Sunday, March 22, 2020

தணிகையாகிய நான்: கவிஞர் தணிகை

தணிகையாகிய நான்: கவிஞர் தணிகை

             K.SUBRAMANIAM                                       
Image may contain: 1 person, closeupImage may contain: 1 person
                                                 S.DEIVANAI AMMAL
       

                                                               KAVIGNAR THANIGAI
2020ல் எனது மற்றுமொரு சுற்று 23.03.2020 முதல் ஆரம்பிக்கிறது: கவிஞர் தணிகை.

நாம் பிறந்த தினம் என்பதை ஆண்டுக்கு ஒரு முறை நினைவுக்கு கொண்டு வருகிறோம் அது திரும்பி வராது வெறும் எண்ணப் போக்கு  என்ற போதும்... தலைவர்க்கு எல்லாம் அவர்கள் இல்லாத போதும் அந்த இரு தினங்களும் நினைவுறுத்தப் படுகின்றன. (இந்த நிலையில் ஏனோ  ரங்கராஜ் பாண்டே கொடுத்த பரிசை ஏற்க மறுத்த நல்ல கண்ணுவை எனக்கு நினைவு வருகிறது... ரஜினி காந்த் இது பற்றி எல்லாம் கவலைப்படாமல் கலந்து கொண்டிருக்கிறார்.)

அது போல இன்று மறுபடியும் எனக்கும் ஒரு சுழற்சியின் புள்ளி மறுபடியும் ஆரம்பிக்கிறது.

தண்ணீர் தினம், இலக்கிய தினம், காடுகள் தினம், நாடுகள் தினம், பகத் சிங் நினைவு தினம் இப்படி பல நல்லவற்றை நினைத்துப் பார்க்கும் தினங்கள் நாம் இருந்தால் நினைத்துப் பார்க்கலாம். ஆம் நிறைய சாதனையாளர்கள் குறுகிய ஆயுள் வாழ்ந்திருந்தும் சாதித்திருக்கிறார்கள். நான் சில பெயர்களை சொல்லி விட்டால் உடனே அவர் மட்டுமே தானா இவர் இல்லையா என்றெல்லாம் தோன்றும் எனவே மகான்களை மகான்களாகவே பார்க்க பெயர் சொல்லாமல் விட்டு வைக்கிறேன்.

பெரிய முயற்சி எல்லாம் செய்யாமலே சில சிகரங்களை இயற்கை என்னையும் தொடவைத்திருக்கிறது. அதற்கு என் நன்றியறிதல் எப்போதும் உண்டு.

ஏ.ஆர் ரஹ்மான் சொல்வது போல எல்லாப் புகழும் இறைவனுக்கே...இறைவன் என்பதை அவன் அவள் அது என்பதெல்லாம் சொல்லாம் இறை கட உள் என்றே சொல்லி விடுவது என் பழக்கம்.

எல்லாக் கோவில்களும் மனித இனம் கூடி விடக் கூடாது என்று மூடி வைக்கப்பட்டுள்ள இந்த சிக்கலான கட்டத்தில் நாம் நிறைய கடவுள் சிந்தனை கடவுள் மறுப்பு சிந்தனை பற்றி எல்லாம் சிந்தித்தாக வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

உலகின் மாபெரும் மதத்தின் தலைமையகம் இருக்கும் இடத்தின் நாட்டில் தான் வெகுவாக மனித உயிர்கள் பலி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அது மட்டுமல்லாமல் உலகெலாம் பரவி மட்டுப் படுத்த முடியாது மனித குலத்துக்கே பெரும் சவாலாக இருக்கும் நிலையில் இந்தியாவில் அதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில் சிக்கல்கள் நீடிக்கின்றன என்று சற்று முன்னர் பிபிசி செய்தி மூலம் அறிந்தேன்.

