Saturday, November 24, 2018

ஏண்டா இப்படி அடிச்சிக்கிட்டே சாகறீங்க: கவிஞர் தணிகை

ஏண்டா இப்படி அடிச்சிக்கிட்டே சாகறீங்க: கவிஞர் தணிகை

Related image


குத்திக் கொல்லவாடா இவ்வளவு பெரிய கல்லூரியில் காலடி எடுத்து வைத்தீர்கள்? குத்துப் பட்டு சாகவாடா இவ்வளவு பெரிய கல்லூரிக்கு சென்று சேர்ந்தீர்கள்...

கடந்த வாரத்தில் கோவை மலுமிச்சம்பட்டி இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் ஒரு முதலாமாண்டு மாணவரை மற்ற 3 மாணவர்கள் போய் கத்தியால் குத்திக் கொன்றிருக்கிறார்கள் என்ற செய்தி இன்றைய மாணவ சமுதாயத்தின் பால் அக்கறை கொண்டுள்ள என் போன்றோர்க்கு வயிற்றில் அமிலத்தை அள்ளி பூசியது போல் தாக்கியது.

அந்த 3 பேருமே 18 வயது கூட இன்னும் நிறையாத பாலகர்கள்...எனவே அவர்கள் சிறுவர்களுக்கான அரசின் கூர்ம சிறார்பள்ளியில் கொன்டு சென்று வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் கூடுதல் செய்தி.

அவன் என்னடா பெரிய இவனா? என்று கேட்டதுதான் காரணமாம்... பெரியவன் என்று நிரூபிக்க இந்த மடையர்களுக்கு கத்தியும் கொலையும் தாம் தோன்றியிருக்கிறது...இது இன்றைய சமுதாயத்தின் அவலத்தின் அடையாளம்

பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் தாம் தங்க முக்கோணவழியில் ஒரு நாட்டை அதன் வழிப்போக்கை சரிசெய்ய முடியும் என கலாம் 2020 என்றெல்லாம் கனவு கண்டு கண்களை மூடினார். ஒரு நட்டைக் கூட கழட்ட முடியாது...ஒரு மண்ணுக்கும் இங்கு வழியில்லை.

முளைத்து 3 இலை கூட விடவில்லை என்பதற்குள் இதற்கெல்லாம் போதை மருந்துகள், மது, புகை , வன்முறை இப்படி ஏகப்பட்ட ஊறல்கள்...இத்தனைக்கும் ஒரு வகுப்பு சரியாக வரவில்லை என்றாலும் கல்லூரியில் இருந்து தகவல் வீட்டுக்கு அனுப்பப் படும் சூழல்கள் இருக்கின்றன‌
Image result for hindustan college coimbatore
பணம் பணம் ஒன்றே குறிக்கோள் என அரசும், தனியார்களும், எதைபற்றியுமே துளியும் அக்கறையின்றி எதிர் வரும் சமுதாயத்தை அதன் வளர்ச்சியை கணக்கில் கொள்ளாது ஓடிக் கொண்டிருக்கின்றனர். அதன் முடிவு அதன் பிரதிபலிப்புகள் யாவுமே..

நானறிந்த கல்லூரியில் ஒரு பெண் ஒரே காலக்கட்டத்தில் இரு மாணவர்களைக் காதலிக்கிறாள் என ஒரு மாணவன் மது அருந்தி விட்டு அவளை அடித்திருக்கிறான் ... கல்லூரி என்னடா ஏதடா என கேள்வி கேட்கப் போனால் அவன் விஷமருந்தி விடுவானாம்...வாழ்வு என்றால் என்ன, இன்னும் காலம் எவ்வளவு, உலகம் என்றால் என்ன, பிரச்ச்னை எல்லாம் எப்படி சமையல் எரிவாயு ஆயிரத்துக்கும் மேல் போய்விட்டதே நாடு நல்ல தலைவரைக் கேட்கிறதே, வாக்களிக்க இன்னும் பணமும், மதுவும், பிரியாணியும் கேட்பவர்கள் இருக்கிறார்களே, மக்கள் நல்ல முறையில் இணையாமல் சாதி,இனம், மொழி, நிறம், மதம் இவை எல்லாம் பிரித்தாளும் சூழலும் சூழ்ச்சியுமாய் இருக்கிறதே , தனியார்மயம், தாராளமயம், உலகமயம், கார்ப்ரேட் சதி எல்லாம் இருக்கிறதே இதைப்பற்றி எல்லாம் நினைக்க நேரம் இல்லையே...இவை எல்லாம் பற்றி அறியாமல் இவர்கள் இந்த இளையவர்கள். போகும் பாதை இந்தியாவில் ஏன் தமிழகத்தில் அந்துவானக்காடாக சென்று மிருகங்களுக்கு பலியாவது போல போய்க் கொண்டிருக்கிறதே... அதற்கு நாங்களும் முடிந்தவரை கவுன்சிலிங் செய்தும் ஏன் இவற்றை எல்லாம் தடுக்க முடியாமல் இவை மேலும் மேலும் பெருகிக் கொண்டே இருக்கின்றன? . பருவக் கோளாறு இளம்பருவக் கோளாறு...அத்துடன் போதையின் தடம்... நாங்களும் அந்தவழியில் தானே வந்து வாழ்ந்து வருகிறோம்....

இன்று ஒரு செய்தி என்னவெனில் பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆட்டம் ஆடிய சிறுவர்களுக்குள் சண்டை வர அதை பெற்றோர் கையில் எடுத்து உடன் துப்பாக்கியுடன் குண்டுகள் முழங்க சண்டை 6 உயிர்களைக் குடித்திருக்கிறதாம்.

எல்லாவற்றிலுமே தான் என்னும் அகங்காகரம், ஆணவம். அடுத்தவரைப் பற்றிய சிந்தனை இல்லா வாழ்க்கை , ஒத்துப் போகும் தன்மை குறைந்து வருவதையே காட்டி வருகிறது.

விளைவுகள் உயிர்ப்பலிகள்...கோவை சம்பவத்தில் ஈடுபட்ட 4 குடும்பங்கள் இனி விருத்திக்கு வர முடியுமா?? எல்லாம் இந்தக் காலத்தில் ஓரிரு குழந்தைகளை மட்டுமே கொண்டிருக்கும் மைக்ரோ லெவல் குடும்பங்கள்...

தமிழக நீதிமன்றம் விலையில்லா அரிசி கொடுப்பதால் சோம்பேறித்தனமும், வேலை செய்ய வடக்கு மாநிலங்களிலிருந்தும் ஆள் வரவேண்டி இருக்கிறதே என இனி உண்மையிலேயே தேவையான வறுமைக் கோட்டிற்கு பின் தங்கிய குடும்பங்களுக்கு மட்டுமே இலவச அரிசி வழங்க வேண்டும் எனச் சொல்லியுள்ளதாக அறிகிறோம். அது போல எவருக்கு மதுவிற்பனை செய்வது என வரையறை செய்து விடலாம் அல்லது மதுக்கடைகளை முதலில் மூடச் சொல்லலாமே....

இயற்கைப் பேரிடரில் கஜா  போன்ற புயல்களால் உயிர்களுக்கு இன்னல் ஏற்படும் இந்நிலையை சரி செய்யவே அரசுகளால் மக்களால் முடியாத போது மனிதர்களின் இந்த வெறி பிடித்த செயல்களை எல்லாம் எப்படி  தடுக்க முடியும் எனில் இது உடனே ரெடிமேட் உப்மா போல முடியாது...நாட்பட காலத்தைக் கணக்கில் கொண்டு திட்டமிட்டு கல்வித்துறை மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் அனைவரும் சார்ந்து சேர்ந்து நல்ல முன்மாதிரிகளை அடையாளம் சொல்லி வளர்த்தெடுக்கும் கடமையை சரியாகச் செய்தாக வேண்டும்...இல்லையேல் அமெரிக்கா போல ஆய்தத்துடன் அலைவார்கள் தேவையற்ற உயிர்கள் பலியாகும்...

அரசியல் கட்சி என்கிறீர்கள், அரசு என்கிறீர்கள், கட்சி என்கிறீர்கள், சாதி என்கிறீர்கள், மதம் என்கிறீர்கள்... எல்லாவற்றையும் வைத்து சேர்ந்து நின்று அனைவரையும் வாழ வைக்கப்பாருங்கள்...சாகடிக்கப் பார்க்காதீர்கள்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment