Saturday, October 21, 2017

Shock அடிக்காத current --- electricity with out Shock...

https://youtu.be/9Vq99uzyyBk
https://mail.google.com/mail/u/0/#inbox/15f39041095e8f90?projector=1

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உட்புறம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உட்புறம்

Shock அடிக்காத current கண்டுபிடித்து: (சாதித்து காட்டிய தமிழக விஞ்ஞானி)
சில நாட்களாக முகநூலில் மின்சாரம் தாக்கினால் மனிதர்களுக்கு ஒன்றும் ஆகாது என்று செய்தி பார்த்தேன். அவர் சென்னையில் தான் உள்ளார் என்று தெரிந்தவுடன் அவரை நேரில் சந்தித்து அந்த கண்டுபிடிப்பை பற்றி தெரிந்து கொள்ள அவரை பார்க்க நேற்று காலை சென்றேன்.
படத்தில் என்னுடன் இருக்கும் அந்த விஞ்ஞானி உமா மகேஷ். இவர் ஒரு Nano Technology பட்டதாரி. சாதாரணமாக நம் வீட்டிற்கு வரும் மின்சாரம் எல்லாமே EB Transformer மூலமாக வரும். அதனோடு சேர்த்து இவர் Nano transformer என்று ஒரு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சாத்தியபடுத்தி உள்ளார்.
வீட்டில் எப்போதும் அந்த Demo piece வைத்துள்ளார். அதாவது சாதாரணமாக நம் வீட்டிற்கு வரும் மின்சாரம் எல்லாமே EB Transformer மூலமாக வரும். அதனோடு Nano transformer சேர்த்து பொருத்தி விடுவதால் மின்சாரம் நம் மீது பாயும் ஆனால் நமக்கு Shock அடிக்காது. சொல்வதற்கு மிக சுலபம் ஆனால் இவர் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்த ஐந்து வருடங்கள் ஆகி உள்ளது. பல லட்சங்களை செலவு செய்து உள்ளார்.
நான் அவரிடம் இந்த கண்டுபிடிப்பை Youtube இல் போட்டவுடன் ஊடகங்கள் வந்து பார்த்தார்களா என கேட்டேன். பேட்டி எடுக்க வேண்டும் என்றால் காசு தர வேண்டும் என கூறியுள்ளார்கள். ஊடக நண்பர்களே அவர் இதை காசுக்காக கண்டுபிடிக்கவில்லை மேலும் காசு கேட்டால் அவரிடம் இல்லை என்பது தான் பதில். அது மட்டும் அல்லாது இன்னும் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்த உள்ளார். அதனால் உங்களுக்கு பணம் கொடுத்தால் மற்ற கண்டுபிடிப்புகளை அவர் எப்படி பொதுமக்களுக்கு எடுத்து செல்ல முடியும்.
இன்னும் சில பேர் வந்து இந்த Nano Transformer டப்பாவிற்குள் என்ன உள்ளது என்று சொல்லுங்கள் அப்போது தான் இதை மக்களுக்கு எடுத்து செல்வோம் என்று கூறியுள்ளனர். அட அறிவு கொழுந்துகளே அதை சொல்லிவிட்டால் அவர் கண்டுபிடித்தார் என்பதற்கு என்ன சான்று இருக்க முடியும்.
இப்படி தான் சில வருடங்களுக்கு முன்னர் ராமர் பிள்ளை என்பவர் மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்தார். பின்பு அவரிடம் உள்ள அறிவியலை பன்னாட்டு நிறுவனங்கள் வாங்கிவிட்டு அவரை சிறையில் அடைத்து பின்னர் போலி விஞ்ஞானி என்று முத்திரை குத்திவிட்டனர். அதனால் திரு.உமா மகேஷ் அவர்களுடைய இந்த கண்டுபிடிப்பு எல்லா எளிய மக்களுக்கும் சென்று அடைய வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை.
பணம் நிறைய வைத்து இருப்போர் படித்துவிட்டு புதிய தொழில் தொடங்கவுள்ளவர்கள் இவர் உடைய இந்த Nano transformer கண்டுபிடிப்பை எளிய மக்களுக்கு கொண்டு செல்லுங்கள். இந்த Nano transformer உடைய விலை ஒரு லட்சம். உடனே விலை அதிகம் என்று சொல்லாதீர்கள். இது உயிர் சம்மந்தப்பட்ட விசயம். அதனால் ஒரு லட்சம் பெரிய தொகை கிடையாது. Dealers க்கு மட்டும் 20% Discount கொடுப்பதாக கூறியுள்ளார்..
அவரை தொடர்புகொள்ள:
இவருடைய இந்த கண்டுபிடிப்பால் மின்சார விபத்துக்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.
இவருடைய இந்த கண்டுபிடிப்பால் என்ன நன்மை என்று தெரிந்துகொள்ள கீழே உள்ள Youtube link மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.இந்த கண்டுபிடிப்பை காணொளி மூலம் பார்த்தால் எளிமையாக புரியும்.
best wishes to Scientist Mahesh.
thanks to: Healer Baskar
                 Raja Rajan
                 Lakshmanan Marimuthu
with honest
Kavignar Thanigai.

4 comments:

  1. ஆகா
    மகத்தான் கண்டுபிடிப்பு நண்பரே

    ReplyDelete
    Replies
    1. thanks for your participation of this post vanakkam.

      Delete
  2. முக நூலில் பகிர்ந்துள்ளேன் நண்பரே

    ReplyDelete