 அப்படி அது அதன் நீட்சியை அதிகரிக்கும் பட்சத்தில் இந்தியாவில் 30 கோடி பேர் பாதிக்கப்படுவது உறுதி என்றும் இந்தியாவில் தான் மிகக் குறைவான சுகாதார நடவடிக்கைகள் உள்ளன என்றும் கேட்க அதிர்ச்சியாக இருக்கும் புள்ளிவிவரமாக 55,000 பேருக்கு ஒரு மருத்துவமனைதான் இருக்கிறது என்றும் பத்தாயிரம் பேருக்கு 8 டாக்டர்கள் தான் இருக்கின்றனர் என்றும் சொல்லப்பட்டு உள்ளது. அதுவே அதிகம் உயிர் சேதமான இத்தாலியில் 41 மருத்துவர்கள் என்றும் கொரியாவில் (அனேகமாக இது தென்கொரியாவாக இருக்கும்) ஏன் எனில் வடகொரியாவில் ஒருவரும் பாதிக்கப்பட வில்லை என்றும் செய்திகள் வெளிவரவில்லை என்றும் இருப்பதால், அங்கு 71 மருத்துவர்கள் இருக்கின்றனர் என்றும் அதற்கு மேலும் பரிசோதனைக்கான கருவிகளே போதுமான அளவில் இல்லை என்றும் வெளிப்படையான செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்னும் இதற்கு மேலும் எத்தனை உள்ளே வெளியே தெரியாத குறைபாடுகள் உள்ளனவோ...
T.G.R.S.MANIAM
S/O KAVIGNAR THANIGAI.
                                                TGRS.MANIAM WITH HIS MOTHER
நல்ல தலைமை என்பது முன் மாதிரியாக விளங்குவது, ஆற்றோட்டத்தில் கலந்து நாம் சென்றுவிடுவதல்ல.
சீனாவை அச்சுறுத்தத் துவங்கும்போதே நாம் விழித்திருக்க வேண்டும்...அப்படி அதற்கான நடவடிக்கைகளாக வெளி நாட்டிலிருந்து வந்தாரை நமது மக்கள் சமூகத்தில் ஊடுருவ விடாமல் அவர்க்கு எனத் தனியாக விமானநிலையங்கள் சார்ந்தே தனிமைப்படுத்தி இருந்திருந்தால் அல்லது அவர்களை வரவிடாமலேயே செய்திருந்தால் இனி வரப்போகும் ஆபத்துகளை தவிர்த்திருக்கலாம்.

நான் பல இடங்களில் குறிப்பிட்டிருப்பது போல என் போன்றோர்க்கு எல்லாம் இந்த வாழ்க்கை இயற்கை அளித்த வரையறைகளை மீறிய கொடை. ஊதியத்துக்கும் மேல் போனஸ் அதாவது நல்ல பணியாற்றியமைக்காக எனக்கு கொடுக்கப்பட்ட பரிசுத் தொகையான வாழ் நாள் நீட்டிப்பு.

நிறைய களங்களைக் கண்டிருக்கிறேன்
நிறைய தளங்களைத் தாண்டி வந்திருக்கிறேன், வளர்ந்திருக்கிறேன்
என்னிடம் நிறைய பக்கங்கள் கோணங்கள் உண்டு
அத்தனையும் ஒவ்வொரு மனிதருக்கும் வாய்த்திருக்குமா என்றால் அது அரிதே.

ஆனால் என் நினைவுக்கெட்டிய வரையில் எவரையும் ஏமாற்றியதில்லை
எனக்கு நினைத்துப் பார்க்க இந்த நாளில் நிறைய பேர் உண்டு.
பெற்றோர், சகோதர சகோதரிகள், உறவுகள் , நட்பு இப்படி என்னிடமும் ஒரு வட்டம் உண்டு.


அவர்கள் யாவரையும் நினைத்து அவர்கள் குடும்பம் குலம் யாவும் தழைத்தோங்க இந்த எனக்குரிய முக்கியமான நாளில் எல்லாம் வல்ல இயற்கையை பிரார்த்திக்கிறேன்.

அனைவர்க்கும் என் வணக்கங்களும் நன்றியும்!

முடியவே முடியாது
என்ற
என் களங்களில்தான்
என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது

செடி காத்திருக்கிறது
அது
மறுபடியும் பூக்கும்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment