Monday, March 23, 2020

விசுவுக்கு விடை கொடுக்கிறேன் : கவிஞர் தணிகை

2000 ஆம் ஆண்டில் தாரமங்களத்தில் ஒரு அரட்டை அரங்கம் அதில் நானும் இடம் பெற்றேன். எனது பேச்சை எடிட் செய்ய முடியவில்லை என்றார் விசுவின் அரட்டை அரங்க தயாரிப்புக் குழுவில் முதலாம் உதவியாளராக இருந்த பி.எஸ்.என்.எல் பணியாளராக இருந்த உதயம் ராம்.
Image result for visu and arattai arangam team members
சில நிமிடங்கள் இரு முறையாக எனது உரை வீச்சும் இடம் பெற்றிருந்தது அந்த ஒளிபரப்பில். அதில் பள்ளிகள் உள்ள அதே எண்ணிக்கையில்தானே  சொல்லப் போனால் அதை விட அதிக எண்ணிக்கையில் தானே கல்லூரிகள் இருக்க வேண்டும். ஏன் அவ்வாறு இல்லை? பள்ளியில் படிக்கும் அதே எண்ணிக்கை மாணவ மாணவியர் எங்கு செல்கிறார்கள்? இடையில் என்ன ஆகிறது? என்று ஒரு கல்வித்தளத்தின் அடிப்படையை அசைக்கிற மாதிரியான ஒரு கேள்வியை முன் வைத்தேன்.

அந்த நாளில் தேர்வு பெற்ற பேச்சாளர்க்கு சில மாதங்கள் கணினி பயிற்சி இலவசமாகத் தருவதாக ஒரு தாரமங்களத்தில் இருந்த கணினி பயிற்சியகம் உறுதி கொடுத்தது. ஆனால் அதை நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

தற்போது அகடவிகடம் ராஜ் தொலைக்காட்சியில் நடத்தி வரும் பாஸ்கர் ராஜ் அவருடைய உறவினர் என்று கேள்விப்பட்டேன். அப்போதே தலையில் கைக்குட்டை எல்லாம் கட்டிக் கொண்டு படு சுறு சுறுப்பாய் இயங்குவார் அந்தக் குழுவில் அவர் தனித்தன்மையுடன் இருப்பார்.

கொஞ்ச நாளில் அவர் தனியாக பிரிந்து வந்து துணிச்சலுடன் ராஜ் தொலைக்காட்சியில் அகடவிகடம் என ஒரு பேச்சரங்கை ஆரம்பித்து இன்று வரை நடத்தி வருகிறார். அவர் நடத்திய பவானி அகடவிகடம் நிகழ்வில் நடிகர் சந்திரசேகர், வி.ஜி.பி. சகோதரர்களில் வி.ஜி.பி. செல்வராஜ் மற்றொரு ஜோஸ்யர் ஆகியோருடன் நிகழ்வை அப்துல் காதிரும் இருந்து பேசி நடத்தி வைத்தார். அதிலும் நான் கலந்து கொண்டு தேர்வு பெற்று பேசி இருந்தேன். அப்துல் காதிர் என்னுடைய பேச்சை மிக உயர்ந்த பேச்சு எனப் பாராட்டியது இன்று சொல்லியது போல் மறக்க முடியாமல் இருக்கிறது. தாரமங்களத்தில் பாஸ்கர் ராஜ் எனது முழுப் பேச்சையுமே கேட்காமல் ஒரே பாய்ன்ட்டில் முடித்துவிட்டு அரட்டை அரங்க நிகழ்ச்சிக்கு தனது இடது கை கட்டை விரலை தூக்கி காண்பித்து போதும் நீங்கள் தேர்வாகிவிட்டீர் என முடிக்கச் சொல்லி விட்டார் நான் மேலும் பேச முயன்றபோதும் மேலும் பாஸ்கர் ராஜ் பவானி அகட விகடத்தில் பேசிய பின்  விசுவின் குழுவினர் தங்களது குழுவின் அரட்டை அரங்கத்தில் பேசித் தேர்வாக மறுமுறை முயன்றபோது வேண்டாத உளவாளியை பார்ப்பது போல பார்த்தது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. ....
Image result for visu and arattai arangam team members
விசுவை விட்டு எங்கோ சென்றுவிட்டேன்...அந்த குழுவில் இடம் பெற்றிருந்த ஒரு வெண்ணிற வேட்டி, வெண்ணிற முழுக்கை சட்டை மட்டுமே அணியும் வழக்கத்துடன் இருந்த ஒரு தேர்வாளர் அல்லது உதவியாளர் குறுகிய நாளில் இயற்கை எய்திவிட்டார். அவர் என்ன செய்தார் என்றால் அவர் தமது குழுவில் பேசிய அனைவரையுமே ஒரு முறை தேர்வு செய்து விட்டார்.  He is basically a Tamil profession Teacher.

எப்படியோ நாலைந்து சுற்றுகள் முடிவில் தேர்வாகி ஒத்திகை  விசு வந்து அப்போதெல்லாம் பயங்கர பந்தா. பெரிய இயக்குனர். சன்டிவியில் முக்கியமான வி.ஐ.பி நிகழ்வு. அந்த அரட்டை அரங்கு மூலம் நிறைய சேவை எல்லாம் நடந்தது. இறுதித் தேர்விலும் நான் தேர்வாகி ஒளிப்பதிவுக்கு செல்ல பெயர் படிக்கப் பட்டேன். பாரதியின் வரிகளை : தேடிச் சோறு நிதம் தின்று...சொல்லி விட்டு கருப்பொருளைத் தொட்டேன் அதற்கு இவ்வளவு நேரமா என்றார்...எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில், மின்னலாக கூர்மையான வார்த்தையுடன் அவர்களுக்கு ஒரு ரிதமாக இருக்க வேண்டும்.
Image result for visu and arattai arangam team members
அவர்கள் நவரசத்தையும் சினிமாவில் இருப்பது போல பேச்சரங்கிலும் இருக்குமாரு பார்த்துக் கொண்டார்கள். நான் அதற்கு முன் டிசம்பர் 25 கிறிஸ்மஸ் இரவில் சாலையில் படுத்துறங்கி போர்வை இன்றி சிரமப்படும் பிச்சைக்காரர்களுக்கு எவரும் துணை வராமல் போர்வை கொடுத்து வந்து வீட்டருகே ஜல்லிக் கற்கள் சரித்து விழுந்து இடது கை முழங்கை மூட்டை இடம் பெயர்ந்திருந்ததற்கு கட்டு வேறு போட்டுக் கொண்டிருந்தேன். அந்தக் கட்டுடனேயே தாரமங்களத்து அரட்டை அரங்கத்தில் பேச தேர்வு செய்யப்பட்டேன்.

விசு எனக்கு சில முறை கடிதங்கள் எழுதியிருந்தார் எனது கடிதத்திற்கு பதிலாக. அதில் அவரது கடித தலைப்பில்  LITTLE THINGKS MAKES PERFECTION BUT PERFECTION IS NOT A LITTLE THING.லிட்டில் திங்க்ஸ் மேக்ஸ் பர்பக்சன், பட் பர்பக்சன் இஸ் நாட் லிட்டில் திங் என்று போட்டிருந்தது எனக்கு வாழ்நாள் எல்லாம் மறக்க முடியா தூண்டு உணர்வை தந்தது. முதன் முதலில் அந்த வாசகத்தை அந்த கடித தலைப்பில் இருந்துதான் கண்டு எடுத்துக் கொண்டிருந்தேன். எனது புத்தகங்கள் கூட அவருக்கு கொடுத்திருக்கிறேன் என்ற நினைவு.
Image result for baskar raj tv
எனக்கும் அவருக்கும் இரண்டு கடிதம் நன்கமைந்திருந்தது. 3 வது கடிதம் நான் எழுதிய விமர்சனப் போக்கிற்கு பதிலாக அவர்களது தரப்பை நியாயப் படுத்தி அப்படி எல்லாம் இல்லையே...என்றவாறு எழுதி இருந்தார்.
அவர் அந்த ஒளிப்பதிவை, ஒளிப்பதிவை என்ன வேண்டுமானலும் செய்து வெற்றியடைய வைக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார். அதற்காக எப்படி வேண்டுமானாலும் இயங்குவார் என்பது தெரிந்தது.

நான் அவருக்கு மடங்குபவனாக இல்லை. அந்த மனப்பாங்கை மாற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும் என அவரது வேறொரு உதவியாளர் வழியே சொல்லியும் பார்த்தார்கள்...அதன் பின் தலைவாசல் ஒளிபரப்பு ஒன்றுக்கு அவர்களாகவே கடிதம் எழுதி அழைத்தார்கள்...அதிலும் எனக்கும் ஒரு சுற்றின் தேர்வுக் குழுவின் தலைவருக்கும் ஏக விவாதம்..விவாதம் இல்லாமல் மடங்கிப் போனால் தான் அந்தக் குழுவில் தேர்வாக முடியும் என்பது ஒரு இரகசிய விதி...

மேலும் சேலம் நிகழ்ச்சி ஒன்றின் போது 3 அல்லது 4 ஆம் சுற்றில் எளிமையான ஆடையுடன் இருந்தால் மட்டும் தேர்வாக வாய்ப்பு இதெல்லாம் அவர்கள் சொல்லாமலே சில இரகசிய விதிகளாக கடைப் பிடித்தார்கள்...மேலும் நான் பாஸ்கரராஜ் நிகழ்வில் பேசி இருந்ததை மறவாமல் இருந்ததால் மற்றொரு பேச்சாள என்னை விட வயதில் குறைந்த ஆற்றலிலும் குறைந்த வேடிக்கை காட்டும் ஒரு நபரை வைத்து என்னுடனேயே இருக்க வைத்து எனது கருத்துகளை எல்லாம் எடுத்துக் கொண்டு என்னை விலக்கி விட்டு தகுதியில் ஒப்பிட்டால் என்னை விட தகுதிக் குறைவான அந்த நபரை தேர்வு செய்தார்கள். காரணம் என்ன எனப் பார்த்தால் ஒளிப்பதிவுக்கும் பின் ஒளிபரப்பில் அந்தப் பேச்சாளரை மட்டை அடி அடித்து அமர வைத்தார் விசு... மொத்தத்தில் புகழ் என்பதும் வெற்றி என்பதும் நிகழ்ச்சியை நோக்கியதாய் நிகழ்ச்சியின் வெற்றியை நோக்கியதாய் அவரை நோக்கியே குவியப் படுத்தப் படல் வேண்டும் என்பதில் கவனமும் அக்கறையுடனும் அந்த ஒருங்கிணைப்புக் குழுவும் அணியும் பணி புரிந்து வந்தது.

அவர்கள் கொடுத்த சான்றிதழ் இன்னும் இருக்கிறது. பாஸ்கரராஜ் அதை விட ஒரு படி மேல் போய் போட்டோவுடன் பேசுவதை லேமினேட் செய்தே சான்றிதழ் கொடுக்க ஆரம்பித்து விட்டார். அவரும் புதுக்கோட்டை நிகழ்ச்சிக்கு அழைத்தார் அப்போது அது அந்த தூரம் உடல் நிலை சாத்தியப் படாததால் அந்த நிகழ்வில் என்னால் கலந்து கொள்ள முடியாது போனது.அவரும் எனது பாலியல் விழிப்புணர்வு நூலை அளவுக்கு மிஞ்சினால் என்பதை பெற்று அது பற்றி செல்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அதன் முக்கியத்துவம் சிறப்பு பற்றி பாராட்டினார்.

விசு சன் டிவியிலிருந்து ஆளும் கட்சியாக அம்மாவின் பக்கம் சார்ந்து ஜெயா டிவிக்கு வந்து நிகழ்ச்சி ஆரம்பித்து நடத்தி வர ஆரம்பித்திருந்தார். அதன் பின் அவருக்கும் என் போன்றோர்க்கும் எந்தவித தொடர்பும் இல்லாது போயிற்று. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்...
Image result for visu and arattai arangam team members
விசுவுக்கு விடை கொடுக்கிறேன் : கவிஞர் தணிகை

2 comments: