Friday, March 20, 2020

எழுதாத கவிதைகள்: கவிஞர் தணிகை.

அது ஒரு மணி நேரம் முதல் ஒன்னரை மணி நேரம் பிடிக்கும் ஒரு பயணம். அதில் சுமார் அரை மணி நேரம் போய்விட்டது. சுங்கச் சாவடி வந்து சேர்ந்து விட்டது . அது ஒரு பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரி முனையம். .
Image result for marubadiyumpookkum.blogspot.com



கல்லூரி மாணவர்களும், அதன் ஆசிரியர்களுமாகக் கூட இருக்கலாம் அல்லது முதுகலை மாணவ மாணவியர் முனைவர் எனப் படிக்கும் நபர்களாகவும் இருக்கும் சிறிய பெரிய பெண்கள் எல்லாம்  பேருந்தில் இருக்கை இல்லை என்றாலும் ஏறினர்.

அதில் சேரனின் ஆட்டோகிராப்பில்  குறிப்பிட்டது போல ஒரு கேரளத்து சிவந்த பெண், வலது கையில் மெட்டல் செயின் அணிந்த வாட்ச்,பை, காதில் ஹியரிங் ஒயர், செல், சேலை நன்றாகவே இருக்கும் ரகம்.

சிறிது நேரம் நின்றபடி பயணம். அப்போதும் செல்போன் காட்சிகள் அவளுக்குத் துணையாக இருந்தது. அதன் பிறகு சிறிது நேரம் கழித்து...

அவனது இருவரது இருக்கையில் இருந்த மற்றொரு நபர் இறங்கி விட்டார். அவள் வந்து அமர்ந்து கொண்டாள்.இருவரது ஆடையுள் இருந்த தொடையும் தொட்டுக் கொண்டிருக்க வேண்டிய நிர்பந்தம். அவனது அமைதி அவனைச் சுட்டது.
Image result for marubadiyumpookkum.blogspot.com
இப்போதெல்லாம் இருக்கையில் ஆணுடன் பெண் வந்து அமர்ந்து செல்வது பெரும் பாவமாக கருதப்படுவதில்லை.

அவள் கமல் நடத்திய வீணாய்ப் போன பிக் பாஸ் போன எபிசோட்டை அப்போதுதான் புதிதாகப் பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தாள்

சிறிது நேரம் கழித்து பின் பக்க இருவர் இருக்கை ஒன்றும் காலியாக அவள் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டாள் , அவன் இறங்குமிடம் வந்தவுடன் இறங்கிக் கொண்டான் இருவரது வாழ்வும் தனித் தனியாகப் பிரிந்து போனது. நடந்தது அவ்வளவுதான். அதை விட்டு விட்டு வாழ வேண்டியதுதானே வாழ்க்கை...

ஆனால் அவன் அவளுடன் பேச நினைத்தது எல்லாம் என்ன வெனில், நீங்கள் யார், மாணவியா, ஆசிரியரா, எந்தக் கல்லூரி, நான் யார் என்றால்...இப்படி இருவரும் அருகருகே அமர்ந்த பின்னும் பேருந்துகளிலும், விமானங்களிலும், தொடர்வண்டிகளிலும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் அனுபவம் பகிர்வுச் செய்து கொள்வதில் ஆர்வம் கொள்ளாமல் அமைதியாக இருப்பதும் தேவையில்லாத மௌனம் காப்பதும் இரத்தமும் சதையும் உயிருமாக இருக்கும் ஒருவரை ஒருவர் சட்டை செய்யாமல் பயணங்கள் செய்து முடிப்பதும் இயற்கைக்கே பொருந்தாத செயலாயிற்றே...

ஏன் இந்த மனித குலம் இப்படி மானமிழந்து  மதி அழிந்து போயிற்று...ஏன் இத்தனை வஞ்சனைகள், கொடூரங்கள் புலைத்தனங்கள் ஏன் இத்தனை சூது வாதுகள்...எந்த வழியிலிருந்தாவது கற்பழிக்கும் கொலைகாரர்கள் தோன்றி தூக்கு தண்டனை கைதிகளாகி, தந்தைகளே மகள்களைப் புணரத் தலைப்பட்டு வன்புணர்ச்சி செய்து அதை மகளே காவல் நிலையம் வரை சென்று என்ன இப்படி ஆகிப் போனது இந்த இனம்... ஏன் இப்படி ஒருவர்க்கொருவர் பேசித் தெரிந்து கொள்ள முடியாமல் கூட தடுத்து வைத்திருக்கிறது. அதனால் என்ன என்ன வம்பு வந்து விடுமோ என்ற தடைகளுடனும் அதனால் எத்தனை பேரிடர்களும் பெரும்பழிகளும், திருப்பங்களும் வந்து வாழ்வே முடைகளாகிவிடுமோ என்ற பயத்துடன் அல்லது எச்சரிக்கையுடனேயே  போய்க் கொண்டே இருக்கிறதே.... பாவங்களை

மேலும் இப்போதெல்லாம் யாரிடமும், பேரோ, ஊரோ , அந்த மனிதரைப் பற்றியோ கூட தெரிந்து கொள்ள அவசியமில்லாது போனது பற்றி இவனுக்கும் வருத்தம் குறைய ஆரம்பித்து விட்டது....ஏன் எனில் அவரைப்பற்றி அறிந்து கொண்டு அதன் பின் அவர்கள் திடீரென இறந்து போக அந்தப் பிரிவை அந்த அதிர்ச்சியை, அந்த நம்ப மறுக்கும் மனதை நினைவை இழுத்துப் பிடிக்கவே முடிவதில்லை...இயற்கையின் கைகள் மேன் மேலும் எழுதிச் செல்ல அவனது இறங்கும் இடம் நெருங்கிய படியே இருக்கிறது...
Image result for marubadiyumpookkum.blogspot.com
 எனவே எவரிடமும் இப்போது பேர் என்ன என்பதைக் கூட கேட்க எண்ணம் முளைவிடுவதில்லை... அது அவன் அவள் எல்லாம் அப்படியே போகட்டும்... ஆனால் இவனைப்பற்றி இவனது அனுபவம் பற்றி அது பிறர்க்கு பெரிதும் ஊக்கமாய், பயன்பாடாய் ஆகும் அவர்க்கு என்பது பற்றி இவனிடம் இன்னும் நம்பிக்கை இருக்கிறது. அவன் இன்னும் பயன்படுவான் நிறைய மனிதர்க்கு, நிறைய உயிர்களுக்கு பயன்படுவான்.

நரைக்கும் பின்னே என்ன இருக்கிறது, அதை அடுத்து என்ன வண்ணம் மாறி விடப் போகிறது...கேட்பவர்க்குச் சொல்வதும், மாற்றங்கள் செய்வதுமன்றி...
Image result for marubadiyumpookkum.blogspot.com
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

எழுதாத கவிதைகள்: கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment