Sunday, March 8, 2020

கே.டி யும் சில்லுக் கருப்பட்டியும்: கவிஞர் தணிகை

கே.டி யும் சில்லுக் கருப்பட்டியும்: கவிஞர் தணிகை
Image result for sillu karupatti

சில்லுக் கருப்பட்டி படம் பார்த்த போதே அதைப் பற்றி எழுத நினைத்தேன் உங்களுடன் பகிர நினைத்தேன் ஆனால் அது அப்போது கை கூடி வரவில்லை. இப்போது கே.டி என்கிற கருப்பு துரையைப் பார்த்த பிறகு இரண்டைப் பற்றியும் இரண்டொரு வரிகளாவது எழுதியே தீரவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது

பிங்க் (இளஞ்சிவப்பு ) பை /பேக்,
2. காக்காக் கடி
3. ஆமைகள் டர்ட்டில்ஸ்
4. ஹே அம்மு
Image result for sillu karupatti
என்கிற 4 சிறுகதைகளை அப்படியே கதை படிக்கும் உணர்விலிருந்து கொஞ்சம் கூடக் குறையாமல் படமாக்கியிருக்கின்றனர். ஒரு சேரிப்பகுதியில் ஒர் பிளாஸ்டிக் குப்பைக் காட்டிலிருந்து படம் ஆரம்பித்து வெகு இயல்பாக நகர்கிறது. கொஞ்சம் கூட நடிப்புத் தெரியாத இயல்பான படக் காட்சிகள். பிரபலமான நடிகர்கள் என்று சொன்னால் அது ஹே அம்முவில் வரும் சமுத்திரக் கனியும், சுனைனா மட்டுமே.
மிக அழகாக கொஞ்சம் கூட முரண்கள் இல்லாமல் வெகு இயல்பாக அந்தக் கதைகள் கோர்க்கப்பட்டிருக்கின்றன. இதை எல்லாம் பார்க்கும்போது தமிழ் சினிமா நல்ல பயணத்தின் பாதைக்கு வந்த நேர்த்தி தெரிகிறது. இவர்கள் இலாப நோக்குடன் செய்தார்களா அல்லது ஆத்ம திருப்திக்காக செய்தார்களா என்பது படத்தைப் பார்ப்பவர்க்கு நன்கு தெரிகிறது.

ஹே அம்முவில் அந்த சிறுவன் சொல்கிறான்: அய்யோ அப்பா நான் இன்னும் தூங்கவே இல்லப்பா என்று நினைவில்  நகைச்சுவையாக நின்று போய்விடுகிறது.

ஸ்க்ரோட்டம் பகுதியில் வந்து விடும் நோயால் அவதிப்படும் ஒரு இளைஞர்  அவருக்கு உதவிடும் இயல்பான பெண் தோழி...

வயதான காலத்தின் துணை தேடும் காதல்...டர்ட்டில்...இப்படி எல்லாமே சிறிது நேர கால அவகாசத்துள்ளே நமது மனதில் இடம் பிடித்து விடுகின்றன‌

இதை எல்லாம் பேசுவதை விட பார்த்து அனுபவித்து விட வேண்டும்...பனங்கருப்பட்டியை கொஞ்சம் சில்லாக உடைத்து வாயில் போட்டு இனிப்பு கரைய ஊற வைப்பது போல...நல் நினைவை பதிய வைக்கும் படம்.
Image result for sillu karupatti
கே.டி. என்கிற கருப்பு துரை:

சொல்லவே வேண்டாம்... மு. ராமசாமி என்ற பெரியவரும் நாகவிசால் என்ற சிறுவனும் நூலும் பாவுமாக பின்னி நம்மையும் இணைத்துக் கொள்கிறார்கள். இணைத்துச் செல்கிறார்கள். மதுமிதா இந்த படத்துக்காக சிறந்த இயக்குனராக அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சிறந்த ஆசிய பட விழாவில் 2019ல் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சரியான தேர்வு.

அந்த நாக விசால் என்ற சிறுவனும் ஜக்ரான் என்ற இந்தியப் படவிழாவின் விருதை பெற்றுள்ளான் . கொடுத்துத்தானே ஆக வேண்டும்.
Image result for kedi  karuppudurai movie
 முதியவர்களுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி இளநி கொடுத்து கொல்லும் பழக்கம் முட்டாள்தனமானது இது இன்னும் சில இடங்களில் உண்டு. கோமா நிலையில் இருக்கும் கருப்பு துரை மிக நல்ல முயற்சி உள்ள அடையாளமுள்ள மனிதர் அவரது குடும்பத்தில் கடைக்குட்டிப் பெண் தவிர மீதம் உள்ள அத்தனை பேரும் அந்தப் பெரியவரை முடித்து விட நினைக்க அவர் கோமாவிலிருந்து விழிப்பு பெற்று அவர்கள் திட்டம் அறிந்து வீட்டை விட்டு புறப்பட்டு விடுகிறார் அவருடன் கதையும் புறப்படுகிறது நாமும் அத்துடன் பயணம் செய்ய ஆரம்பித்து விடுகிறோம்

தமிழ் பட வரலாற்றில் இது போன்ற படங்கள் எல்லாம் பேர் சொல்ல வேண்டும். வர வர வேண்டும் இன்னும் இத் போல பல படங்கள்....
Image result for kedi  karuppudurai movie
ஒரு ரஜினியின் படத்துக்கு ஆகும் செலவில் இது போல நூறு படங்கள் எடுத்து விடலாம். அது போல தர்பார் ஓடவில்லை 60 சதம் திரும்பத் தரவேண்டும் என விநியோகஸ்தர் எல்லாம் ரஜினி வீட்டை சென்று கேட்பதற்கு பதிலாக இது போன்ற படங்களைச் செய்யலாம். ஒன்றும் அறிமுகமான முகம் என்று பெரியதாக ஒன்றுமில்லை இந்த மு.ராமசாமி பெரியவர் மட்டும் பருத்தி வீரனில் ஒரு காட்சியில் பாடுவார் பாருங்கள் அது போல இருந்தவர்க்கு முழு படமும் அல்வா சாப்பிடுவது போல இவரும் நாக விசால் என்ற சிறுவனும் ஒருவர்க்கொருவர் சளைக்காமல் நடித்து நமக்கெல்லாம் ஒரு நல்ல அரிய காட்சி விருந்தை வழங்கி இருக்கிறார்கள்

மிக அருமையான கதை, நேரம் போவதே தெரியாமல் இவர்களுடன் பயணம் செய்கிறோம். பிரியாணி சாப்பிடுகிறோம் நாம் சைவமாக இருந்தபோதும் இவர் சாப்பிடும்போது நாமும் சாப்பிடுவது போல...இவர்கள் கூத்து கட்டும்போது நாமும் கட்டுகிறோம். இவர்கள் அழும்போது நாமும் அழுகிறோம். சிரிக்கும்போது சிரிக்கிறோம் இப்படி படத்துடன் நம்மை பின்னி வைத்து விட்டார்கள் இயக்குனர், ஒளிப்பதிவாளர்,இசையமைப்பாளர் தயாரிப்பாளர் எல்லாமே...

தமிழ் சினிமாவுக்கு இது போன்ற சளைக்காத களைக்காத பல படங்கள் மதுமிதாவிடமிருந்து வரட்டும் வாழ்த்துகள். தெய்வம், இயற்கை நன்மை செய்யட்டும்.
Image result for kedi  karuppudurai movie
பார்க்காதவர்கள் இது போன்ற படங்களைத் தேடிப் பாருங்கள்...கண்ட கண்ட வெறித்தனங்களுள் மூழ்கி விடாமல்.

இது போன்ற படங்களை எனக்குத் தேர்வு செய்து பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் இளைஞர் த.க.ரா.சு.மணியத்துக்கு நன்றி.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment