Saturday, November 17, 2018

பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல் மேல் ஒரு கோடு பற்றி பேசியே ஆக வேண்டும்: கவிஞர் தணிகை

பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல் மேல் ஒரு கோடு பற்றி பேசியே ஆக வேண்டும்: கவிஞர் தணிகை

Image result for pariyerum perumal


3.5 கோடி செலவில் எடுக்கப்பட்டு செப்.28 ல் வெளியிடப்பட்ட இந்தப் படத்தைப்பற்றி ஏன் இப்போது பேச வேண்டும் என்கிறீர்களா? காரணம் இருக்கிறது. இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என முடிவு செய்து அது எனக்காக பல நாட்கள் காத்திருந்தும் நேரமின்மையால் பார்க்க முடியாமலே இருந்து இரண்டு நாட்களுக்கும் முன் மழையின் காரணமாக கல்லூரி விடுமுறை விட்டதால் பார்த்தேன்...இரசித்தேன் என்றெல்லாம் சொல்லக் கூடாடத சமூக அவலத்தை அலசும் படம். இதைப் பற்றி இவ்வளவு காலதாமதத்திற்கும் பின் எழுத வேண்டுமா என இரண்டு நாட்கள் தள்ளிப் போட்ட பிறகும் அதை எழுதியே ஆக வேண்டும் என எனது எண்ணம் நெருடிக்கொண்டே இருந்ததால் இதை எழுதியே ஆக வேண்டி இருக்கிறது.


பா.இரஞ்சித் ரஜினி காந்தை வைத்து இரண்டு படம் எடுத்தவுடன் அவரும் பெரும் முதலாளியாகி இந்தப் படத்தின் தயாரிப்பாளாராகி 3. 5 கோடி செலவு செய்துள்ளார். இப்படித்தான் சங்கர் மற்றும் இன்ன பிற பிரபல இயக்குனர்களும் பெரிய பட்ஜெட் படங்கள் அவர்கள் செய்து கொண்டே தமது இளையவர்களுக்கு சிறிய பட்ஜெட் படத்தை எடுக்கும் வாய்ப்பைத் தந்து ஒரு கல்லில் சில மாங்காய்களை அடித்து விடுகிறார்கள்.

இந்த அரசியல், சினிமா இவை இரண்டுமே இவர்கள் கை முதல் இல்லாமலேயே அடுத்தவர் முதலை வைத்தே இவர்களை பணக்காரராகவும் பிரபலமடைந்தவர்களாகவும் மாற்றி விடுகிறது ஓரிரு சினிமா படங்கள் வெற்றி அடைந்தாலே போதுமானதாக இருக்கிறது.

எனவே இவர்கள் உண்மையிலேயே இது போன்ற கொள்கை நிறைவேறுதலுக்காக செய்ய முயற்சியை செய்து முனைகிறார்களா? அல்லது வியாபரத்தில் மூழ்கி திசை மாறி விடுகிறார்களா என்பதெல்லாம் இவர்கள் வாழ்வை முழுதும் பார்த்து ஆய்வு செய்ய வேண்டும் அம்சங்கள்

சரி படத்தைப் பற்றி சொல்ல வேண்டுமானால்: பாருங்கள். பார்த்து விடுங்கள். கௌரவக் கொலைகள், ரயில் ரோட்டில் கிடக்கும் உடல்கள் , காதல் சாதி பற்றிய பதிவை மனதை நிலை குலைய வைக்குமளவு உண்மையை சரியாக பதிய வைக்க காட்சிகள் எல்லாம் பிசிறில்லாமல் தெளிவாக விளக்கிச் சொல்கிறது ...சொல்கிறது இல்லை காட்டுகிறது.

முதலில் கருப்பி என்ற நாய், அத்துடன் மற்ற நாய்கள் அந்த புலியங்குளம் என்ற ஊர் அதில் ஒரு குட்டை அதில் நாய்களிக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே இருந்து சாதிய மோதல்களுடன் கதை ஆரம்பிக்கிறது...நன்றாக திட்டமிடப்பட்டு உழைத்து உருவாக்கிய கதை திரைக்கதை  அமைப்பு, சமுதாய மேடுபள்ளங்களின் தாக்கத்துடன் அதை நிரவி சமப்படுத்தும் முயற்சியில் அம்பேத்கரின் பங்கு பணி பற்றி கதை பின்னிப் பிணைந்து செல்கிறது.

கதிர், ஆனந்தி அதாவது பெரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல்: மேல் ஒரு கோடு அதாவது படித்து வருபவரான அவருக்கும் ஜோ என்னும்  ஜோதி மஹாலட்சுமி என்ற இருவர் வாழ்வைப் பற்றியும் முக்கியமாக கதை சுழன்றலும் இதில் பரியானின் தந்தையாக வரும் பெண் பிள்ளை வேடத்தில் வரும் கூத்துக் கலைஞரான வண்ணாரப் பேட்டை தங்கராஜ் என்பவரும், கராத்தே வெங்கடேசன் என்பவர் செய்துள்ள தாத்தா மேஸ்திரி ரோலும் மிக‌வும் கன கச்சிதமாக அமைந்துள்ளது.

மாரி செல்வராஜ் இயக்குனர் படத்தின் பாத்திரத்துக்கு நடிகரைத் தேர்வு செய்யும் பணியில் மிகவும் சரியாக தேர்வு செய்து இருக்கிறார். இது படமாக இல்லாமல் வாழ்வை படம் பிடித்து நாம் கண்ணில் காண முடியாத இது வரை யூகித்து மட்டுமே அறிந்து வந்தவற்றை காட்சிப்படுத்துகிறது...

நீச்சல் அடிக்கும் சிறுவனை கொல்வது, பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்யும் இளைஞரைக் கொல்வது, பெண்ணை மொட்டை அடிப்பது, அடிபட்டுக் கிடக்கும் பெண்ணைக் கொன்று தூக்கில் இட்டு தூக்கிட்டு தற்கொலை செய்வதாக  வெளியில் காட்டத் திட்டமிட்டு செயல்படுவது, எவருக்கும் சந்தேகம் இன்றி இயல்பான சாவாக இதெல்லாம் திட்டமிட்டு செய்யப்படுவது, அதன் செய்திகள் கடைசியாக பரியானிடம் தோற்ற பின் அவராகவே ரயில் முன் துணிச்சலுடன் அமர்ந்து சாவை ஏற்றுக் கொள்வது...பணத்துகாக இல்லை குலத்துக்காக இதை எல்லாம் செய்வது என்று சொல்வது இப்படி அந்த கராத்தே வெங்கடேசன் பெரியவரின் ரோல் மிகவும் பொருத்தமாக உள்ளது. எங்கிருந்துதான் இப்படி புதிய வில்லன்கள் புறப்படுகிறார்களோ...இவர் இனி நிறைய படங்களில் காணப்படுவார் என்று சொன்னால் மிகையாகாது.


Related image

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை எப்படி எல்லாம் கேலி கொடுமை எல்லாம் செய்ய முடியுமோ அப்படி செய்வதை வலுவாக பரியானின்தந்தையின்   வேட்டியை கழட்டி ஓடவிடுவது...இதெல்லாம் அனைவரையும் பாதிக்கும் விஷயங்கள்...

மேலும் நீரை பரியானும், மேஸ்திரி இருவருமே நீரை எடுத்து மோந்து குடிக்காமல் அப்படியே வாய் வைத்துக் குடிப்பது...நாயை வைத்து மிகையாகச் சொல்லப்படுகிறதோ என முன்பகுதியில் தோன்றினாலும் பின் பகுதி அந்தக் காட்சிகளின் தேவையை உணர்த்தி விடுகிறது.

பரியான் ஜோவை காதலிக்கிறானா இல்லையா என்று வெளிப்பாடே இல்லாதபோதும் அதைச் சுற்றி ஜோவின் குடும்பம் அவனை நிர்மூலமாக்கி, அவமானப்படுத்தி சின்னா பின்னமாக்கிவிட  அவன் அதிலிருந்து எப்படி மீள்கிறன் என்ன நினைக்கிறான் என்பதை எல்லாம் சொல்லி கதைக்கு கிளைமாக்ஸ் சொல்ல்ப்பட்ட விதம் மிகவும் நன்றாக அமைந்திருக்கிறது.

நல்ல உழைப்பைக் காண்பிக்கிறது... இது போன்ற படங்கள் சமுதாயத்தின் அடிப்படைத் தேவைகள் தாம் சாதி என்ற இல்லாத ஒரு கோட்டை அழிக்க...கேட்டை ஒழிக்க...

என்னதான் ஆனாலும் பெரியார், அம்பேத்கார் போன்றோர் முயன்றாலும் இதெல்லாம் அழியவே இல்லை பாருங்கள்...யோகிபாபு  தோழமை ஓரளவு எடுபடுகிறது... பல் குத்தும் காட்சிகள் வகுப்பறையில் ஏற்றுக் கொள்வ்தாக இல்லை ஆங்கில அறிவு கல்விக்கு அவசியமா எனப் படம் கேட்டிருக்கிறது...

மாரிமுத்து நல்ல தகப்பன் வேடம்...வைரமுத்துக்கு ஆதரவாக அவர் என்ன பெண்பிள்ளையைத்தானே அழைத்தார் ஆணை அழைத்திருந்தால் தான் அது அசிங்கம் அவமானம் என்று பேசியவர்...

கல்லூரி சுற்றியே கல்வி பற்றியே சட்டம் ஒழுங்கு நாடு சமுதாயம் என்றே படம் கொஞ்சம் கூட விறு விறுப்பு குறையாமல் படம் சொல்லப்பட்டது இயக்குனரின் வெற்றி...இல்லை யெனில் படம் ஒரு ஆவணப்படம் மாதிரியே அமைந்திருக்கும் சாதி ஒழிப்புக்கான சிறந்த படமாகத் தேர்வு செய்து இதற்கு வரி விலக்கு கொடுத்து அனைவர்க்கும் போய்ச் சேர எலலா ஊர்களிலும் திரையிட அரசு ஆவன செய்யலாம்.
Image result for pariyerum perumal
மொத்தத்தில் இந்தப் படம் அனைவருக்கும் போய்ச் சேரவேண்டும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.





2 comments:

  1. வழிப் போக்கனா? வலிப்போக்கனா! thanx for your feedback on this post. vanakkam.please keep contact

    ReplyDelete