Wednesday, October 4, 2017

திருப்பூர் குமரனும் லாஸ் வேகாஸ் திருடனும்: கவிஞர் தணிகை

திருப்பூர் குமரனும் லாஸ் வேகாஸ் திருடனும்: கவிஞர் தணிகை
Image result for tiruppur kumaran

NORTH POLE AND SOUTH POLE

கொடி காத்த குமரனின் பிறந்த 113 வது பிறந்த நாள் இன்று. நெசவாளர் குடும்பம் சுமார் 27 வயதே நிரம்பிய ஒர் தியாகக் கவிதை. உங்களுக்குத் தெரிந்த கதையை நான் சொல்லப் போவதில்லை.

இந்த இளைஞர் உண்மையில் பிறந்து வாழ்ந்த ஊர் சென்னிமலை. காங்கேயம் பகுதியில் தான். இவர் ஏன் திருப்பூருக்கு குடியேறினார் தெரியுமா அது ஒரு கதை.

அந்தக் காலத்தில் ஒரு ரூபாய் என்பதற்கு 196 காசுகள் என்று சொல்வார்கள்.அனா நயா பைசாக் காலம்.மொய் எவராவது ஒருவர் வீட்டுக்கு வைத்திருந்தால் அதை தவறாமல் அவர்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு கொண்டு வைத்து விட வேண்டும். இல்லையேல் அது அவமானத்துக்குரிய தவறு. காவிரிக்கரையோர கொளத்தூர் பகுதியில் கூட இது போன்ற ஒரு வழக்கம் இருந்ததென்றும் அப்படி மொய்யைத் திருப்பி வைக்காதவர் வீட்டுக்கு அக்கால முறைப்படி நாவிதரை விட்டு கேட்டு சண்டை செய்து வரவழைத்துக் கொள்வர் என்றும் உறவினர்கள் சொன்னதுண்டு.

திருப்பூரில் இருந்து தேசியக் கொடி பிடித்து அன்றைய ஆங்கிலேயர் வைத்த கைக்கூலிப் போலீஸால் மண்டையில் தடியடிபட்டு கொடியை விடாமல் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்த அந்த இளைஞர் மண்டையில் பட்ட அடியால் உயிரிழந்தார். எனவே திருப்பூர் என்ற ஊரின் பேரோடு சேர்த்து திருப்பூர் குமரன் ஆனார்.

ஆனால் இவர் இரவோடு இரவாக சென்னிமலையில் இருந்து திருப்பூருக்கு வீட்டை காலி செய்து கொண்டு ஊரை விட்டு வெளியேறு திருப்பூரில் குடியேறியவர். காரணம்.: ஒரே நேரத்தில் 8 கல்யாணம் இவருக்கு இவர் இருக்கும் குடும்பத்துக்கு வந்து விட ஒரு திருமணத்திற்கு ஒரு ரூபாய் வீதம் எட்டு திருமணத்திற்கும் சேர்த்து 8 ரூபாய் மொய் வைக்க வேண்டிய நிலையில் வைக்க முடியாத வறுமையே . அந்த அவமானம் தாங்க மாட்டாமல் தான் திருப்பூருக்கு இரவோடு இரவாக குடியேறி அதே நெசவு செய்து வாழ்ந்தவர்.

அதன் பின் சுதந்திரப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு தலையில் அடிபட்டு இன்றும் வாழ்கிறார்.
Related image


ஆனால் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் லாஸ் வேகாஸ் என்னும் சூதாட்டத்துக்கு பேர் பெற்ற ஊரில் ஒரு இசை நிகழ்ச்சியில் கூடியிருந்தோரை 64 வயதுடைய கபோதி ஐ.எஸ் இயக்கத்திடம் பணம் பெற்றுக் கொண்டு 32 வது மாடியிலிருந்து சுட்டானாம், சுட்டானாம் அப்படி சுட்டானாம் அதில் இதுவரை 59 பேர் மாண்டனராம். 550 பேருக்கும் மேல் காயமாம்.

அவன் கடந்த 2016ல் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் 33 துப்பாக்கிகள் வாங்கியுள்ளானாம். இப்போது சொல்லும் அந்த நாட்டு அரசும் காவல் துறையும் அப்போது என்ன மயிரைப் பிடுங்கிக் கொண்டிருந்தனரோ?

எல்லாம் முடித்து விட்டு அவனும் தனக்குத் தானே சுட்டுக் கொண்டானாம். அவன் இந்த சம்பவம் நடந்த அமெரிக்க தேதிப்படி அக்.1க்கு முந்திய வாரத்தில் தனது காதலிக்கு பிலிப்பைன்ஸ் கணக்குக்கு சுமார் 10,000 பத்தாயிரம் டாலர் அமெரிக்க பணத்தை கட்டியுள்ளானாம்.

இந்த சம்பவத்துக்கு பொறுப்பு என்று ஐ.ஏஸ் . ஏற்றுக் கொண்டதாம்.

 வயது 27ல் இறந்த ஒரு இந்தியத் தியாகி நாட்டுக்கே தம் உயிரை அர்ப்பணித்து சுதந்திர வேட்கையை தூண்டி விட, லாஸ் வேகாஸ் திருடன் தன்னையே சுட்டுக் கொண்டானாம். அது மேற்கத்திய நாட்டின் எண்ணம். இது எங்கள் நாட்டின் சின்னம்.

திருப்பூர் குமரனின் நினைவை என்றும் எண்ணுவோம்
ஆய்தக் கலாச்சாரம் கொண்டு உலகில் எந்த அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டாலும் அதை வன்மையாக கண்டிப்போம்.

நல்லா வளருங்கடா பிள்ளைகளை , இனியாவது ஆய்தம் வாங்கி வைத்திருக்க இருக்கும் சட்டத்தை இல்லாமல் செய்யுங்கடா நாசாகாரப்பசங்களே.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments:

  1. திருப்பூர் குமரனின் நினைவினைப் போற்றுவோம்

    ReplyDelete
  2. thanks for your feedback on this post sir. vanakkam.

    ReplyDelete