Tuesday, March 31, 2020

4 ஆண்டுகள் நிறைந்து விட்டன: கவிஞர் தணிகை

4 ஆண்டுகள் நிறைந்து விட்டன: கவிஞர் தணிகை

Vinayaka Mission Sankarachariyar Dental College, Ariyanur ...

எனது வாழ்வின் முறை மாறி 4 ஆண்டுகள் நிறைந்து விட்டன. நாளை ஏப்ரல் 1 வரும் போது எனது கல்லூரிப் பயணத்தில்  4 ஆண்டு முடிந்து 5 ஆம் ஆண்டு ஆரம்பிக்கிறது.இதே போல 2016 ஏப்ரல் 1 ஆம் தேதிதான் நான் அந்தக் கல்லூரியில் சேர்ந்த முதல் பணி நாள்

அன்றைய தினம்தான் மகன் மணியம் தனது மேனிலைப் பள்ளியின் இறுதித் தேர்வை முடித்து வந்ததும்.

இது பற்றி ஒரு அறிக்கையை கல்லூரி ஆண்டு மலரிலும் எழுதியுள்ளேன் வெளியிட்டுள்ளார்கள். கடந்த ஆண்டு தியானப் பயிற்சி பற்றி எழுதியதை வெளியிட்டிருந்தனர். இந்த ஆண்டு வந்த நாள் முதல் இந்த நாள் வரை என்ற தலைப்பின் கீழ் கல்லூரி சேர்ந்த அனுபவம் பற்றிக் குறிப்பிட்டு எழுதி உள்ளேன்.

இந்த கொரானா அலை ஆரம்பிப்பதற்கும் முன்பே அதன் முன் ஒரு வாரமாக எனக்கு பேருந்தில் கல்லூரி முடிந்து வருவதில் மனத் துன்பம் நேரிடுமளவு கூட்டம் இருந்தது. அதை உரியவரிடம் பகிர்ந்து கொண்டிருந்தேன்.

5 ஆம் ஆண்டு ஆரம்பம் இப்படி ஆரம்பித்துள்ளது
அது எப்படி மாறுகிறதென்று போகப் போகத்தான் தெரியும்

2020 கலாம் கண்ட கனவு காலத்தின் பிடியில் சுக்கு நூறாக அல்ல அணு அணுவாக சிதைந்து போனது
ஆனால் அவரது நினைவை ஏந்திய நபர்கள் உலகெங்கும் நல்ல பணிகளைத் தொடர்ந்து வருகின்றனர். ஆனால் அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து எடுத்து செல்லும் மாபெரும் உலகத் தலைமை ஒன்று வேண்டும்.

அந்த அளவு தகுதி உள்ள தலைமை கிடைத்திடுமா? அல்லது கிடைப்பதை அப்படி நாம் எடுத்துக் கொள்ள வேண்டுமா?

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment