Thursday, March 12, 2020

உயிர் எனப் படுவது யாதெனின்: கவிஞர் தணிகை

உயிர் எனப் படுவது யாதெனின்: கவிஞர் தணிகை

Image result for life and soul is not visible

நாய் வளர்ப்பு என்பது முன்னால் தலைமுறையிடமிருந்து எனக்கு வந்தது. பல வகையான நாய்களை வளர்த்திய பின் தற்போது ஒரு நாட்டு நாயை வீட்டு நாயாக வளர்த்தி வருகிறோம்

 வளர்த்தி வருகிறோம் எனில் அதன் பால் அக்கறை செலுத்த ஒருவருமில்லை. அவரவர்க்கு அவரவர் பணி. உணவு அளிப்பது  எப்போதாவது குளிக்க வைப்பது அதன் கழிவுகளை அகற்றுவது மட்டுமே நான்  செய்து வருவது.

அதை நடைப் பயிற்சி செய்ய வைக்கவோ, அல்லது அதன் பால் அக்கறை கொண்டு வீட்டை விட்டு வெளியே அனுப்பவோ நடைமுறைச் சிக்கல். எனவே

நாய் அதன் காலம் முடிந்தாற்போல உடலில் உரோமம் இழந்து உடல் எல்லாம் தளர்ந்து, சிவந்து கண்கள் பொங்க சோர்ந்து இறந்துவிடும் தருவாயில் இருக்க....

அதை கருணைக் கொலை எப்படி செய்வது என யோசிக்க ஆரம்பித்தோம். ஒரு சில நண்பர்கள் எர்த் ஒயர் இல்லாமல் சப்ளை ஒயரை மட்டும் கொடுத்து அதன் கழுத்து இரும்பு செயினில் மாட்டி விட்டால் ஒரு நொடியில் இறந்து விடும் என்றார்கள்.

சிலர் வளத்த நாயை அடித்துக் கொல்வதே சிறந்தது என்றார்கள்.

மகன் மருந்துக் கடையில் விஷக் கொல்லி வாங்கி அதை உணவில் அல்லது பாலில் வைத்து விடுவதே எளிய வழி என வாங்கி வந்து அவனது தாயிடம் கொடுத்து வைத்தான்.

அதற்கும் முன் இரண்டு வைத்தியங்கள் பார்த்தோம். ஒன்று ஒரே டோஸ் போதும் என சில மாத்திரைகள் , அதன் பின் வாரம் ஒன்று என 3 மாத்திரைகள் எல்லாம் கொடுத்துப் பார்த்து தேறுகிறதா என்று பார்த்தோம்.
Image result for life and soul is not visible
அதைக் கொல்ல மனம் வராமல் அது தேறுவது போல என ஆறுதலுடன் இருந்தோம். மேலும் அதற்கு வாரா வாரம் குளிக்க வைத்து வேறு நாய்க்கு வாங்கி வைத்த நோட்டிக்ஸ் பவுடரை தெளித்து வைத்தேன் அடிக்கடி.

மறுபடியும் மங்க ஆரம்பித்த பின் துணைவியார் அந்த மருந்தை அது ஒரு பூச்சிக் கொல்லி மருந்தாம் கலந்து சாப்பாட்டில் வைத்துப் பார்த்தார். அவளை அது ஒரு ஏக்கமாகப் பார்த்துவிட்டு அந்த உணவை தொடவே இல்லை.

அதில் இருந்த உணவில் கலந்திருந்த பிஸ்கட் துணுக்குகளை, துண்டுகளை எடுத்து மட்டும் சாப்பிட்டது.
Image result for life and soul is not visible
சாப்பிட்ட பின் வாந்தியும் எடுத்தது. ஒரு  ஆச்சிரியம் என்ன வென்றால் முன்பு இருந்ததற்கு மாறாக அந்த நாய் இப்போது உடல் அளவில் தேறி நன்றாக செயல்பட ஆரம்பித்து விட்டது.

தெளிவடைந்து விட்டது. இன்னும் கொஞ்ச காலம் வாழ்வை நீட்டித்துக் கொண்டது. இருக்கும் வரை இருக்கட்டும்,அதுவாக இறக்கும் வரை இருக்கட்டும் என்ற எனது முன்னால் செய்த முடிவை மறுபடியும் உறுதிப்படுத்திக் கொண்டேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment