Monday, November 12, 2018

மரண தண்டனை கொடுங்கள் மனிதப் பதர்களுக்கு: கவிஞர் தணிகை

மரண தண்டனை கொடுங்கள் மனிதப் பதர்களுக்கு: கவிஞர் தணிகை

Image result for harur rape case


அஹிம்சா மூர்த்தியான மகாத்மா கூட கற்பழிக்க வரும் மிருகத்தை எந்த ஆயுதம் வேண்டுமானாலும் எடுத்து வேட்டையாடலாம் என்ற பொருள்படும்படி கம்பு, நகம், ஏன் எந்தவித ஆய்தம் கொண்டு வேண்டுமானாலும் தாக்கலாம் எனச் சொல்லி உள்ளது இப்போது நினைவுக்கு.

அவரை இந்த நாட்டின் தேசப்பிதா என்று சொல்வது உண்மையானால் அரூர் கற்பழிப்பு வழக்கில் அந்த பெண் சாகக் காரணமான அந்த பதர்களுக்கு மரண தண்டனை அளிப்பதுதான் இனி இது போல் சம்பவம் நடவாதிருக்க ஒரு முன் உதாரணமாக இருக்கும்

சாதி, கட்சி, அரசியல், மதுபோதை, அத்துடன் அபின் கஞ்சா பான்பராக் போன்ற லாகிரி வஸ்துக்கள்,இலஞ்சம், ஊடகம் ,செல்பேசி நெட் கலாச்சாரம் போன்ற யாவுமே இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணம். மேலும் பெற்றோர் நட்பு உறவு சமூக அமைப்பு யாவும் கூட பின் வருவனவாகும்

அரசு நிர்வாகம் அதன் அமைப்புகள் யாவுமே இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கை சரியாக நிர்வகிக்க வேண்டுமானால் அதில் பணிபுரியும் அங்கங்கள் யாவும் சட்டம் ஒழுங்கை சாதிய , இலஞ்ச இலாவண்ய, மதுபோதைக்கு உள்ளடங்கியதாய் மாறக் கூடாது.

இங்கு அந்த சிறு பெண்ணை கற்பழித்த இரண்டு பேரில் ஒருவரின் அம்மா சந்து கடை எனப்படும் கள்ள மது விற்ப‌னையாளர் என்றும் அவரின் தொடர்பால்தான் ஆரம்பத்தில் அந்த வழக்கை கற்பழிக்கப்பட்டு மரணமடைந்த பெண்ணின் தந்தை கொடுத்த புகாரை எடுத்துக் கொள்ளாமல் அந்த இரண்டு விடலைகளையும் தப்பிக்க விட்டது என்றும்

மேலும் அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடமிருந்து ரூ. 4000 பெற்றுக் கொண்டும் அது கற்பழிப்புக் கேஸ் அல்ல என்றும் மேலும்  2000 பணம் கேட்டதாகவும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் கொடுத்த வாக்குமூலம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் மருத்துவமனையில் கூட அது கற்பழிப்பு இல்லை என்றே அரசு மருத்துவமனையில் காவல்துறை ஸ்டேட்மென்ட் கொடுத்ததாகவும் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆக இந்த வழக்கில் சாதிய மேலாண்மை, மதுவின் ஆதிக்கம், இலஞ்ச இலாவண்யம் எல்லாமே விளையாடி தலை தூக்கியுள்ளன. எனவே தொடர்புடைய இருவரின் தலையை தூக்கி விடுவதில் தவறு இல்லை. மேலும் இந்த வழக்கை புகாராகக் கூட பதிவு செய்யாமல் இழுத்தடித்த அந்த காவலரை உடனடியாக பணி நீக்கம் செய்வதுதான் சரியான நீதியாக இருக்கும்.

இதற்கெல்லாம் விசாரணை வாய்தா எனப் போய் கடைசியில் ஒன்றுமில்லை என வாடிக்கையாக விட்டு விடுவது போல விட்டு விடுவது நாட்டை நாடாக வைத்திருக்காது.

பஞ்சாப்பில் ஒரு கர்ப்பிணிப் பெண் புகைக்கக் கூடாது என்று சொன்ன ஒரே காரணத்துக்காக அந்த புகைத்தவரால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த வழக்கிலும் கடுமையான தண்டனையாக தலை வாங்கும் தண்டனைதான் பொருத்தமானதாக இருக்கும்.

பொது இடங்களில் மது அருந்தக் கூடாது, புகைக்கக் கூடாது என்பதெல்லாம் வெறும் ஏட்டளவில் உதட்டளவில் சட்ட ரீதியாக இல்லாமல் அமல் படுத்தாமல்
Image result for harur rape case
2020 கலாம் நாடு நல்ல நாடாக இருக்கும்...

இதே டில்லியில் நடந்திருந்தால் உடனே உலகே அர்ப்பரித்து அனைவருக்கும் தெரிய ஆடு ஆடு என்று ஆடியிருப்பார்கள்...இங்கே தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் நடந்த அரூர் சம்பவம் இனி எங்கும் நடவாதிருக்க எல்லா அமைப்பு முறைகளையும் சரி செய்தாக வேண்டும் கல்வி உட்பட...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment