்மா, அறிஞர் அண்ணா, காமராசர், கக்கன் போல அரசு மருத்துவ மனையில் அல்லவா இருக்க வேண்டும் எதற்கு இந்த அப்பல்லோ அப்பாலோ என...எல்லாமே இந்த அம்மாவின் வாழ்வில்  மர்ம முடிச்சுகளே. ஸ்டேட் பேங்க் பணம் பிடிபட்டதும், இந்த அம்மா இருப்பிடத்துக்கு கன்டெய்னர் லாரிகள் இரவில் இருந்து பகலில் போன இடம் தெரியாமல் மறைந்து விட்டதும்...சசிகலாவின் வீடியோக் கடை விவகாரங்கள் முற்றி தமிழ்நாட்டிற்கே ஒரு முக்கிய கரும்புள்ளியாக மாறியதுமாக...

இப்படியாக நிலை இருக்கும்போது முதல்வருக்கு அடுத்த முதல்வர் யார் என மக்கள் பேசி விவாதித்து வருகிறார்கள். தற்போது ஷீலா பாலகிருஷ்ணன் வயது 62 ஐ.ஏ.எஸ் ஓய்வு பெற்றவர்தான் நாட்டை ஆண்டு வருகிறார் அங்கே மத்திய அரசே திடீர் பல்டி அடித்து கர்நாடகாவுக்கு சாதகமாக மேலாண்மை வாரியம் அமைக்கும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கில் ஓடிக் கொண்டிருக்க‌


Image result for media fails


கவர்னருக்கு இல்லாத சக்தி இந்த தமிழ்நாட்டில் சசிகலா என்ற எந்தவகையிலும் அரசுக்கு அரசு பதவிக்கு சாராத ஒரு பெண்ணுக்கு இருக்கிறது என்பதுதான் பெரும் வேடிக்கையான வெட்கக் கேடு.

இந்நிலையில் உயர் நீதிமன்றமே வியழனுக்கும் முதல்வர் பற்றி அறிக்கை தரவேண்டும் என தமிழக அரசைக் கோரியிருக்கிறது. நிலை எப்படி எனப் பார்க்கலாம்...

Image result for traffic ramaswamy

வழக்கு தீர்ப்புக்காக ஒளிந்து கொண்டதா இந்த நண்டு அல்லது இது போய் பல நாள் ஆகிவிட்டதா என பொறுத்திருந்து பார்ப்போம்...தமிழச்சி சொல்லியபடி மத்திய ஆளும் கட்சியின் பிடிக்குள் முடங்கி விட்டதா இந்த வாழ்வு, அல்லது பதுங்கி பாயுமா என்பது எல்லாம் சில நாளில் வெளிச்சம். பூஜா ‍ஹாலிடேஸ் நல்ல முறையில் தமிழகத்தில் இருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.


Image result for traffic ramaswamy

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

4 comments: