Saturday, November 10, 2018

தஞ்சைப் பெரிய கோவில் மூலவர் கோபுரம் வேறுபட்ட‌ ஸ்டைல்: கவிஞர் தணிகை

 கட்டடக் கலை யுக்தியில் தஞ்சைப் பெரிய கோவில் மூலவர் கோபுரம் பாராட்ட வேண்டிய வேறுபட்ட‌ ஸ்டைல்: கவிஞர் தணிகை


Related image

பல கோவில்கள் சென்று பார்த்திருக்கிறேன். 3 கோவில் நிர்மாணித்தலிலும் பங்கு கொண்டிருக்கிறேன். அக்காலம் முதல் இக்காலம் வரை எல்லாமே இராஜ கோபுரம் என முகப்பு வாயிலை மட்டுமே பிரம்மாண்டமாக நிர்மாணித்திருப்பார். ஆனால் இராஜ இராஜ சோழன் சுமார் ஆயிரத்து பத்துகளில் கட்டிய பெரு உடையார் ஆலயம் மட்டும் முகப்பு வாயில்கள் இராஜ இராஜன் வாயில், கேரளாந்தகன் வாயில் இப்படி முன் வாயில் அல்லது முகப்பு வாயில்கள் சிறியதாக இருக்க...பெரு உடையார் என்னும் சிவலிங்கம் குடி கொண்டிருக்கும் மூலவர் ஆலையம் மட்டும் மிகவும் அற்புதமாக எல்லாக் கோவில் வடிவத்திலிருந்தும் வேறுபட்டு மிகவும் பெரிய உயரமாக அற்புதமாக‌ அமைக்கப்பட்டிருக்கிறது கவனிக்கத்தக்கது.... கலையில் இது ஒரு இராஜ கலை.

எப்போதும் வாயில் காவலர்களை விட மன்னருக்குத்தானே மதிப்பதிகம், அப்படிப் பார்க்கும்போது இந்த முறை தான் மிகவும் உயர்ந்தது. அப்படி இருக்க ஏன் பெரும்பாலன கோவில்களில் முகப்பு கோபுரத்தை மட்டும் அவ்வளவு பெரிதாகவும் மூலவர் சன்னதி இருக்கும் கோபுரத்தை மிகவும் சிறியதாகவும் வடிவமைத்துள்ளனர்....இதுவிவாதத்துக்குரிய பொருள். இதில் இராஜ இராஜ சோழன் விதி விலக்கு....
Related image

சர்கார் விஜய் படத்தில் கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இலவசமாகக் கொடுக்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை மட்டும் ஏன் நெருப்பில் இடுவதாகக் காண்பிக்கவில்லை என்றும் கேட்கிறார்கள். சரியான கேள்வி. ஒரு வேளை அது சரியாக இன்னும் ஓடிக்கொண்டிருப்பதாலா? அல்லது அந்த மிக்ஸியும் கிரைன்டரும் சரியாக இயங்காததாலா? சன் டிவி குழுமம் தயாரித்த படம், முருகதாஸ் இயக்கம்...அவர்கள் சொன்னபடிதான் நடிகர்கள் ஆட முடியும்...ஆம் அவர்களின் கைப்புனைவுதானே இந்த பொம்மைகள்...விஜய்...கோக் விளம்பரத்துக்கு வந்து பல கோடி ஊதியம் பெற்றவர் என்பது கூட உண்மைதான்...ஆனாலும் இந்த படத்தை வைத்து ஆட்சியாளர்கள் இவ்வளவு வன்மம் ஏன் கொள்கிறார்கள் அது யோசிக்கத்தக்கது...கமலின் விஸ்வரூபம் விருமாண்டி, அது போல பல படங்களிலிருந்தே இதை அரசும், அமைப்புகளும் சினிமாவை அதன் போக்கிலிருந்து மாற்ற வைக்க முயல்கின்றன...அவை தமது இருப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தி விடக்கூடுமோ என்ற அஞ்சுதல்கள் இருக்கின்றன.

கடந்த நாள் ஒரு பேருந்தின் பயணத்தில் ஒரு பள்ளிச் சிறுவன் கேட்க மற்றொருவன் சொல்கிறான்: டவுன்லோட் செய்துவிட்டேன் இன்னும் பார்ப்பதுதான் பாக்கி, அதெல்லாம் ஓடாது...எல்லாம் இப்படியே பார்த்துவிடலாம் என்கிறான்...ஆக தொழில் நுட்பம் மலிந்து விட்டது...சினிமாவை சினிமாவாகவும் கலையை கலையாகவும் அரசியலை இவை யாவற்றையும் உள்ளடக்கியதாகவும் காணக் கற்றுக் கொள்ளவும் ஏழை எளிய மக்களுக்கு உண்மையில் உழைப்பவர் ஆனால் முதலில் உண்மையை சேவையை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்...கன்டய்னர் லாரி பற்றி எல்லாம் சொன்னால் விட முடியுமா ?

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

பி.கு: இவை இரண்டும் நான் எனது முன் பதிவுகளில் சொல்ல மறந்த செய்திகள். அவசரகதியில் அப்படியே தட்டச்சு செய்து பதிவு இடும் முறையை பயன்படுத்துவதால் நேரும் முக்கிய மறதிகள் இவை....


2 comments:

  1. பெரியக் கோயிலின் கோபுரம் ஒரு முக்கியச் செய்தியை உலகுக்கு அறிவிக்கிறது ஐயா.
    பெரியக் கோயிலின் மூலவர் கோபுரம் உச்சிவரை, ஒரே கூடாக திறந்த நிலையில் காட்சியளிக்கும்.
    நாம் வாழும் பூமி மட்டுமே உலகம் அல்ல, அதையும் தாண்டி, இந்த பிரபஞ்சம் மிகப் பெரியது எல்லைகள் அற்றது என்பதை உணர்த்துவதற்காக எழுப்பப் பட்டது என்பார்கள்

    ReplyDelete
  2. thanks for your feedback on this post sir. vanakkam.

    ReplyDelete