Sunday, November 11, 2018

சிறு குறிஞ்சி அல்லது சிறு குறிஞ்சான் சர்க்கரை நோய்க்கு அருமருந்து : கவிஞர் தணிகை

சிறு குறிஞ்சி அல்லது சிறு குறிஞ்சான்: கவிஞர் தணிகை




சர்க்கரை அல்லது நீரிழிவு வியாதிக்கு என பல மருந்துகள் உண்டு. அதன் பயன்பாட்டைப் பொறுத்து. விவேகான‌ந்தரே இந்த நீரிழிவு வியாதியால் பாதிக்கப்பட்டவர்தாம். மாத்திரை,ஊசி என ஆங்கில அல்லது அலோபதி மருந்துக்கு அடிமையானால் மீட்சி பெறவே வழியில்லை.

1. உணவை நன்கு மென்று அரைத்து உமிழ் நீருடன் கலந்து மெதுவாக உண்ணப் பழகுதலே இந்த வியாதியை முதலில் தடுக்கும் முறையாகும்.

2. இந்த நீரிழிவு நோய் இருவகைப்படும் அவை மற்ற நோய்களுக்கு அடிப்படையாய் அமையும் எனவே சர்க்கரை நோய் என்னும் இந்தப் பேய் பிசாசை அரக்கனை அண்ட விடக்கூடாது என்பார். ஆனாலும் இவை நாம் உண்ணும் உணவு, உடற்பயிற்சியின்மை, இனிசுலின் சுரக்காமை அல்லது பரம்பரை வழிகளில் வந்தே தீருகிற நோய்.

3. இவை பற்றி மிக நுட்பமாக, நுணுக்கமாக சொல்ல இந்தப் பதிவு முயற்சிக்கவில்லை ஆனால் அவற்றை வருமுன்னே தடுக்க, அல்லது அதை கட்டுப் படுத்த உதவிடும் எளிய செலவில்லா மருந்துகளைப் பற்றி மட்டுமே நானறிந்த வரை சொல்ல முயல்கிறது.

4. காலையில் எழுந்தவுடன் முதல் நாட்களில் ஊறவைக்கப்பட்ட நீர் இறுத்த வெந்தயம் முளையுடன் அத்துடன் கருஞ்சீரகம் வெறும் வயிற்றில் உண்பது,

5. ஆவாரம் மொட்டுகளை வெறும் வாயில் போட்டு மென்று உண்பது,அல்லது பறித்து வந்து வெயிலில் காயவைத்து இடித்துப் பொடி செய்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்பளர் வெந்நீரில் வைத்த் ஒரு ஸ்பூன்  அந்தப் பொடியைப் போட்டு கலக்கி குடித்து விடுவது...

6. இனிசுலின் என்னும் கையகல இலை ஒன்றை தினமும் சாப்பிடுவது...அதிலிருந்து நல்ல சாறு வரும்...சிலருக்கு ஒவ்வாமையும் செய்யும்

7. மேற் சொன்ன இவை அத்தனையும் நாக்கை ருசியின்றி செய்துவிடும் உணவை உண்பதிலிருந்து அதன் அளவிலிருந்து குறைத்துவிடும்...

8. எல்லாவற்றுக்கும் மேலாக : சிறு குறிஞ்சி எனப்படும் இந்தப் படத்தில் உள்ள இலைகளை வெறும் வயிற்றில் மென்று தின்று விட்டால் உங்கள் சர்க்கரையின் அளவு அரோகரா...மருத்துவரே வியந்து விடுவார். அப்படி சர்க்கரை குறைந்து போகும்போது மிட்டாய் வைத்துக் கொண்டு நீங்கள் சாப்பிடும் போக்கே வருமளவு அடியோடு சர்க்கரையைக் குறைத்து விடும் வல்லமை இந்த இலைகளுக்கு உண்டு...

இதைச் சாப்பிட்டால் நாக்கு, தொண்டை, வாய் முழுதுமே சுவை உணர்வு அறவே அற்றுவிடுகிறது. நீரைக் குடித்தாலும் நீரின் சுவை தெரிவதில்லை. எதைச் சாப்பிட்டாலும் அது சுவையற்ற் மண்ணை உண்பது போல மாறிவிடுகிறது.  இது போன்ற ஒரு மருந்தை எத்தனைக் குட்டிக்கரணம் போட்டாலும் அலோபதியால் உண்டுபண்ணவே முடியாது.

ஒரு நாள் நான் ஒரு இலையை சாப்பிட்டுவிட்டு வந்து விட்டேன் மாலை நடைப்பயிற்சியின் போது, எனது வீட்டில் அன்று பார்த்து இரவு உணவாக‌ அப்பம், தேங்காய்ப்பால் ஏன்டா அந்த இலையை வாயில் போட்டோம் என்று நொந்து போகுமளவு ருசியின்றி ஆகிவிட்டது...சில நேரம் இப்படியும் ஆகிவிடும் எனவே சாப்பிட்டபிறகு இதை எடுத்துக் கொள்ளலாம் என்றும் தோன்றுவதுண்டு.
இந்த சிறு குறிஞ்சியைத்தான் காய வைத்துப் பொடி செய்து பெரும்பாலான நாட்டு வைத்தியர்கள் பாக்கெட் செய்து சர்க்கரை நோய்க்கு மருந்து எனக் கொடுக்கிறார்கள்.
Image may contain: plant and nature
நல்ல பெருங் கொடியாக வீட்டுக் கூரை மேல் ஏறி எல்லாம் எங்கும் படர்ந்து விடும் தாவரம் இது...கொஞ்சம் மறுபடியும் காலையில் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு அதன் விளைவாகவே இதைப்பற்றி இங்கு பதிவு செய்திருக்கிறேன்...

9. உடலுக்குப் போதுமான அளவு உடற்பயிற்சி அவசியம் இருந்தே தீர வேண்டும் இல்லாவிட்டால் நாம் அன்றாடம் நமது சர்க்கரை மிகுவதையும் கண்கூடாக உடலின் இயக்கம் பற்றி அக்கறை உடையார் எளிதில் அறிய முடியும்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment